Published:Updated:

கைகொடுக்கும் எஸ்.ஐ.பி முதலீடு...

எஸ்.ஐ.பி முதலீடு
News
எஸ்.ஐ.பி முதலீடு

கவனிக்க வேண்டிய 5 அம்சங்கள்!

நாகராஜன் சாந்தன்

ற்போது இந்தியாவின் மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.28 லட்சம் கோடி என்ற உயரத்தைத் தாண்டி வளர்ந்துகொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சிக்கு முக்கியப் பங்களிப்பு செய்திருப்பது `எஸ்.ஐ.பி’ என்று அழைக்கப்படும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்.

கைகொடுக்கும் எஸ்.ஐ.பி முதலீடு...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இன்றைய தேதியில் எஸ்.ஐ.பி ஃபோலியோக்களின் எண்ணிக்கை மூன்று கோடியைத் தாண்டியிருக்கிறது. மேலும், எஸ்.ஐ.பி மாத முதலீட்டுத் தொகை, மாதந்தோறும் வளர்ந்துகொண்டே போகிறது. 2020 ஜனவரி மாத நிலவரப்படி, மாத எஸ்.ஐ.பி தொகை ரூ.8,532 கோடி. எஸ்.ஐ.பி முதலீடுகளை ஆரம்பிக்கும்போது கவனத்தில்கொள்ள வேண்டிய ஐந்து முக்கிய அம்சங்கள்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

1) எஸ்.ஐ.பி முதலீடு - நீண்டகால முதலீடு

எஸ்.ஐ.பி முதலீடுகளை முடிந்த அளவு நீண்டகாலத்துக்காக மேற்கொள்வது சரியான முடிவாக இருக்கும். இன்றும் சிலர் ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம் வரை எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடர்ந்துவிட்டு, பிறகு நிறுத்திவிடுகிறார்கள். `எஸ்.ஐ.பி முதலீட்டைப் பிற்பாடு தொடரலாம்’ என்பதுதான் அவர்களின் எண்ணம். எஸ்.ஐ.பி முறை செயல்பாட்டுக்கு வந்ததன் காரணமே, நம் முதலீடு ஓர் ஒழுங்குடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். திடீரெனத் தொடங்கி, திடீரென முதலீட்டை நிறுத்தினால் முதலீட்டு ஒழுங்கு பாதிக்கப்பட்டு, அதனால் நமக்கு எந்த நன்மையும் கிடைக்காமல் போக வாய்ப்பிருக்கிறது.

எஸ்.ஐ.பி முதலீடு
எஸ்.ஐ.பி முதலீடு

நீங்கள் எஸ்.ஐ.பி முதலீட்டை நீண்டகாலத்துக்குத் தொடர்ந்தால், (உதாரணமாக 10 அல்லது 20 வருடங்கள்), உங்களுக்கு சராசரியான விலையில் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்கள் கிடைக்கும்; கூட்டு வட்டி என்ற மிகப்பெரிய நன்மையும் கிடைக்கும். எனவே, உங்களின் எஸ்.ஐ.பி முதலீடுகளை நீண்டகாலந்துக்குத் தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எஸ்.ஐ.பி தேதியை நீங்கள் தேர்வு செய்யும்போது, உங்களுக்கு வசதியான தேதியை மட்டுமே தேர்வு செய்யுங்கள்!

2) எஸ்.ஐ.பி டாப் அப் - வருடந்தோறும் உயரும் எஸ்.ஐ.பி தொகை!

பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் `எஸ்.ஐ.பி டாப் அப்’ (SIP Top-up) எனும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. அது என்ன எஸ்.ஐ.பி டாப் அப்... குறிப்பிட்ட இடைவெளியில் உங்களுடைய எஸ்.ஐ.பி முதலீடுகளைத் தானாகவே உயர்த்திக்கொள்ளக்கூடிய வசதியைத்தான் `எஸ்.ஐ.பி டாப் அப்’ என்று கூறுகிறோம்.

எஸ்.ஐ.பி முதலீடு
எஸ்.ஐ.பி முதலீடு

உதாரணமாக, நீங்கள் மாதந்தோறும் ரூ.5,000 எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய விரும்புகிறீர்களென்றால், அதனுடன் சேர்ந்து வருடந்தோறும் ரூ.1,000 டாப் அப் தொகையாக குறிப்பிட்டால், வருடந்தோறும் உங்கள் முதலீட்டுத் தொகையில் ரூ.1,000 தானாகவே அதிகமாகிவிடும். அதாவது, முதல் வருட எஸ்.ஐ.பி தொகை ரூ.5,000 (ஆரம்பம்), இரண்டாம் வருடம் ரூ.6,000, மூன்றாம் வருடம் ரூ.7,000 என்று அதிகமாகிக்கொண்டே செல்லும். இந்த வசதியை மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம் என்ற விகிதத்தில் நீங்கள் தேர்வுசெய்யலாம்.

அதேபோல, இந்த டாப் அப் வசதியை எவ்வளவு நாள்களுக்குத் தொடர வேண்டும் என்பதையும் தேர்வு செய்யும் வசதி இருக்கிறது. நீங்கள் அதிகபட்ச டாப் அப் தொகையாக ரூ.10,000 என்று முடிவு செய்தால், அதற்கு மேல் டாப் அப் தொகையை எடுக்க மாட்டார்கள். (பார்க்க அட்டவணை)

எஸ்.ஐ.பி முதலீடு
எஸ்.ஐ.பி முதலீடு

3) மாதத்தின் எந்தத் தேதியும் நல்ல தேதியே!

எஸ்.ஐ.பி தேதியை நீங்கள் தேர்வு செய்யும்போது, உங்களுக்கு வசதியான தேதியை மட்டுமே தேர்வு செய்யுங்கள். மாத வருமானம் பெறுபவர்களென்றால், உங்கள் சம்பளம் எந்தத் தேதியில் வங்கிக் கணக்கில் வரவு செய்யப்படுமோ, அதற்குப் பிறகு ஐந்து நாள்கள் கழித்து என்பதாக உங்கள் எஸ்.ஐ.பி தேதியை அமைத்துக்கொள்ளலாம். உதாரணமாக, 1-ம் தேதி உங்கள் சம்பள நாள் என்றால், 5 அல்லது 7-ம் தேதி என்பது சிறப்பான தேர்வாக இருக்கும். ஏதேனும் ஒரு மாதம் சம்பளம் வரத் தாமதமானாலும் மாற்று ஏற்பாடு செய்ய இந்தக் கால அவகாசம் கைகொடுக்கும்.

4) எஸ்.ஐ.பி முதலீடு - குறிக்கோளுக்காக!

`எஸ்.ஐ.பி முதலீட்டை ஆரம்பிக்க வேண்டும்...’ என்று நீங்கள் தீர்மானம் செய்த மறுகணமே நீங்கள் செய்ய வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம், ‘இந்த எஸ்.ஐ.பி முதலீடு எந்த நோக்கத்துக்காக’ என்ற கேள்விக்கு விடை தேடுவது. எந்த எஸ்.ஐ.பி முதலீடும் ஏதாவது ஒரு குறிக்கோளுக்காகவே இருக்கட்டும். உதாரணமாக, உங்கள் குழந்தைகளின் உயர்கல்வித் தேவைகள் அல்லது அவர்களின் திருமணத் தேவைகள், உங்கள் ஓய்வுக்கால நிதி, அவசரகால நிதி போன்றவற்றை உங்கள் முதலீட்டுக்கான குறிக்கோளாக அமைத்துக்கொள்ளுங்கள். முக்கியமாக, உங்களின் வரி சேமிப்பு சார்ந்த முதலீடுகளை (ELSS), `வரி சேமிப்பு’ என்ற கண்ணோட்டத்துடன் மட்டும் பார்க்காமல், ஏதாவது ஒரு குறிக்கோளுக்காக அமைத்துக் கொள்ளுங்கள்.

எஸ்.ஐ.பி முதலீடு
எஸ்.ஐ.பி முதலீடு

5) எஸ்.ஐ.பி இன்ஷூரன்ஸ்

பெரும்பான்மையான மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், `எஸ்.ஐ.பி இன்ஷூரன்ஸ்’ என்ற வசதியை முதலீட்டாளர்களுக்கு அளிக்கின்றன. பொதுவாக, உங்கள் மாத எஸ்.ஐ.பி தொகையைப் பொறுத்து இந்த இன்ஷூரன்ஸ் தொகை அமைந்திருக்கும். உதாரணமாக, உங்கள் எஸ்.ஐ.பி தொகையைப்போல் 10 / 25 / 50 / 100 மடங்குகளாக இந்தத் தொகை இருக்கலாம் (மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களைப் பொறுத்து இந்த அளவு மாறுபடலாம்). இந்த இன்ஷூரன்ஸுக்காக முதலீட்டாளர்களிடம் எந்தத் தொகையும் பெறப்படுவதில்லை.

ஆனால் உங்கள் எஸ்.ஐ.பி ஏதேனும் ஒரு காரணத்தால் நிறுத்தப்படும் சமயத்தில் இந்த இன்ஷூரன்ஸ் வசதியும் நிறுத்தப்படும் என்பதை மறக்கக் கூடாது!