Published:Updated:

என்.ஆர்.ஐ - களுக்கு முதலீட்டு யோசனைகள்! - வழிகாட்டுகிறார் ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்

ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்
பிரீமியம் ஸ்டோரி
ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்

மகள் தந்தைக்கு அனுப்பும் தொகை ‘கிஃப்ட்’ ஆகக் கருதப்படுவதால், அதற்கு வருமான வரி எதுவும் கிடையாது.

என்.ஆர்.ஐ - களுக்கு முதலீட்டு யோசனைகள்! - வழிகாட்டுகிறார் ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்

மகள் தந்தைக்கு அனுப்பும் தொகை ‘கிஃப்ட்’ ஆகக் கருதப்படுவதால், அதற்கு வருமான வரி எதுவும் கிடையாது.

Published:Updated:
ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்
பிரீமியம் ஸ்டோரி
ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு (என்.ஆர்.ஐ), வருமான வரி, வீடு, மனை, பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் குறித்த பல்வேறு கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார் கோயம்புத்தூரை சேர்ந்த முன்னணி ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்.

நான் துபாயில் வசிக்கும் என்.ஆர்.ஐ வருமான வரித் துறையிலிருந்து வரும் இ-மெயில்கள், ‘உங்களுக்கு டி.டி.எஸ் பிடிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் வரிக் கணக்கு தாக்கல் செய்யுங்கள்’ என்று சொல்கிறது. பான் எண் மூலம் வருமான வரித் துறையின் இணையதளத்தில் ‘லாக் இன்’ செய்ய முயன்றால், பொருந்தவில்லை என்று வருகிறது. வருமான வரித் துறையிலிருந்து வந்த இ-மெயில் மூலமும் பதில் அளிக்க முடியவில்லை. இப்போது நான் என்ன செய்வது?

- பாலா, துபாய்

“பொதுவாக அதிகம் பேர் சந்திக்கும் பிரச்னைதான் இது. ஒருவர், வருமான வரித் துறையின் இணையதளத்தில் ‘லாக் இன்’ செய்து வரிக் கணக்கு தாக்கல் செய்திருப்பார் அல்லது யாராவது ஒரு ஆடிட்டர் இவருக்காக கணக்கு தாக்கல் செய்திருப்பார். இப்போது பாஸ்வேர்டு மறந்திருக்கும். அதை ‘பாஸ்வேர்டு ஃபர்காட் ஆப்ஷன்’ மூலம் மாற்றிக்கொள்ள முடியும். உங்களின் இ-மெயில் ஐ.டி, போன் நம்பர் மாறியிருந்தால், ஏற்கெனவே பதில் கொடுத்திருக்கும் ரகசிய கேள்விகளுக்கு பதில் அளிப்பதன்மூலம் புது பாஸ்வேர்டு பெற்று, வரிக் கணக்கு தாக்கல் செய்ய முடியும்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வரி
வரி

மத்திய அரசு அறிவித்துள்ள ரூ. 20 லட்சம் கோடி ஊக்கத் திட்டத்தில் நடப்பு 2020-21-ம் நிதி ஆண்டில் டி.டி.எஸ் 25% குறைவாகப் பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சலுகை வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும் உண்டா?

- பஷீர், கடையநல்லூர்

“இந்தச் சலுகை வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு (என்.ஆர்.ஐ-கள்) கிடையாது.’’

என்.ஆர்.ஐ-கள் மியூச்சுவல் ஃபண்டில் எப்படி முதலீடு செய்யத் தொடங்கலாம்?

- ஏ.கருப்பையா, மலேசியா

“உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளுங்கள் (கே.ஒய்.சி) விவரங்கள், அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆதாரங்களைக் கொடுப்பதன்மூலம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை ஆரம்பிக்கலாம். பணத்தை அந்த நாட்டிலேயே வைத்திருக்கப் போகிறீர்களா அல்லது இந்தியாவுக்குக் கொண்டு வரப்போகிறீர்களா என்பதையும் தெரிவிக்க வேண்டும்.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

என்.ஆர்.ஐ-ஆன நான் என்.ஆர்.ஓ கணக்கைப் பயன்படுத்தி பங்குகள் ஈக்விட்டி மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்கிறேன். நான் அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் குடியேறத் திட்டமிட்டுள்ளேன். இந்தியாவில் குடியேறிய பிறகு, எனது முதலீடுகளைத் தொடரலாமா அல்லது விற்று பணமாக்கிக் கொள்ளலாமா?

- கண்ணன் வெள்ளைச்சாமி இ - மெயில் மூலம்

“இதை இரண்டு விதமாகப் பார்க்க வேண்டும். முதலீடுகளை விற்ற பிறகு உங்களுக்கு வருமான வரி எவ்வளவு கட்ட வேண்டிவரும் என்பதைப் பார்க்க வேண்டும். விற்பதற்குமுன் குறுகிய கால மூலதன ஆதாய வரி, நீண்டகால மூலதன ஆதாய வரியைக் கணக்கிட்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும். வருமான வரி விதிப்பைப் பொறுத்தவரை, இந்தியர்கள் மற்றும் இந்தியாவுக்கு வரும் என்.ஆர்.ஐ-களுக்கும் பெரிய வித்தியாசமில்லை.

அடுத்து. நீங்கள் இந்தியா வந்தவுடன் முதலீடுகளை விற்கும்போது லாபகரமாக இருக்குமா என்பதைக் கவனிக்க வேண்டும். பங்குச் சந்தை இறக்கத்தால், முதலீடுகள் இழப்பில் இருக்கும் நேரம் இது. எனவே, கவனித்து விற்பது நல்லது.’’

ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்
ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்

நான் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறேன். கடந்த மூன்று வருடங்களாக எனக்கு இந்தியன் வங்கியில் என்.ஆர்.ஐ கணக்கு உள்ளது. மேலும், முதலீடு செய்வதற்கு அந்த வங்கி அதிகாரியைக் கேட்டபோது ‘இந்தியன் வங்கியில் அந்த வசதிகள் இல்லை. வேண்டுமென்றால் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் நீங்கள் தொடங்கலாம்’ என்றார். நான் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய என்ன வழி?

- முருகேசன் தங்கவேல், சிங்கப்பூர்

“எல்லா வங்கிகளிலும் எல்லா வசதிகளும் இருப்பதில்லை. நீங்கள் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் மூலம் நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைத் தொடங்கலாம். ஹெச்.டி.எஃப்.சி பேங்க் போன்ற தனியார் வங்கிகளும் இந்த முதலீட்டு வசதியை வழங்கி வருகின்றன.”

கத்தாரில் வசிக்கும் நான் இந்தியாவில் வீடு வாங்க விரும்புகிறேன். ரூபாய் மதிப்பு குறைந்திருப்பது இதற்கொரு காரணம். நான் மீண்டும் நாடு திரும்ப ஆறு மாதங்கள் ஆகும். இப்போதே நான் இங்கிருந்தபடியே வீட்டுக் கடன் மூலம் இந்தியாவில் வீடு வாங்கமுடியுமா?

- ராமகிருஷ்ணன் இ-மெயில் மூலம்

“சொத்து வாங்க நீங்கள் இந்தியா வர வேண்டுமா, வேண்டாமா என்று முதலில் பார்க்கவேண்டும். சில வங்கிகள் கடன் வாங்குபவர்களை நேரில் வரச்சொல்லும். நீங்கள் யாருக்காவது பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்து, அதைப் பதிவு செய்திருக்கும் பட்சத்தில், நீங்கள் இந்தியாவுக்கு வராமலே உங்கள் பெயரில் இந்தியாவில் சொத்து வாங்க முடியும். பத்திரப்பதிவுக்குப் பின்னர்தான் கடன் தருவார்கள் என்பதை மறக்க வேண்டாம்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியர்களுக்கு அளிக்கப்படுவதுபோல், என்.ஆர்.ஐ-களுக்கும் வீட்டுக் கடன் அசல் மற்றும் வட்டிக்கு வருமான வரிச் சலுகை கிடைக்குமா?

- மகேஸ்வரி, ஓமன்

“இந்தியர்களுக்கு போலவே என்.ஆர்.ஐ-களுக்கும் அசல் மற்றும் வட்டியில் வரிச் சலுகை உண்டு. நிதி ஆண்டில் திரும்பக் கட்டும் அசலில் நிபந்தனைக்கு உட்பட்டு ரூ.1.5 லட்சம் மற்றும் வட்டியில் ரூ.2 லட்சம் வரிச் சலுகை பெற முடியும். ஆனால், வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால், அதை வருமானமாகக் காட்ட வேண்டும்.”

என்.ஆர்.ஐ - களுக்கு முதலீட்டு யோசனைகள்! - வழிகாட்டுகிறார் ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்

என் ஓய்வுக்கால பலன் தொகை இருக்கிறது. எனக்கு சொந்தமாக வீடு இல்லை. புது வீடு வாங்க இது சரியான நேரமா, வீட்டுக் கடன் வட்டி இன்னும் குறையுமா, அதிகரிக்குமா?

- பாலமுருகன், முகநூல் மூலம்

“கோவிட் பாதிப்பால் உடனடியாக வீடுகளின் விலை குறைய வாய்ப்பு குறைவு. இன்னும் ஓராண்டு கழித்து விலை கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது. 2021 மே, ஜூன் வாக்கில் சொத்து வாங்கினால், இப்போதைய விலையைவிடக் குறைவாகக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இந்தியாவில் கோவிட் பாதிப்பு இரண்டாம் நிலை வரும் என்கிறார்கள். அப்படி வரும்பட்சத்தில் ரியல் எஸ்டேட் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளது. வீட்டுக் கடன் வட்டி இன்னும் குறைய வாய்ப்பு குறைவே. காரணம், வீட்டுக் கடன் வட்டி சுமார் 7.5% அளவுக்கு ஏற்கெனவே குறைந்துவிட்டது.’’

என் சகோதரி அமெரிக்காவில் வசிக்கிறார். அவர் மாதந்தோறும் என் தந்தைக்கு பணம் அனுப்புகிறார். என் தங்கை இந்தியாவில் வரிக் கட்டுவதில்லை. அமெரிக்காவில் மட்டும் வரிக் கட்டுகிறார். அவர் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவுக்கு வந்து இரண்டு மாதம் தங்கிவிட்டுச் செல்வார். என் தந்தை இந்தியாவில் வரிக் கணக்கு தாக்கல் செய்கிறார். மூத்த குடிமகனான என் தந்தை ஐந்தாண்டுகளுக்கு முன் செய்துவந்த பிசினஸை நிறுத்திவிட்டதால், தற்போது வருமானம் எதுவும் இல்லாமல் இருக்கிறார். என் தங்கை யாருக்கெல்லாம் பணம் அனுப்ப முடியும், என் தந்தை என் தங்கையிடமிருந்து பெறும் தொகைக்கு வரிக் கட்ட வேண்டுமா?

- சிவா, மெயில் மூலமாக

“மகள் தந்தைக்கு அனுப்பும் தொகை ‘கிஃப்ட்’ ஆகக் கருதப்படுவதால், அதற்கு வருமான வரி எதுவும் கிடையாது. இந்தத் தொகையை முதலீடு செய்து, அதன்மூலம் கிடைக்கும் தொகை மற்றும் இதர வருமானம் சேர்ந்து ரூ.5 லட்சம் தாண்டும்போது (வரித் தள்ளுபடி கணக்கில் கொண்டு) வரிக் கட்ட வேண்டும். இதே கணக்கீடுதான் தாயார், சகோதரர்களுக்கு அனுப்பும் பணத்துக்கும்.”

வெளிநாடுகளில் வசிக்கும் என்னைப் போன்ற நாணயம் விகடன் வாசகர்களுக்கு வரிச் சேமிப்பு, முதலீடு குறித்த உங்களின் ஆலோசனை என்ன?

-துரைசேகர், மெயில் மூலமாக

‘‘ஒருவரின் வருமானம் எப்படியிருக்கிறது எனில் பிசினஸ் வருமானம், சம்பள வருமானம் என்பதைப் பொறுத்து மாறும். பொதுவாக, இந்தியர்களுக்கு என்னென்ன வரிச் சலுகைகள் இருக்கிறதோ, அதெல்லாம் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு என்.ஆர்.ஐ-களுக்கும் இருக்கிறது.

முதலீடு என்கிறபோது அசையா சொத்து, அசையும் சொத்து என்ற இரு பிரிவில் வாங்கலாம். அசையா சொத்து என்கிறபோது வீடு, மனை, வர்த்தகக் கட்டங்கள், கிடங்குகள் வாங்கலாம்.

இந்தியாவைப் பொறுத்தவரை நீண்டகாலத்தில் ரியல் எஸ்டேட் சொத்துகளின் மதிப்பு அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில், என்.ஆர்.ஐ-கள் இந்தியாவில் விவசாய நிலம் வாங்க முடியாது.

அசையும் சொத்து என்றபோது பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட், ஃபிக்ஸட் டெபாசிட், கோல்டு பாண்ட்கள் போன்றவற்றை வருகின்றன. தற்போதைய நிலையில் ரியல் எஸ்டேட், பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள் விலை குறைந்து வர்த்தகமாகின்றன. அந்த வகையில், இப்போது இவற்றில் முதலீடு செய்யலாம். கோவிட் சூழ்நிலையைப் பொறுத்து இவற்றின் விலை இன்னும் இன்னும் குறையுமா என்று பார்க்கலாம். எனவே, மொத்த முதலீட்டை இப்போதே செய்துவிட வேண்டாம். நீண்டகால முதலீடு என்றபோது இப்போது முதலீட்டை ஆரம்பிக்கலாம்.

தற்போதைய நிலையில், தங்கம் ஒரு லாபகரமான முதலீடாக மாறியிருக்கிறது. கோவிட் நிலவரம் மற்றும் உலக நாடுகளின் பொருளாதார நிலைமை மாறுகிற வரைக்கும் தங்கத்தின் விலை உயரும் என்று சொல்லலாம்.

அதேநேரத்தில், கோவிட் நிலவரம் எப்போது சரியாகும் என்று தெரியவில்லை. அது வரைக்கும் நிலைமையைச் சமாளிக்க எளிதில் பணமாக்கக்கூடிய வகையிலான முதலீடுகளில் கொஞ்சம் பணத்தை வைத்துக்கொள்ள வேண்டும். இதை பேங்க் ஃபிக்ஸட், லிக்விட் மியூச்சுவல் ஃபண்டுகளில் வைத்துக் கொள்ள வேண்டும்.”

கேளுங்கள், பதில் கிடைக்கும்!

கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தர்
கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தர்

தங்கத்தில் முதலீடு செய்வது, கமாடிட்டி டிரேடிங் செய்வது குறித்து உங்கள் கேள்விகளுக்கு கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தர் பதில் அளிக்கிறார்.

உங்கள் கேள்விகளை navdesk@vikatan.com என்ற இ-மெயிலுக்கு அனுப்பி வைக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism