Published:Updated:

சரியும் சந்தை: மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் நிலை கவலைக்குரியதா?

விகடன் டீம்

ஏறிய சந்தை இறங்கும்; இறங்கிய சந்தை மீண்டும் ஏறும். இதுவும் கடந்து போகும் என்கிற மனநிலை இருந்தால் மட்டுமே நம்மால் தொடர்ந்து முதலீட்டு உலகில் இருக்க முடியும்.

mutual fund
mutual fund

பொதுவாக, காரணங்கள் இல்லாமல் பங்குச் சந்தை இறங்காது. நிறுவனங்களின் லாப வளர்ச்சி குறைவாக இருப்பது, பொருளாதாரம் மந்தநிலையில் காணப்படுவது, ஆட்டோமொபைல், பார்மா, வங்கிசாரா நிதி நிறுவனங்கள் போன்ற துறைகளில் காணப்படும் மந்தநிலை மற்றும் அமெரிக்க - சீன வர்த்தகப் போர் போன்ற சில காரணங்களால் தற்போது ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் என்.ஏ.வி-யும் குறைந்துள்ளது. ஆகவே, கடந்த சில ஆண்டுகளில் முதலீடு செய்தவர்களுக்குத் தற்காலிகமாக நஷ்டம் ஏற்பட்டிருக்கும். பல வருடங்களுக்குமுன் முதலீடு செய்தவர்களுக்கு லாபமானது சற்றுக் குறைந்திருக்கும். https://bit.ly/2KFtcek

ஏற்ற இறக்கங்களைச் சமாளிக்க எஸ்.ஐ.பி முறை மிகச் சிறந்தது என்றாலும்கூட, கடந்த சில ஆண்டுகளில் முதலீட்டைத் தொடங்கிய எஸ்.ஐ.பி முதலீட்டாளர்களும் தற்போது நஷ்டத்தில் இருக்க வாய்ப்புண்டு. நம் முன் நிற்கும் கேள்வி: இந்த நஷ்டத்தை எதிர்கொள்வது எப்படி?

பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் என்றால், அது ஏற்ற இறக்கமாகத்தான் இருக்கும் என்பதைத் தெரிந்துகொண்டுதான் நாம் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கிறோம். அப்படிப்பட்ட ஒரு புரிந்துகொள்ளலுடன் முதலீட்டைத் தொடங்கிய நாம், தற்போது ஏற்பட்டுள்ள இறக்கத்தைக் கண்டு கலங்கத் தேவையில்லை. ஏறிய சந்தை இறங்கும்; இறங்கிய சந்தை மீண்டும் ஏறும். இதுவும் கடந்து போகும் என்கிற மனநிலை இருந்தால் மட்டுமே நம்மால் தொடர்ந்து முதலீட்டு உலகில் இருக்க முடியும்.

mutual fund
mutual fund

தற்போது ஏற்பட்டுள்ள சந்தைச் சரிவைவிட 5%, 10%, 15% என நம் சந்தை பலமுறை இறங்கியுள்ளது. ஒரு பெரிய பொருளாதாரம் மேலெழுந்து வரும்போது இதுபோன்ற சறுக்கல்களும் ஏற்றங்களும் இருக்கத்தான் செய்யும். எதன் அடிப்படையில் நீங்கள் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். மிகப் பிரகாசமான பொருளாதார வளர்ச்சி இன்றளவும் நம் இந்தியாவுக்கு இருப்பது நிதர்சனமான உண்மை. அடுத்த 15 - 20 ஆண்டுகளுக்கும் இதுதான் உண்மையாக இருக்கும் என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை. அப்படி இருக்கும்போது, தற்போது நடந்துகொண்டிருக்கும் சிறு சறுக்கலைப் பார்த்து நாம் ஏன் கவலைகொள்ள வேண்டும்?

இதுபோன்ற சறுக்கல்களில்தான் அரசாங்கத்திற்கும் என்ன தவறு செய்கிறோம் என்பது புரியவரும். அரசாங்கம் அதைச் சரிசெய்யும் போது, சந்தை தானாகவே மேலெழுந்துவிடும். 'சந்தை சரியாகும் அன்றைய தினத்தில் நான் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளை வாங்கிக்கொள்கிறேன்' என்று நினைத்தால், அது முடியாத காரியம். ஆகவே, யூனிட்டுகள் விலை மலிவாகக் கிடைக்கும்போது வாங்கிக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்!

ஃபண்ட் முதலீட்டாளர்கள் போர்ட்ஃபோலியோவை மறுசீரமைக்க இது ஒரு நல்ல தருணம். நன்றாகச் செயல்படாத ஃபண்டுகளிலிருந்து வெளியேறிவிட்டு, நன்றாகச் செயல்பட்டுவரும் ஃபண்டுகளில் உங்களின் முதலீட்டை உடனடி யாக மாற்றிக்கொள்ளுங்கள். அதுபோல, உங்களிடம் கடன் சார்ந்த முதலீடுகள் அதிகமாக இருந்தால், ஒருபகுதியை மெதுவாக ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு மாற்றிக்கொள்ளுங்கள். ஃபண்ட் எண்ணிக்கையைக் குறைக்கவும் இது ஒரு சரியான தருணம். இதுபோன்ற தருணங்கள் அவ்வப்போதுதான் வரும். முதன்முறை முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைத் தொடங்குவதற்கு இது ஓர் அரிய தருணம். இதுபோன்ற சமயங்களில் முதலீட்டைத் தொடங்குபவர்களுக்கு லாபம் கணிசமாகக் கிடைக்கும்.

mutual fund
mutual fund

> தற்போது பங்குச்சந்தையின் போக்கு எதிரொலியாக, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களின் மனதில் எழும் ஏராளமான கேள்விகளுக்கான பதிலை விரிவாகச் சொல்லும் சொக்கலிங்கம் பழனியப்பன் எழுதியுள்ள நாணயம் விகடன் ஸ்பெஷல் ஸ்டோரியை வாசிக்க > இறக்கத்தில் சந்தை... மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? https://www.vikatan.com/news/investment/what-should-mutual-fund-investors-do

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/