Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட் மூலம் போர்ட்ஃபோலியோ! - உருவாக்குவது எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
எம்.வெங்கடேஸ்வரன், ஐ.வி.சுப்ரமணியம்
எம்.வெங்கடேஸ்வரன், ஐ.வி.சுப்ரமணியம்

போர்ட்ஃபோலியோ உருவாக்கும்போது மூன்று முக்கிய அம்சங்களைக் கவனிக்க வேண்டும்!

பிரீமியம் ஸ்டோரி
நாணயம் விகடன், குவான்டம் மியூச்சுவல் ஃபண்ட்டுடன் இணைந்து ‘மியூச்சுவல் ஃபண்ட் மூலம் போர்ட்ஃபோலியோ உருவாக்குவது எப்படி?’ என்ற கட்டண ஆன்லைன் நிகழ்ச்சியை அண்மையில் நடத்தியது.

‘மியூச்சுவல் ஃபண்ட் மூலம் போர்ட்ஃபோலியோ உருவாக்குவது எப்படி?’ என்ற தலைப்பில் நிதி ஆலோசகர் (Acuwealth.com) எம்.வெங்கடேஸ்வரன் விளக்கிப் பேசினார். போர்ட்ஃபோலியோ உருவாக்கும்போது கவனிக்க வேண்டிய மூன்று முக்கிய அம்சங்கள் பற்றிக் குறிப்பிட்டார் அவர். “என்ன காரணத்துக்காக முதலீடு செய்யப்போகிறோம் என்பது முதல் முக்கிய அம்சம். நோக்கம், இலக்கு சரியாக இருந்தால்தான் சரியான ஃபண்டைத் தேர்வு செய்து முதலீடு செய்ய முடியும். அடுத்து முதலீட்டுக் காலம். குறுகியகால முதலீடா, நீண்டகால முதலீடா என்பதை முதலீடு செய்தால்தான் அதற்கு ஏற்ற முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்ய முடியும். மூன்றாவது முக்கிய அம்சம் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்வதாகும். மூலதனத்தில் குறுகியகாலத்தில் இழப்பீட்டைச் சந்திக்கும் திறன் இல்லாதவர்கள் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது” என்று வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.

எம்.வெங்கடேஸ்வரன், ஐ.வி.சுப்ரமணியம்
எம்.வெங்கடேஸ்வரன், ஐ.வி.சுப்ரமணியம்

குவான்டம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான ஐ.வி.சுப்ரமணியம் மல்டி அஸெட் ஃபண்டுகளின் சிறப்புகள் பற்றி விரிவாகப் பேசினார்.

இறுதியில் முதலீட்டாளர்களின் சந்தேகங்களுக்கு நிபுணர்கள் இருவரும் விளக்கமாகப் பதில் அளித்தார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு