Published:Updated:

சந்தைக்குப் புதுசு : இளம் வயதினருக்கு ஏற்ற முதலீடு! - புதிய அறிமுகம்..!

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
News
முதலீடு

கொரோனா நோய்த்தொற்றால் மரணம் ஏற்பட்டாலும், இந்த பாலிசி மூலம் க்ளெய்ம் செய்ய முடியும் என்பது சிறப்பு!

ண்மையில் சந்தையில் அறிமுகமாகியுள்ள சில புதிய திட்டங்கள் பற்றிய குறிப்புகள்...

ஆக்ஸிஸ் பேங்க்கிங் இ.டி.எஃப் ஃபண்ட்!

ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ‘ஆக்ஸிஸ் பேங்க்கிங் இ.டி.எஃப்’ (Axis Banking ETF) திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஓப்பன் எண்டட் வகையைச் சேர்ந்த இதில் குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து முதலீட்டை ஆரம்பிக்கலாம். அக்டோபர் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் நிதி, நிஃப்டி பேங்க் இண்டெக்ஸ் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது.

இந்த ஃபண்டில் ஓரளவு ரிஸ்க் இருக்கிறது என்பதால், ரிஸ்க் எடுக்கக்கூடியவர்கள் மற்றும் இளம் வயதினர் முதலீடு செய்யலாம்.

சந்தைக்குப் புதுசு : இளம் வயதினருக்கு ஏற்ற முதலீடு! - புதிய அறிமுகம்..!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

குவான்ட் இ.எஸ்.ஜி ஈக்விட்டி ஃபண்ட்!

குவான்ட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ‘குவான்ட் இ.எஸ்.ஜி ஈக்விட்டி ஃபண்ட்’ (Quant ESG Equity Fund) திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஓப்பன் எண்டட் வகையைச் சேர்ந்த இதில் குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து முதலீட்டை ஆரம்பிக்கலாம். அக்டோபர் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் நிதி, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத, சமூகத்தின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும் மற்றும் சிறந்த நிர்வாகத்தைக் கொண்ட நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது.

இந்த ஃபண்டில் ஓரளவுக்கு ரிஸ்க் இருக்கிறது என்பதால், ரிஸ்க் எடுக்கக்கூடியவர்கள் மற்றும் இளம் வயதினர் முதலீடு செய்யலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

முதலீட்டுப் பத்திரம்

வங்கிசாரா நிதி நிறுவனங்களில் ஒன்றான சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் முதலீட்டுப் பத்திரத்தை வெளியிட்டிருக்கிறது. இதனுடைய முகபதிப்பு ரூ.5,00,000. முதலீட்டுக் காலம் 10 ஆண்டுகள். முதல் 10 ஆண்டுகளுக்கான வட்டி விகிதம் 9.30%. வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களைவிட, இந்த முதலீட்டுப் பத்திரத்தின் வட்டி விகிதம் கவர்ச்சிகரமானதாக இருப்பதால் முதலீட்டாளர்கள் இதைப் பரிசீலிக்கலாம்.

சந்தைக்குப் புதுசு : இளம் வயதினருக்கு ஏற்ற முதலீடு! - புதிய அறிமுகம்..!

மஹிந்திரா ஈக்விட்டி ஃபோகஸ்டு ஃபண்ட்

மஹிந்திரா மனுலைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ‘மஹிந்த்ரா மனுலைஃப் ஃபோகஸ்டு 30 ஈக்விட்டி யோஜனா ஃபண்ட்’ (Mahindra Manulife Focused 30 Equity Yojana Fund) என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஓப்பன் எண்டட் வகையைச் சேர்ந்த இதில் குறைந்தபட்சம் 1,000 ரூபாயிலிருந்து முதலீட்டை ஆரம்பிக்கலாம்.

அக்டோபர் 26-ம் தேதிலிருந்து நவம்பர் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முதலீட்டாளர் களிடமிருந்து திரட்டப்படும் நிதி, குறிப்பிட்ட துறைசார்ந்த 20 - 30 நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது. நுழைவுக் கட்டணம் கிடையாது. ஓராண்டுக்குள் வெளியேறினால் 1% கட்டணம் வசூலிக்கப்படும். இந்த ஃபண்டில் சராசரியைவிட அதிக ரிஸ்க் இருப்பதால், ரிஸ்க் எடுக்கக்கூடியவர்கள் மற்றும் இளம் வயதினர் முதலீடு செய்யலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியா லைஃப் இன்ஷூரன்ஸ்

இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனமானது, ‘இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் கேரன்டிடு புரொடெக்‌ஷன்’ என்ற இன்ஷூ ரன்ஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த பாலிசியானது பல தேவைகளுக்கு கவரேஜ் தரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. பாலிசிதாரர் தங்கள் தேவைக்கேற்ப எந்தவொரு விருப்பத்தையும் தேர்ந்தெடுக்கலாம்.

நிரந்தர ஊனம், சிக்கலான நோய், இயற்கை மற்றும் விபத்தால் மரணம், சீரழிவு நோய்கள் ஆகியவற்றுக்கு இந்த பாலிசியின் மூலம் கவரேஜ் பெற முடியும்.

கொரோனா நோய் தொற்றால் மரணம் ஏற்பட்டாலும், இந்த பாலிசி மூலம் க்ளெய்ம் செய்துகொள்ளலாம். 99 வயது வரை இந்த பாலிசியின் மூலம் பலன் பெற முடியும் என்பது சிறப்பான விஷயம்.