Published:Updated:

பி.எஃப் வட்டிக்கு வரி… பெரும் பணக்காரர்களுக்கே பாதிப்பு வரும்..! சம்பளதாரர்கள் கவலைப்பட வேண்டாம்!

பி.எஃப்
பிரீமியம் ஸ்டோரி
News
பி.எஃப்

P F I N T E R E S T

பட்ஜெட் அறிவிப்பில்பி.எஃப் மூலமான வட்டிக்கும் வருமான வரி விதிக்கப் பட்டிருக்கிறது. எம்ப்ளாய்ஸ் பிராவிடன்ட் ஃபண்டுக்கு (இ.பி.எஃப்) மட்டும்தான் இந்த வரி அறிவிப்பு பொருந்தும். ஊழியர்கள் இ.பி.எஃப்பில் ஒரு நிதி ஆண்டில் செலுத்தும் ரூ.2.5 லட்சம் வரை செலுத்தப்படும் தொகைக்கு வரி கிடையாது. செலுத்தப்பட்ட தொகை ரூ.2.5  லட்சத்துக்கு மேல் எவ்வளவு அதிகமோ, அந்த அதிக தொகைக்கு மட்டுமே வரி விதிக்கப்படும்.

ப.முகைதீன் 
சேக் தாவூது
ப.முகைதீன் சேக் தாவூது

உதாரணமாக, ஓர் ஊழியர் மாதம் 25,000 வீதம் ஓராண்டு முழுக்க இ.பிஎஃப் கணக்கில் செலுத்தினால், அந்தத் தொகை ரூ.3 லட்சமாக இருக்கும். இந்த ரூ.3 லட்சத்தில் ரூ.2.5 லட்சத்துக்குக் கிடைக்கும் வட்டிக்கு வருமான வரி கிடையாது.மீதியுள்ள ரூ.50,000 மூலம் கிடைக்கும் வட்டிக்கு மட்டுமே வரி விதிக்கப்படும். இந்த வட்டித் தொகை ரூ.2,784 அவரது சம்பள வருமானத்துடன் சேர்க்கப்படும். ஒருவர் 30% வரி (கல்வி மற்றும் ஆரோக்கியத் தீர்வை 4% சேர்த்து 31.2%) வரம்பில் வருகிறார் எனில், அவர் கூடுதலாக பி.எஃப் கணக்கில் முதலீடு செய்யும் 50,000 ரூபாய்க்கு ரூ.870 வரி கட்ட வேண்டும். இதுதான் ஏப்ரல் 2021 முதல் அமலாக்கம் பெறும் பி.எஃப் புதிய வட்டி வரிக் கணக்காகும்.

முந்தைய ஆண்டுகளில் ரூ.2.5 லட்சத்துக்கு அதிகமாகச் செலுத்தப் பட்ட தொகை மூலம் கிடைக்கும் வட்டிக்கு வரி கணக்கு கிடையாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. நிதி ஆண்டில் ரூ.2.5 லட்சத்துக்கு மேலாக செய்யப்படும் பி.எஃப் முதலீடு துணைக் கணக்காகப் பராமரிக் கப்படும். இதன் மூலம் கிடைக்கும் வட்டிக்கு வரி கட்ட வேண்டும். இந்த ரூ.2.5 லட்சமானது பணியாளர்களின் பங்களிப்பு மட்டும்தானா, நிறுவனம் செலுத்தும் பி.எஃப் பங்களிப்பும் உண்டா என்பது இன்னும் தெளிவாக வில்லை.

பி.எஃப்
பி.எஃப்

சட்டபூர்வமாகச் செலுத்த வேண்டிய 12 சதவிகிதத்தைவிட அதிகம் செலுத்துவதுதான் விருப்ப சந்தா (வி.பி.எஃப்). ஒருவர் அவரின் முழுச் சம்பளத்தையும் பி.எஃப் மற்றும் வி.பி.எஃப்-ஆக செலுத்த முடியும். உதாரணமாக, மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் பெறும் ஒரு ஊழியர், இ.பி.எஃப்பில் மாதம் 12,000 செலுத்தினாலே போதும். ஆனால், விருப்ப சந்தா மூலம் ரூ.13,000 கூடுதலாகச் சேர்த்து மாதம் ரூ.25,000 வரை செலுத்தினால், ஓராண்டு சந்தா ரூ.3 லட்சம் என்றாகிவிடும். ரூ.2.5 லட்சம் என்ற வரம்புக்குமேல் உள்ள ரூ.50,000 வரிக்கு உட்படும்.

வட்டி
வட்டி

இந்த வரியானது மிகக் குறைவான (0.027%) பெரும் பணக்காரர்களையே பாதிக்கும். அதிகம் சம்பளம் வாங்காத, வி.பி.எஃப்-ல் குறைந்த அளவே பணம் சேர்ப்பவர்களுக்கு இதனால் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. எனவே, இது பற்றி நடுத்தர அளவில் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் அதிகம் கவலைப்பட வேண்டாம்.