Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட் துறையை வளர்த்த அமைப்பு..! - ஆம்ஃபி வெள்ளி விழா ஆண்டு..!

ஐ.பி.எல் போட்டியின்போது மிக அதிகமாக மியூச்சுவல் ஃபண்ட் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது ஆம்ஃபி!

பிரீமியம் ஸ்டோரி
ந்தியாவின் மியூச்சுவல் ஃபண்ட் துறை கடந்த 25 ஆண்டுகளில் அபார வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்தத் துறை தற்போதைய சூழலில் கிட்டத்தட்ட ரூ.27.50 லட்சம் கோடி அளவில் முதலீட்டாளர்களின் பணத்தை நிர்வகித்து வருகிறது. ஆனால், 25 ஆண்டுகளுக்கு முன்புவரை சில ஆயிரம் கோடி ரூபாயை மட்டுமே நிர்வகிக்கத் தொடங்கிய இந்தத் துறை இப்போது முதலீட்டாளர்களின் பல லட்சம் கோடிகளை நிர்வகிக்கும் துறையாக அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
மியூச்சுவல் ஃபண்ட் துறையை வளர்த்த அமைப்பு..! - ஆம்ஃபி வெள்ளி விழா ஆண்டு..!

1990-களில் இந்தியப் பொருளாதாரத்தில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட நிலையில், தனியார் மயமாக்கலால் பல துறைகளில் தனியார் முதலீடுகள் வரத்தொடங்கின. மியூச்சுவல் ஃபண்ட் துறையில் பல தனியார் நிறுவனங்கள் கால்பதித்தன. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இயங்கிவந்த பல முன்னணி நிறுவனங்கள் இந்தத் துறையில் கால்பதித்த காரணத்தால் இந்தத் துறை மிக வேகமாக வளரத் தொடங்கியது. அந்தக் காலகட்டங்களில் இந்தத் துறை மெதுவாக வளரத் தொடங்கியது. கூடவே, மெள்ள மெள்ள முதலீட்டாளர்களின் கவனம் இந்தத் துறையின்மீது திரும்பியது. முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய பல காரணங்கள் இருந்தன.

நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியால் இந்தியப் பங்குச் சந்தைகளின் வளர்ச்சி, தனிநபர் வருமான வளர்ச்சி என்ற பல காரணங்கள் இருந்தாலும் முதலீட்டாளர்களின் முதலீட்டு விழிப்புணர்ச்சி உயர்ந்து வந்ததுதான் முக்கியமான காரணம். அந்த விழிப்புணர்ச்சி ஏற்பட பக்கபலமாக இருந்தது ஆம்ஃபி (AMFI - Association of Mutual Funds in India) அமைப்புதான்.

மியூச்சுவல் ஃபண்ட் துறை வளர்ந்துவந்த நிலையில் அதைச் சுயமாக நிர்வகிக்க ஆம்ஃபி அமைப்பு 1995 ஆகஸ்ட் 22-ம் தேதி ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்பானது எல்லா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களையும் உள்ளடக்கிய அமைப்பாகத் தொடங்கப்பட்டது. மியூச்சுவல் ஃபண்ட் துறையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் செபி அமைப்பிடம் இருந்தாலும், இந்தத் துறையை வழி நடத்த ஓர் அமைப்பு தேவைப்பட்டது. அதன் காரணமாகவே ஆம்ஃபி என்ற ஓர் ஏற்பாடு தேவையாயிற்று.

மியூச்சுவல் ஃபண்ட் துறையை வளர்த்த அமைப்பு..! - ஆம்ஃபி வெள்ளி விழா ஆண்டு..!

கடந்த 25 ஆண்டுகளில் மியூச்சுவல் ஃபண்ட் துறைக்கு இந்த அமைப்பின் பங்களிப்பு என்பது அபாரம். அதாவது, வெள்ளி விழா காணும் இந்த அமைப்பு இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை மற்றும் முதலீட்டாளர்களுக்கு பல்வேறு நன்மைகளைச் செய்திருக்கிறது.

இந்தத் துறை சார்ந்த அனைத்துத் தரப்பினருக்கும் அதாவது, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், செபி, முதலீட்டாளர்கள் மற்றும் இந்தத் துறை சார்ந்த இதர தரப்பினரை ஒருங்கிணைத்து இந்தத் துறையின் வளர்ச்சிக் காகப் பல முயற்சிகளை ஆம்ஃபி அமைப்பு செய்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முக்கியமாக, நமது நாட்டில் முதலீட்டாளர் விழிப்புணர்ச்சி என்பது மிகவும் குறைந்த அளவிலேயே இருந்துவந்த காலகட்டத்தில் ஆம்ஃபி அமைப்பு எல்லா நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து விழிப்புணர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது.

மியூச்சுவல் ஃபண்ட் துறையை வளர்த்த அமைப்பு..! - ஆம்ஃபி வெள்ளி விழா ஆண்டு..!

சமீப காலங்களில் ‘மியூச்சுவல் ஃபண்ட் சரியானதே’ என்ற விழிப்புணர்ச்சி விளம்பரம் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்து, பலரை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய உதவியது. ஆரம்பத்தில் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆம்ஃபி, பின்னர் கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் முக்கியத் துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியது. இப்போது, ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் போது மிக அதிகமாக மியூச்சுவல் ஃபண்ட் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

ஆம்ஃபி அமைப்பின் தலைவர் வெங்கடேஷ் கூறும்போது, ‘‘மியூச்சுவல் ஃபண்ட் துறையின் அபாரமான வளர்ச்சிக்கு பல கோடி முதலீட்டாளர்களின் நம்பிக்கை மற்றும் செபி அமைப்பின் வழிகாட்டுதல் மட்டுமல்லாது, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மற்றும் இந்தத் துறையில் இருக்கும் அனைத்து சேவை நிறுவனங்கள் அளித்த பங்களிப்புதான் காரணம்” என்றார். மேலும், நமது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சில கோடி முதலீட்டாளர்கள் மட்டுமே மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர். மேலும் இந்தத் துறை அடுத்த 25 ஆண்டுகளில் அபார வளர்ச்சி பெறும் என்றும் குறிப்பிடுகிறார். ஆம்ஃபியின் சேவை தொடரட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு