Published:Updated:

டைனமிக் பாண்ட் ஃபண்டுகள்..! - இப்போது முதலீடு செய்யலாமா?

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

தற்சமயம் வட்டி விகிதம் சற்றுக் குறைவாக இருந்தாலும், டியூரேஷன் மற்றும் கிரெடிட் ரிஸ்க் ஆகிய இரண்டையும் தவிர்க்கலாம்.

டைனமிக் பாண்ட் ஃபண்டுகள்..! - இப்போது முதலீடு செய்யலாமா?

தற்சமயம் வட்டி விகிதம் சற்றுக் குறைவாக இருந்தாலும், டியூரேஷன் மற்றும் கிரெடிட் ரிஸ்க் ஆகிய இரண்டையும் தவிர்க்கலாம்.

Published:Updated:
முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு
கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளை 16 வகைகளாகப் பிரித்துள்ளது செபி. அவற்றில் ஒன்று, டைனமிக் பாண்ட் ஃபண்டுகள் ஆகும். இந்த வகை ஃபண்டுகள் பலவித கால அளவு கொண்டு பாண்டுகளிலும் முதலீடு செய்யலாம்.

உதாரணத்துக்கு, ஆறு மாத பாண்டுகளில் முதலீடு செய்யலாம்; ஆறு வருட மெச்சூரிட்டி கொண்ட பாண்டுகளிலும் முதலீடு செய்யலாம்.

டைனமிக் பாண்ட் ஃபண்டுகள்..! - இப்போது முதலீடு செய்யலாமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த ஒன்றரை வருடங்களில் நமது மத்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 2.50% வரை குறைத்துள்ளது. அதனால் இந்த வகை ஃபண்டுகள் நல்ல வருமானத்தைக் கொடுத்தன. அந்த வருமானத்தைப் பார்த்து, கடந்த ஜூலை மாதத்தில் இந்த கேட்டகிரி ஃபண்டுகளில், அதற்கு முந்தைய மாதங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஆறு மடங்குக்கும் அதிகமான முதலீடு (ரூ.2,000 கோடிக்கும் அதிகமான முதலீடு) வந்துள்ளது.

முதலீடு
முதலீடு

இந்த வகை ஃபண்டுகள் வட்டி விகித காலங்களுக்கேற்ப தாங்கள் வைத்திருக்கும் பாண்டுகளின் மெச்சூரிட்டியை டைனமிக்காக அட்ஜஸ்ட் செய்துகொள்கின்றன. ஆனால், ஃபண்ட் மேனேஜர்கள் எப்போதும் சரியான தருணத்தில் எவ்விதத் தவறும் இல்லாமல் முடிவு எடுக்க முடியும் என்று கூற முடியாது. கடந்த காலங்களில் டைனமிக் பாண்டு ஃபண்டுகள் நெகட்டிவ் வருமானத்தையும் கொடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
முதலீடு
முதலீடு

ஆகவே, கடந்தகால வருமானத்தைப் பார்த்து, சிறு முதலீட்டாளர்கள் இந்த நேரத்தில் டைனமிக் பாண்ட் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டாம். இந்த மாத மீட்டிங்கில் நமது மத்திய ரிசர்வ் வங்கி, வட்டி இறக்கத்தை நிறுத்தி வைத்துள்ளது. வரும் காலங்களில் குறைத்தாலும், கால் அல்லது அரை சதவிகிதத்துக்கும் மேல் இருக்காது. ஆகவே, டியூரேஷன் ஃபண்டுகள் இனி வருமானம் ஈட்டுவது சற்று சிரமம் என்றே தோன்றுகிறது.

டைனமிக் பாண்ட் ஃபண்டுகள்..! - இப்போது முதலீடு செய்யலாமா?

மேலும், பணவீக்கத்தை வைத்து எதிர்வரும் காலங்களில் வட்டி விகிதம் உயர வாய்ப்புள்ளது. அதுபோன்ற சமயங்களில் அதிக மெச்சூரிட்டி பாண்டுகளை வைத்துள்ள ஃபண்டுகள் நெகட்டிவ் வருமானத்தையே தரும். ஆகவே, சிறு முதலீட்டாளர்கள், தங்களது குறுகியகால முதலீடுகளுக்கு, ஹை குவாலிட்டி அல்ட்ரா ஷார்ட் டியூரேஷன் ஃபண்டுகளில் முதலீட்டை வைத்துக்கொள்வது நல்லது.

தற்சமயம் வட்டி விகிதம் சற்றுக் குறைவாக இருந்தாலும், டியூரேஷன் மற்றும் கிரெடிட் ரிஸ்க் ஆகிய இரண்டையும் தவிர்க்கலாம். அல்ட்ரா ஷார்ட் டியூரேஷன் ஃபண்டுகளில் கவனிக்க வேண்டிய ஃபண்டுகளை மேலே அட்டவணையாகத் தந்துள்ளோம். இவற்றில் முதலீடு செய்யும்போது உங்கள் நிதி ஆலோசகருடன் கலந்துபேசி, முதலீட்டுக்கான முடிவை எடுங்கள்!