எனக்கு 15 வருடங்களில் ரூ.3 கோடி சேர்க்க வேண்டும் என்பது இலக்கு. 2016-ம் ஆண்டு முதல் நான் மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறேன். எனது முதலீட்டு போர்ட்ஃபோலியோ பின்வருமாறு...

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் ரூ.8,000, ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் ரூ.3,500, எல் அண்ட் டி இன்ஃப்ரா ஃபண்ட் ரூ.8,000, ஃப்ராங்க்ளின் இந்தியா ஈக்விட்டி ஃபண்ட் ரூ.4,000, டி.எஸ்.பி ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.7,000, மிரே அஸெட் லார்ஜ்கேப் ஃபண்ட் ரூ.3,000. தற்போது வரை முதலீட்டின் மூலம் உள்ள தொகை ரூ.23,68,531. எனது இலக்கை அடைய என் முதலீட்டில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா, முதலீட்டுத் தொகையை மேலும் அதிகரிக்க வேண்டுமா?

- கே.சுப்பிரமணியன், மெயில் மூலமாக

“எதிர்பார்க்கும் வருமானம், எவ்வளவு ரிஸ்க் எடுக்க முடியும் என்றெல்லாம் ஆராய்ந்து, அஸெட் அலொகேஷன்படி போர்ட்ஃபோலியோ உருவாக்குவது நல்லது. உங்கள் போர்ட்ஃபோலியோவில் ஐ.சி.ஐ.சி.ஐ பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் 24 சதவிகிதமும், தீம் ஃபண்ட் 24 சதவிகிதமும் உள்ளன. பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட 1-2% அதிக வருமானம் தர வாய்ப்புள்ளது. நீண்டகால முதலீடு என்ற நிலையில், இதற்கு பதிலாக ஹைபிரிட் ஃபண்டுகளில் முதலீடு செய்வது சிறந்தது. அதேபோல், இன்ஃப்ரா ஃபண்டுகளின் பொற்காலம் (Golden Period) முடிந்துவிட்டது. இன்றைய காலகட்டத்தில் மல்டிகேப் அல்லது ஸ்மால்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்வது சிறந்தது. உங்கள் போர்ட்ஃபோலியோவில் ஐ.சி.ஐ.சி.ஐ பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டுக்கு பதிலாக, மிரே அஸெட் ஹைபிரிட் ஃபண்டில் முதலீடு செய்யவும். அதேபோல், எல் அண்ட் டி இன்ஃப்ரா ஃபண்டுக்கு பதிலாக, எடெல்வைஸ் மல்டிகேப் ஃபண்டில் முதலீடு செய்யவும்.”

என் வயது 33. நான் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்குப் புதியவன். மிகச் சிறிய அளவிலான தொகையை முதலீடு செய்துவருகிறேன். மார்ச் 2019 முதல் முதலீடு செய்துவருகிறேன். இன்னும் 15 ஆண்டுகளுக்கு முதலீட்டைத் தொடர்ந்து செய்யத் திட்டம். நான் முதலீடு செய்துவரும் ஃபண்டுகள்... ஃப்ராங்க்ளின் இந்தியா ஸ்மாலர் கம்பெனீஸ் ஃபண்ட் ரூ.1,000. ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் ரூ.500, சுந்தரம் மிட்கேப் ஃபண்ட் ரூ.500.

- எம்.கவி பாரதி, மெயில் மூலமாக

“நீங்கள் சிறிய முதலீட்டாளராக இருக்கிறீர்கள். இப்போது நீங்கள் அதிக அளவில் ரிஸ்க் எடுக்கக்கூடிய ஃபண்டில் முதலீடு செய்து, மார்க்கெட் அதிக ஏற்ற இறக்கம் இருக்கும் நிலையிலிருந்தால், உங்களுக்குக் கிடைக்க வேண்டிய வருமானம் குறைய வாய்ப்புண்டு. லார்ஜ்கேப் மற்றும் மிட்கேப் ஃபண்டுகளில் நீண்டகாலத்தில் 2 - 3% வருமான வித்தியாசம் இருக்கும். நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்குப் புதியவராக இருப்பதால், ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஃபண்டை நிறுத்திவிடுங்கள். அதற்கு பதிலாக, மோதிலால் ஃபோகஸ்டு 25 ஃபண்டில் முதலீடு செய்யுங்கள்.’’

“நான் மாதம் ரூ.64,000 சம்பாதிக்கிறேன். வயது 26. கடந்த இரண்டு ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி-யில் முதலீடு செய்துவருகிறேன். பின்வரும் ஃபண்டுகளில் தலா ரூ.1,000 முதலீடு செய்கிறேன். நான் முதலீட்டுக்குத் தேர்வு செய்துள்ள ஃபண்டுகள் சரியானவையா?

எனது முதலீடுகள்... ஆதித்ய பிர்லா சன் லைஃப் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட், டி.எஸ்.பி ஈக்விட்டி ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா ஃபண்ட், ஃப்ராங்க்ளின் இந்தியா ஈக்விட்டி ஃபண்ட், ஃப்ராங்க்ளின் இந்தியா ஸ்மாலர் கம்பெனீஸ் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி கேப்பிட்டல் பில்டர் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி ஈக்விட்டி ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி டாப் 100 ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ புளூசிப் ஃபண்ட், ஐ.டி.எஃப்.சி டாக்ஸ் அட்வான்டேஜ் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட்.

- சித்தார்த்.ஜி, மும்பை

“நீங்கள் 13,000 ரூபாய் முதலீட்டுக்கு 13 ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறீர்கள். அதிக ஃபண்டுகளில் முதலீடு செய்வது டைவர்சிஃபிகேஷன் என நீங்கள் நினைத்தால் அது சரியானதல்ல. இரண்டு லார்ஜ்கேப், இரண்டு மல்டிகேப், இரண்டு மிட்கேப், இரண்டு ஸ்மால்கேப் ஃபண்ட் என்ற எண்ணிக்கைக்கு உட்பட்ட அளவில் நீங்கள் முதலீடு செய்தாலே போதுமானது. அத்துடன் உங்கள் போர்ட் ஃபோலியோவை ஆண்டுக்கு ஒரு முறை ரிவ்யூ செய்து எந்த ஃபண்ட் சரியாகச் செயல்படவில்லையோ, அதற்கான காரணம் அறிந்து அதைத் தொடர வேண்டுமா, நிறுத்த வேண்டுமா என்று முடிவெடுப்பது அவசியம். உங்களுக்கான பரிந்துரை அட்டவணையில்...’’

எனக்கு வயது 39. நான் எனது குழந்தைகளின் படிப்பு மற்றும் திருமணத்துக்காக தலா ரூ.3,000 கடந்த இரண்டு வருடங்களாக பின்வரும் ஃபண்டுகளில் முதலீடு செய்துவருகிறேன். நான் முதலீடு செய்துவரும் ஃபண்டுகள் சரியானவையா?

எனது முதலீடுகள்... ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி பண்ட், பி.என்.பி பரிபாஸ் மிட்கேப் ஃபண்ட், நிப்பான் இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட், ஃப்ராங்க்ளின் இந்தியா ஸ்மாலர் கம்பெனீஸ் ஃபண்ட், ஐ.டி.எஃப்.சி ஸ்டெர்லிங் வேல்யூ ஃபண்ட், பிரின்சிபல் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் ஆகியவற்றில் மாதம் ரூ.3,000 வீதம் கடந்த இரண்டு வருடங்களாக முதலீடு செய்துவருகிறேன்.

- ஏ.ஆர்.ஸ்ரீநிவாஸ், கன்னியாகுமரி

“உங்களுடைய ஃபண்டிலுள்ள பி.என்.பி பரிபாஸ் மிட்கேப் ஃபண்ட் இந்த ஆண்டு நல்ல வருமானம் கொடுத்துள்ளது. இருந்தாலும் தொடர்ச்சியாக இது நல்ல செயல்பாட்டைக் கொண்டிருப்பதில்லை. அதேபோல, ஃப்ராங்க்ளின் இந்தியா ஸ்மால்கேப் மற்றும் ஐ.டி.எஃப்.சி ஸ்டெர்லிங் வேல்யூ ஃபண்டுகளும்கூடத் தொடர்ச்சியாக நல்ல செயல்பாட்டைக் கொண்டிருப்பதில்லை. எனவே, இந்த மூன்று ஃபண்டுகளிலும் முதலீடு செய்வதை நிறுத்திவிட்டு, அவற்றுக்கு பதிலாக மோதிலால் ஆஸ்வால் மிட்கேப் 30 ஃபண்ட், எடெல்வைஸ் ஸ்மால்கேப் ஃபண்ட், டி.எஸ்.பி ஈக்விட்டி ஆப்பர்ச்சூனிட்டீஸ் போன்ற ஃபண்டுகளில் முதலீடு செய்யவும்.”

எதிர்பார்க்கும் வருமானம், எவ்வளவு ரிஸ்க் எடுக்க முடியும் என்றெல்லாம் ஆராய்ந்து, அஸெட் அலொகேஷன்படி முதலீடு செய்வது நல்லது.

நான் வீடு வாங்க ஐந்து ஆண்டுகளுக்கு எஸ்.ஐ.பி முறையில் மாதம் ரூ.1,000 முதலீடு செய்ய ஆலோசனை சொல்லவும்.

- ஆர்.வைஷ்ணவி தேவி, மெயில் மூலமாக

“வாழ்க்கையில் வீடு அத்தியாவசியம்தான். ஆனால், எந்த ஊரில் வீடு வாங்கப் போகிறீர்கள், அந்த வீட்டில் நீங்கள் வசிப்பீர்களா இல்லையா என்பதையெல்லாம் ஆராய்ந்த பிறகுதான் வீடு வாங்கும் முடிவை எடுக்க வேண்டும். இப்போது நீங்கள் மாதம் ரூ.1,000 சேர்த்து வந்தால், ஐந்து ஆண்டுகள் கழித்து 12% வருமான அடிப்படையில் ரூ.82,000 கிடைக்கும். இந்தப் பணத்தை வைத்து, நீங்கள் பத்திரப்பதிவுகூட செய்ய முடியாது. முதலில் மாதம் 1,000 ரூபாயை யூ.டி.ஐ ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்து வாருங்கள். முடிந்த அளவுக்கு முதலீட்டை படிப்படியாக அதிகரியுங்கள். ஐந்து வருடங்கள் கழித்து சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்கலாம்.’’

தொகுப்பு: கா.முத்துசூரியா

உங்கள் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை மாற்றியமைக்க வேண்டுமா? finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு நீங்கள் முதலீடு செய்யும் ஃபண்டுகள் குறித்த விவரங்களை அனுப்பவும்.