தற்போது புதிதாக அறிமுகமாகியிருக்கும் மியூச்சுவல் ஃபண்டுகள், இன்ஷூரன்ஸ் பாலிசிகள், பங்கு வெளியீடுகள், கடன் பத்திரங்கள் குறித்துப் பார்ப்போம்.
ஆன்லைன் டிரேடிங்கில் எம்.எஸ்.இ-எஃப்.எஸ்.எல்!
80 ஆண்டுகள் பழைமையான மெட்ராஸ் பங்குச் சந்தையின் (எம்.எஸ்.இ) துணை நிறுவனமும், பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ உறுப்பினருமான எம்.எஸ்.இ - எஃப்.எஸ்.எல் அண்மையில் ஆன்லைன் டிரேடிங்கைத் தொடங்குவதாக அறிவித்தது. `இதன் மூலம் சிறு முதலீட்டாளர்கள் நேரடியாகப் பங்குகளில் முதலீடு செய்வதன் மகிழ்ச்சியை அனுபவிக்கலாம்’ என்று எம்.எஸ்.இ தெரிவித்திருக்கிறது.

மேலும், இந்தியா முழுவதும் கிளைகளை விரிவாக்க எம்.எஸ்.இ திட்டமிட்டுள்ளது. தற்போது ஆறு கிளைகளைக் கொண்டிருக்கும் இந்த நிறுவனம், இந்த மாத இறுதிக்குள் பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் கிளைகளைத் திறக்கவிருக்கிறது. ஆரம்பகாலத்தில் இதன் கிளை விரிவாக்கம், தென்னிந்தியாவை மையப்படுத்தித்தான் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
ஏ.பி.எஸ்.எல்.ஐ வெல்த் 360 சொல்யூஷன்!
ஆதித்ய பிர்லா சன் லைஃப் இன்ஷூரன்ஸ் (ஏ.பி.எஸ்.எல்.ஐ), ‘ஏபி.எஸ்.எல்.ஐ வெல்த் 360 சொல்யூஷன்’ என்ற இன்ஷூரன்ஸ் பாலிசி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் யூலிப் பாலிசி. நீண்டகாலத்தில், காப்பீடு வசதியுடன் பங்குச் சந்தை வருமானத்தைப் பெற விரும்புபவர்கள் இதை கவனிக்கலாம்.
இந்தியா முழுவதும் கிளைகளை விரிவாக்கம் செய்ய எம்.எஸ்.இ நிறுவனம் திட்டம் வைத்துள்ளது!
ஹெச்.டி.எஃப்.சி லைஃப் இன்ஷூரன்ஸ்!
ஹெச்.டி.எஃப்,சி லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் `ஹெச்.டி.எஃப்.சி லைஃப் சஞ்சாய் பார் அட்வான்டேஜ்’ (HDFC Life Sanchay Par Advantage) என்ற புதிய ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இந்த பாலிசியில் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் பிரீமியம் செலுத்தி, 100 வயது வரையிலான காப்பீட்டு வசதியைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது சிறப்பான அம்சம். இந்த பாலிசியில் மாதம் / காலாண்டு / அரையாண்டு மற்றும் ஆண்டுக்கு ஒரு முறை பிரீமியம் செலுத்தும் வசதி உள்ளது. 100 வயது வரை காப்பீடு வசதி பெற நினைப்பவர்கள் இந்த பாலிசியை கவனிக்கலாமே!