Published:Updated:

வருமானத்திற்கேற்ப நிதித்திட்டமிடுவது எப்படி? - சென்னையில் பயிற்சி வகுப்பு

நிதி திட்டமிடல்
News
நிதி திட்டமிடல் ( vikatan )

திட்டமிடல் குறைபாட்டால் யார்யாரிடமோ கடன் வாங்கி பெரிய நிதி நெருக்கடிக்குள் சிக்கிக்கொள்ளும் சூழல் பெரும்பாலான குடும்பங்களில் இருக்கிறது. இவற்றிலிருந்து மீள்வது மிகமிக அவசியம்.

"கையில வாங்குனேன், பையில போடல, காசு போன இடம் தெரியல!" என்ற பாடல் பழையதாக இருந்தாலும் இந்த வரி இன்றுவரை குடும்பஸ்தர்களுக்குப் பொருத்தமானதாகவே இருக்கிறது. ஆண்களோடு பெண்களும் வேலைக்குச்சென்று தத்தமது குடும்பத்துக்காக பொருளீட்டும் அளவிற்கு கல்வியும், வேலைவாய்ப்பும் முன்னேறிய சமுதாயமாக தற்போது மாறியுள்ளோம். ஆனாலும் வருமானத்தை எப்படி சேமிப்பது, எப்படி செலவிடுவது, சேமித்த பணத்தை எப்படி முறையாக முதலீடு செய்வது என்பனவற்றில் நம்முடைய விழிப்புணர்வு குறைவானதாகவே இருக்கிறது. இதன்காரணமாகத்தான் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் தன்னிறைவு என்பதையே எட்டமுடியாத வாழ்க்கையை பெரும்பாலானவர்கள் வாழ்ந்துவருகிறார்கள்.

ஃபைனான்ஷியல் பிளானிங்
ஃபைனான்ஷியல் பிளானிங்
vikatan

மாதச்சம்பளமோ, பிசினஸிலிருந்து வருமானமோ கிடைக்குமுன்பே அதற்கான செலவுகள் அணிவகுத்து நிற்கின்றன. எந்த செலவு முக்கியம், எந்த செலவு அனாவசியம் என்று பிரித்துப்பார்க்கத் தெரியவில்லை. இதன்காரணமாக தேவையற்ற செலவுகளால் நம் வருமானத்தை வீணடிப்பதே வழக்கமாக நடக்கிறது. குழந்தைகளின் பள்ளிக்கல்வி, மேற்படிப்பு, திருமணம் போன்ற கட்டாயச்செலவுகளுக்கான வருமானத்தை தொலைநோக்குச்சிந்தனையுடன் உருவாக்க வேண்டியது பெற்றோரின் கடமை. அவர்களின் ஓய்வுக்காலத்துக்கான சேமிப்பும் அவசியம். ஆனால் திட்டமிடல் குறைபாட்டால் யார்யாரிடமோ கடன் வாங்கி பெரிய நிதி நெருக்கடிக்குள் சிக்கிக்கொள்ளும் சூழல் பெரும்பாலான குடும்பங்களில் இருக்கிறது. இவற்றிலிருந்து மீள்வது மிகமிக அவசியம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த நிலையை மாற்ற முடியுமா, வருமானத்தைத் திட்டமிட்டு பயன்படுத்தும் விழிப்புணர்வை வளர்த்துக்கொள்ள முடியுமா என்ற கேள்விகளுக்கெல்லாம் தீர்வாக, நாணயம் விகடன் ‘ஃபைனான்ஷியல் பிளானிங் - குடும்ப நிதித் திட்டமிடல்' ஒருநாள் பயிற்சி வகுப்பை சென்னையில் ஜூலை 14-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்த உள்ளது. கணவன் மனைவி இருவரும் இணைந்து இந்த பயிற்சியில் கலந்துகொண்டு பயனடைய வேண்டும் என்பதற்காகக் கட்டணச் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சிக்கான கட்டணமாக நபர் ஒருவர்க்கு 4,000 ரூபாயும், கணவன் மனைவி இருவரும் இணைந்து பங்கேற்க விரும்பினால் சிறப்புச்சலுகைக் கட்டணமாக 6,000 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிதித்திட்டமிடல்
நிதித்திட்டமிடல்
vikatan

இந்த பயிற்சி வகுப்பில், உங்களின் தற்போதைய நிதி சூழலை அறிந்துகொள்ளுதல், நிதி இலக்குகளைத் தீர்மானித்தல், கடன் அளவைத் தீர்மானிக்கும் ஃபார்முலா, அவசியமான காப்பீடுகள், பணத்தைப் பெருக்கும் முதலீட்டுச் சூத்திரங்கள், இலக்குகளுக்கேற்ப உங்கள் ஃபோர்ட்போலியோவை அமைத்தல் போன்றவற்றைக் கற்றுத் தெளிவுபெறலாம். இப்பயிற்சி வகுப்பை நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி நடத்துகிறார். பயிற்சி வகுப்பில் கலந்துகொள்வது குறித்து கூடுதல் விவரங்களைப் பெற 9940415222 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.