Published:Updated:

தங்கத்தை `பேப்பர் கோல்டு' ஆக வாங்குவதால் கூடுதல் நன்மை... எப்படி?

தங்கம்
தங்கம்

மிகக் குறுகியகாலத்தில் தங்கத்தின் விலை மிகவும் அதிகரித்திருப்பது, தங்க நகைப் பிரியர்களுக்குப் பேரதிர்ச்சியைத் தந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து எல்லோரின் மனதிலும் எழுந்திருக்கும் கேள்வி, 'இந்த விலையுயர்வு நீடிக்குமா

சீனாவைத் தாக்கியிருக்கும் கொரோனா வைரஸ் சாதாரண மக்களை மட்டும் பாதிக்கவில்லை; அதன் உள்நாட்டுப் பொருளாதாரத்திலும்ம் கணிசமாக பாதித்திருக்கிறது. இதையடுத்து, அந்த நாட்டுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளின் பொருளாதாரத்திலும் அது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் அதிகரித்திருக்கிறது. இதன் அடுத்தகட்டமாக, கடந்த வாரம் கொரோனா வைரஸ் தென் கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனால் உலக அளவில் பங்குச் சந்தைகள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன. அமெரிக்கப் பங்குச் சந்தைகளான டவ் ஜோன்ஸ், எஸ் அண்ட் பி 500, நாஸ்டாக் ஆகிய மூன்றுமே, ஒரே நாளில் 3.5 சதவிகிதத்துக்கு மேல் சரிந்து காணப்பட்டன.

தங்கத்தை `பேப்பர் கோல்டு' ஆக வாங்குவதால் கூடுதல் நன்மை... எப்படி?

இதன் உடனடித் தாக்கத்தால்தான் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. சென்ற ஒரு வாரத்தில் மட்டும் 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.4,166 என்ற புதிய உச்சத்தில் வர்த்தகமானது. 2020-ம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் சர்வதேச விலையில் தங்கத்தின் விலை 7% அதிகரித்துள்ளது; உள்நாட்டு விலையில் 8% அதிகரித்துள்ளது. இவ்வாறு அதிர்ச்சியளிக்கக்கூடிய அளவில் விலை அதிகரிக்க முகாந்திரங்கள் இருக்கின்றனவா என்று பார்த்தால், உலக அளவில் நிலவிவரும் பொருளாதார வளர்ச்சி சார்ந்த அச்சங்கள் முக்கியப் பங்குவகிக்கின்றன.

- மிகக் குறுகியகாலத்தில் தங்கத்தின் விலை மிகவும் அதிகரித்திருப்பது, தங்க நகைப் பிரியர்களுக்குப் பேரதிர்ச்சியைத் தந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து எல்லோரின் மனதிலும் எழுந்திருக்கும் கேள்வி, 'இந்த விலையுயர்வு நீடிக்குமா, தங்கத்தின் விலை இறங்குவதற்கு வாய்ப்பிருக்கிறதா...' என்பதுதான். தங்கத்தின் விலைப்போக்கு எவ்வாறு இருக்கும்? - நாணயம் விகடன் கவர்ஸ்டோரியை முழுமையாக வாசிக்க > மீண்டும் ஏற்றத்தில் தங்கம்... விலை உயர்வு நீடிக்குமா? https://www.vikatan.com/news/share-market/gold-price-hike-may-continue-for-some-time

கோல்டு இ.டி.எஃப்...

தங்கத்தை நகையாகவோ, பாராகவோ, நாணயமாகவோ வாங்குவதற்கு பதிலாக தங்கத்தில் மேற்கொள்ளும் முதலீட்டின் பலன்கள் அனைத்தையும் உள்ளடக்கிய 'பேப்பர் கோல்டு'-ஆக வாங்குவது பல வகைகளில் நன்மை அளிக்கக்கூடியது.

'பேப்பர் கோல்டு' என்பது தங்கத்தின் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் முதலீடு செய்யப்பட்டு அந்த முதலீட்டின் பயனை முதலீட்டாளர்களுக்கு அளிப்பது. இந்த முதலீட்டின் வருவாய் தங்கத்தின் விலைப்போக்கை ஒட்டியே இருக்கும். தவிர, செய்கூலி, சேதாரம் கிடையாது; தரம் குறித்துக் கவலைகொள்ளத் தேவையில்லை; பாதுகாக்க லாக்கரும் வேண்டியதில்லை. ஆனால், தங்கத்தில் கிடைக்கும் வருவாய்க்கு நிகரான பலன்கள் இதில் உண்டு. பேப்பர் கோல்டு முதலீட்டை நாம் மூன்று வகைகளில் மேற்கொள்ள முடியும்.

கோல்டு இ.டி.எஃப்: இ.டி.எஃப் என்பது 'எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்' என்பதன் சுருக்கம். தங்கத்தின் மீது நேரடியாக மேற்கொள்ளப்படும் இந்த வகை முதலீடு, பங்குச் சந்தையில் வர்த்தகமாவதால் டீமேட் மற்றும் டிரேடிங் கணக்கு வைத்திருக்க வேண்டியது அவசியம். இந்தத் திட்டத்தில் நாம் மேற்கொள்ளும் முதலீட்டுக்கேற்ப, நமக்கு தங்கம் யூனிட்டுகளாகப் பிரித்தளிக்கப்படும். அதாவது, ஒரு யூனிட் என்பதை ஒரு கிராம் எனக் கணக்கில்கொள்ளலாம். குறைந்தபட்சம் ஒரு யூனிட் முதல் எத்தனை யூனிட் வேண்டுமானாலும் ஒருவர் வாங்கிக்கொள்ள முடியும். நம் வசதிக்கேற்ப மாதந்தோறும் எஸ்.ஐ.பி முறையிலும் வாங்கிக்கொள்ளலாம்.

தங்கத்தை `பேப்பர் கோல்டு' ஆக வாங்குவதால் கூடுதல் நன்மை... எப்படி?

இந்த முதலீட்டில் புரோக்கரேஜ் சார்ஜ், ஃபண்ட் மேனேஜ்மென்ட் சார்ஜ் ஆகியவை உண்டு. ஆனால், இவை இரண்டுமே மிகவும் குறைவானவை (0.5% -1% அளவு மட்டுமே இருக்கும்). இந்த முதலீட்டின் மூலம் ஒரு வருடத்துக்குப் பிறகு கிடைக்கப்பெறும் லாபம் வருமான வரிக்கு உட்பட்டதாக இருந்தாலும், நீண்ட கால மூலதன ஆதாய வரி அடிப்படையில் செலுத்தினால் போதும். மேலும், தங்கத்தைப் போலவே, அவசரத் தேவைக்கு கோல்டு இ.டி.எஃப்-களையும் அடமானம் வைத்து வங்கிகளிலிருந்து பணம் பெற முடியும்.

- கோல்டு இ.டி.எஃப் போலவே 'சாவரைன் கோல்டு பாண்டு', 'கோல்டு மியூச்சுவல் ஃபண்ட்' (ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ்) போன்ற வகைகளிலும் பேப்பர் கோல்டு முதலீடு செய்ய முடியும். அவை குறித்து முழுமையாக நாணயம் விகடன் இதழில் வாசிக்க > பேப்பர் கோல்டு தரும் சூப்பர் பலன்! - தங்கத்தில் முதலீட்டு வாய்ப்புகள்! https://www.vikatan.com/news/investment/investment-options-on-gold-paper-gold

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு