தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மியூச்சுவல் ஃபண்டுகள், இன்ஷூரன்ஸ் பாலிசிகள், பங்கு வெளியீடுகள், கடன் பத்திரங்கள் குறித்துப் பார்ப்போம்.

மியூச்சுவல் ஃபண்ட் : ஃபிக்ஸட் டேர்ம் பிளான்!

ஆதித்ய பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், `ஆதித்ய பிர்லா சன்லைஃப் ஃபிக்ஸட் டேர்ம் பிளான்’ என்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தத் திட்டத்தில் மொத்தமாகவும், எஸ்.ஐ.பி முறையிலும் முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000. திரட்டப்படும் நிதி, கடன் சார்ந்த திட்டங்களிலும், அரசு கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்படுவதால் ரிஸ்க் அளவு குறைவாக இருக்கும். குறைவான ரிஸ்க் எடுக்க விரும்பும் முதலீட்டாளர்களும், நீண்டகால நோக்கில் முதலீடு செய்பவர்களும் இந்த மியூச்சுவல் ஃபண்டைப் பரிசீலிக்கலாம். இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 1,183 நாள்கள். இந்தப் புதிய ஃபண்டில் முதலீடு செய்ய ஜனவரி 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

டாடா குவான்ட் ஃபண்ட்!

டாடா மியூச்சுவல் ஃபண்ட், டாடா குவான்ட் ஃபண்ட் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் மொத்தமாகவும், எஸ்.ஐ.பி முறையிலும் முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச முதலீடு ரூ.5,000. மாதாந்தர எஸ்.ஐ.பி-க்கு குறைந்தபட்ச முதலீடு ரூ.500 (6 மாத காலத்துக்கு).

இந்தப் புதிய ஃபண்ட் வெளியீட்டுக்கு ஜனவரி 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். திரட்டப்படும் நிதி, பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த ஆவணங்களில் முதலீடு செய்யப்படுவதால் ரிஸ்க் அளவு அதிகம்.

‘ஹெல்த் பிரீமியா’ இன்ஷூரன்ஸ்!

இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்றான மேக்ஸ் புபா, ‘ஹெல்த் பிரீமியா’ (Health Premia) என்ற ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த பாலிசியில் அதிகபட்ச கவரேஜ் தொகை 3 கோடி ரூபாய். தனிநபராகவும், ஃப்ளோட்டர் பாலிசியாகவும் எடுத்துக்கொள்ள முடியும். பாலிசி எடுத்த முதல் நாளிலிருந்து பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பாலிசியின் மூலம் பயன்பெறலாம்.

18 முதல் 65 வயது வரை உள்ள பெண்கள் ‘மை:ஹெல்த் வுமன் சுரக்ஷா’ பாலிசியை எடுத்துக் கொள்ளலாம்.

சூப்பர் டாப்அப் ஹெல்த் இன்ஷூரன்ஸ்!

மணிபால் சிக்னா ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனம், ‘சூப்பர் டாப்அப்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பாலிசியில் அதிகபட்ச கவரேஜ் தொகை 30 லட்சம் ரூபாய். இந்த ஹெல்த் பாலிசியின் மூலம் அலோபதி மற்றும் ஆயுஷ் ஆகிய மருத்துவ முறைகளில் சிகிச்சை மேற்கொள்ளலாம். மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முந்தைய 60 நாள்களுக்கும், மருத்துவமனையிலிருந்து வெளியேறியதற்குப் பிறகான 90 நாள்களுக்கும் உண்டான மருத்துவச் செலவுகளை இந்த பாலிசியின் மூலம் க்ளெய்ம் செய்துகொள்ளலாம். அறுவை சிகிச்சை அல்லது இதர மருத்துவத்துக்காகக் குறைந்தபட்சம் 24 மணி நேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது கட்டாயம்.

ஒரே பாலிசியில் குடும்ப உறுப்பினர்கள் இருவரையோ, அதற்கு மேற்பட்டவர்களையோ இணைத்துக்கொண்டால் பிரீமியத்தில் 10% சலுகை வழங்கப்படுகிறது.

மை:ஹெல்த் வுமன் சுரக்ஷா பாலிசி!

ஹெச்.டி.எஃப்.சி எர்கோ ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனம், பெண்களின் உடல்நலப் பிரச்னைகளுக்காக, பிரத்யேகமாக ‘மை:ஹெல்த் வுமன் சுரக்ஷா’ (my:health Woman Suraksha) என்ற ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பாலிசி, பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய், அதுசார்ந்த அறுவை சிகிச்சை, கர்ப்பகால மருத்துவங்கள் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் மருத்துவத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலிசியின் காப்பீட்டுத் தொகையின் அளவு குறைந்தபட்சம் ஒரு லட்ச ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை இருக்கிறது. 18 முதல் 65 வயது வரை உள்ள பெண்கள் இந்த பாலிசியை எடுத்துக்கொள்ளலாம்.