Published:Updated:

நீண்டகாலத்தில் லாபத்தை அதிகரிக்கலாம்! - கைகொடுக்கும் அஸெட் அலொகேஷன்!

அஸெட் அலொகேஷன்
பிரீமியம் ஸ்டோரி
அஸெட் அலொகேஷன்

கடந்த ஓராண்டில் தங்கத்தில் செய்யப்பட்ட முதலீடு சுமார் 40% வருமானத்தை வழங்கியிருக்கிறது!

நீண்டகாலத்தில் லாபத்தை அதிகரிக்கலாம்! - கைகொடுக்கும் அஸெட் அலொகேஷன்!

கடந்த ஓராண்டில் தங்கத்தில் செய்யப்பட்ட முதலீடு சுமார் 40% வருமானத்தை வழங்கியிருக்கிறது!

Published:Updated:
அஸெட் அலொகேஷன்
பிரீமியம் ஸ்டோரி
அஸெட் அலொகேஷன்
கொரோனா வைரஸ் பரவல், உலக இயக்கத்தையே மாற்றியிருக்கிறது. இந்தத் தொற்றுநோய்த் தாக்கத்தின் காரணமாக சர்வதேசப் பங்குச் சந்தைகள் அதிக வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்றன.

பெரும்பாலான சிறு முதலீட்டாளர்களின் போர்ட்ஃபோலியோ அதிக இழப்பில் இருக்கிறது. இது போன்ற நேரங்களில் முதலீட்டாளர்கள் முதலீட்டு முடிவுகளில் விவேகத்துடன் இருப்பது மிக முக்கியம். இது போன்ற அதிக ஏற்ற, இறக்க காலங்களில் முடிவெடுப்பதில் பயப்படக் கூடாது.

வெற்றிகரமான முதலீட்டு போர்ட்ஃபோலியோவை உருவாக்க மிக முக்கியமான படிகளில் ஒன்று, பல்வேறு வகையான சொத்துகளில் முதலீட்டை முறையாகப் பிரித்து மேற்கொள்வது. இதைத்தான் `அஸெட் அலோகேஷன்’ என்கிறோம்.

நீண்டகாலத்தில் லாபத்தை அதிகரிக்கலாம்! - கைகொடுக்கும் அஸெட் அலொகேஷன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதலீடுகள் ஒவ்வொன்றும் பொருளாதார நிலைமைகளைப் பொறுத்து வித்தியாசமாகச் செயல்படுவதால் நல்ல, பரவலான முதலீடுகள் மூலம் வலுவான போர்ட்ஃபோலியோவை உருவாக்க முடியும். இது எந்தவொரு பொருளாதார நிலையையும் தாக்குப்பிடித்து வருமானம் கொடுக்கக்கூடியதாக இருக்கும். உண்மையில் முறையான சொத்து ஒதுக்கீடு என்பது வெவ்வேறு சொத்துப் பிரிவுகளைத் தனித்தனியாகச் செயல்பட அனுமதிக்கிறது. `ஒருங்கிணைந்த விளைவு’ (Combined Effect) அடிப்படையில் இந்த அஸெட் அலோகேஷன் முறையிலான முதலீட்டுக் கலவை ரிஸ்க்கைக் குறைக்க உதவுகிறது; வருமானத்தைச் சிறப்பாகப் பாதுகாக்கவும் உதவுகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சொத்துப் பிரிவுகளில், பங்குச் சந்தை மற்றும் பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி முதலீடுகள் நீண்டகாலத்தில் நல்ல வருமானத்தை வழங்குகின்றன. வரலாற்றுரீதியாக பாரம்பர்ய முதலீடுகளைவிட, ஈக்விட்டி முதலீடுகள் அதிக வருமானத்தைத் தந்திருக்கின்றன. ஆனால், வருமானம் எப்போதும் கணிக்க முடியாததாக இருக்கிறது. ஃபிக்ஸட் இன்கம் முதலீடுகள் ஒப்பீட்டளவில் குறைந்த வருமானத்துடன் பாதுகாப்பான முதலீடுகளுக்கு உதவுகின்றன. மற்ற எல்லா சொத்துகளும் மோசமாகச் செயல்படும்போது ரொக்கப் பணத்துக்கு அதிமுக்கியப் பங்கு உண்டு.

அஸெட் அலொகேஷன்
அஸெட் அலொகேஷன்

வெவ்வேறு சொத்துகளில் முதலீடு செய்வதன் மூலம் உருவாக்கப்பட்ட போர்ட் ஃபோலியோ இந்தச் சொத்துப் பிரிவுகளின் வலிமையைப் பூர்த்தி செய்யும். அதே நேரத்தில், இவை ஒட்டுமொத்தத்தில் சாத்தியமான பலவீனங்களையும் சரிசெய்யும். எடுத்துக்காட்டாக, பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கமாக மாறும்போது, உங்கள் போர்ட் ஃபோலியோவிலுள்ள கடன் சார்ந்த முதலீடுகள் (டெப்ட் மியூச்சுவல் ஃபண்டுகள், ஃபிக்ஸட் டெபாசிட்டுகள்) நிலையான வருமானத்தை வழங்கும். இதன் மூலம் முதலீட்டுக் கலவை முழுமையாக மதிப்பிறக்கம் காண்பதற்கு எதிரான பாதுகாப்பு கிடைக்கும்.

கடன் சார்ந்த திட்டங்கள் மற்றும் தங்க முதலீட்டின் முக்கியத்துவம்!

மேலும், கடன் சார்ந்த முதலீடுகள் மற்றும் தங்கத்தை அஸெட் அலோகேஷனின் ஒரு பகுதியாகக் கருத வேண்டும். ஏனெனில், குறைந்த ரிஸ்க் எடுக்கும் திறன்கொண்ட முதலீட்டாளர்களுக்குக் கடன் ஃபண்ட் சிறந்த வழி; சிறந்த ஹெட்ஜிங் சொத்துப் பிரிவுகளில் தங்கமும் ஒன்று. பொருளாதார நெருக்கடி போன்ற பாதகமான சூழ்நிலைகளில் முதலீட்டைப் பல்வகைப்படுத்துவது என்பது ஒரு போர்ட்ஃபோலியோவின் ஸ்திரத்தன்மைக்கு உதவும். மேலும், கடன் ஃபண்டுகள், தங்க முதலீடுகள் போன்றவை போதுமான அளவுக்கு சுலபமாகப் பணமாக்க (Liquidity) உதவுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த ஓராண்டில் தங்கத்தில் செய்யப்பட்ட முதலீடு சுமார் 40% வருமானத்தை வழங்கியிருக்கிறது. ஆனால், இது போன்ற நிகழ்வு எப்போதாவது ஒருமுறைதான் நடக்கும். அதேநேரத்தில், பிள்ளைகளின் திருமணம் போன்ற நீண்டகாலத் தேவைக்காக ஒருவர் தங்கத்தில் முதலீடு செய்வதைவிட, பங்கு சார்ந்த முதலீடுகளை நாடுவது நல்லது. ஏனெனில், இந்தச் சொத்துப் பிரிவின் மூலம் நீண்டகாலத்தில் கிடைக்கும் வருமானம் அனைத்து எதிர்கால நிதித் தேவைகளையும் நிவர்த்தி செய்ய உதவும்.

ரூ.1 லட்சத்தை தங்கத்தில் ரூ.33,000, ஈக்விட்டி ஃபண்டில் ரூ.33,000, பாண்ட் ஃபண்டில் ரூ.34,000 எனப் பிரித்து முதலீடு செய்யப்பட்டதாகக் கணக்கீடு. இது புரிந்துகொள்வதற்காகத்தான். பரிந்துரை அல்ல. (2020, மே 15 நிலவரப்படி.)
ரூ.1 லட்சத்தை தங்கத்தில் ரூ.33,000, ஈக்விட்டி ஃபண்டில் ரூ.33,000, பாண்ட் ஃபண்டில் ரூ.34,000 எனப் பிரித்து முதலீடு செய்யப்பட்டதாகக் கணக்கீடு. இது புரிந்துகொள்வதற்காகத்தான். பரிந்துரை அல்ல. (2020, மே 15 நிலவரப்படி.)

எடுத்துக்காட்டாக, கடந்த ஆண்டில் ஈக்விட்டி வருமானம் நெகட்டிவ்வாக இருந்த போதும், சரியான சொத்து ஒதுக்கீட்டை மேற்கொண்டிருந்தால் ஒருவரின் போர்ட்ஃபோலியோவில் சுமார் 13.5% வருமானம் கிடைத்திருக்கும். (அட்டவணையைப் பார்க்கவும்.)

அஸெட் அலோகேஷன் ஃபண்டுகள்!

சிறந்த சொத்து ஒதுக்கீட்டு உத்தி என்பது அவ்வப்போது லாபத்தை வெளியே எடுப்பதும், அவ்வப்போது போர்ட்ஃபோலியோவை மறுசீரமைப்பதும்தான். பொதுவாக, பங்குச் சந்தைகள் சிறப்பாகச் செயல்படாத காலத்தில் தங்கம் அதிக வருமானத்தைக் கொடுத்து வருகிறது. அந்த வகையில், போர்ட்ஃபோலியோவில் அதிக இழப்பைத் தவிர்க்க தங்கத்தில் முதலீடு (கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் அல்லது கோல்டு இ.டி.எஃப்) செய்வது அவசியம். நிலையற்ற காலத்தில் தங்க முதலீடு நல்ல வருமானம் தந்திருக்கிறது. ஈக்விட்டி, தங்கம், பாண்ட் ஃபண்ட் கொண்ட அஸெட் அலோகேஷன் மூலம் கடந்த 3, 5, 7 ஆண்டுகளில் சராசரியாக 7.5% வருமானம் கிடைத்திருப்பதை அட்டவணையில் காணலாம்.

ஒரு சொத்துப் பிரிவின் வருமானம், மற்ற சொத்துப் பிரிவின் வருமானத்தை கணிசமாக விஞ்சியிருக்கலாம். குறிப்பிட்ட இடைவெளியில், அசல் சொத்து ஒதுக்கீட்டுக் கலவைக்கு சொத்துப் பிரிவுகளின் முதலீட்டை மாற்ற வேண்டும். இந்தத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக, இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் சொத்து ஒதுக்கீடு ஃபண்டுகளை அறிமுகப்படுத்தியிருக்கின்றன.

நீண்டகாலத்தில் லாபத்தை அதிகரிக்கலாம்! - கைகொடுக்கும் அஸெட் அலொகேஷன்!

இந்த ஃபண்டுகள், முதலீட்டாளர்களின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும் பிற முதலீடுகளில் வெவ்வேறு ஒதுக்கீட்டு அளவை வழங்குகின்றன. இங்கே, சொத்துப் பிரிவுகளுக்கு இடையிலான ஒதுக்கீடு நிலையானது அல்லது பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தைகளின் செயல்பாட்டுக்கு ஏற்ப மாறக்கூடியதாக இருக்கும். சந்தையும் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளும் இயற்கையில் மாறும் என்பதால், நீண்டகால முதலீட்டு முடிவுகளை எடுக்கும்போது மாறும் சொத்து ஒதுக்கீடு (Dynamic Asset Allocation) ஃபண்டுகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

அஸெட் அலொகேஷன்
அஸெட் அலொகேஷன்

நல்ல முதலீட்டு அனுபவத்துக்கு..!

ஒரு முழுமையான பங்குச் சந்தைச் சுழற்சியில் (காளை, கரடி மற்றும் பக்கவாட்டுச் சந்தை), மாறும் சொத்து ஒதுக்கீட்டு ஃபண்டுகள் அனைத்து வகை முதலீட்டாளர்களுக்கும் ஒப்பீட்டளவில் சிறந்த முதலீட்டு விருப்பமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. இத்தகைய ஃபண்டுகள் பேராசை மற்றும் பயம் ஆகிய இரண்டு முக்கிய மனித உளவியல்களை அகற்ற உதவுகின்றன.

தொடர்ந்து போர்ட்ஃபோலியோவை மறுசீரமைப்பதன் மூலம் பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தை சொத்துப் பிரிவுகளின் மாறிவரும் வருமான செயல்பாடுகளைத் தாண்டி சிக்கல் இல்லாத சீரான முதலீட்டுப் பயணத்தை உறுதிப்படுத்த முடியும். மேலும், முதலீட்டு முடிவுகளுக்கு வழிவகுக்கும் ‘குறைந்த விலையில் வாங்க, அதிக விலையில் விற்க!’ என்ற கொள்கையை ஒருவர் பின்பற்றுவதை, உணர்ச்சிபூர்வமான நிலை பெரும்பாலும் சாத்தியமில்லாததாக ஆக்கிவிடுகிறது. ஆனால், அஸெட் அலோகேஷன் ஃபண்டுகளில் இது சாத்தியமாகிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism