Published:Updated:

ஃபண்ட் கிளினிக் : நீங்கள் எந்த வகை முதலீட்டாளர்?

ஃபண்ட் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபண்ட் கிளினிக்

போர்ட்ஃபோலியோ ஆலோசனை

நான் தற்போதுதான் ஓர் அரசு நிறுவனத்தில் தற்காலிகப் பணியிலிருந்து நிரந்தரப் பணிக்கு மாறியிருக்கிறேன். என் வயது 46. என் மகளுக்கு வயது 9 ஆகிறது.

என் மகளின் படிப்பு மற்றும் திருமணத்துக்காக கடந்த நான்கரை ஆண்டுகளாக எஸ்.பி.ஐ மேக்னம் ஈக்விட்டி இ.எஸ்.ஜி ஃபண்ட், எஸ்.பி.ஐ மேக்னம் மிட்கேப் ஃபண்டுகளில் தலா ரூ.1,000 வீதம் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறேன். கடந்த ஆறு மாதங்களாக ஆதித்ய பிர்லா சன்லைஃப் ஈக்விட்டி ஃபண்ட், யூ.டி.ஐ ஈக்விட்டி ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி டாப் 100 ஃபண்ட் தலா ரூ.1,000 வீதம் முதலீடு செய்துவருகிறேன். எனது முதலீடுகள் சரியாக இருக்கின்றனவா, ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா என்று சொல்லவும்.

- எஸ்.இளங்கோவன், மெயில் மூலமாக

ஃபண்ட் கிளினிக் : நீங்கள் எந்த வகை முதலீட்டாளர்?

“உங்களிடமிருக்கும் ஃபண்டுகளில் ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஈக்விட்டி ஃபண்ட் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி டாப் 100 ஃபண்ட் ஆகிய இரண்டு ஃபண்டுகளின் செயல்பாடுகளும் அவ்வளவு சரியாக இல்லை. இந்த இரண்டு ஃபண்டுகளில் ஹெச்.டி.எஃப்.சி டாப் 100 ஃபண்டை விற்றுவிடவும். இன்னொரு ஃபண்டின் செயல்பாடுகளைக் கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம்.”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

என் வயது 45. நான் சில மியூச்சுவல் ஃபண்டுகளில் தலா ரூ.1,000 வீதம் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறேன். இந்த ஃபண்டுகளில் தொடர்ந்து முதலீடு செய்யலாமா..?

நான் முதலீடு செய்துவரும் ஃபண்டுகள்... யூ.டி.ஐ நிஃப்டி இண்டெக்ஸ் ஃபண்ட், எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட், எஸ்.பி.ஐ மேக்னம் மல்டிகேப் ஃபண்ட், ஆக்ஸிஸ் ஷார்ட் டேர்ம் ஃபண்ட்.

- சிவராமகிருஷ்ணன், மெயில் மூலமாக

“உங்கள் போர்ட்ஃபோலியோவில் அஸெட் அலொகேஷன் முறையில் முதலீடு செய்ய நினைத்து, ஆக்ஸிஸ் ஷார்ட் டேர்ம் ஃபண்டில் முதலீடு செய்திருந்தால் அதை அப்படியே தொடரலாம். அப்படி இல்லாமல் ஏதோ ஒரு ஃபண்ட் தேவை என்று நினைத்து முதலீடு செய்திருந்தால், இந்த ஃபண்டையும், யூ.டி.ஐ இண்டெக்ஸ் ஃபண்டையும் நிறுத்திவிடவும்.

ஃபண்ட் கிளினிக்
ஃபண்ட் கிளினிக்

இப்போது சந்தை மிகவும் இறங்கியிருப்பதால், இந்த நேரத்தில் நீங்கள் மல்டிகேப் அல்லது மிட்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆக்ஸிஸ் ஃபோகஸ்டு 25 ஃபண்ட் மற்றும் கனரா ராபிகோ புளூசிப் ஃபண்டுகளில் நீங்கள் முதலீடு செய்ய ஆரம்பிக்கவும்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனக்கு 38 வயதாகிறது. நான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன். சொத்து உருவாக்கம் மற்றும் என் மகளின் எதிர்காலத்துக்காக பின்வரும் மியூச்சுவல் ஃபண்டுகளில் மாதந்தோறும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறேன். எனது நிதி இலக்கு ரூ.3 கோடி. மியூச்சுவல் ஃபண்டுகளில் என் தற்போதைய முதலீட்டை மதிப்பாய்வு செய்து, எனது இலக்கை அடையத் தேவையான மாற்றங்களைப் பரிந்துரைக்கவும்.

நான் செய்துவரும் முதலீடுகள்... ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.5,000, கனரா ராபிகோ எமெர்ஜிங் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.5,000, ஃப்ராங்க்ளின் பிரைமா ஃபண்ட் ரூ.2,500, ஃப்ராங்க்ளின் ஸ்மாலர் கம்பெனீஸ் ஃபண்ட் ரூ.2,500, ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனீட்டீஸ் ரெகுலர் ஃபண்ட் ரூ.5,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. மல்டிகேப் ஃபண்ட் ரூ.5,000, ஐ.டி.எஃப்.சி ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்ட் ரூ.3,000, ஐ.டி.எஃப்.சி ஸ்டெர்லிங் வேல்யூ ஃபண்ட் ரூ.2,000, இன்வெஸ்கோ இந்தியா மிட்கேப் ஃபண்ட் ரூ.5,000, இன்வெஸ்கோ இந்தியா மல்டிகேப் ஃபண்ட் ரூ.5,000, எல் அண்ட் டி மிட்கேப் ரெகுலர் ஃபண்ட் ரூ.5,000, மிரே அஸெட் லார்ஜ்கேப் ஃபண்ட் ரூ.5,000, நிப்பான் இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.5,000.

- சீனிவாசன், தஞ்சாவூர்

“உங்கள் போர்ட்ஃபோலியோவில் 13 ஃபண்டுகள் உள்ளன. இருந்தும் சரியான அஸெட் அலொகேஷன் இல்லாமல் இருக்கிறது.

முதலீடு செய்யும்போது நம் முதலீட்டை ஆண்டுக்கு ஒரு முறையாவது மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்தால் எந்த ஃபண்ட் சரியாகச் செயல்படவில்லையோ அதன்மீது கவனத்தைச் செலுத்த வாய்ப்புள்ளது. ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து அதன் செயல்பாடு சரியாக இல்லையென்றால், அதை நிறுத்திவிட்டு வேறு ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்ய வேண்டியது அவசியம்.

ஃபண்ட் கிளினிக்
ஃபண்ட் கிளினிக்

ஒரு போர்ட்ஃபோலியோவை கட்டமைக்கும்போது நம்மால் எவ்வளவு ரிஸ்க் எடுக்க முடியும், எத்தனை ஆண்டுகள் கழித்து நம் இலக்குகளை அடைய முடியும் என்று ஆராய்ந்து முதலீடு செய்ய வேண்டும். உதாரணமாக, ஐ.டி.எஃப்.சி ஸ்டெர்லிங் வேல்யூ ஃப்ராங்க்ளின் பிரைமா ஃபண்ட், எல் அண்ட் டி மிட்கேப் ஃபண்ட் போன்றவை சில ஆண்டுகளாகச் சரியான முறையில் செயல்படவில்லை. இருந்தும், இந்த ஃபண்டுகளில் நீங்கள் தொடர்ந்து முதலீடு செய்துவருகிறீர்கள்.

ஃபண்ட் கிளினிக் : நீங்கள் எந்த வகை முதலீட்டாளர்?

உங்கள் இலக்குகள் நீண்டகால அடிப்படையில் இருப்பதால், அதன் அடிப்படையில் பரிசீலனை செய்து, உங்களுக்கான பரிந்துரையை அட்டவணையில் கொடுத்திருக்கிறோம். சில ஆண்டுகள் கழித்து இந்த ஃபண்டுகள் சரியாகச் செயல்படவில்லையென்றால், கண்டிப்பாக மாற்ற வேண்டும். இந்த போர்ட்ஃபோலியோ இன்றைய காலகட்டத்துக்கேற்ப உருவாக்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் வைத்துக்கொள்வது மிக அவசியம்.”

நான் கடந்த எட்டு மாதங்களாக கனரா ராபிகோ எமெர்ஜிங் ஈக்விட்டி ஃபண்ட், எஸ்.ஐ.பி புளூசிப் ஃபண்ட், ஆக்ஸிஸ் மல்டிகேப் ஃபண்ட் போன்ற ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் தலா ரூ.2,000 முதலீடு செய்து வருகிறேன். மேலும், சுந்தரம் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட், டாடா மல்டி அஸெட் ஆப்பர்ச்சூனீட்டீஸ் ஃபண்ட் போன்ற ஃபண்டுகளில் கடந்த இரண்டு மாதங்களாக ரூ.10,000 முதலீடு செய்துவருகிறேன். அடுத்த 10 ஆண்டுகளை முதலீட்டு இலக்கு காலமாகக்கொண்டு என் முதலீடுகளைச் செய்துவருகிறேன். என் முதலீடுகளைத் தொடர்ந்து செய்யலாமா, மாற்றங்கள் ஏதும் செய்ய வேண்டுமா?

“நீங்கள் எந்த வகையான முதலீட்டாளர் என்பதை என்னால் ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடிகிறது. உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவை ஆராய்ந்து பார்க்கும்போது நீங்கள் ஒரு கன்சர்வேட்டிவ்வான முதலீட்டாளராகத் தெரிகிறீர்கள்.

முதலீடு
முதலீடு

நான் சொல்வது சரியெனில், இப்போது செய்யும் முதலீடுகளை அப்படியே தொடரவும். நீங்கள் கன்சர்வேட்டிவ் முதலீட்டாளர் இல்லையென்றால், ஓராண்டு கழித்து மிட்கேப் ஃபண்ட் ஒன்றில் முதலீட்டைத் தொடங்கவும்.

ஃபண்ட் கிளினிக்
ஃபண்ட் கிளினிக்

உங்களிடம் வேறு முதலீடுகளைத் தொடங்கக் கூடுதலாகப் பணம் இல்லையென்றால், உங்கள் போர்ட்ஃபோலியோவை இப்போது செய்யும் நிலையில் அப்படியே தொடரலாம். இப்போது நீங்கள் செய்துவரும் முதலீடுகள் சரியாகவே இருக்கின்றன.”

தொகுப்பு: கா.முத்துசூரியா

உங்கள் ஃபண்ட் போர்ட் ஃபோலியோவை மாற்றியமைக்க வேண்டுமா? finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு நீங்கள் முதலீடு செய்யும் ஃபண்டுகள் குறித்த விவரங்களை அனுப்பவும்