Published:Updated:

தங்கம் விலை... ஏற்றம் எதுவரை..? - தொடர்ந்து முதலீடு செய்யலாமா?

தங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தங்கம்

இந்திய விலையில் அதிகபட்சமாக சவரன் ரூ.39,500 வரை செல்ல வாய்ப்புகள் உள்ளன.

தங்கம் விலை... ஏற்றம் எதுவரை..? - தொடர்ந்து முதலீடு செய்யலாமா?

இந்திய விலையில் அதிகபட்சமாக சவரன் ரூ.39,500 வரை செல்ல வாய்ப்புகள் உள்ளன.

Published:Updated:
தங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தங்கம்
ங்கி வைப்பு நிதிகளுக்கு வட்டிக் குறைப்பு, ரியல் எஸ்டேட்டில் நிலவும் மந்தமான சூழ்நிலை என முதலீட்டாளர்களின் வழக்கமான முதலீடுகள் தற்போது பெரிய அளவில் ஆதாயம் தருபவையாக இல்லை.

இது முதலீட்டாளர்களுக்கு வருத்தத்தைத் தந்தாலும், தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்குத் தொடர்ந்து மேல்நோக்கி நகர்ந்து வருவது மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. தங்கம் விலை சர்வதேச சந்தையில் ஏழு வருடங்களுக்குப் பிறகு ஒரு டிராய் அவுன்ஸ் (31.10 கிராம்) 1,785 டாலராக அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 1,440 டாலராக இருந்தது. அதிலிருந்து 24% விலை உயர்ந்திருக்கிறது.

தங்கம்
தங்கம்

சென்ற மூன்று மாதங்களில் பங்குச் சந்தைகள் அதிக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துவரும் நிலையில், தங்கத்தின் விலை மட்டும் தொடர்ச்சியாக ஏற்றமடைந்திருக்கிறது. தங்கத்தில் ஏற்கெனவே முதலீடு செய்யத் தவறியவர்கள் விலை அதிகரித்த பிறகு, `வாங்கலாமா?’ என்று கேட்கிறார்கள். பொதுவாக, விலை ஏறிய பிறகு முதலீடுகளை மேற்கொள்ளாமல் நிதானமான போக்கைக் கையாள்வது சாலச் சிறந்தது. இனி இந்த விலையேற்றத்துக்கான காரணங்கள் என்னென்ன, தங்கம் விலை இறங்க வாய்ப்புகள் இருக்கின்றனவா எனப் பார்ப்போம்.

திடீர் விலை ஏற்றம் ஏன்?

பொருளாதார வளர்ச்சியும், தங்கத்தின் விலையும் எதிரெதிர் திசையில் பயணிக்கும் என்பதை முதலில் கவனத்தில்கொள்ள வேண்டும். உலகப் பொருளாதார வளர்ச்சிக்குத் தடை எந்த வடிவத்தில் வந்தாலும், அதன் தாக்கம் தங்கத்தின் விலையில் பிரதிபலிக்கும். ஏற்கெனவே வளர்ந்த நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை மிகக் குறைவாக வைத்திருப்பது, மத்திய வங்கிகளும் பொருளாதாரத்தை ஊக்குவிக்கத் தளர்வான நிதிக் கொள்கைகளைக் கையாள்வது, பல்வேறு நாடுகளில் பொது முடக்கத்தால் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது எனத் தங்கத்தின் விலை அதிகரிக்கப் பல காரணங்களைச் சொல்ல முடியும். ஆனால், இந்தக் காரணங்கள் எதுவுமே புதியவை அல்ல. ஏற்கெனவே சந்தைகளால் நன்கு உணரப்பட்டவை மற்றும் தங்கத்தின் விலை உயர்வுக்கு உந்துகோலாக அமைந்தவை. `அப்படியென்றால், இப்போதைய விலை அதிரிப்புக்கு என்ன காரணம்?’ என்பது அனைவர் மனதிலும் எழக்கூடிய வினா.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காரணம் தேடும் சந்தை..!

சந்தையைப் பொறுத்தவரை, விலை ஏறவோ, இறங்கவோ புதுப்புதுக் காரணத்தைத் தேடிக்கொண்டேயிருக்கும்.

தங்கம்
தங்கம்

1. அமெரிக்க ஃபெடரல் அவ்வப்போது வெளியிடும் பொருளாதாரத்தின் எதிர்காலப் போக்குகள் பற்றிய செய்திகள் முதலீட்டாளர்களால் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன. அவற்றில் நம்பிக்கையூட்டும் செய்திகள் இருந்தால், தங்கத்தின் விலை இறக்கமடையும். இல்லையென்றால், தங்கத்தை விற்பவர் விலையை அதிகரித்துக்கொண்டே செல்வார்.

2. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு வரி விதித்ததிலிருந்து இன்னும் முழுவதுமாகப் பின்வாங்கவில்லை. அது குறித்து எந்தவிதமான தளர்வு பற்றிய செய்திகளும் இல்லை. அமெரிக்கா எடுத்த நடவடிக்கை பொருளாதாரத்தை பாதிக்கும் எனச் சந்தை கருதுவதால், தங்கத்தின் விலை இறக்கமடையவில்லை.

3 கோவிட்19-ன் தாக்கம் ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தையே உலுக்கியுள்ளது. நோய்த் தொற்றின் தாக்கம் முதல்கட்ட அளவில் முடிந்துபோனதாகச் செய்திகள் வந்து, பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில், தற்போது மீண்டும் இரண்டாம்கட்டத் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்ச உணர்வு பலரிடமும் எழுந்துள்ளது. `உலகப் பொருளாதார வளர்ச்சி 3% அளவுக்குக் குறையும்’ என்று முன்பு சொன்ன ஐ.எம்.எஃப்., தற்போது `4.9% அளவுக்குக் குறையும்’ என்று சொல்லியிருப்பது பங்குச் சந்தைகளைக் கவலையடையச் செய்துள்ளது. இதனால் முதலீடுகள் பங்குச் சந்தையிலிருந்து விலகி, தங்கம் போன்றவற்றில் அதிகரிக்கின்றன.

4. இந்திய ரூபாய்க்கும் அமெரிக்க டாலருக்குமான மதிப்பு வித்தியாசம் முக்கியப் பங்குவகிக்கிறது. 2020-ம் ஆண்டு முதல் ஆறு மாதங்களில் மட்டும் சுமார் 7% சரிந்துள்ளது. இந்த மாதிரியான சூழ்நிலையில், பாதுகாப்பான முதலீடாகப் பார்க்கப்படுகிறது தங்கம்; எனவே, மத்திய வங்கிகளும் முதலீட்டாளர்களும் தொடர்ச்சியாகத் தங்கத்தை ஒரு மாற்று முதலீடாகக் கருதி, கட்டித் தங்கம் அல்லது கோல்டு இ.டி.எஃப் மீது முதலீடு செய்வதால் இவற்றின் விலை உயர்ந்துவருகிறது. சென்ற வெள்ளி அன்று ஒரே தினத்தில் 27.3 டன்கள் என்ற அளவுக்கு கோல்டு இ.டி.எஃப்-களில் முதலீடு நடைபெற்றுள்ளதாக வேர்ல்டு கோல்டு கவுன்சில் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தங்கம் விலை... ஏற்றம் எதுவரை..? - தொடர்ந்து முதலீடு செய்யலாமா?

இந்த நான்கு காரணங்களில் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தால், தங்கத்தின் விலையில் இறக்கத்தைக் காண முடியும். உடனடியாக விலை இறங்க வாய்ப்பு இல்லை. என்றாலும், ஒரு கட்டத்தில் புதிய புதிய உச்சங்களைத் தொடும்போது, உலக அளவில், தங்களின் இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய வங்கிகள் தங்கத்தில் லாபம் காண முனையும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட நிலையில், தங்கம் விலை இறங்கும்போது முதலீடுகளை மேற்கொள்வது சரியான முடிவாக இருக்கும். இன்னும் ஆறுமாத காலத்துக்கு சர்வதேச விலை இதே1,700-1,850 டாலர் வரையில் ஊசலாட்டத்துடன் வர்த்தகம் நடைபெறலாம். இந்திய விலையில் அதிகபட்சமாக சவரன் ரூ.39,500 வரை செல்ல வாய்ப்புகள் உள்ளன.