Published:Updated:

ஃபண்ட் கிளினிக் : பேலன்ஸ்டு போர்ட்ஃபோலியோ ஏன் அவசியம்?

முதலீட்டு ஆலோசனை

பிரீமியம் ஸ்டோரி

நான் 2015-ம் ஆண்டு முதல் மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் மாதந்தோறும் முதலீடு செய்துவருகிறேன். எனக்கு 4-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும், முதல் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் இருக்கிறார்கள். அவர்களின் மேற்படிப்பு மற்றும் திருமணத்துக்காக முதலீடு செய்துவருகிறேன். நான் முதலீடு செய்துவரும் ஃபண்டுகளின் செயல்பாடு சரியாக இருக்கின்றனவா?

என்னுடைய முதலீடுகள்... ஃப்ராங்க்ளின் இந்தியா டாக்ஸ் ஷீல்டு ரூ.1,000, ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா ஃபண்ட் ரூ.1,000, ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.1,000, ஐ.சி.ஐ.சி.ஐ லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.1,000.

- எஸ்.எஸ்.கார்த்திகேயன், மெயில் மூலமாக

“டாக்ஸ் சேவிங் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது அந்தக் காலகட்டத்தில் எந்த டைவர்சிஃபைடு இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் குறைவாக வருமானம் கொடுத்திருக்கிறதோ அதில் முதலீடு செய்ய வேண்டும். அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு அந்த ஃபண்ட் ஏற்றம் காண வாய்ப்பிருக்கிறதோ என்பதைக் கவனித்து முதலீடு செய்ய வேண்டும். இப்போது உங்கள் போர்ட்ஃபோலியோவில் மூன்று லார்ஜ்கேப் ஃபண்டுகள் உள்ளன. சந்தை ஏறும்போது மூன்றின் செயல்பாடுகளும் ஒரே மாதிரியாக இருக்கக்கூடும்.

ஃபண்ட் கிளினிக் : பேலன்ஸ்டு போர்ட்ஃபோலியோ ஏன் அவசியம்?

உங்களுக்கு வரிச் சேமிக்கும் தேவை இல்லையென்றால், லாக் இன் அல்லாத டைவர்சிஃபைடு ஃபண்டில் முதலீடு செய்யவும். இப்படிச் செய்யும்போது உங்கள் முதலீடு ஒட்டுமொத்தமாக சந்தையைச் சார்ந்திருக்கும். ரிஸ்க் குறைந்து, கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. உங்களுக்கான பரிந்துரை அட்டவணை-1-ல் கொடுக்கப்பட்டுள்ளது.”

ஃபண்ட் கிளினிக்
ஃபண்ட் கிளினிக்

என் வயது 39. என் மகனின் மேற்படிப்புக்காகவும், என் ஓய்வுக்காலத்துக்காகவும் கடந்த மூன்று வருட காலமாகப் பின்வரும் ஃபண்டுகளில் மாதந்தோறும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறேன். டி.எஸ்.பி ஃபோகஸ் ஃபண்ட் ரூ.1,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் வேல்யூ டிஸ்கவரி ஃபண்ட் ரூ.5,000, எல் அண்ட் டி இந்தியா வேல்யூ ஃபண்ட் ரூ.5,000, ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.2,000. இன்னும் 10 வருடங்கள் வரை முதலீட்டைத் தொடரவிருக்கிறேன். என் முதலீடுகள் சரியானவைதானா, அவற்றில் மாற்றம் செய்ய வேண்டுமா?

- கார்த்திக், மெயில் மூலமாக

“வேல்யூ ஃபண்ட் நீண்டகாலத்தில், குறைந்த ரிஸ்க்கில் நல்ல வருமானம் கொடுக்க வாய்ப்பிருக்கிறது. அதே நேரத்தில் இடைப்பட்ட காலத்தில் சரியாகச் செயல்படாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது. நீங்கள் நீண்டகால முதலீட்டாளர் எனில், வேல்யூ ஃபண்டில் முதலீடு செய்வது நல்லது. அதே சமயம் மொத்த முதலீட்டையும் வேல்யூ ஃபண்டில் முதலீடு செய்துவிடாமல், குரோத் ஃபண்டிலும் முதலீடு செய்தால் அது ஒரு பேலன்ஸ்டு போர்ட்ஃபோலியோவாக இருக்கும். உங்களுக்கான பரிந்துரை அட்டவணை-2-ல் கொடுக்கப்பட்டுள்ளது.”

வேல்யூ ஃபண்ட் நீண்டகாலத்தில், குறைந்த ரிஸ்க்கில் நல்ல வருமானம் கொடுக்க வாய்ப்பிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான் 2020-ம் ஆண்டில் ஓய்வு பெற்றுவிடுவேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி-யில் மாதந்தோறும் ரூ.50,000 முதலீடு செய்துவருகிறேன். ஒரு ஃபண்டில் ரூ.5,000 வீதம் 10 ஃபண்டுகளில் முதலீடு செய்துவருகிறேன். ஓய்வுபெறும் நிலையில் நான் செய்துவரும் முதலீடுகளில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா?

நான் முதலீடு செய்துவரும் ஃபண்டுகள்... ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட், ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட், டி.எஸ்.பி ஸ்மால்கேப் ஃபண்ட், ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. பேங்க்கிங் அண்ட் ஃபைனான்ஷியல் ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. புளூசிப் ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. வேல்யூ டிஸ்கவரி ஃபண்ட், நிப்பான் இந்தியா மல்டிகேப் ஃபண்ட், நிப்பான் இந்தியா பார்மா ஃபண்ட்.

- வெங்கடேசன்.கே, மெயில் மூலமாக

‘‘பொதுவாகவே மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோ என்பதே பேலன்ஸ்டாக இருக்க வேண்டும். நீண்டகாலத்துக்கு முதலீடு செய்யும்போது முதலீட்டைப் பரவலாக செய்திருக்க வேண்டும். உங்களின் இன்றைய போர்ட்ஃபோலியோவில் அதிக முதலீடு லார்ஜ்கேப்பில் உள்ளது. நீங்கள் ஓய்வுபெறும் நிலையில் இது ஓரளவு நல்ல முதலீடுதான். நீங்கள் ஐந்து முதல் பத்து ஆண்டுகாலம் இந்த முதலீட்டை வைத்திருக்க விரும்பினால் சில ஃபண்டுகளை மட்டும் மாற்றிக்கொள்ளவும். பங்குச் சந்தை சில நேரங்களில் அதிக வருமானம் கொடுக்கும்.

ஃபண்ட் கிளினிக்
ஃபண்ட் கிளினிக்

நீங்கள் ஓய்வு பெற்றிருக்கும் காரணத்தால், உங்களின் ஃபண்டுகளில் 20 சதவிகிதத்துக்கும் மேல் வருமானம் கிடைத்தால் உடனே லாபத்தை வெளியே எடுத்து, மீண்டும் அதே ஆண்டில் எஸ்.டி.பி முறையில் முதலீடு செய்யவும். இப்படிச் செய்வதால் சந்தையின் ஏற்ற இறக்கம் உங்கள் வருமானத்தை பாதிக்காமல் இருக்கும். முதலீட்டில் கிடைக்கும் லாபத்தை அனுபவிக்கும் வாய்ப்பும் உண்டாகும். உங்களின் போர்ட்ஃபோலியோவில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்டுக்கு பதிலாக எடெல்வைஸ் மல்டிகேப் ஃபண்டிலும், ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப் ஃபண்டுக்கு பதிலாக மோதிலால் ஹைபிரிட் ஃபண்டிலும், ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டுக்கு பதிலாக கோட்டக் எமெர்ஜிங் ஈக்விட்டி ஃபண்டிலும் முதலீட்டை மாற்றியமைத்துக்கொள்ளவும்.”

ஃபண்ட் கிளினிக் : பேலன்ஸ்டு போர்ட்ஃபோலியோ ஏன் அவசியம்?

என் வயது 31. 2015-ம் ஆண்டு முதல் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துவருகிறேன். என்னுடைய முதலீடுகள் பின்வருமாறு... ஆதித்ய பிர்லா சன் லைஃப் டாக்ஸ் ரிலீஃப் ரூ.3,000, ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஸ்மால்கேப் ரூ.4,000, ஆதித்ய பிர்லா சன் லைஃப் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் ரூ.4,000, ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஈக்விட்டி ஹைபிரிட் ஃபண்ட் ரூ.50,000 (மொத்த முதலீடு), ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் ரூ.2,000, ஹெச்.டி.எஃப்.சி ஹவுஸிங் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் ரூ.25,000 (மொத்த முதலீடு), நிப்பான் இந்தியா டாக்ஸ் சேவர் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் ரூ.2,000, நிப்பான் இந்தியா ஸ்மால்கேப் குரோத் ஃபண்ட் ரூ.3,000. நான் கூடுதலாக மாதம் ரூ8,000 முதலீடு செய்யவும் தயாராக இருக்கிறேன்.

என்னுடைய இந்த போர்ட்ஃபோலியோவில் மாற்றங்கள் ஏதும் செய்ய வேண்டுமா?

- தாமரைச் செல்வன், ஈரோடு

ஃபண்ட் கிளினிக் : பேலன்ஸ்டு போர்ட்ஃபோலியோ ஏன் அவசியம்?

“முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு பரவலான எண்ணம் இருக்கிறது. அதாவது, `லார்ஜ்கேப் ஃபண்டில் முதலீடு செய்யாமல் அதிக அளவில் மிட் அண்ட் ஸ்மால்கேப்பில் மட்டும் முதலீடு செய்தால் நீண்டகாலத்தில் அதிக வருமானம் பெறலாம்’ என்று நினைக்கிறார்கள். அடிக்கடி நாம் சொல்வதுதான் உங்களுக்கும் பொருந்தும். எந்த போர்ட்ஃபோலியோவும் பேலன்ஸ்டாக இருப்பதுதான் நல்லது. ஏனென்றால், சில காலக்கட்டங்களில் மிட் அண்ட் ஸ்மால்கேப் மோசமாக வருமானம் கொடுக்கும். அப்போது உங்களுக்கு பங்குச் சந்தை மேல் நம்பிக்கை இழப்பதற்கு சாதியக்கூறு இருக்கிறது. எனவே, முதலீடு செய்யும்போது லார்ஜ்கேப், மிட்கேப், ஸ்மால்கேப் அண்ட் ஹைபிரிட் ஃபண்ட் பிரித்து முதலீடு செய்வது நல்லது. நீங்கள் இன்னும் ரூ. 8,000 கூடுதலாக முதலீடு செய்ய இருப்பதால், ஏற்கெனவே செய்துவரும் முதலீட்டை அப்படியே தொடரவும். கூடுதலாக முதலீடு செய்யும் தொகையை மோதிலால் ஆஸ்வால் ஃபோகஸ்டு 25 ஃபண்டில் ரூ.5,000, எடெல்வைஸ் மல்டிகேப் ஃபண்டில் ரூ.3,000 எனப் பிரித்து முதலீடு செய்யவும்.”

தொகுப்பு: கா.முத்துசூரியா

உங்கள் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை மாற்றியமைக்க வேண்டுமா? finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு நீங்கள் முதலீடு செய்யும் ஃபண்டுகள் குறித்த விவரங்களை அனுப்பவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு