Published:Updated:

சந்தைக்குப் புதுசு : கொரோனா சிகிச்சைக்கு புதிய பாலிசி!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
News
சந்தைக்குப் புதுசு

பயனுள்ள புதிய திட்டங்கள்!

ண்மையில் சந்தைக்கு வந்திருக்கும் முதலீட்டு, காப்பீட்டுத் திட்டங்கள் குறித்துப் பார்ப்போம்.

மோட்டார் இன்ஷூரன்ஸ் - ‘எடெல்வைஸ் ஸ்விட்ச்!’

மாதச் சம்பளதாரர்களுக்கு கார் அவசியமானதாக இருந்தாலும், அதன் உபயோகம் மிகக் குறைவான கிலோமீட்டர்களே. ஆனால், ஆண்டுதோறும் செலுத்த வேண்டிய காப்பீட்டு பீரிமியம் தொகையோ கொஞ்சம் கலங்கடிக்கச் செய்வதாகவே இருக்கிறது. ஆண்டுக்கு 5,000 கி.மீகூட ஓடாத காருக்கும், ஒரு லட்சம் கிலோமீட்டரைத் தாண்டி ஓடிய காருக்கும் ஒரே பிரீமியத் தொகைதான்.

இன்ஷூரன்ஸ்
இன்ஷூரன்ஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இப்போது இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்திருக்கிறது. காரில் பயணம் செய்யும் தூரத்துக்கேற்ப பிரீமியம் செலுத்தும் ‘எடெல்வைஸ் ஸ்விட்ச்’ என்ற காப்பீட்டை எடெல்வைஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது.ஓட்டுநரின் வயது மற்றும் அனுபவம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு பிரீமியம் தொகை முடிவு செய்யப்படுகிறது. வாகனம் ஓட்டும் தினத்தின் ஸ்விட்ச் ஆப்ளிகேஷனைப் பயன்படுத்தி, `இன்ஷூரன்ஸ் ஆன்’ மற்றும் `ஆஃப்’ செய்துகொள்ளும் ஆப்ஷனும் இந்த பாலிசியில் இருக்கிறது. மேலும், ஒரே பாலிசியில் பல வாகனங்களையும் இணைத்துக்கொள்ள முடியும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆரோக்ய சஞ்சீவனி பாலிசி: எஸ்.பி.ஐ ஜெனரல் இன்ஷூரன்ஸ்!

அண்மையில், எஸ்.பி.ஐ ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனம், `ஆரோக்ய சஞ்சீவனி ஹெல்த் இன்ஷூரன்ஸ்’ திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தின் கவரேஜ் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை உள்ளது.

இன்ஷூரன்ஸ்
இன்ஷூரன்ஸ்

இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் (IRDAI) வழிகாட்டுதல்களின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட காப்பீட்டு அளவுகள் மற்றும் குறைந்த பிரீமியத் தொகை ஆகியவற்றோடு இணைந்த ஒன்றாக இது வடிவமைக்கப் பட்டுள்ளது. கோவிட்-19 பாதிப்பு காரணமாக ஏற்படும் மருத்துவமனைச் செலவுகளையும் இந்த பாலிசி மூலம் க்ளெய்ம் செய்துகொள்ளலாம். இந்த ஆரோக்ய சஞ்சீவனி ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை இந்தியாவிலுள்ள 28 ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் படிப்படியாக அறிமுகப்படுத்திவருகின்றன.

பிரதம மந்திரி பென்ஷன் பிளான்!

மூத்த குடிமக்கள் மாதம் ரூ.1,000 முதல் ரூ. 10,000 வரை பென்ஷன் பெறும் வகையில் ஓய்வூதியத் திட்டமான ‘பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா’ திட்டத்தை எல்.ஐ.சி நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. இந்த ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்ய மார்ச் 31, 2020 வரை கால அவகாசம் தரப்பட்டிருந்த நிலையில், நிதியமைச்சகம் அண்மையில் முதலீட்டுக் காலத்தை மார்ச் 31, 2023 வரை நீட்டித்திருக்கிறது.

இதை ஏஜென்ட்டுகள் மூலமும், எல்.ஐ.சி-யின் இணையதளத்திலும் வாங்கலாம். அதிகபட்ச முதலீட்டுத் தொகை ரூ.15 லட்சம். இந்த முதலீட்டுக்கான வட்டி 7.40%. இந்தத் திட்டத்துக்கு இதற்கு முன்பு 8% வட்டி அளிக்கப்பட்டது. இனி ஆண்டுதோறும் வட்டி விகிதம் மாற்றப்பட விருக்கிறது. இந்தத் திட்டத்தின் முதிர்வுக்காலம் 10 ஆண்டுகள். மாதம் 1,000 ரூபாய் பென்ஷன் பெற விரும்பும் மூத்த குடிமக்கள், ஒரு முறை முதலீடாக ரூ.1,62,162 செலுத்த வேண்டும். அதிகபட்சமாக ரூ.9,250 பென்ஷன் கிடைக்க ரூ.15 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். இதர வங்கி எஃப்.டி போன்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது இது லாபகரமான திட்டம்தான்.

ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க்: மூத்த குடிமக்கள் எஃப்.டி..!

ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், மூத்த குடிமக்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை (எஃப்.டி) அறிவித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டுத் திட்டம், செப்டம்பர் 30-ம் தேதி முடிவடைகிறது. இந்தத் திட்டத்துக்கு 6.55% வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முதிர்வுக் காலம் 5-10 ஆண்டுகள். புது எஃப்.டி மற்றும் எஃப்.டி புதுப்பித்தலுக்கு இந்த வட்டி விகிதம் பொருந்தும்.