Published:Updated:

உங்கள் கனவுகளை நிறைவேற்றும் குடும்ப பட்ஜெட்!

நிதித் திட்டமிடல்
பிரீமியம் ஸ்டோரி
News
நிதித் திட்டமிடல்

நிதித் திட்டமிடல்

ன்னாட்டு நிறுவனங்களில் கைநிறைய சம்பளம் வாங்கினாலும் மாதக் கடைசியில் நண்பர்களிடம் நிதியுதவி கேட்கும் நிலையில் பலரும் இருக்கிறார்கள். கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி நினைத்ததெல்லாம் வாங்குகிறார்கள். மாதச் சம்பளம் வாங்கியதும் அதில் பெரும்பகுதி மாதத்தவணைக்கே போய்விடுகிறது. அதன்பின், அன்றாடச் செலவுகளுக்குப் பற்றாக்குறை ஏற்படுவதால் கூடுதலாகக் கடன் வாங்க வேண்டியிருக்கிறது. இப்படியாக சிறுகச் சிறுக கடன் சேர்ந்து ஒருகட்டத்தில் பெரிய அளவில் கழுத்தை நெறிப்பது போலாகிறது. மாதச் சம்பளதாரர்கள் எப்படி பட்ஜெட் போட்டு செலவழிப்பது, வங்கிக் கடன்களை எப்படி நிர்வகிப்பது என நிதி ஆலோசகர் என்.விஜயகுமாரிடம் கேட்டோம்.

என்.விஜயகுமார்
என்.விஜயகுமார்

50% : 20% : 30%

“மாதாந்தரச் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், தங்களது வருமானத்தைத் திட்டமிட்டு நிர்வகிக்க 50% : 20% : 30% என்ற பட்ஜெட் முறையைப் பின்பற்ற வேண்டும். இதன் அர்த்தம் என்னவென்றால், ஒருவருடைய வருமானத்தில் 50% தொகையை மட்டுமே வீட்டுக்கடன், வாகனக்கடன் உள்ளிட்ட மாதாந்தரத் தவணைகளுக்குச் செலவழிக்க வேண்டும். 20% சேமிப்பாக இருக்க வேண்டும். இந்தச் சேமிப்பில் முதலீடுகளும் அடக்கம். 30% குடும்பத்துக்கான அன்றாடச் செலவுகளுக்கானது. இந்தக் கணக்கீட்டின் அடிப்படையில் வருமானத்தைப் பகிர்ந்து செலவுசெய்தால், உங்களுக்கு நிதித் தட்டுப்பாடே இருக்காது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
உங்கள் கனவுகளை நிறைவேற்றும் குடும்ப பட்ஜெட்!

தேவை Vs விருப்பம்

அடுத்ததாக, தேவை என்பதற்கும் விருப்பம் என்பதற்குமான வித்தியாசம் தெரிய வேண்டும். தேவை என்பதில் உணவு, உடை, வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்கள், போக்குவரத்துச் செலவு உள்ளிட்டவை அடங்கும். விருப்பம் என்பது தேவையைத் தாண்டி வாங்கக் கூடியவை. உதாரண மாக, ஒரு வாகனம் வைத்திருப்பது தேவை என்றால், இன்னொரு வாகனம் வாங்குவது விருப்பம் என்ற வகையில் வரும். வசிப்பதற்கு ஒரு வீடு இருப்பது தேவை. இன்னொரு வீடு வாங்குவது விருப்பம். இந்த வித்தியாசத்தைப் புரிந்துகொண்டாலே நமது மாதாந்தர பட்ஜெட்டைச் சிறப்பாக வகுக்கலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மாதத் தவணை உயராமல் பார்த்துக்கொள்ளுங்கள்

திட்டமிட்டபடி, 50% வருமான அளவுக்குள் உங்களுடைய மாதத்தவணை இருக்கும் சூழலில், திடீரென வங்கிக்கடனுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் தவணைக் கான ஒதுக்கீடும் அதிகரிக்கக் கூடும். அத்தகைய சூழலில் ஒரு நிதி ஆலோசகரை அணுகி அதைச் சரிப்படுத்த முயற்சி செய்யலாம். அடுத்ததாக, வங்கிக்கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஆண்டு களை அதிகரிப்பதால் மாதத் தவணைத் தொகை உயராமல் பார்த்துக் கொள்ளலாம். அல்லது, உங்களுடைய வங்கி வைப்புநிதியில் பணம் இருந்தால் அதைக் கடன் சுமையைக் குறைக்கப் பயன்படுத்தலாம். இதன்மூலம் மாதத்தவணை உயராமல் பார்த்துக் கொள்ளலாம்.

உங்கள் கனவுகளை நிறைவேற்றும் குடும்ப பட்ஜெட்!

ஆறு மடங்கு வைப்பு நிதியில்...

உங்களுடைய மாதச் சம்பளத் தொகையைவிட ஆறு மடங்கு தொகையை வங்கி வைப்புநிதியிலோ, லிக்விட் ஃபண்டிலோ, சேமிப்புக் கணக்கிலோ வைத்துக்கொள்வது நல்லது. ஏதேனும் அவசரத் தேவை அல்லது பணியிழப்பு போன்ற நேரங்களில் இது கைகொடுக்கும். கூடுமானவரை தனிநபர் கடனைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதற்கு வட்டி அதிகம்.

தனிநபர் கடன் வாங்கவேண்டிய கட்டாயம் வரும்பட்சத்தில் ஏற்கெனவே இருக்கும் வீட்டுக் கடனோடு சேர்த்து டாப்அப் லோன் வாங்குவது நல்லது. இதற்கான வட்டி விகிதம், தனிநபர் கடனுக்கான வட்டிவிகிதத்தைவிடக் குறைவாக இருக்கும்.

வட்டி விகிதத்தைச் சரிபாருங்கள்

வங்கிக்கடனுக்கான வட்டி விகிதம் என்ன என்பதை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். வட்டிவிகிதத்தை அதிகப்படுத்துவதாகத் தெரிந்தால் உங்களுடைய சேமிப்பிலிருந்து பணத்தைக் கொடுத்து கடன் தொகையைக் குறைக்கலாம் அல்லது வங்கி மேலாளருடன் பேசி வட்டிவிகிதத்தைக் குறைக்கப் பார்க்கலாம். இத்தகைய நடவடிக்கைகள் மூலமாக வீட்டு பட்ஜெட்டை நன்முறையில் பராமரித்து வரலாம்” என்றார்.

இன்றைய வாழ்க்கைச்சூழலில் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதைவிட எப்படித் திட்டமிட்டு அதைப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் ஒருவரின் வளர்ச்சி இருக்கிறது. எனவே, நிதி நிர்வாகத்தைத் திறம்பட செயல்படுத்தி வாழ்வின் அடுத்த வளர்ச்சி நிலையை நோக்கி பயணிப்பதில் தெளிவோடு இருக்க வேண்டும். நிதி நிர்வாகத்தில் ஏதேனும் குழப்பம் இருந்தால் நிதி ஆலோசகரின் உதவியை நாடத் தயங்க வேண்டாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“சம்பளத்தைத் திட்டமிட்டுப் பயன்படுத்துவதால் எதிர்பார்த்த வளர்ச்சியை அடைகிறேன்!”

கே.மணிவண்ணன், சென்னை.

உங்கள் கனவுகளை நிறைவேற்றும் குடும்ப பட்ஜெட்!

“தனியார் நிறுவனமொன்றில் மேலாளராகப் பணியாற்றி வருகிறேன். கடந்த 2009-ல் எனக்குத் திருமணமானது. அப்போது எனது மாதச் சம்பளம் ரூ.40,000. தற்போது இருமடங்காகியுள்ளது. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். மனைவி வீட்டு நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்கிறார். எனது பெற்றோரும் என்னுடன்தான் இருக்கிறார்கள். நான் இயல்பாகவே வரவு செலவைக் கணக்கிடுவதில் கவனத்துடன் இருப்பேன். எனது சேமிப்பிலிருந்தே எனது திருமணத்துக்கான செலவுகளைச் செய்துமுடித்தேன்.

திருமணத்துக்குப்பின் புதிதாக வீடு வாங்குவது குறித்து யோசித்தேன். முதலில், ரூ.19.5 லட்சம் வீட்டுக்கடன் வாங்கினேன். 20 ஆண்டு மாதத்தவணையில் மாதந்தோறும் ரூ.19,500 செலுத்திவந்தேன். பின்னர் அந்தக் கடனை வேறொரு பொதுத்துறை வங்கிக்கு சற்றுக் குறைந்த வட்டிக்கு மாற்றினேன். இதனால் தவணைச்சுமை சற்றுக் குறைந்தது. வீட்டுக்கடன் வாங்கியபோது டவுன்பேமன்ட் செலவுக்காக நகையை அடமானம் வைத்து, ரூ.2.5 லட்சம் வாங்கியிருந்தேன். அதற்கான வட்டியையும் செலுத்திவந்தேன்.

இடைப்பட்ட காலத்தில் எனது சம்பளம் உயர்ந்ததால், வீட்டுக்கடனுக்கான மாதத்தவணையை ரூ.19,500-யிலிருந்து ரூ.25,000-ஆக உயர்த்தினேன். இடையே 2014-ம் ஆண்டில் கார் ஒன்றை ரூ.2.25 லட்சம் வங்கிக்கடன் மூலம் 10 ஆண்டு தவணைக் கணக்கில் வாங்கினேன். அதற்கான முன்பணத்துக்காக மீண்டும் ரூ.1 லட்சத்துக்கு நகையை அடமானம் வைத்தேன். நகை அடமானத்துக்கும் சேர்த்து பணம் செலுத்தி, திட்டமிட்டபடி கடந்த மாதத்தில் அனைத்து நகைகளையும் திருப்பிவிட்டேன். தற்போது கார் கடனையும் நான்கே ஆண்டுகளில் மொத்தப் பணமாகச் செலுத்தி முடித்துவிட்டேன். இரண்டையும் விரைவில் கட்டிமுடிப்பதற்காகத் திட்டமிட்டு செயல்பட்டேன். தற்போது வீட்டுக்கடன் மட்டுமே உள்ளது. குழந்தைகளுக் கான கல்விக் கட்டணம் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வருவதால் அதற்கெனவும் கவனமாக பட்ஜெட் போடுகிறேன். கடந்த ஒரு வருடமாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளேன். தற்போது மாதம் ரூ.2,000 முதலீடு செய்கிறேன். மேலும், 3,000 ரூபாயை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன்.’’

படம் : சி.ரவிக்குமார்