செல்வம் (Wealth) என்றவுடன் நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது பணமும் வீடும்தான். பொதுவாக, செல்வத்தை எட்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
பொருட் செல்வம்
பொருட் செல்வம் என்பதில் பணம், சொத்து, முதலீடு ஆகியவை அடங்கும். இந்தச் செல்வம் சேமிப்பு மற்றும் முதலீடு மூலம் உருவாகும். பணம் என்பது நாம் சம்பாதிப்பது மற்றும் நம் முதலீடு மூலம் கிடைப்பது. இவற்றை நாம் முறையாகச் சேமிப்பதன் மூலம்தான் முதலீடு மற்றும் சொத்து உருவாகும். பணம்தான் அனைத்துச் செல்வங்களுக்கும் மூலமாக இருக்கிறது. இதை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம்தான் முதலீடுகளும் சொத்துகளும் உருவாகும்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
திறமை
சிலர் மிக நன்றாக எழுதுவார்கள்; சிலர் நன்றாகப் பேசுவார்கள்; சிலருக்கு இசைத் திறமை அபரிமிதமாக இருக்கும். சிலர் நன்றாகச் சமைப்பார்கள். இவர்கள் முழுத் திறமையையும் பயன்படுத்தினால் நிச்சயம் வாழ்க்கையில் எங்கோ சென்றுவிடுவார்கள்.
தைரியம்
ஒருவர் வாழ்க்கையில், வேலையில் வெற்றியடைந்தாலும் தோல்வியடைந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் தைரியமாக இருக்க வேண்டும். தோல்விகளைக் கண்டு துவண்டு விடக் கூடாது.
பொருட் செல்வம் ஏராளமாக இருந்தாலும், தைரியம் எனும் செல்வம் இல்லையெனில், வாழ்க்கையில், வேலையில் மேம்பாடு இருக்காது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSவெற்றி
வேலையாகட்டும், வாழ்க்கையாகட்டும், முதலீடாகட்டும்... கூடுதல் கவனத்துடன் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெற முடியும். வெற்றி எனும் செல்வத்தைப் பெற ஒருவர் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டியது அவசியம்.

சமூக அஸ்தஸ்து
சமூகத்தில் அஸ்தஸ்து பெற வேண்டுமென்றால், நீங்கள் உழைப்பே உயர்வு என்பதைக் கடைப்பிடிப்பதுடன், நேர்மையானவராக இருந்து, சமுதாயத்துக்கும் நல்லது செய்ய வேண்டும்.
நண்பர்கள்
நட்பு என்பது தியாகத்தால், எதிர்பாராத நேரங்களில் செய்யப்படும் உதவிகளால் வலிமையடையும். ஒருவர் நல்ல நண்பர்களைப் பெற்றிருந்தால், வாழ்க்கையில் ஏற்படும் திடீர் சிக்கல்களைப் பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
நேரம்
வேலைகளை, முதலீடுகளைத் தள்ளிப் போடும்போது அவற்றின் பலன்களையும் தள்ளிப்போடுகிறோம். எனவே, எதையும் காலதாமதமில்லாமல் செய்யப் பழகிக் கொள்ளுங்கள். அது உங்களைச் சுதந்திரமாகச் செயல்பட உதவும்; டென்ஷன் இல்லாமல் செயல்பட உதவும். ஒருவர் வாரத்தில் குறிப்பிட்ட நேரத்தைத் தனக்காக ஒதுக்கி தன் எதிர்காலம், குடும்பத்தின் எதிர்காலம், தன் நிறுவனத்தின் எதிர்காலம் அல்லது தான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து ஆழ்ந்து சிந்தித்து அதற்கேற்ப செயல் திட்டத்தைத் தீட்டிச் செயல்பட வேண்டியது அவசியம்.

ஆரோக்கியம்
இன்றைய காலகட்டத்தில் ஒருவர் மனநலம் மற்றும் உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியம். நல்ல உடல்நலம் இருந்தால் நல்ல மனநலம் இருக்கும். நல்ல மனநலம் இருந்தால், வலிமையான உடல்நலம் அமையும்.
இந்தச் செல்வங்களை எல்லாம் பெற முதலில் கூறப்பட்ட பொருட் செல்வத்தை நீங்கள் பெற்றிருக்க வேண்டியது மிக அவசியம். அந்தச் செல்வத்தில் ஆயுள் காப்பீடு, ஆரோக்கியக் காப்பீடு, எதிர்கால முதலீடுகள், மனை, வீடு, சொத்து எல்லாம் அடங்கும். இவற்றை ஒருவர் போதுமான அளவுக்குக் கொண்டிருக்கும்போது, இதர செல்வங்கள் எல்லாம் தானாகவே அமைந்துவிடும்!