Published:Updated:

முதலீடு... ஆண்டுதோறும் எஸ்.ஐ.பி தொகையை அதிகரிப்பேன்!

SIP Investment
பிரீமியம் ஸ்டோரி
News
SIP Investment

நானும் எஸ்.ஐ.பியும்!

வ்வோர் ஆண்டும் சம்பளம் கூடுதலாக வேண்டும் என்று நினைக் கிறோம்; புதிய ஊர்களுக்கு சுற்றுலா போகத் திட்டமிடுகிறோம். ஆனால், ஒவ்வோர் ஆண்டும் நாம் செய்யும் முதலீட்டை அதிகரிக்க வேண்டும் எனப் பலரும் நினைப்பதில்லை. மதுரையைச் சேர்ந்த எஸ்.பாலசுப்பிரமணியன் (வயது 43), என்.பிரியா (42) தம்பதியர் ஒவ்வோர் ஆண்டும் தங்களின் எஸ்.ஐ.பி முதலீட்டுத் தொகையைத் தவறாமல் அதிகரித்து வருகிறார்கள். விளம்பர நிறுவனம் ஒன்றில் ஃபைனான்ஸ் & அக்கவுன்ட்ஸ் மேனேஜராக பாலசுப்பிரமணியன் பணிபுரிந்து வருகிறார். பிரியா வீட்டிலிருந்து பணிபுரிந்து வருவதால், அவர் முதலீட்டு விஷயங்களை முழுமை யாகக் கவனித்துக்கொள்கிறார்.

இந்தத் தம்பதியர் நம்மிடம் பேசும்போது, “எங்களின் ஒரே மகள் பிரியவர்சினி, இப்போது பத்தாவது படித்து வருகிறார். அவரை டாக்டருக்குப் படிக்க வைக்க ஆசை. இதற்காக ஃபிக்ஸட் டெபாசிட்டில்தான் பணம் போட்டு வந்தோம். ஆனால், இதன் மூலம் கிடைத்த வருமானம், விலைவாசி உயர்வு மற்றும் வருமான வரி போக, பெரிதாக இல்லை. போதுமான பணம் கிடைக்காது என நிதி ஆலோசகர் எஸ்.ராமலிங்கம் சொன்னார்.

முதலீடு... ஆண்டுதோறும் எஸ்.ஐ.பி தொகையை அதிகரிப்பேன்!

தன்னை ‘ஃபைனான்ஸ் டாக்டர்’ என எங்களிடம் அறிமுகப் படுத்திக் கொண்டார். அவருடைய பணிகள் குறித்துக் கேட்டுத் தெரிந்துகொண்டபிறகு, அவர் ஆலோசனையின்படி முதலீட்டைத் தொடங்கினோம். குடும்பச் சொத்து ஒன்றை விற்றதன்மூலம் கிடைத்த தொகையை நீண்ட கால நோக்கில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தேன். இதன்மூலம் கிடைக்கும் தொகை, மகளின் படிப்பு, திருமணம் மற்றும் எங்களின் ஓய்வுக்காலத்துக்குப் போதுமானதாக இருக்காது என நிதி ஆலோசகர் விளக்கிச் சொன்னார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆரம்பத்தில் மாதம் 2,000 ரூபாய் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்தோம். அதனை ரூ.3,000-ஆக உயர்த்தினோம். அதனை இப்போது ரூ.5,000 அதிகரித்துள்ளோம். இனி சம்பளம் கூடக்கூட, ஆண்டு தோறும் எஸ்.ஐ.பி தொகையை அதிகரிக்க இருக்கிறோம்’’ என்றவர், என்ன மாதிரியான மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறார்?

முதலீடு... ஆண்டுதோறும் எஸ்.ஐ.பி தொகையை அதிகரிப்பேன்!

“அவசரக்கால செலவுக்கு என லிக்விட் ஃபண்டில் தனியே பணம் போட்டு வரு கிறோம். வங்கிச் சேமிப்புக் கணக்கில் ஆண்டுக்கு 3.5% வருமானம் கிடைக்கும் நிலையில், அதுபோன்ற வசதிகளுடன் லிக்விட் ஃபண்ட்மூலம் சுமார் 7% வருமானம் கிடைக்கிறது. நீண்டகால இலக்குகளை நிறைவேற்ற ஹைபிரீட் ஃபண்ட், மிட் கேப் மற்றும் ஸ்மால் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறோம்” என்றார். இவரைப் போல, ஒவ்வொருவரும் செய்யத் தொடங்கலாமே!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உங்களின் எஸ்.ஐ.பி முதலீட்டு அனுபவங்களை finplan@vikatan.com என்ற மெயிலுக்கு அனுப்பிவைக்கலாம்.