Published:Updated:

தங்கத்தில் முதலீடு செய்ய சரியான வழி..! - ‘கமாடிட்டி நிபுணர்’ ஷியாம் சுந்தர்

ஷியாம் சுந்தர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷியாம் சுந்தர்

கேளுங்கள், பதில் கிடைக்கும்!

ங்கத்தில் முதலீடு, வர்த்தகம் தொடர்பான வாசகரின் சந்தேகங்களுக்கு கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தர் பதிலளிக்கிறார்...

என் வயது 52. என்னுடைய போர்ட்ஃபோலியோவில் தங்க முதலீடு எவ்வளவு சதவிகிதம் இருக்கலாம்?

- கிருஷ்ணகுமார், இ-மெயில் மூலம்

“உங்களின் வயதைக் கணக்கில்கொண்டு பார்த்தால், அதிகபட்சமாக 10% அளவுக்கு இருக்கலாம்.”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தங்கத்தில் எப்படி முதலீடு செய்வது..?

- கே.வைதேகி, மதுரை-2

“தங்க ஆபரணத்தின் மீதான முதலீடு நம் அனைவருக்கும் தெரிந்ததே. அவ்வாறு இல்லாமல், `பேப்பர் கோல்டு’ என்று சொல்லப்படும் கோல்டு இ.டி.எஃப் மற்றும் மத்திய அரசாங்கத்தால் அவ்வப்போது வெளியிடப்படும் தங்கப் பத்திரங்கள் மூலமாகவும் தங்கம் சார்ந்த முதலீடுகளைத் தொடரலாம். ஒவ்வொரு முதலீட்டு வகையிலும், ஒரு சில நிபந்தனைகள், சாதக பாதகங்கள் இருக்கத்தான் செய்யும். நம் முதலீட்டுக்கான காரணம் என்ன, முதிர்வுப் பலனை அடைய எவ்வளவு காலம் காத்திருக்க முடியும் என்பதை முடிவு செய்துவிட்டு, அதற்கேற்ப முதலீடுகளைத் தொடரலாம்.”

தங்கம்
தங்கம்

ஆர்.பி.ஐ வெளியிடும் சாவரின் கோல்டு பாண்டுகள் பற்றி விளக்கவும்.

- ரமேஷ் ராயன், முகநூல் மூலம்

“இந்திய ரிசர்வ் வங்கியால் அவ்வப்போது வெளிடப்படுவது `எஸ்.ஜி.பி’ (சாவரின் கோல்டு பாண்டு) எனப்படும் தங்கப் பத்திரங்கள். இவற்றில் வரும் ஜூன் 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரையிலான காலத்தில் முதலீடுகளை மேற்கொள்ளலாம். ஒரு கிராமின் விலை இரண்டு நாள்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும்.

இதன் முக்கிய அம்சங்கள்... 1. தனிநபர் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சமாக ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக நான்கு கிலோ வரை முதலீடு செய்யலாம். 2. முதலீட்டுக்கு வட்டியாக ஆண்டொன்றுக்கு 2.5% அளிக்கப்படும். 3. முழுப் பலன்களைப் பெற, முதிர்வுக் காலமான எட்டு வருடங்கள் வரை காத்திருக்க வேண்டும். சில நிபந்தனைகளுடன் ஐந்து வருடங்கள் முடிவடைந்த பிறகு வெளியேறலாம். 4. கணவன்–மனைவி இணைந்தும், மைனர் பேரிலும் முதலீடுகளைச் செய்யலாம் 5. குறிப்பிட்ட தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளின் மூலம் முதலீடு செய்யலாம். 6. தனிநபருக்கு முதலீடு ஆரம்பத்திலிருந்து முழுக்காலத்தில் முதிர்வடையும்பட்சத்தில் பெறப்படும் தொகைக்கு வரி விலக்கு கிடைக்கும்.’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

காகிதத் தங்கம்’ என்று சொல்லப்படும் கோல்டு இ.எஃப்.டி முதலீட்டை எப்படி ஆரம்பிப்பது?

- வி.சுரேஷ் கிருஷ்ணா, இ-மெயில் மூலம்

“செபியால் அங்கீகரிக்கப்பட்ட பங்குத் தரகர்களிடம் டீமேட் மற்றும் டிரேடிங் கணக்குகளைத் தொடங்க வேண்டும். ஆண்டுக்கு 0.40 முதல் 0.80% பராமரிப்புக் கட்டணம் இருக்கும். எந்த ஒரு வர்த்தக தினத்திலும் வாங்கலாம், விற்கலாம். வரிச் சலுகை கிடைக்காது. மூலதன ஆதாய வரி இருக்கும். பத்துக்கும் மேற்பட்ட கோல்டு இ.டி.எஃப்கள் தற்போது வர்த்தகமாகி வருகின்றன.”

நீண்டகாலமாக தங்கத்தின் விலை ஏறாமல், கடந்த ஓராண்டில் திடீரென ஏற என்ன காரணம்?

- சரவணக்குமார், புதுக்கோட்டை

“வளர்ந்த நாடுகளின் மத்திய வங்கிகளின் வட்டி விகிதங்கள் ஏறக்குறைய ஜீரோ என்ற அளவில் இருப்பது, அமெரிக்க -சீனா வர்த்தகப் போர், அமெரிக்க ஃபெடரலின் வட்டிக் குறைப்பு, கோவிட்-19 இவையனைத்தும் தங்கத்தின் விலை ஏற்றத்துக்குக் காரணமாக இருக்கின்றன.”

ஷியாம் சுந்தர்
ஷியாம் சுந்தர்

என் மகளுக்கு இன்னும் பத்தாண்டுகள் கழித்து 50 பவுன் நகை தேவை. அதற்கு நகைச் சீட்டு வாங்கலாமா அல்லது மியூச்சுவல் ஃபண்ட் கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் மூலம் வாங்கலாமா... எதில் முதலீடு செய்தால் லாபம்?

- பானுப்பிரியா, சென்னை-17

‘‘மத்திய அரசின் எஸ்.ஜி.பி மற்றும் கோல்டு இ.டி.எஃப் உங்களுக்குப் பயன் தரும். உங்களால் 10 வருடங்கள் காத்திருக்க முடியும் என்பதால், தற்போதைக்கு கோல்டு பாண்ட் திட்டத்தில் அதிகமாகவும், அடுத்து கோல்டு இ.டி.எஃப் திட்டத்திலும் முதலீடு செய்யலாம். கோல்டு இ.டி.எஃப்-ல் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டீமேட் கணக்கு மூலம் 120 கோல்டு இ.டி.எஃப் யூனிட்டுகள் வாங்கியிருக்கிறேன். தங்க நகையை அடமானம் வைத்து பணம் பெறுவதுபோல் இந்த யூனிட்டுகளை அடமானம் வைத்து பணம் பெற முடியுமா?

- வி.ராமச்சந்திரன், வேலூர்

“கோல்டு இ.டி.எஃப் யூனிட்டுகளை வங்கியில் அடமானம் வைத்துக் கடன் பெற இயலாது.’’

தங்கத்தின் விலை எப்போதெல்லாம் ஏறும், எப்போதெல்லாம் இறங்கும் எனச் சொல்ல முடியுமா?

- கலாவதி, திருவாரூர்.

“சர்வதேசக் காரணிகளாக அமெரிக்க டாலரின் போக்கு, நுகர்வோரின் தேவை, தங்கம் உற்பத்தி அளவு, உலகப் பொருளாதார வளர்ச்சியின் போக்கு, நாடுகளுக்கு இடையிலான போர்ப் பதற்றம் அல்லது இறுக்கமான சூழ்நிலை, மத்திய வங்கிகளின் தங்க முதலீடுகள், உலக வர்த்தகத்தில் பல்வேறு நாடுகளின் நிலைப்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் எனப் பலதரப்பட்ட காரணங்கள் விலையை நிர்ணயம் செய்கின்றன. இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்வதால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் காணக்கூடிய ஏற்ற, இறக்கங்களும் காரணமாக இருக்கின்றன.’’

தங்கத்தின் விலை மாற்றத்துக்கும், பங்குச் சந்தையின் செயல்பாட்டுக்கும் தொடர்பு இருக்கிறதா?

- வி.கவுதமி, சுரண்டை

“பொதுவாக, பங்குச் சந்தைக்கும், தங்கத்தின் விலைக்கும் தொடர்பு இருக்கத்தான் செய்கிறது. ஓரளவுக்கு எதிரெதிர்த் திசைகளில் பயணிக்கும். பொருளாதாரம் நன்றாக இருக்கும்பட்சத்தில், பங்குச் சந்தைகள் சிறப்பாக இருக்க வாய்ப்புண்டு. பங்குச் சந்தை பெரிய வீழ்ச்சியைச் சந்திக்கும்போது தங்கத்தின் விலை அதிகரிக்கும்.’’

கேளுங்கள், பதில் கிடைக்கும்!

எஸ்.ஸ்ரீதரன்
எஸ்.ஸ்ரீதரன்

முழுமையான ஆயுள் காப்பீடு பாலிசியான டேர்ம் பாலிசி குறித்து உங்கள் கேள்விகளுக்கு நிதி ஆலோசகரும் வெல்த் லேடர் (Wealthladder.co.in) நிறுவனத்தின் நிறுவனருமான எஸ்.ஸ்ரீதரன் பதில் அளிக்கிறார்.

உங்கள் கேள்விகளை navdesk@vikatan.com என்ற இ-மெயிலுக்கு அனுப்பி வைக்கலாம்.