எனக்கு வயது 47. நான் 2011-ம் ஆண்டு முதல் மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் மாதந்தோறும் முதலீடு செய்துவருகிறேன். ஆதித்ய பிர்லா சன் லைஃப் மிட்கேப் ஃபண்ட் ரூ.2,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் வேல்யூ டிஸ்கவரி ஃபண்ட் ரூ.2,000, எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.5,000, ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.3,000, நிப்பான் இந்தியா மல்டிகேப் ஃபண்ட் ரூ.3,000, சுந்தரம் மிட்கேப் ஃபண்ட் ரூ.1,000. இன்னும் 10 வருடங்கள் வரை என்னுடைய முதலீட்டைத் தொடரவிருக்கிறேன். என் முதலீடுகள் சரியா, அவற்றில் மாற்றம் செய்ய வேண்டுமா?

- ஆர்.மோகன், மெயில் மூலமாக

“நீண்டகாலத்துக்கு முதலீடுகளைச் செய்யும்போது, உங்களுக்கு ரிஸ்க் எடுக்கும் வாய்ப்பு இருக்கும்பட்சத்தில் மிட்கேப் ஃபண்டுகளில் அதிக அளவில் முதலீட்டை வைத்துக்கொள்ளுங்கள். சுமார் 40% முதல் 50% வரை மிட்கேப் ஃபண்டுகளில் உங்கள் முதலீடு இருக்கும்பட்சத்தில் உங்களுக்கு அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், தற்போதைய உங்கள் போர்ட்ஃபோலியோவில் மிட்கேப்பில் 23% மட்டுமே முதலீடு இருக்கிறது. நீங்கள் முதலீடு செய்திருக்கும் மல்டிகேப் ஃபண்ட் இரண்டிலும் அதிக அளவில் லார்ஜ்கேப் எக்ஸ்போஷர் உள்ளது. இவ்வாறு இருக்கும்பட்சத்தில் உங்களுடைய வருமானம் குறைய வாய்ப்பிருக்கிறது.

அதேவேளையில், மிட்கேப்பைவிட ஸ்மால்கேப் அதிகம் உள்ளது. இப்படி இருந்தால், சந்தை உச்சத்தைத் தொடும்போது ஸ்மால்கேப் முதலீட்டை விற்க வேண்டியது கட்டாயமாகிறது. உங்கள் முதலீட்டில் சிறிய மாற்றங்களைச் செய்துகொள்ளவும். ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஈக்விட்டி ஃபண்டுக்கு பதிலாக, எடெல்வைஸ் மல்டிகேப் ஃபண்டில் முதலீடு செய்யவும். எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்டில் ரூ.5,000 முதலீடு செய்து வருகிறீர்கள். இனி ரூ.3,000 முதலீடு செய்யவும். மீதமிருக்கும் 2,000 ரூபாயை மோதிலால் ஆஸ்வால் மிட்கேப் 30 ஃபண்டில் முதலீடு செய்யவும்.”

எனக்கு வயது 31. நான் என்னுடைய குழந்தையின் படிப்பு மற்றும் திருமணத்துக்காக இப்போதிருந்தே முதலீடு செய்து வருகிறேன். நான் முதலீடு செய்துவரும் ஃபண்டுகள் சரியாக இருக்கின்றனவா எனச் சொல்லவும். ஐந்து ஃபண்டுகளில் (ஒவ்வொரு ஃபண்டிலும் ரூ.2,000) முதலீடு செய்துவருகிறேன்.

நான் செய்துவரும் ஃபண்டுகள்... ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட், கோட்டக் ஸ்டாண்டர்டு மல்டிகேப் ஃபண்ட், ஆக்ஸிஸ் மல்டிகேப் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், நிப்பான் இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட்.

- ஜெ.அசோக் குமார், நாமக்கல்

“இன்றைய சூழ்நிலையில், முதலீட்டாளர்கள் நேரடியாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது பெரும்பாலும் சரியான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கத் தவறிவிடுகிறார்கள். உதாரணமாக, உங்கள் போர்ட்ஃபோலியோவில் மூன்று மல்டிகேப் ஃபண்டுகள் உள்ளன. இவற்றிலுள்ள டாப் 10 பங்குகளை ஒப்பீடு செய்தால் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. இப்படிப்பட்ட நிலையில், உங்களுடைய வருமானத்திலும் பெரிதாக வேறுபாடு இருக்காது. ஃபண்ட் கேட்டகிரியை செபி வகைப்படுத்திய பிறகு, ஒரே தன்மையுடைய பல ஃபண்டுகளை வைத்திருந்தாலும் வருமானம் ஒரே மாதிரிதான் இருக்கும். ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டின் நிர்வகிக்கும் தொகை அதிகமானதிலிருந்து அதன் செயல்பாடு சற்றுக் குறைந்துவிட்டது.

உங்கள் போர்ட்ஃபோலியோவில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. ஆக்ஸிஸ் மல்டிகேப் ஃபண்டுக்கு பதிலாக எடெல்வைஸ் மிட்கேப் ஃபண்டில் முதலீடு செய்யவும். ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டுக்கு பதிலாக மோதிலால் ஆஸ்வால் மிட்கேப் ஃபண்டில் முதலீடு செய்யவும்.”

நான் ஒரு நீண்டகால முதலீட்டாளர். எனக்கு வயது 30. நான் எஸ்.ஐ.பி முறையில் மாதந்தோறும் சில ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறேன். என்னுடைய முதலீடுகள்... ஆதித்ய பிர்லா சன் லைஃப் டாக்ஸ் ரிலீஃப் 96 ஃபண்ட் ரூ.2,500, ஆக்ஸில் மல்டிகேப் ஃபண்ட் ரூ.3,500, எல் அண்ட் டி எமெர்ஜிங் பிசினஸஸ் ஃபண்ட் ரூ.5,000, ஐ.சி.ஐ.சி.ஐ புளூசிப் ஃபண்ட் ரூ.5,000, மிரே அஸெட் டாக்ஸ் சேவர் ஃபண்ட் ரூ.4,000.

- உமேஷ், திருப்பூர்

“உங்களுடைய போர்ட் ஃபோலியோவில் பெரிய மாறுதல் எதுவும் தேவை இல்லை. உங்களுக்கு வரிச் சலுகை தேவையில்லை என்றால், நீங்கள் செய்துவரும் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டை நிறுத்திவிட்டு, ஓப்பன் எண்டடு ஃபண்டுக்கு முதலீட்டை மாற்றம் செய்து கொள்ளவும். பொதுவாகவே வரிச் சலுகை தேவையில்லை என்றால் லாக்இன் உள்ள திட்டங்களில் முதலீடு செய்வதைத் தவிர்க்கலாம். நீங்கள் ஆதித்ய பிர்லா சன் லைஃப் டாக்ஸ் ரிலீஃப் 96 ஃபண்டுக்கு பதிலாக மிரே அஸெட் ஃபோகஸ்டு ஃபண்டிலும், மிரே அஸெட் டாக்ஸ் சேவர் ஃபண்டுக்கு பதிலாக மோதிலால் ஆஸ்வால் லார்ஜ் அண்ட் மல்டிகேப் ஃபண்டிலும் முதலீட்டை மாற்றிக்கொள்ளவும்.

முதலீட்டாளர்கள் நேரடியாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது சரியான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கத் தவறிவிடுகிறார்கள்!

நான் கடந்த எட்டு மாதங்களாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் எஸ்.ஐ.பி முறையில் மாதந்தோறும் முதலீடு செய்துவருகிறேன். என்னுடைய முதலீடுகள் சரியாக இருக்கின்றனவா என்று சொல்லவும். மாதம் 20,000 ரூபாயைக் கூடுதலாக முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறேன். என்னுடைய முதலீடுகள்... மிரே அஸெட் லார்ஜ்கேப் ஃபண்ட் ரூ.5,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் புளூசிப் ஃபண்ட் ரூ.5,000, மிரே அஸெட் ஹைபிரிட் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.5,000, ஹெச்.டி.எஃப்.சி ஹைபிரிட் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.5,000, கோட்டக் ஸ்டாண்டர்டு மல்டிகேப் ஃபண்ட் ரூ.5,000, மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ரூ.10,000.

- எட்வின், மெயில் மூலமாக

“நீங்கள் 52% லார்ஜ்கேப் ஃபண்டுகளிலும் 28% ஹைபிரிட் ஃபண்டுகளிலும் முதலீடு செய்திருக்கிறீர்கள். இப்படிப்பட்ட போர்ட் ஃபோலியோ, ஓய்வு பெற்றுவிட்டு பங்குச் சந்தையில் ஓரளவு கூடுதல் வருமானம் ஈட்ட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கானது. இன்னும் பல ஆண்டு காலத்துக்கு முதலீடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் உங்கள் அளவுக்கு கன்சர்வேட்டிவ்வாக இருந்தால் 10-11% மட்டுமே வருமானம் கிடைக்க வாய்ப்பு உண்டு. நீண்ட காலத்துக்கு நீங்கள் முதலீடு செய்யவிருக்கிறீர்கள். அந்த நிலையில், உங்களுடைய தற்போதைய போர்ட்ஃபோலியோ முற்றிலும் தவறானது. நீண்டகாலத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் 20% லார்ஜ்கேப்பிலும், 30% மல்டிகேப்பிலும், 40% மிட்கேப்பிலும், 10% ஸ்மால்கேப்பிலும் இருக்கும் வகையில் போர்ட்ஃபோலியோவை அமைத்துக் கொள்வதே சரி. நீங்கள் இன்னும் ரூ.20,000 கூடுதலாக முதலீடு செய்வதற்குத் தயாராக இருப்பதால், அதற்கும் சேர்த்து உங்களுக்கான பரிந்துரை அட்டவணையில் தரப்பட்டுள்ளது. முதலீடு செய்யும்போது அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு எந்த வகையான ஃபண்டுகள் நல்ல வருமானம் கொடுக்கும் என்று ஆராய்ந்து முதலீடு செய்ய வேண்டும்.”

தொகுப்பு: கா.முத்துசூரியா

உங்கள் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை மாற்றியமைக்க வேண்டுமா? finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு நீங்கள் முதலீடு செய்யும் ஃபண்டுகள் குறித்த விவரங்களை அனுப்பவும்.