இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையை நெறிப்படுத்தும் செபி அமைப்பு, மல்ட்டிகேப் ஃபண்டுகளில் திரட்டப்படும் நிதியை எப்படி முதலீடு செய்யலாம் என்பது குறித்த விதிமுறையைக் கடந்த 2020 செப்டம்பரில் மாற்றி அமைத்தது.

மல்ட்டிகேப் ஃபண்ட்: புதிய விதிமுறை

இதற்கு முன் மல்ட்டிகேப் ஃபண்டில் லார்ஜ்கேப், மிட்கேப், ஸ்மால்கேப் பங்குளில் 65% தொகையைப் பிரித்து எப்படி வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் என்று இருந்தது. எந்தப் பங்கு பிரிவில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் எனத் தனியே குறிப்பிடவில்லை என்பதால், பெரும்பாலும் மியூச்சுவல் ஃபண்ட் மேனேஜர்கள் லார்ஜ்கேப் பங்குகளில் அதிக முதலீடு செய்தனர். மல்ட்டிகேப் ஃபண்ட் என்பது மற்றொரு லார்ஜ்கேப் ஃபண்டாகவே காணப்பட்டது.

கடந்த செப்டம்பர் 2020-ல் செபி அமைப்பு, மல்ட்டிகேப் ஃபண்ட் என்பது அதன் பெயருக்கேற்ப லார்ஜ்கேப், மிட் கேப் மற்றும் ஸ்மால்கேப் நிறுவனப் பங்குகளில் குறைந்தபட்சம் தலா 25% முதலீடு செய்ய வேண்டும் என்ற புதிய விதிமுறையைக் கொண்டுவந்தது. அதாவது, திரட்டப்படும் நிதியில் லார்ஜ்கேப், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் நிறுவனப் பங்குகளில் மொத்தம் 75% முதலீடு செய்ய வேண்டும். புதிய விதிமுறையை 2021 ஜனவரி 31-ம் தேதிக்குள் பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

செபி அமைப்பின் இந்தப் புதிய விதிமுறையால், மல்ட்டிகேப் ஃபண்டாகத் தொடர குறிப்பிட்ட அளவு லார்ஜ்கேப் பங்குகள் விற்கப்பட்டு, மிட் கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். அல்லது மல்ட்டிகேப் ஃபண்டுகள், லார்ஜ்கேப் ஃபண்டுகளாகப் பெயர் மாற்றப் பட வேண்டும் அல்லது ஏற்கெனவே இருக்கும் லார்ஜ்கேப் ஃபண்ட் குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் இருந்தால் அதனுடன் இணைக்கப் பட வேண்டும் என்று சொன்னது.

இப்படிச் செய்வது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்குக் கூடுதல் செலவாக இருக்கும் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தும் என மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஆம்ஃபி அமைப்பின் மூலம் செபிக்கு கோரிக்கை வைத்தன.

ஃபிளெக்ஸிகேப் மியூச்சுவல் ஃபண்ட்.!

இதற்குத் தீர்வு காணும் விதமாக செபி, புதிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டமான ஃபிளெக்ஸிகேப் மியூச்சுவல் ஃபண்டை (Flexi-cap mutual fund) அறிமுகம் செய்திருக்கிறது. இந்தப் புதிய ஃபண்டில் லார்ஜ்கேப், மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகளில் 65% தொகையை எப்படி வேண்டுமானாலும் பிரித்து முதலீடு செய்துகொள்ளலாம். மீதி 35 சதவிகிதத்தைக் கடன் சார்ந்த ஆவணங்களில் முதலீடு செய்ய வேண்டும். இது எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்து, எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக்கொள்ளும் ஓப்பன் எண்டட் ஃபண்டாக இருக்கிறது.

இந்த மூன்று பிரிவுகளில் (லார்ஜ்கேப், மிட் கேப், ஸ்மால்கேப் பங்கு) எதில், எவ்வளவு சதவிகிதம் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் என்பது இந்த ஃபிளெக்ஸிகேப் ஃபண்டின் சிறப்பம்சம் என்பதால் நிறுவனங்களின் நிதி நிலை செயல்பாடு மற்றும் பங்குச் சந்தையின் செயல்பாட்டுக்கு ஏற்ப எப்போது வேண்டுனாலும் எந்தப் பிரிவிலும் முதலீட்டை அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்ய முடியும். அப்படிச் செய்யும்போது முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அந்த வகையில், பெரும்பாலான முதலீட்டாளர்கள் முதலீட்டுக் கலவையில் இந்த வகை ஃபண்ட் ஒன்றையும் சேர்த்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

2020 பிப்ரவரி 1 முதல் அமல்

இந்த ஃபண்ட் 2020 பிப்ரவரி 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், அவற்றின் இப்போதைய மல்ட்டிகேப் ஃபண்ட், அனைத்துப் பங்குச் சந்தை மதிப்புகளிலும் பரவலாக முதலீடு செய்திருக்கும்பட்சத்தில், அதை ஃபிளக்ஸிகேப் ஃபண்ட் எனப் பெயர் மாற்றிக்கொள்ளலாம் என்று சுட்டிக்காட்டியிருக்கிறது.

ஏற்கெனவே, மல்ட்டிகேப் ஃபண்டுகளில் முதலீடு செய்திருப்பவர்கள், அவசரப்பட்டு அதிலிருந்து வெளியேறிவிட வேண்டாம். மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், அதன் பெயரை மாற்றுகிறதா அல்லது போர்ட்ஃபோலியோவை மாற்றி, அதே பெயரிலேயே தொடர்கிறதா என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படவும். ஏற்கெனவே நீங்கள் முதலீடு செய்திருக்கும் ஃபண்டின் வருமானம் உங்களுக்குத் திருப்திகரமாக இருக்கிறது எனில், அதன் பெயர் மாற்றப்பட்டாலும் மாற்றாவிட்டாலும் நீங்கள் அந்த ஃபண்டிலேயே முதலீட்டைத் தொடரலாம்.

இந்த ஃபண்டுக்கு நிதி ஆலோசகர்கள், முதலீட்டாளர்களிடையே அதிக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் ஃபிளெக்ஸிகேப் வகையில் புதிய ஃபண்ட் வெளியீட்டை (என்.எஃப்.ஓ) மேற்கொள்ளும் என எதிர் பார்க்கலாம்.