Published:Updated:

எஸ்.பி.ஐ கார்ட்ஸ் ஐ.பி.ஓ... முதலீடு செய்யலாமா?

எஸ்.பி.ஐ
பிரீமியம் ஸ்டோரி
எஸ்.பி.ஐ

முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து பன்முகத்தன்மை வாய்ந்த கிரெடிட் கார்டுகளை இந்த நிறுவனம் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.பி.ஐ கார்ட்ஸ் ஐ.பி.ஓ... முதலீடு செய்யலாமா?

முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து பன்முகத்தன்மை வாய்ந்த கிரெடிட் கார்டுகளை இந்த நிறுவனம் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Published:Updated:
எஸ்.பி.ஐ
பிரீமியம் ஸ்டோரி
எஸ்.பி.ஐ

ந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கிரெடிட் கார்டு நிறுவனமான எஸ்.பி.ஐ கார்ட்ஸ் அண்ட் பேமன்ட் சர்வீசஸ் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு (IPO) மார்ச் 2–ம் தேதி தொடங்குகிறது. இதன் விலைப்பட்டை ஒன்றுக்கு ரூ.750-755 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.500 கோடி மதிப்பில் புதிய வெளியீடும், ஆஃபர் பார் சேல் (ஓ.எஃப்.எஸ்) முறையில் 13,05,26,798 பங்குகளும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஐ.பி.ஓ-வில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 19 பங்குகள் மற்றும் அதன் மடங்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

எஸ்.பி.ஐ  கார்ட்ஸ்  ஐ.பி.ஓ... முதலீடு செய்யலாமா?

அதிகரிக்கப்பட்ட விண்ணப்ப நாள்கள்

ஒரு நிறுவனம் ஐ.பி.ஓ வரும்போது வழக்கமாக மூன்று நாள்களுக்கு மட்டுமே விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும். ஆனால், இந்த ஐ.பி.ஓ நான்கு நாள்கள் நடைபெறுகிறது. மார்ச் 2 முதல் மார்ச் 4 வரை மூன்று நாள்களில் தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள், நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் மற்றும் சிறு முதலீட்டாளர்கள் உள்ளிட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம். நான்காம் நாளில் சிறு முதலீட்டாளர்களுக்கு மட்டும் பங்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.

கிரெடிட் கார்டு தொழில் என்பது இந்தியப் பங்குச் சந்தையில் இதுவரை பட்டியலிடப்படாத புதிய பிசினஸ். இது நிதி சார்ந்த நிறுவனம் என்பதால், முதலீட்டாளர்களுக்கு இதன் மீதான ஈர்ப்பு அதிகமாகி, நல்ல வரவேற்பைப் பெறும். எனினும், இதற்கான மதிப்பீடு அதிகமாக இருக்கிறது. இந்த நிறுவனம் நல்ல பிராண்ட் என்பதால், பங்கின் விலை ஒரு பொருட்டல்ல. எனவே, இந்த ஐ.பி.ஓ-வுக்கு அதிகமாகவே விண்ணப்பங்கள் வரும். ஆனால், அதிக லாபத்தை எதிர்பார்த்து முதலீடு செய்யப்படும் பங்குகள், பட்டியலிடப்பட்ட பிறகு எதிர்பார்த்த லாபத்தை உடனே கொடுக்கத் தவறிவிடுவதுண்டு. எனவே, சற்று கவனத்துடனேயே முதலீடு செய்ய வேண்டும்.

எஸ்.பி.ஐ கார்ட்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான எஸ்.பி.ஐ நல்லதொரு நிறுவனம். எனவே, இதற்கான தேவை தானாகவே அதிகரித்துவிடுகிறது. எனவே, சந்தையில் இதற்கு இருக்கும் எதிர்பார்ப்பு நல்ல விலையைக் கொடுக்க வாய்ப்பிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பலம்

1. வளர்ச்சியிலும், லாபகரமாக இயங்குவதிலும் சாதனை படைத்த இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கிரெடிட் கார்டு வெளியீட்டு நிறுவனம் இது. இந்திய கிரெடிட் கார்டு சந்தையில், கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை அளவில் 2019 மார்ச் 31-ம் தேதியில் 17.6 சதவிகிதமும், 2019 நவம்பர் 30-ம் தேதியில் 18.1 சதவிகிதமாக உயர்ந்தும் பங்களிப்பைத் தந்துள்ளது. 2019-ம் நிதியாண்டில் 17.1% பங்களிப்பும், 2019 நவம்பர் மாதத்துடன் நிதியாண்டின் எட்டு மாதங்களில் 17.9% பங்களிப்பும் தந்துள்ளது.

எஸ்.பி.ஐ  கார்ட்ஸ்  ஐ.பி.ஓ... முதலீடு செய்யலாமா?

2. வெளிச் சந்தை விற்பனையில், டிஜிட்டல் மற்றும் பிரதிநிதிகள் மூலமாக வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை உயர்த்துவதில் முன்னணியிலுள்ள நிறுவனம் இது.

3. வலுவான பிராண்ட் மதிப்புகொண்ட, அனைவராலும் அறியப்பட்ட நிறுவனம் எஸ்.பி.ஐ.

4. பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து பன்முகத்தன்மை வாய்ந்த கிரெடிட் கார்டுகளை இந்த நிறுவனம் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏர் இந்தியா, அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ், பி.பி.சி.எல்., எடிஹேட் கெஸ்ட், எஃப்.பி.பி., ஐ.ஆர்.சி.டி.சி., ஓலா மணி மற்றும் யாத்ரா உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. 2017 - 19 இடைப்பட்ட ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் மொத்த வருமானம் ஆண்டுக்கு சராசரியாக 44.9% அதிகரித்துள்ளது. செயல்பாட்டு வருவாய் 44.6% அதிகரித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் இதன் நிகர லாபம் 52.1% உயர்ந்துள்ளது.

முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து பன்முகத்தன்மை வாய்ந்த கிரெடிட் கார்டுகளை இந்த நிறுவனம் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எதிர்பார்ப்பு

நம் நாட்டில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தொடர்பாக ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வு காரணமாக கிரெடிட் கார்டு பரிவர்த்தனை அதிகரித்துவருகிறது. ஆர்.பி.ஐ மற்றும் கிரிசில் தகவல்படி, 2014-15-ம் நிதியாண்டு முதல் 2018-19-ம் நிதியாண்டு வரை ஆண்டுதோறும் 32% அதிகரித்து மொத்தம் 6.1 லட்சம் கோடி ரூபாய் வரை கிரெடிட் கார்டு மூலமாக பரிவர்த்தனை நடந்திருக்கிறது.

எஸ்.பி.ஐ
எஸ்.பி.ஐ

2013-14-ம் நிதியாண்டில் 25 சதவிகிதமாக இருந்த டிஜிட்டல் பரிவர்த்தனை, 2018-19-ம் நிதியாண்டில் 62 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்தக் காரணிகள், `எஸ்.பி.ஐ கார்டு வளர்ச்சி காணும்’ என்பதை முன்கூட்டியே நன்கு உணர்த்துகின்றன. இ-வாலட், யூ.பி.ஐ சர்வீஸ் போன்ற ப்ரீபெய்டு நிதிச்சேவைகள் போட்டியாக இருந்தாலும், அவற்றின் மூலம் சிறிய அளவிலான பரிவர்த்தனைகள் மட்டுமே நடக்கின்றன.

கிரெடிட் கார்டுகளைப் போன்று கடனுக்கான கால அவகாசம், ரிவார்டு பாயின்ட் சலுகைகளை எஸ்.பி.ஐ கார்டுகள் வழங்குவதில்லை. பல்வேறு மொபைல்போன் பிளாட் ஃபார்ம்களில் பயன்படுத்தத்தக்க விர்ச்சுவல் கார்டுகள் போன்ற தொழில்நுட்பத்திலும் இவை சிறந்து விளங்குகின்றன. எனவே, தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள இளம் தலைமுறையினர் இந்த கிரெடிட் கார்டுகளை விரும்பி வாங்குகின்றனர். இஷ்டம்போல் செலவழிக்கும் மனநிலையை பாதிக்கும்படி இருக்கும் பொருளாதார மந்தநிலை மிக முக்கியமான ரிஸ்க்காக இருக்கிறது. எனினும், இந்த நிறுவனத்தின் கார்டு விற்பனை மற்றும் கார்டு மூலமான பரிவர்த்தனையில் பொருளாதார மந்தநிலையால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

2019-20-ம் நிதியாண்டில் டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், நிறுவனத்தின் நிகர லாபத்தைக்கொண்டு ஓராண்டுக் கணக்கில் பார்க்கும்போது, தற்போதைய சூழலில் இதன் ஐ.பி.ஓ மதிப்பீடு மிகவும் அதிகமாகத் தெரிகிறது. இந்த நிறுவனத்தின் பி.இ மதிப்பு 46-க்கு அருகில் உள்ளது. அமெரிக்கப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் மிகப்பெரிய நிறுவனமான அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்ஸின் வருமானத்தில் பாதியளவு கிரெடிட் கார்டு உள்ளிட்ட வாடிக்கையாளர்கள் சேவை மூலமாகத்தான் வருகிறது. இந்த நிறுவனப் பங்கின் பி.இ மதிப்பு 17-ஆகத்தான் உள்ளது. பங்கு மூலதனம் மூலமான வருமானம் (RoE) 30 சதவிகிதத்துக்கு நெருக்கமாக உள்ளது. இத்துடன் ஒப்பிடுகையில் எஸ்.பி.ஐ கார்டின் பி.இ மதிப்பு மிக அதிகமாக இருக்கிறது. எனினும் இரண்டும் வெவ்வேறு சந்தைகளில், வெவ்வேறு முதிர்வு நிலையில் இருக்கின்றன. மேலும், அந்த நிறுவனம் இந்தியச் சந்தையில் பட்டியலிடப்படவில்லை. எஸ்.பி.ஐ கார்டு நிறுவனத்துக்கான மதிப்பீடு என்பது இந்தியச் சந்தையின் துரிதமான வளர்ச்சியையும், நிறுவனத்தின் வலுவான வளர்ச்சியையுமே காட்டுகிறது.

அடிப்படையில் நம் பொருளாதாரம் ரொக்கப் பணப் பரிவர்த்தனையைச் சார்ந்தது. டிஜிட்டல் நிதிப் பரிவர்த்தனை இந்தியாவுக்கு புதிதாக இருந்தாலும், அற்புதமான ஒன்று. ஒழுங்குமுறை விதிமுறைகளின் மேம்பாடு மற்றும் இணையப் பயன்பாடுள்ள செல்பேசி பயன்பாடு அதிகரிப்பின் காரணமாக இந்திய நிதிப் பரிமாற்றத்துறை அடுத்தகட்டத்துக்கு செல்லும் நிலையில் உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரத்தில் புதிய முறையில் நிதிப் பரிமாற்றம் நடைபெறுவதை நாம் பார்க்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism