ஒருவர் முதலீடு செய்வதற்கு முன்னர் சேமிப்புக்கும் முதலீட்டுக்குமான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

சேமிப்பு என்பது உங்கள் பணத்தை வங்கி சேமிப்புக் கணக்கில் போட்டு வைப்பதற்குச் சமம். இந்தப் பணம் உங்களின் தற்போதைய தேவைக்குப் பயன்படும். ஆனால், எதிர்காலத் தேவைக்கு சேமிப்பு பெரிதாகக் கைகொடுக்காது. காரணம், இதன் மூலம் கிடைக்கும் வருமானம் சுமார் 3-3.5 சதவிகிதமாகத்தான் இருக்கும். இதைக் குறுகியகாலத் தேவைக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
.சேமிப்பு மற்றும் முதலீடு... பணத்தட்டுப்பாட்டைப் போக்கும் வழிகள்!.
எதிர்காலத் தேவைக்காக உங்கள் பணத்தை அதிக வருமானம் தரும் திட்டங்களில் போட்டுவைப்பதுதான் முதலீடு. பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். இதை நடுத்தரகால மற்றும் நீண்டகாலத் தேவைக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். பொதுவாக, பணவீக்க விகிதத்தைவிட 2-3% அதிக வருமானம் தரும் திட்டங்களை `நல்ல முதலீடு’ என்று குறிப்பிடலாம்.

சேமிப்பு, நமது மூலதனத்துக்குப் பாதுகாப்பு அளிக்கும். ஆனால், முதலீடு என்பது நமது மூலதனத்துக்குக் குறுகியகாலத்தில் கொஞ்சம் பாதிப்பை ஏற்படுத்தினாலும், நீண்டகாலத்தில் நல்ல வருமானத்தைத் தரும்.

நீங்கள் உங்கள் பணத்தைச் சேமித்துவருகிறீர்களா, முதலீடு செய்து வருகிறீர்களா என்பதை ஆராய்ந்து பாருங்கள்!