Published:Updated:

ஃபண்ட் கிளினிக் : அதிக வருமானத்துக்கு ஏற்ற முதலீடு! - ஃபண்ட் ஆலோசனை

ஃபண்ட் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபண்ட் கிளினிக்

முதலீடுகளை அஸெட் அலொகேஷன் முறைப்படி அமைத்துக்கொண்டால் நீண்டகாலத்துக்கு, பதற்றமில்லாமல் வருமானம் ஈட்ட வாய்ப்பாக அமையும்.

என் வயது 37. நான் கடந்த மூன்று வருடங்களாக, மாதம் 21,000 ரூபாயை பின்வரும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துவருகிறேன்.

என்னுடைய முதலீடுகள்... பராக் பரிக் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.4,000, டாடா ஈக்விட்டி பி.இ ஃபண்ட் ரூ.3,000, மிரே அஸெட் லார்ஜ்கேப் ஃபண்ட் ரூ.3,000, டி.எஸ்.பி ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.3,000, எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.4,000, கோட்டக் எமெர்ஜிங் மிட்கேப் ஃபண்ட் ரூ.4,000. என்னுடைய இலக்கு ரூ.2.5 கோடியை இன்னும் 20 வருடங்களில் சேர்க்க வேண்டும். இதற்கு இந்த முதலீடைத் தொடரலாமா அல்லது போர்ட்ஃபோலியோவை மாற்றலாமா?

- பிரபு.பா, பெங்களூரு

“உங்களிடமுள்ள டாடா ஈக்விட்டி பி.இ ஃபண்ட் தவிர, மற்ற முதலீடுகளை அப்படியே தொடரலாம். நீங்கள் இப்போது முதலீடு செய்துவரும் 21,000 ரூபாயைத் தொடர்ந்து முதலீடு செய்துவந்தால், இன்னும் 20 ஆண்டுகளில் உங்கள் இலக்கான ரூ.2.5 கோடியைத் தொட இயலும். தொடர்ந்து உங்கள் போர்ட்ஃபோலியோ 11% வருமானம் கொடுத்தால், உங்கள் இலக்கை நீங்கள் அடைய முடியும்.

ஃபண்ட் கிளினிக் : அதிக வருமானத்துக்கு ஏற்ற முதலீடு! - ஃபண்ட் ஆலோசனை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

டாடா ஈக்விட்டி பி.இ ஈக்விட்டி ஃபண்டின் செயல்பாடு லார்ஜ்கேப் ஃபண்டைப்போல இருக்கிறது. மார்க்கெட் இறங்கும்போது, இதுவும் அதேபோல் இறங்குகிறது. இது ஒரு வேல்யூ ஃபண்ட்போல் இருந்தாலும், அதன் செயல்பாடு கடந்த மூன்று ஆண்டுகளாகத் திருப்திகரமாக இல்லை. எனவே, இதை நிறுத்திவிட்டு, மோதிலால் ஆஸ்வால் ஃபோகஸ்டு 25 ஃபண்டில் முதலீடு செய்யவும்.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

12 வருடங்களில் என்னுடைய இலக்கு 50 லட்சம் ரூபாய் சேர்க்க வேண்டும் என்பதே. நான் கடந்த ஒரு வருடமாக பின்வரும் மூன்று ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறேன். அவை... ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா ஃபண்ட் ரூ.3,000, மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் ரூ. 4,000, மிரே அஸெட் டாக்ஸ் சேவர் ஃபண்ட் ரூ.2,000.

இவற்றுடன் சிறந்த ஸ்மால்கேப் ஃபண்ட் ஒன்றைப் பரிந்துரைக்கவும். அதில் ரூ.1,000 முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளேன். ஆண்டுதோறும் 10% முதலீட்டை அதிகரித்தால், என் இலக்கை அடைய இயலுமா?

- முத்து, செங்கல்பட்டு

“உங்கள் இலக்கான ரூ.50 லட்சத்தை அடைய வேண்டுமென்றால், மாதந்தோறும் நீங்கள் ரூ.16,000 முதலீடு செய்ய வேண்டும். இந்த இலக்கை அடைய வேண்டுமென்றால், உங்கள் போர்ட்ஃபோலியோ 11 சதவிகிதம் அளவுக்கு வருமானம் கொடுக்க வேண்டும்.

முதலீடு
முதலீடு

நீங்கள் தற்போது முதலீடு செய்துவரும் ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா ஃபண்டை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்டில் முதலீடு செய்யவும்.

புதிதாக ரூ.1,000 முதலீடு செய்ய இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அந்தத் தொகையை எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்டில் முதலீடு செய்யவும். நீங்கள் உங்கள் முதலீடான 10,000 ரூபாயை ஆண்டொன்றுக்கு 10% உயர்த்திக்கொண்டே வரும்பட்சத்தில், உங்கள் இலக்கை எளிதாக அடைய முடியும்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான் எஸ்.பி.ஐ வங்கியில் பணிபுரிகிறேன். நீண்டகால அளவில் அதிக ரிஸ்க் எடுக்கத் தயாராக உள்ளேன். 18 ஆண்டுகளுக்குமேல் முதலீட்டைத் தொடர உள்ளேன். கடந்த 30 மாதங்களாக எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.3,000, எஸ்.பி.ஐ ஈக்விட்டி ஹைபிரிட் ஃபண்ட் ரூ.1,000, எஸ்.பி.ஐ மல்டிகேப் ஃபண்ட் ரூ.1,000 என எஸ்.ஐ.பி முறையில் மாதந்தோறும் முதலீடு செய்துவருகிறேன். இந்த மாதத்திலிருந்து எஸ்.பி.ஐ ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்டில் ரூ.2,000 முதலீட்டை ஆரம்பித்துள்ளேன். இன்னும் கூடுதலாக ரூ.7,000 முதலீடு செய்யத் தயாராக உள்ளேன். இவற்றில் எஸ்.பி.ஐ மல்டிகேப் ஃபண்டை நிறுத்திவிட்டு, எஸ்.பி.ஐ ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்யலாமா... வேறு ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா..?

- ராமசாமி, சேலம்

“நீங்கள் அதிக ரிஸ்க் எடுப்பதற்குத் தயாராக இருப்பதால், தற்போது முதலீடு செய்துவரும் எஸ்.பி.ஐ மல்டிகேப் ஃபண்டுக்குப் பதிலாக எஸ்.பி.ஐ ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்யலாம்.

முதலீடு
முதலீடு

நீங்கள் இன்னும் ரூ.7,000 முதலீடு செய்யத் தயாராக இருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள். அதில் 3,500 ரூபாயை ஒரு லார்ஜ்கேப் ஃபண்டில் முதலீடு செய்யவும். அதற்கு நீங்கள் கனரா ராபிகோ புளூசிப் ஃபண்டைத் தேர்வு செய்யலாம். மேலும், 3,500 ரூபாயை கோட்டக் எமெர்ஜிங் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்யவும்.”

ஃபண்ட் கிளினிக் : அதிக வருமானத்துக்கு ஏற்ற முதலீடு! - ஃபண்ட் ஆலோசனை

என் வயது 48. நான் 2017-ம் ஆண்டு முதல் பின்வரும் ஃபண்டுகளில் மாதந்தோரும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறேன். நான் செய்துவரும் முதலீடுகளில் ஏதேனும் மாற்றம் அவசியமா?

என் முதலீடுகள்... ஹெச்.டி.எஃப்.சி டாப் 100 ஃபண்ட் ரூ.1,000, ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் ரூ.2,000, ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.2,500, சுந்தரம் செலக்ட் ஃபோகஸ் மிட்கேப் ஃபண்ட் ரூ.2,500, ஃப்ராங்க்ளின் ஸ்மாலர் கம்பெனீஸ் ரூ.2,500, டி.எஸ்.பி பிளாக்ராக் மைக்ரோகேப் ஃபண்ட் ரூ.2,500, நிப்பான் ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.2,500, நிப்பான் பார்மா ஃபண்ட் ரூ.2,500, நிப்பான் பேங்க்கிங் ஃபண்ட் ரூ.2,500, யூ.டி.ஐ மிட்கேப் ஃபண்ட் ரூ. 2,500. என் மனைவி செய்துவரும் முதலீடுகள்... ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.10,000, நிப்பான் ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.10,000, எல் அண்ட் டி எமெர்ஜிங் பிசினஸ் ஃபண்ட் ரூ.10,000.

- ஜி.சண்முகமணி, மெயில் மூலமாக

“நீண்டகால அடிப்படையில் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்தால், அது உங்களுக்கு அதிக வருமானம் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. அதேவேளையில், மார்க்கெட் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் இறங்குமுகமாக இருந்தால், உங்கள் முதலீட்டின் மீது நீங்கள் நம்பிக்கை இழக்கக்கூடும். அப்போது முதலீட்டிலிருந்து வெளியே வருவதற்கு வாய்ப்பு அதிகம். எனவே, உங்கள் முதலீடுகளை அஸெட் அலொகேஷன் முறைக்கு உட்பட்டு அமைத்துக்கொள்ளும்பட்சத்தில் மட்டுமே நீண்டகாலத்துக்கு, பதற்றமில்லாமல் வருமானம் ஈட்டுவதற்கு வாய்ப்பாக அமையும்.

முதலீடு
முதலீடு

அத்துடன் ஏதாவது ஒரு காரணத்தால் மார்க்கெட் இறங்கினால், குறுகியகாலத்துக்கு நீங்கள் முதலீட்டை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்பிருக்கும். எனவே, எதிர்ப்பக்கத்தில் தரப்பட்டுள்ள அட்டவணையின்படி, உங்கள் போர்ட்ஃபோலியோவை அமைத்துக்கொள்வது நல்லது.

முதலீடு
முதலீடு

இப்போதுள்ள ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் ஃபண்டுகளை மார்க்கெட் உச்சத்தைத் தொடும்போது விற்றுவிட்டு, இங்கே தரப்பட்டுள்ள பரிந்துரை ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்யவும்.”

தொகுப்பு: கா.முத்துசூரியா

உங்கள் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை மாற்றியமைக்க வேண்டுமா? finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு நீங்கள் முதலீடு செய்யும் ஃபண்டுகள் குறித்த விவரங்களை அனுப்பவும்.