நிம்மதியான ஓய்வுக்காலத்துக்கு எப்படி நிதித் திட்டமிட வேண்டும் என்பது குறித்த நாணயம் விகடன் வாசகர்களின் சந்தேகங்களுக்கு மும்பையைச் சேர்ந்த நிதி ஆலோசகர் சுரேஷ் சடகோபன் (Ladder7.co.in) பதில் அளிக்கிறார்.

என் வயது 45. எனது 58-வது வயதில் பணி ஓய்வு பெறும்போது ரூ.25 லட்சம் வேண்டும். இதற்கு எஸ்.ஐ.பி முறையில் மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், எவற்றில் முதலீடு செய்ய வேண்டும்?

- எஸ்.ராஜேஷ் கண்ணன், இ-மெயில் மூலம்

“உங்களுக்கு முதலீட்டுக் காலம் 13 ஆண்டுகள் இருக்கின்றன. இது நீண்டகால முதலீடு என்பதால், நீங்கள் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீட்டை மேற்கொள்ளலாம். இவற்றின் மூலம் ஆண்டுக்குச் சராசரியாக 12% வருமானம் கிடைக்கும் என எடுத்துக்கொண்டால், மாதம் நீங்கள் ரூ.6,700 முதலீடு செய்து வர வேண்டும். அதேநேரத்தில், நீங்கள் ஒரு நிதி ஆலோசகரை ஆலோசித்து உங்களின் ரிஸ்க் எடுக்கும் திறன், முதலீடு செய்யும் வாய்ப்பு வசதிக்கேற்ப முதலீட்டை மேற்கொள்வது நல்லது.”

சம்பாதிக்கும் பணத்தை ஓய்வுக்காலத்துக்காக ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்யலாம் என்றால் ஃபிக்ஸட் டெபாசிட் போன்றவற்றில் வட்டி குறைவாக உள்ளது. அதிக ரிஸ்க் இல்லாமல் ஓய்வுக்காலத்துக்கு எதில் முதலீடு செய்வது?

- சி.கார்த்திகேயன், சாத்தூர்

“அதிக ரிஸ்க் எடுக்காத மூத்த குடிமக்களுக்கு பல்வேறு முதலீட்டு வாய்ப்புகள் இருக்கின்றன. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மற்றும் பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா ஆகிய இரண்டு அரசுத் திட்டங்கள் உள்ளன. அவை ஆண்டுக்கு 7.4% வருமானத்தை வழங்கு கின்றன. இவற்றில் ஆண்டுக்கு ஒருவர் ரூ.15 லட்சம் முதலீடு செய்ய முடியும். இவை தவிர, ரிஸ்க் இல்லாமல் ஓய்வுக்கால முதலீட்டை மேற்கொள்பவர்கள், மியூச்சுவல் ஃபண்டில் உள்ள அதிக தரக் குறியீடுகளைக் கொண்ட பொதுத்துறை நிறுவனங்களின் பாண்டுகளில் முதலீடு செய்யும் பாரத் பாண்டுகளில் முதலீடு செய்யலாம். இவற்றிலிருந்து ஆண்டுக்குச் சராசரியாக 6-6.5% வருமானம் எதிர்பார்க்கலாம்.”

என் வயது 52. சொந்த வீட்டில் வசித்துவரும் என் குடும்ப மாதச் செலவு தற்போது ரூ.55,000. ஓய்வுக் காலத்துக்காக நான் எவ்வளவு சேர்க்க வேண்டும்? அதற்கு தற்சமயம், எனது முதலீடு எவ்வளவு இருக்க வேண்டும்? வரும் ஆண்டுகளில், மாதங்களில் நான் மேலும் எவ்வளவு தொகை முதலீடு செய்ய வேண்டும்?

- கிருஷ்ணகுமார், இ-மெயில் மூலம்

“பணவீக்க விகிதம் ஆண்டுக்கு 6% என வைத்துக்கொள்வோம். 60 வயதில் நீங்கள் ஓய்வு பெறும்போது, உங்களின் மாதத் செலவு சுமார் ரூ.87,600 ஆக இருக்கும். பொதுவாக, பலருக்கு பணி ஓய்வுக்குப் பிறகு செலவுகள் சுமார் 25 - 30% குறையக்கூடும். உங்களுக்கு 25% செலவுகள் குறைந்தால், ரூ.65,700 இருந்தால் சமாளிக்க முடியும். ஓய்வுக்காலத்துக்குப் பிறகு, 25 ஆண்டுகள் வாழ்வதாகவும், முதலீட்டின் மூலமாக வருமானம் பணவீக்க விகித்தைவிட கூடுதலாக 1% கிடைப்பதாகவும் வைத்துக் கொண்டால், உங்களுக்கு ஓய்வுக்காலத் தொகுப்பு நிதி ரூ.1.75 கோடி தேவை.”

அடல் பென்ஷன் திட்டத்தில் 38 வயதாகிய நான் மாதம் ரூ.5,000 பென்ஷன் பெற ரூ.1,087 கட்டி வருகிறேன். இது சரியான முதலீடா? இதைவிட உத்திரவாதத்துடன்கூடிய வேறு திட்டங்கள் ஏதேனும் இருக்கிறதா?

- ஆர்.ராம், மெயில் மூலமாக

“என்.பி.எஸ்ஸை ஒரு சிறந்த திட்டமாக நாம் கருதலாம். இது சிறந்த நெகிழ்வுத் தன்மையைக் கொண்டது. உங்கள் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய இந்தத் திட்டம் உங்களை அனுமதிக்கிறது.”

நான் ஓய்வுபெறும்போது கிடைக்கும் தொகையை நான்காகப் பிரித்து, 60 முதல் 65 வயது வரைக்குமான செலவுக்குத் தேவையான தொகையை லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளேன். 65 முதல் 70 வயது, 70 முதல் 75 வயது, மற்றும் 75 முதல் 80 வயதுக்குத் தேவையான தொகையை, நன்கு செயல்படும் மூன்று லார்ஜ்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளேன். என் முடிவு சரியானதா?

- ஹரீஷ் நாராயண், மெயில் மூலமாக

“பங்கு சார்ந்த முதலீடுகள் நீண்டகாலத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், 65 வயதுக்கு மேல் அனைத்துத் தொகைகளையும் பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வது ரிஸ்க்கான, ஆபத்தான முதலீடாகவே நாம் கருதலாம். பொதுவாக, ஓய்வுக்காலத் தொகுப்பு நிதிக்கு மொத்த அஸெட் அலோகேஷனில் 40 சதவிகிதத்துக்கு மேல் பங்கு சார்ந்த முதலீடுகளை நான் பரிந்துரை செய்வதில்லை. அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் 10% அளவுக்கு மட்டும் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம். இந்த விஷயங்களை மனதில்கொண்டு, பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீட்டை மேற்கொள்ளவும்.”

ஓய்வு பெறும்போது கிடைக்கும் தொகுப்பு நிதியை (Corpus Fund), எந்தெந்த சதவிகிதத்தில், எந்த விதமான திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்?

- சாருமதி, மெயில் மூலமாக

“ஓய்வுக்கால தொகுப்பு நிதிக்கு இப்படித்தான் முதலீடு செய்ய வேண்டும் என்று எந்த ஒரு ஃபார்முலாவும் இல்லை. பொதுவாக, அதிகமான தொகையைக் கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது. ஓய்வுக்காலம் என்று வரும்போது, 40 சதவிகிதத்துக்குமேல் பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்ய ஆலோசனை வழங்குவதில்லை.”

என் வயது 28. என் சம்பளத்தில் மாதம் பி.எஃப்-ஆக ரூ.1,800 பிடிக்கப்படுகிறது. 58 வயதில் பணி ஓய்வுக்காலத்துக்கு இந்தத் தொகை போதுமா?

- சு.கலிவரதன், நாகர்கோவில்

“பணியாளர் சேமநல நிதி (Employee Provident Fund) என்பது கட்டாயச் சேமிப்பாகும். உங்களுக்கு சம்பளத்தில் பிடிக்கப்படும் தொகை, ஒரு நல்ல ஓய்வுக்கால தொகுப்பு நிதியை உருவாக்க உதவி செய்யாது. உங்களுக்கு 28 வயது என்பதால், சம்பாதிப்பதற்கு இன்னும் நீண்டகாலம் இருக்கிறது. நீங்கள் பொது சேமநல நிதி மற்றும் என்.பி.எஸ் மூலம் தனியாக ஓய்வுக்காலத்துக்கு முதலீடு செய்வது நல்லது. முடிந்தால் கூடவே ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளிலும் உங்களால் முடிந்த தொகையை முதலீடு செய்துவரலாம்.”

என் வயது 25, புதிதாக வேலையில் சேர்ந்திருக்கிறேன். ஓய்வுக்காலத்துக்கான முதலீட்டை ஆரம்பிக்க எந்த வயது சரியாக இருக்கும்?

- அ.பிரபு, தர்மபுரி

“ஓய்வுக்காலத்துக்கு எவ்வளவு சீக்கிரம் முதலீட்டை ஆரம்பிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் ஆரம்பிப்பது நல்லது. இளம் வயதிலேயே முதலீட்டை ஆரம்பித்தால், சிறிய தொகையை மாதம்தோறும் முதலீடு செய்துவந்தால் போதும். பி.எஃப் தவிர, பி.பி.எஃப் மற்றும் என்.பி.எஸ் திட்டங்களிலும் ஓய்வுக்காலத்துக்கான முதலீட்டை நீங்கள் மேற்கொண்டு வரலாம். நீங்கள் ரிஸ்க் எடுப்பவராக இருந்தால், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் மூலமும் முதலீடு செய்து வரலாம்.”

தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன். வயது 30. நான் மாதம்தோறும் என்.பி.எஸ்ஸில் ரூ.5,000 முதலீடு செய்தால், எனக்கு 58 வயதில் எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்?

- கலைச்செல்வன், காரைக்குடி

“30 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூ.5,000-ஐ என்.பி.எஸ்ஸில் முதலீடு செய்து, அதற்கு ஆண்டுக்குச் சராசரியாக 9% வருமானம் கிடைத்தால், ரூ.92 லட்சம் தொகுப்பு நிதி சேர்ந்திருக்கும். ஆண்டுக்கு 6% தொகையைச் செலவு செய்வதாக இருந்தால், மாதம் ரூ.45,000 செலவுக்குக் கிடைக்கும்.”

நான் 2020 டிசம்பரில் பணி ஓய்வு பெறப் போகிறேன். சொந்த வீடு இருக்கிறது. எனக்கு மொத்தம் ரூ.50 லட்சம் ஓய்வுக்கால நிதியாகக் கிடைக்கும். இதை நான் எதில் முதலீடு செய்தால், ஓய்வுக்காலத்தை சுகமாகக் கழிக்க முடியும்.?

- க.மணிவண்ணன், தஞ்சாவூர்

“ உங்களிடம் ரூ. 50 லட்சம் இருந்து, அதற்கு ஆண்டுக்கு 7% வருமானம் கிடைத்தால், ஆண்டுக்கு ரூ.3.5 லட்சம் கிடைக்கும். மாதம் சுமார் ரூ.30,000 கிடைக்கக்கூடும். தற்போதைய செலவுகளைவிட ஓய்வுக்காலத்தில் செலவு குறைவாக இருந்தால் நல்லது. ஆனால், பணவீக்க விகிதம் அதிகமாக இருந்தால், உங்களுக்கு அதிக தொகை செலவுக்குத் தேவைப்படும் என்பதை மறக்காதீர்கள்.”

கேளுங்கள், பதில் கிடைக்கும்!

குழந்தைகளின் மேற்படிப்புக்கு எப்படி நிதித் திட்டமிட வேண்டும் என்பது குறித்த உங்கள் பல சந்தேகங்களுக்கு நிதி ஆலோசகர் ஸ்ரீதேவி (www.financialplanners.co.in) பதில் அளிக்கிறார்.

உங்கள் கேள்விகளை navdesk@vikatan.com என்ற இ-மெயிலுக்கு அனுப்பி வைக்கலாம்.