Published:Updated:

அடிஷனல் பர்ச்சேஸ்... சந்தை இறக்கத்திலும் 11% வருமானம்!

நானும் எஸ்.ஐ.பியும்!

பிரீமியம் ஸ்டோரி

ங்குச் சந்தை கொஞ்சம் இறங்கினாலும் பல முதலீட்டாளர்கள் பதற்றமாகிவிடுகிறார்கள். ஆனால், சென்னை வடபழனியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் எஸ்.மதிவாணன் கொஞ்சம் கூட பதற்றமடைவதில்லை. சந்தை இறக்கத்தை முதலீட்டுக்கான ஒரு வாய்ப்பாகவே பார்க்கிறார் அவர்.

“பங்குச் சந்தை இறக்கத்தின்போது தொடர்ந்து கூடுதலாக நான் முதலீடு (Additional purchase) செய்துவருகிறேன். இதனால், பங்குச் சந்தையின் இறக்கத்திலும் என்னுடைய மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோ சராசரியாக 11 சதவிகிதத்துக்குமேல் வருமானம் தந்துகொண்டிருக்கிறது” என்று சொல்லும் மதிவாணன், தனது முதலீட்டு அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

அடிஷனல் பர்ச்சேஸ்... சந்தை இறக்கத்திலும் 11% வருமானம்!

“நண்பர் ஒருவர் சொன்னதன் அடிப்படையில் ஆறு ஆண்டு களுக்குமுன், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் மாதம் 2,000 ரூபாயைக்கொண்டு எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டை ஆரம்பித்தேன். சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க, எஸ்.ஐ.பி தொகையை அதிகரித்து வருகிறேன். இப்போது மாதந்தோறும் ரூ.22,000 முதலீடு செய்கிறேன். இதில், என் பெயரில் மாதம் ரூ.12,000, என் மனைவியின் பெயரில் ரூ.10,000 எஸ்.ஐ.பி முறையில் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்துவருகிறேன்.

நான் செய்யும் முதலீட்டில் என் மகனின் உயர்கல்விக்காக ரூ.7,000, எங்கள் ஓய்வுக்காலத்துக்காக ரூ.5,000 முதலீடு செய்கிறேன். என் மனைவியின் பெயரில் முதலீடு செய்வதில் என் மகனின் உயர்கல்விக்காக ரூ.6,000, எங்கள் ஓய்வுக்காலத்துக்காக ரூ.4,000 எனப் பிரித்து முதலீடு செய்கிறேன். என் மகனின் கல்வித்தேவைக்குக் குறைந்த அளவு காலமே இருப்பதால், அதற்காக மட்டும் ரூ.13,000 முதலீடு செய்கிறோம்.

எங்களின் ஓய்வுக்காலத்துக்கு நீண்ட காலம் இருப்பதால், அதற்காக ரூ.9,000 முதலீடு செய்து வருகிறோம். பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் என்கிறபோது, 8 - 10 ஆண்டுகளில் நல்ல லாபம் தரும். இந்த வகை முதலீடுகளில் தினசரி என்.ஏ.வி பார்த்து கவலைகொள்ளத் தேவையில்லை. கடந்த காலங் களில் என்.ஏ.வி குறைந்து, பிறகு வேகமாக ஏறி வந்திருப்பதை அனுபவப்பூர்வமாகப் பார்த்திருப் பதால், இப்போது நாங்கள் முதலீடு செய்திருக்கும் ஈக்விட்டி ஃபண்டுகளின் என்.ஏ.வி மதிப்பு குறைந்தால்கூட கவலைப்படுவ தில்லை. எப்போதெல்லாம் கூடுதலாகப் பணம் கிடைக் கிறதோ, அப்போது ரூ.5,000, ரூ.10,000, ரூ.15,000 என அடிஷனல் பர்ச்சேஸ் செய்துவருகிறோம்.

அடிஷனல் பர்ச்சேஸ்... சந்தை இறக்கத்திலும் 11% வருமானம்!

தற்போதைய நிலையில், எங்கள் முதலீடு சராசரியாக 11% வருமானம் தந்திருக்கின்றன. இன்னும் 6 முதல் 7 ஆண்டுகளில் எங்கள் முதலீட்டின்மூலம் ஆண்டுக்குச் சராசரியாக 13-15% வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்’’ என்று சரியான முதலீட்டைச் செய்து முடித்திருக்கும் திருப்தியில் பேசிமுடித்தார் மதிவாணன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உங்களின் எஸ்.ஐ.பி முதலீட்டு அனுபவங்களை finplan@vikatan.com என்ற மெயிலுக்கு அனுப்பிவைக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு