Published:Updated:

பி.எஃப்... சந்தேகங்களும் தீர்வுகளும்! - தெளிவான விளக்கம்!

கேளுங்கள், பதில் கிடைக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
கேளுங்கள், பதில் கிடைக்கும்!

கேளுங்கள், பதில் கிடைக்கும்!

பி.எஃப்... சந்தேகங்களும் தீர்வுகளும்! - தெளிவான விளக்கம்!

கேளுங்கள், பதில் கிடைக்கும்!

Published:Updated:
கேளுங்கள், பதில் கிடைக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
கேளுங்கள், பதில் கிடைக்கும்!
ணியாளர் பிராவிடன்ட் ஃபண்ட் (இ.பி.எஃப்) குறித்த நாணயம் விகடன் வாசகர்களின் சந்தேகங்களுக்கு பி.எஃப் உதவி கமிஷனர் (வேலூர்) ஆர்.கணேஷ் பதிலளித்திருக்கிறார்.

பி.எஃப் ஃபேமிலி பென்ஷன் பெற ஒருவருக்கு எத்தனை ஆண்டுகள் பி.எஃப் பிடிக்கப்பட்டிருக்க வேண்டும்?

- முத்துதுரை, உவரி

“ஒரு பணியாளர், தன் வாழ்நாளில் பணிபுரிந்த அனைத்து நிறுவனங்களிலும் சேர்த்து 58 வயது வரை மொத்தம் 10 வருடங்களுக்கு பி.எஃப் மற்றும் பென்ஷனுக்கான பங்களிப்பை (Contributions) செலுத்தியிருக்க வேண்டும். அந்த பென்ஷனுக்கான பங்களிப்பு அவரின் பி.எஃப் கணக்கில் இருந்தால் மட்டுமே அவர் ஓய்வூதியம் பெறத் தகுதி உடையவராகிறார்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பணம்
பணம்

நான் என் பி.எஃப் கணக்கில் நாமினியாக திருமணத்துக்கு முன்னர் என் அம்மா பெயரைக் கொடுத்திருந்தேன். இப்போது அம்மாவுக்கு வயதாகிவிட்டது. உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. நாமினியாக என் அக்காவை நியமிக்க முடியுமா, அதற்கான நடைமுறை என்ன?

- எம்.இந்திரா குமார், திருச்சி - 3

“நியமனம் (Nomination) என்பது சட்டப்படி, ஒருவருடைய சொத்துகளைப் ‘பராமரித்து’, பின்னர் அந்தச் சொத்தை உரியவரிடம் சேர்த்துவிடுவதற்கு ஏற்படுத்தப்பட்ட வழிமுறை. இந்த நியமனம் பி.எஃப் மற்றும் பென்ஷனுக்கு வேறுபடும். ஒரு பி.எஃப் சந்தாதாரர் யாரை வேண்டுமானாலும், எத்தனை பேரை வேண்டுமானாலும் நாமினியாக நியமிக்கலாம். அவரவர் பங்கு எத்தனை சதவிகிதம் என்பதை அவசியம் குறிப்பிட வேண்டும். பென்ஷனுக்கு நாமினி என்பது, ஒரு பென்ஷன் உறுப்பினர் இறக்கும்போது அவருடைய பென்ஷனைப் பெற உரிமையுள்ள நபர்களைத் தவிர, வேறு ஒருவரை நாமினியாக நியமிக்க வேண்டும்.திருமணம் ஆன உறுப்பினர் என்ற வகையில், உங்கள் கணவர் மற்றும் குழந்தைகளைத் தவிர மற்ற எவரையும் பென்ஷன் நாமினியாக நியமிக்கலாம். தற்போது ஆன்லைன் மூலம் பென்ஷன் படிவம் (படிவம் 10-D) சமர்ப்பிக்க இயலும். அதற்கு முக்கியமாக இ - நியமனம் (e-nomination) ஆன்லைன் மூலம் சமர்ப்பிப்பது அவசியம்.’’

என் வயது 49. கொரோனா பாதிப்பால் வேலை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளாக ஒரு நிறுவனத்தின் வேலை பார்த்திருக்கிறேன். பி.எஃப் பிடித்திருக்கிறார்கள். `ஒரு நிறுவனம் வி.ஆர்.எஸ் கொடுத்தால், 50 வயதில் பி.எஃப் ஃபேமிலி பென்ஷன் கிடைக்கும்’ என்கிறார்கள் உண்மையா?

- கே.ராஜகுமாரன், மதுரை -2

“குறைந்தபட்சம் 10 வருடம் பென்ஷன் சந்தா செலுத்தப்பட்டிருந்து, ஓர் உறுப்பினர் `இனி 58 வயது வரை இ.பி.எஃப் சட்டம் பொறுத்தும் எந்த நிறுவனத்திலும் பணிபுரியப் போவதில்லை’ என்று முடிவெடுக்கும் நிலையில், அவர் 50 வயதுக்குப் பிறகு குறுகிய சேவை பென்ஷன் (Short Service Pension) பெறலாம். 58 வயதுக்குக் கணக்கிடப்பட்ட ஓய்வூதியத்திலிருந்து ஒவ்வொரு வருடக் குறைவுக்கும் 4% அளவுக்கு பென்ஷன் குறைத்து வழங்கப்படும்.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நான் ஜூன் 30, 2019-ல் பணி ஓய்வு பெற்றேன். என் பணிக் காலம் முழுக்க அடிப்படைச் சம்பளம் ரூ.15,000-க்குமேல் இருந்தது. எனக்கு பென்ஷன் ரூ.188 வழங்க உத்தரவு வந்திருக்கிறது. என் தோராயக் கணக்கீடுப்படி, எனக்கு ரூ.1,188 பென்ஷன் வர வேண்டும். இது சரியா?

- எஸ்.ராஜன், மெயில் மூலமாக

“தொடர்புடைய ஆவணங்களுடன் உரிய வருங்கால வைப்புநிதி அலுவலகத்தைத் தொடர்புகொண்டால் தீர்வு கிடைக்கும்.”

முதலீடு
முதலீடு

பென்ஷன் பெறுவதற்குக் குறைந்தபட்சம் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். 2003-ம் ஆண்டு நிறுத்தப்பட்ட மாநில அரசின் பென்ஷன் திட்டத்துக்கும், இப்போதுள்ள பென்ஷன் திட்டத்துக்கும் என்ன வித்தியாசம்?

- அஷ்ரஃப் அலி, சென்னை

“தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவ ரென்றால், பென்ஷன் பெறுவதற்கு ‘தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் 1995-’ன்படி, அவர் பெயரில் குறைந்தபட்சம் 10 வருடங்களுக்கு பென்ஷன் சந்தா செலுத்தப்பட்டிருக்க வேண்டும். மற்ற அரசுப் பணியில் வழங்கப்படும் ஓய்வூதியம் குறித்த விவரத்தை மாநில அரசு பென்ஷன் அதிகாரிகளிடம்தான் கேட்க வேண்டும்.”

என் முந்தைய பி.எஃப் கணக்கில் பிறந்த தேதி, பெயர் சரியாக இல்லை. ஆதார் உறுதிப்படுத்தப் படவில்லை. ஆனால், என் தற்போதைய பி.எஃப் கணக்கில் எல்லாம் சரியாக இருக்கின்றன. இரண்டு கணக்குக்கும் ஒரே யூ.ஏ.என் (UAN) தான். அடிப்படை விவரங்கள் தவறு என்பதால், முந்தைய கணக்கிலிருக்கும் பணத்தை தற்போதைய கணக்குக்கு மாற்ற முடியவில்லை. நான் என்ன செய்தால் இரு கணக்கிலிருக்கும் பணமும் ஒரே கணக்குக்கு வரும்?

- பிரகாஷ்.எம், இ-மெயில் மூலம்

“ஆதார் மற்றும் யூ.ஏ.என் விவரங்கள் மாறுபட்டிருப்பதால், ஆன்லைன் மூலம் பண மாற்றம் செய்ய இயலாது. நீங்கள் தற்போது வேலை பார்க்கும் நிறுவனம் மூலம் படிவம்-13-ஐ சமர்ப்பித்தால், இரு கணக்குகளும் இணைந்துவிடும்.”

பி.எஃப் உதவி கமிஷனர் (வேலூர்) ஆர்.கணேஷ்
பி.எஃப் உதவி கமிஷனர் (வேலூர்) ஆர்.கணேஷ்

நான் இப்போது மும்பையில் பணிபுரிகிறேன். இதற்கு முன்னர் குஜராத், மஹாராஷ்டிராவிலுள்ள நான்கு நிறுவனங்களில் பணிபுரிந்திருக்கிறேன். அவற்றில் இரண்டு நிறுவனங்கள் இப்போது இல்லை. மூடப்பட்டுவிட்டன. இ.பி.எஸ்-க்கான (Employee Pension Scheme) இணைப்பு கே (Annexure K) படிவம் பெற, முன்பு பணிபுரிந்த நிறுவனங்கள் போதிய ஆவணங்களை இ.பி.எஃப்.ஓ (EPFO) அமைப்பில் சமர்ப்பித்திருந்தும், இ.பி.எஃப்.ஓ-விலிருந்து இணைப்பு கே படிவங்களை நான் இன்னும் பெறவில்லை. பலமுறை பி.எஃப் அலுவலகம் சென்றும் பலனில்லை. இந்தப் படிவத்தைப் பெற நான் என்ன செய்யவேண்டும்?

- கிருஷ்ணகுமார், மும்பை

“நான்கு பி.எஃப் கணக்குகளும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டனவா என்பது குறித்தும், அவற்றில் எத்தனை நிறுவனங்கள் விலக்குப் பெற்றவை (Exempted) என்பதையும் நீங்கள் தெரிவிக்கவில்லை. இதுவரை பி.எஃப் கணக்குகளுக்கான பணம் மாற்றப்பட வில்லையென்றால், அவர் தற்சமயம் பணியிலிருக்கும் நிறுவனம் மூலம் நான்கு கணக்குகளுக்கும் தனித்தனியாக, படிவம்-13 சமர்ப்பிக்கலாம்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனம் மாறும்போது இ.பி.எஃப்., இ.பி.எஸ் சம்பந்தமான எந்தெந்தப் படிவங்களை விலகும் நிறுவனத்திடமும், இ.பி.எஃப் அலுவலகத்திலும் சமர்ப்பிக்க வேண்டும்? விலகும் நேரத்தில் நமது கணக்கிலுள்ள பி.எஃப் தொகையை எங்கு, எவ்வாறு தெரிந்துகொள்வது, மாறப்போகும் நிறுவன பி.எஃப் கணக்குக்கு அந்தத் தொகையை எப்படி மாற்றிக்கொள்வது?

- சாருமதி, மெயில் மூலமாக

“உறுப்பினர் புதிய நிறுவனத்தில் பணியில் அமரும்போது, படிவம் 11 (முந்தைய பணி, பி.எஃப் கணக்கு யூ.ஏ.என் மற்றும் இதர விவரங்கள்) சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.அதுவரையுள்ள பி.எஃப் நிலுவைத் தொகையை அறிய www.epfindia.gov.in என்ற வலைதளத்தில் உறுப்பினர் கணக்குப் புத்தகத்தை (Member Passbook) ஆன்லைனில் பெறலாம்.

ஆதார் விவரங்கள், பி.எஃப் யூ.ஏ.என், அலுவலகத்திலுள்ள உறுப்பினர் விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கும்பட்சத்தில், ஆன்லைன் மூலம் பி.எஃப் கணக்குகளை மாற்ற (Transfer of PF Account) விண்ணப்பிக்கலாம்.’’

முந்தைய நிறுவனத்தில் பி.எஃப் தொகை மாதம் ரூ.4,000 பிடித்தார்கள். புதிய நிறுவனத்தில் அதைவிடச் சம்பளம் அதிகம். ஆனால், மாதம்1,800 ரூபாய்தான் பிடிக்கிறார்கள். இது சரியா?

- மலர் விழி, செஞ்சி

“இ.பி.எஃப் சட்டம் பிரிவு 6-ன்படியும் இ.பி.எஃப் திட்டம் பத்தி 27A மற்றும் 29-ன் படியும் ரூ.15,000-க்கு 12 சதவிகிதத்துக்குமேல் (அதாவது, ரூ.1,800-க்கு மேல்) ஓர் உறுப்பினர் தன்னிச்சையாகச் செலுத்தலாம் என்றாலும் நிறுவனத்தின் பங்களிப்பு ரூ.1,800-க்குமேல் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை.”

பி.எஃப் பென்ஷன் எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது?

- ஏ.சீனிவாசன், திருப்பரங்குன்றம்

“தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம்-1995 என்பது உழைக்கும் அனைவருக்கும் ‘சமுதாயப் பாதுகாப்பு’ என்ற அரசின் கொள்கைப்படி நிறுவப்பட்டு தற்போது செயல்பட்டுவருகிறது. இந்தத் திட்டப்படி, ஓய்வூதியம் குறித்து உயர்மட்டக் குழு (Actaurial) அவ்வப்போது அமர்ந்து, பல்வேறு விவரங்களின் அடிப்படையில் விஞ்ஞானரீதியாகக் கணக்கிட்டு, பல்வேறு காரணங்களுக்காக இந்த ஓய்வூதியத் திட்டத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பித்து, அதன் அடிப்படையில் பென்ஷன் திட்டம் செயல்படுகிறது. குறிப்பாக, ஒருவர் 16/11/1995 முதல் 33 வருடம் பென்ஷன் சந்தாதாரராக இருந்தால், அவருக்குப் பணிக்காலம் முடியும் தறுவாயிலுள்ள சராசரி (பென்ஷனுக்கான) ஊதியத்தில் 50% பென்ஷன் கிடைக்கும் வகையில் வரையறுக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் பென்ஷன் தவிர, மற்ற பல வகையான பென்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை ஓர் உறுப்பினரின் மரணத்தின்போது இருக்கும் வயது மற்றும் ஊதியங்களின் அடிப்படையில் கணக்கிடும் வகையில் நிறுவப்பட்டுள்ளன.”

என் வயது 50. ஊடரங்கு தொழில் பாதிப்பால் என் சம்பளம் 50% குறைந்துவிட்டது. இதனால் அவசரச் செலவுக்கு ரூ.1.5 லட்சம் பி.எஃப்-லிருந்து எடுத்துவிட்டேன். இதனால் என் ஓய்வுக்கால பி.எஃப் தொகுப்பு நிதியில் பற்றாக்குறை ஏற்படும் போலிருக்கிறது. இதைச் சரிசெய்ய வழியிருக்கிறதா?

- ரவீந்தர், சென்னை

“உங்களுக்கு இன்னும் எட்டு வருடங்கள் பணிக்காலம் உள்ளது என்று எடுத்துக் கொள்வோம். இந்தக் காலகட்டத்தில், அவர் மாத பி.எஃப் பிடித்தத்துக்குமேல் ஒவ்வொரு மாதமும் வி.பி.எஃப் (Voluntary Provident Fund) முறையில் ரூ.2,500 செலுத்திவந்தால் இந்த ‘இழப்பை’ சரிசெய்ய வாய்ப்பிருக்கிறது. இந்த நிலையில் பி.எஃப்-லிருந்து எடுத்த காரணத்தால் மாத பென்ஷன் தொகை எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது.”

பி.எஃப் புகார்களை ஆன்லைனில் எப்படி, எவ்வாறு சமர்ப்பிப்பது. இ-மெயில் முகவரி எங்கு கிடைக்கும்?

- அ.கணேசன், சேலம்

“ஆன்லைனில் புகார் அளிக்க “EPFIGMS portal” (EPF Integrated Grievance Management System) நிறுவப்பட்டு இயங்கிவருகிறது. நாட்டின் அனைத்து பி.எஃப் அலுவலகங்களின் இ-மெயில் முகவரிகளும் www.epfindia.gov.in என்ற இணையதளத்தில் உள்ளன.”

கேளுங்கள், பதில் கிடைக்கும்!

தபால் அலுவலக சேவைகள் மற்றும் முதலீட்டு திட்டங்கள் குறித்த பலவிதமான கேள்விகள், சந்தேகங்களுக்கு சென்னை பிராந்திய போஸ்ட்மாஸ்டர் ஜெனரல் சுமதி ரவிச்சந்திரன் பதிலளிக்கிறார்.

பி.எஃப்... சந்தேகங்களும் தீர்வுகளும்! - தெளிவான விளக்கம்!

உங்கள் கேள்விகளை navdesk@vikatan.com என்ற இ-மெயிலுக்கு அனுப்பி வைக்கலாம்.

கேளுங்கள், பதில் கிடைக்கும்!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு முறையான எஸ்.ஐ.பி (Systematic Investment Plan - SIP) குறித்த பலவிதமான கேள்விகள், சந்தேகங்களுக்கு நிதி ஆலோசகர் த.முத்துகிருஷ்ணன் (wisewealthadvisors.com) பதிலளிக்கிறார்.

பி.எஃப்... சந்தேகங்களும் தீர்வுகளும்! - தெளிவான விளக்கம்!

உங்கள் கேள்விகளை navdesk@vikatan.com என்ற இ-மெயிலுக்கு அனுப்பி வைக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism