மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் பலரும் ‘ஃபண்ட் கிளினிக் எங்களுக்கான பகுதி’ என்று கொண்டாடுகிறார்கள். இது, தனிப்பட்ட ஒருவருக்கு போர்ட்ஃபோலியோவைச் சீரமைத்துக் கொடுக்கும் பகுதி. என்றாலும், இதில் சொல்லப்படும் பல அம்சங்கள் முதலீட்டாளர்கள் எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டியவை. இனி முதலீட்டாளர்களின் கேள்விகள்...

என் வயது 40. ஐடி துறையில் பணிபுரிகிறேன். திருமணமாகிவிட்டது. குழந்தைகள் இல்லை. இன்னும் ஒரு வருடம் இங்கு பணிபுரிவேன். பிறகு சென்னைக்கு வந்து பணியில் தொடர்வேன். பெங்களூருவில் சொந்தமாக ஒரு ஃப்ளாட் இருக்கிறது. நான் ஒவ்வொரு மாதமும் ரூ.32,000 பின்வரும் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் மாதந்தோறும் முதலீடு செய்துவருகிறேன்.

ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட் - ரூ.5,000; ஐ.டி.எஃப்.சி ஹைபிரிட் ஈக்விட்டி ஃபண்ட் - ரூ.3,000; கோட்டக் ஸ்டாண்டர்டு மல்டிகேப் ஃபண்ட் - ரூ.5,000; மிரே அஸெட் கிரேட் கன்ஸ்யூமர் ஃபண்ட் - ரூ.5,000; பிரின்சிபல் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் - ரூ.3,000; நிப்பான் ரிலையன்ஸ் மல்டிகேப் ஃபண்ட் - ரூ.3,000; எஸ்.பி.ஐ மேக்னம் மல்டிகேப் ஃபண்ட் - ரூ.3,000; யூ.டி.ஐ வேல்யூ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் - ரூ.3,000; ஐ.டி.எஃப்.சி ஸ்டெர்லிங் ஈக்விட்டி ஃபண்ட் - ரூ.2,000. இவை தவிர, மொத்த முதலீடாக டி.எஸ்.பி பிளாக்ராக் பேலன்ஸ்டு ஃபண்டில் எஸ்.டபிள்யூ.பி முறையில் ரூ.1,00,000; ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. பேலன்ஸ்டு ஃபண்டில் ரூ.1,00,000; ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. ஈக்விட்டி அண்ட் டெப்ட் ஃபண்டில் ரூ.80,000; ஐ.டி.எஃப்.சி ஹைபிரிட் ஈக்விட்டி ஃபண்டில் ரூ.60,000; சுந்தரம் ஈக்விட்டி ஹைபிரிட் ஃபண்டில் ரூ.1,00,000 எஸ்.டபிள்யூ.பி முறையில் செய்துள்ளேன். மற்றும் ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டில் ரூ.2,00,000; பிரின்சிபல் ஹைபிரிட் ஈக்விட்டி ஃபண்டில் ரூ.1,00,000; யூ.டி.ஐ டிரான்ஸ்போர்ட்டேஷன் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் ஃபண்டில் ரூ.1,65,000 என மொத்த முதலீடு செய்திருக்கிறேன். என் முதலீட்டு முறை சரியா, என் எதிர்காலத்தையும் ஓய்வுக்காலத்தையும் கணக்கில்கொண்டு இவற்றை நான் மாற்றியமைக்க வேண்டுமா?

- பிரபு, நெதர்லாந்து

“இலக்குகளைப் பொறுத்து உங்கள் முதலீடு இருக்கும்பட்சத்தில் உங்களால் எவ்வளவு ரிஸ்க் எடுக்க முடியும், எவ்வளவு வருமானம் தேவை என்பதை முன்கூட்டியயே நிர்ணயம் செய்துகொள்வது அவசியம். அவ்வாறு செய்தால்தான் இலக்குகளை உங்களால் முன்கூட்டியே அடைய முடியும்.

சாஃப்ட்வேர் துறையில் இருப்பவர்கள் ஓய்வுக்காலத்தை அதிகபட்சம் 55 வயது என்று வைத்துக்கொண்டு முதலீடு செய்தால் நன்றாக இருக்கும். அந்தவகையில் நீங்கள் மிட் அண்ட் ஸ்மால்கேப் ஃபண்டுகளில் 40 - 50% முதலீட்டை வைத்துக்கொண்டால், உங்களுக்கு நீண்டகாலத்தில் 13 - 15% வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், இப்போதைய உங்கள் போர்ட்ஃபோலியோ அப்படி இல்லை. நிறைய ஹைபிரிட் ஃபண்டுகளில் முதலீடு செய்வது அதிக லாபம் கொடுக்காது. மேலும், சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் முறையில் முதலீடு செய்வது எல்லா நேரத்திலும் லாபகரமாக இருக்காது. எனவே, உங்களுடைய போர்ட்ஃபோலியோவை பின்வருமாறு மாற்றிக் கொள்ளவும்.

ஐ.டி.எஃப்.சி ஹைபிரிட் ஃபண்டுக்கு பதிலாக டி.எஸ்.பி ஈக்விட்டி அண்ட் பாண்ட் ஃபண்டிலும், மிரே அஸெட் கிரெட் கன்ஸ்யூமர் ஃபண்டுக்கு பதிலாக டி.எஸ்.பி மிட்கேப் ஃபண்டிலும் முதலீட்டை மாற்றிக்கொள்ளவும். நிப்பான் மல்டிகேப் ஃபண்டில் செய்துவரும் முதலீட்டை கோட்டக் ஸ்டாண்டர்டு மல்டிகேப் ஃபண்ட் மற்றும் எஸ்.பி.ஐ மல்டிகேப் ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்யவும்.

வேல்யூ ஃபண்டில் ஏழு முதல் 10 ஆண்டுக்காலம் தொடர்ந்து முதலீடு செய்துவந்தால், டைவர்சிஃபைடு ஃபண்டை விட அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் உங்கள் போர்ட்ஃபோலியோவில் இருக்கும் யூ.டி.ஐ வேல்யூ ஃபண்ட், லார்ஜ்கேப் பங்குகளில் முதலீடு செய்கிறது. ஆனால், ஐ.டி.எஃப்.சி ஸ்டெர்லிங் ஃபண்ட், ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகளில் முதலீடு செய்கிறது. நீண்டகால அடிப்படையில் இந்த ஃபண்ட் யூ.டி.ஐ ஃபண்டைவிட கூடுதல் வருமானம் கொடுக்க வாய்ப்புள்ளது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் ஐ.டி.எஃப்சி ஃபண்டின் வருமானம் கொல்லிக்கொள்ளும்படி இல்லை. இருப்பினும் இரண்டு ஆண்டுகள் கழித்து இது அதிக வருமானம் கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஏனென்றால் 83 சதவிகிதத்துக்குமேல் இந்த ஃபண்ட், மிட் அண்ட் ஸ்மால்கேப் பங்குகளில் முதலீடு செய்துள்ளது. டிஎஸ்பி ஹைபிரிட் ஃபண்டைத் தவிர்த்து மற்ற ஹைபிரிட் ஃபண்டுகளை குளோஸ் செய்யவும். இதன் மூலம் கிடைக்கும் பணத்தை எஸ்.பி.ஐ ஹைபிரிட் ஃபண்டுக்கு மாற்றவும்.”

எனக்கு வயது 39. திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. நான் பின்வரும் ஃபண்டுகளில் மொத்த முதலீடு செய்துள்ளேன். ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் (டிவிடெண்ட்) - ரூ.2 லட்சம். வீட்டுக் கடன் இ.எம்.ஐ செலுத்துவதற்காக 12% வருமானத்தை எதிர்பார்த்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதில் முதலீடு செய்துள்ளேன். ஹெச்.டி.எஃப்.சி ஹைபிரிட் ஈக்விட்டி ஃபண்ட் (டிவிடெண்ட்) - இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மொத்த முதலீடு செய்ததில் 6412.208 யூனிட்டுகள் உள்ளன.

ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டில் (குரோத்) மாதம் ரூ.4,000; சுந்தரம் மியூச்சுவல் ஃபண்டில் (டிவிடெண்ட்) மாதம் ரூ.4,000; ஃப்ராங்க்ளின் இந்தியா ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்டில் (டிவிடெண்ட்) மாதம் ரூ.2,000 என எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறேன். நான் செய்துள்ள முதலீடுகளை மாற்றியமைக்க வேண்டுமா?

- நடராஜன், மெயில் மூலமாக

“பங்கு சார்ந்த முதலீடுகளில் மாதம் தவறாமல் 12% டிவிடெண்ட் தருவது எளிதானதல்ல. பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களைப் பொறுத்தே வருமானம் கிடைக்கும். நீங்கள் ஒரு கடனை வாங்கிவிட்டு அதற்கான மாதத் தவணையை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து அதில் வரும் வருமானத்தை வைத்து அடைப்பது சாத்தியமல்ல. ஆனால், முதலீடு செய்து, மூன்று நான்கு ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் நீங்கள் 8% வரை மட்டுமே எடுத்தால், உங்கள் முதலீடு வளர்வதற்கும் வாய்ப்பிருக்கிறது. உங்களுடைய இப்போதைய அணுகுமுறை முற்றிலும் தவறானது. டிவிடெண்ட் ஆப்ஷனில் அவ்வப்போது பணம் கிடைக்கும் என்பதற்காக நிறைய முதலீட்டாளர்கள் அதைத் தேர்வு செய்வார்கள். பிறகு தாங்கள் செய்த முதலீட்டில் எதிர்பார்த்த வருமானம் வரவில்லை எனப் புலம்புவார்கள். டிவிடெண்ட் ஆப்ஷனில் முதலீடு செய்தால் உங்களுக்கு கொடுக்கக்கூடிய டிவிடெண்டில் 10% டாக்ஸ் பிடிக்கப்பட்டு மீதத் தொகைதான் கொடுக்கப்படுகிறது. இதனால் உங்களுக்குக் கிடைக்கும் வருமானம் குறைய வாய்ப்பிருக்கிறது.

உங்களின் எல்லா முதலீடுகளையும் டிவிடெண்ட் ஆப்ஷனிலிருந்து குரோத் ஆப்ஷனுக்கு மாற்றிவிடுங்கள். பிறகு இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து முதலீட்டிலிருந்து ஆண்டு ஒன்றுக்கு 8% அல்லது மாதம் 0.66% எடுத்து, உங்கள் வீட்டுக் கடனை அடைப்பதற்கு உபயோகப்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் கடன் சுமை குறையும். அதே நேரத்தில் உங்கள் முதலீடு வளர்வதற்கும் வாய்ப்பிருக்கிறது. இப்போது உங்களிடமிருக்கும் ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டுக்கு பதிலாக மிரே லார்ஜ்கேப் ஃபண்டில் முதலீடு செய்யவும். மற்ற முதலீடுகளை குரோத் ஆப்ஷனுக்கு மாற்றிவிட்டு முதலீட்டைத் தொடரவும்.”

என் முதலீட்டு முறை சரியா, எதிர்காலத்தையும் ஓய்வுக் காலத்தையும் கணக்கில் கொண்டு நான் மாற்றியமைக்க வேண்டுமா?

தொகுப்பு: கா.முத்துசூரியா

உங்கள் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை மாற்றியமைக்க வேண்டுமா? finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு நீங்கள் முதலீடு செய்யும் ஃபண்டுகள் குறித்த விவரங்களை அனுப்பவும்.