கடந்த 2019-ம் ஆண்டில் என்.எஸ்.இ மற்றும் பி.எஸ்.இ-யில் பல நிறுவனங்கள் புதிதாகப் பங்கு வெளியீடு (ஐ.பி.ஓ) செய்தன. இந்த ஐ.பி.ஓ-க்கள் மூலம் திரட்டப்பட்டிருக்கும் மதிப்பு கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. அதாவது, 2017-ம் ஆண்டு 81,900 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டப்பட்டது, 2018-ம் ஆண்டில் 38,500 ரூபாயாகக் குறைந்தது. கடந்த 2019-ம் ஆண்டு வெறும் 19,600 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே நிதி திரட்டப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டில் வெளியிடப்பட்ட சில ஐ.பி.ஓ-க்களில் நன்கு செயல்பட்ட பங்குகள் பற்றியும், மோசமான வருமானத்தைத் தந்த சில பங்குகள் பற்றியும் பார்ப்போம்.

அள்ளித்தந்த ஐ.பி.ஓ-க்கள்!

சென்ற ஆண்டில் வெளியான ஐ.பி.ஓ-க்களிலேயே மிகப் பிரமாதமான லாபம் தந்தது இந்தியன் ரயில்வேயின் கேட்டரிங் அண்ட் டூரிஸம் நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி-யின் ஐ.பி.ஓ-தான். செப்டம்பர் 30-ல் தொடங்கி அக்டோபர் 3 வரை நடந்த இந்த ஐ.பி.ஓ., அக்டோபர் 14-ம் தேதி பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டது. பட்டியலிடப்பட்ட முதல் நாளன்றே இதன் பங்கு விலை 728 ரூபாயை எட்டியது. அடுத்த ஒரு மாத காலத்திலேயே பங்கு விலை அதிகபட்சமாக 932.90 ரூபாயை எட்டியது. அண்மையில் வேறெந்த ஐ.பி.ஓ-வும் லாபம் தராத அளவுக்கு இந்தப் பங்கு பெரும் லாபத்தைத் தந்திருக்கிறது.

இந்தியாமார்ட் இன்டர்மெஷ் நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியீடு முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தைக் குறுகியகாலத்தில் தந்தது. இந்தப் பங்கின் ஐ.பி.ஓ வெளியீட்டுக்குப் பிறகு ஆகஸ்ட் 8-ம் தேதி பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட தினமே ஐ.பி.ஓ விலையான 745 ரூபாயிலிருந்து 1,588 ரூபாயை எட்டியது.

பாலிகேப், நியோஜென் கெமிக்கல்ஸ், மெட்ரோபொலிஸ் ஹெல்த்கேர் மற்றும் உஜ்ஜிவான் பேங்க், ஆஃபில் (இந்தியா) லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் 50 சதவிகிதத்துக்குமேல் லாபம் தந்திருக்கின்றன. இந்த ஐ.பி.ஓ-க்கள் நல்ல லாபம் தந்ததற்கு முக்கியமான காரணம், இந்த நிறுவனங்களின் பிசினஸ் நன்றாக இருப்பதுதான்.

2019-ம் ஆண்டில் வெளியான ஐ.பி.ஓ-க்களில் சில பங்குகள் 50% முதல் 150% வரை வருமானம் தந்துள்ளன.

ஆப்பு வைத்த ஐ.பி.ஓ-க்கள்!

பொதுவாக எல்லா ஐ.பி.ஓ-க்களுமே அள்ளித்தந்து விடுவதில்லை. சில ஐ.பி.ஓ-க்கள் முதலீட்டாளர்களுக்குக் கடும் நஷ்டத்தைத் தந்துவிடுவதும் உண்டு. கடந்த ஆண்டில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் ஸ்டெர்லிங் அண்ட் வில்சன் சோலார் நிறுவனம்தான் பெரிய அளவில் இறக்கம் கண்டு, முதலீட்டாளர்களுக்கு பண இழப்பை ஏற்படுத்தியது. பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான ஸ்டெர்லிங் அண்ட் வில்சன் சோலார் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை 780 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. ஐ.பி.ஓ வெளியான நாளன்றே அந்த நிறுவனத்தின் பங்கு விலை, 725.35 ரூபாயாகக் குறைந்தது. தற்போது இந்தப் பங்கின் விலை 50 சதவிகிதத்துக்குமேல் சரிந்து ரூ.314-ஆக வர்த்தகம் ஆகிறது.

கேத்தலிக் சிரியன் வங்கி ரூ.300-க்கு பட்டியலிடப்பட்டு, தற்போது 224-ரூபாயாக வர்த்தகமாகிறது. உஜ்ஜிவன் பேங்க் 55 ரூபாயில் வர்த்தகாகத் தொடங்கி, தற்போது 54.10-ஆக வர்த்தகமாகிறது.

2019-ம் ஆண்டில் ஐ.பி.ஓ வெளியிட்டுள்ள நிறுவனங்களின் செயல்பாடு எப்படியிருக்கிறது என்று பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டோம்.

“2019-ம் ஆண்டில் வெளியான ஐ.பி.ஓ-க்களில் சில பங்குகள் 50% முதல் 150% வரை வருமானம் தந்துள்ளன. விஷ்வராஜ் சுகர் (42.58%), எம்பஸி ஆபீஸ் பார்க்ஸ் (40.11%), ஸ்பந்தனா ஸ்பூர்தி (37.52%) ஆகிய நிறுவனங்கள் தந்த லாபத்தையும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. சந்தைகளின் ஓட்டத்தைப் பொறுத்தவரை, ஐ.பி.ஓ-க்கள், முதலீட்டாளர்களின் மனநிலைக்குச் சாதகமாகச் செயல்பட்டுள்ளன. எனினும், ரூ.51,000 கோடி மதிப்புக்கு முதலீட்டைத் திரட்டுவதற்கான ஐ.பி.ஓ-க்கள் செபியின் ஒப்புதல் பெற்ற பிறகும்கூட வெளியிடப்படாததால், கடந்த நான்கு ஆண்டு களில் 2019-ல்தான் மிகக் குறைவான தொகையே ஐ.பி.ஓ மூலம் திரட்டப்பட்டிருக்கிறது.

கடந்த 2019-ம் ஆண்டில் வெளியான முக்கியமான ஐ.பி.ஓ வெளியீடுகளில் ஏழு ஐ.பி.ஓ-க்கள் மிகப் பெரிய அளவில் அதாவது, 10 மடங்குக்குமேல் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளன. இவற்றில் உச்சமாக, ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனத்தின் ஐ.பி.ஓ-வுக்கு 109 மடங்கும், உஜ்ஜிவான் வங்கி ஐ.பி.ஓ-வுக்கு 100 மடங்கும், சி.எஸ்.பி வங்கி மற்றும் ஆஃபில் (இந்தியா) நிறுவனங்களுக்கு 48 மடங்கும், பாலிகேப் நிறுவனத்துக்கு 36 மடங்கும், நியோஜென் கெமிக்கல்ஸ் நிறுவனத்துக்கு 29 மடங்கும், இந்தியாமார்ட் இன்டெர்மெஷ் நிறுவனத்துக்கு 20 மடங்கும் விண்ணப்பங்கள் வந்திருந்தன. இன்னும் 21 நிறுவனங்கள், ஐ.பி.ஓ வெளியீட்டின் மூலம் மொத்தம் ரூ.18,700 கோடி திரட்டுவதற்கு செபியின் ஒப்புதலோடு காத்திருக்கின்றன.

மேலும் 13 நிறுவனங்கள் ஐ.பி.ஓ வெளியீட்டின் மூலம் ரூ.18,000 கோடி திரட்டுவதற்கு செபியின் உத்தரவுக்காகக் காத்திருக்கின்றன. இந்த நிறுவனங்கள் எல்லாம் 2020-ம் ஆண்டில் ஐ.பி.ஓ வரும் என்று எதிர்பார்க்கலாம்” என்றார்.

பொருளாதார வளர்ச்சி குறைந்து, மீண்டும் உயர்வதற்கான வாய்ப்பு இருப்பதால், 2020-ம் ஆண்டில் அதிக அளவில் ஐ.பி.ஓ-க்கள் வந்து, லாபத்தை அள்ளித்தரும் என்று எதிர்பார்ப்போம்!