Published:Updated:

ஃபண்ட் கிளினிக் : சந்தை இறக்கம்... முதலீட்டைத் தொடரலாமா?

ஃபண்ட் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபண்ட் கிளினிக்

முதலீட்டு ஆலோசனை

எனக்கு வயது 50. என் மகனுக்கு 17 வயது. என் மகனின் மேற்படிப்புக்காகவும், திருமணத்துக்காகவும் பின்வரும் ஃபண்டுகளில் மாதந்தோறும் ரூ.5,000 முதலீடு செய்துவருகிறேன். முதலீடு செய்து வரும் ஃபண்டுகள்... ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. புளூசிப் ஃபண்ட், ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட், ஆக்ஸிஸ் மல்டிகேப் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி ஹைபிரிட் ஈக்விட்டி ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்ட். சந்தை இறங்கியிருக்கும் இந்த நேரத்தில், இந்த ஃபண்டுகளில் முதலீட்டைத் தொடரலாமா அல்லது மாற்றங்கள் ஏதாவது செய்ய வேண்டுமா?

- சாருமதி, மெயில் மூலமாக

ஃபண்ட் கிளினிக் : சந்தை இறக்கம்... முதலீட்டைத் தொடரலாமா?

“பங்குச் சந்தை இறங்கும்போது முதலீட்டைத் தொடரலாமா அல்லது தவிர்க்கலாமா என்ற எண்ணம் பரவலாக எல்லோருக்கும் இருக்கும். எப்போது ஒரு பொருள் கடந்த மூன்று மாதங்களைவிட இப்போது விலை குறைவாகக் கிடைக்கிறதோ அப்போது அந்தப் பொருளை வாங்கத்தானே செய்வோம். முதலீடும் அப்படித்தான். சந்தை இறக்கத்தில் குறைந்த விலையில் அதிக யூனிட்டுகள் கிடைக்கும். எனவே, கண்டிப்பாக முதலீட்டைத் தொடர வேண்டும். மார்க்கெட் இறங்குமுகமாக இருக்கும்போது செய்யும் எஸ்.ஐ.பி அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடர்ந்து செய்யுங்கள். உங்களிடமிருக்கும் ஃபண்டுகளில் ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப், ஹெச்.டி.எஃப்.சி ஹைபிரிட், ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் போன்ற ஃபண்டுகளை நிறுத்திவிட்டு, அவற்றுக்கு பதிலாக கோட்டக் எமெர்ஜிங் ஈக்விட்டி ஃபண்ட், மோதிலால் ஆஸ்வால் ஹைபிரிட் ஃபண்ட், எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட் போன்ற ஃபண்டுகளில் முதலீட்டைத் தொடரவும்.”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

எனக்கு 34 வயது. என் 7 வயது மகனின் மேற்படிப்புக்காக 2015-ம் ஆண்டு முதல் மாதம் ரூ.3,000 ஆதித்ய பிர்லா எம்.என்.சி ஃபண்டிலும், 4 வயது மகனின் மேற்படிப்புக்காக 2016-ம் ஆண்டு முதல் ரூ.3,000 ஃப்ராங்க்ளின் இந்தியா ஸ்மாலர் கம்பெனீஸ் ஃபண்டிலும் முதலீடு செய்துவருகிறேன். 12-14% வளர்ச்சியை எதிர்பார்க்கிறேன். இந்த ஃபண்டுகளில் தொடர்ந்து முதலீடு செய்யலாமா... இதே நோக்கத்துக்கு இன்னும் அதிகமாக முதலீடு செய்ய வேறு சில ஃபண்டுகளைப் பரிந்துரை செய்யவும்.

- ரா.முத்துக்குமார், சென்னை-82.

முதலீடு
முதலீடு

“உங்கள் மகன்களின் மேற்படிப்பு என்பது நீண்டகால இலக்காக இருப்பதால், ஆதித்ய பிர்லா எம்.என்.சி ஃபண்டில் தொடரவும். இந்த வகை ஃபண்டுகள் பங்குச் சந்தைகள் உலகம் முழுக்க இறங்கும்போது அதிக இறக்கத்துக்கு உள்ளாகும் வாய்ப்புள்ளது. மற்ற காலகட்டத்தில் ஒரு பேலன்ஸ்டு ஃபண்டாக இருக்கும். ஃப்ராங்க்ளின் இந்தியா ஸ்மால்கேப் கம்பெனீஸ் ஃபண்ட் நன்றாகச் செயல்பாட்டில் இருந்து வந்தது. ஆனால், கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக அதன் செயல்பாட்டில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. எனவே, அதை நிறுத்திவிட்டு ஆக்ஸிஸ் ஸ்மால்கேப் ஃபண்டில் முதலீடு செய்யவும். கூடுதலாக முதலீடு செய்யும்போது கனரா ராபிகோ புளூசிப் ஃபண்டிலும், எடெல்வைஸ் மல்டிகேப் ஃபண்டிலும் முதலீடு செய்யவும்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான் கடந்த மூன்று ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி-யில் முதலீடு செய்துவருகிறேன். என் முதலீடுகள்...

நிப்பான் இந்தியா பார்மா ஃபண்ட் ரூ.1,000, ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.2,000, ஃப்ராங்க்ளின் இந்தியா ஈக்விட்டி ஃபண்ட் ரூ.3,000, சுந்தரம் செலக்ட் மிட்கேப் ஃபண்ட் ரூ.4,000. என் முதலீட்டில் மாற்றம் ஏதும் அவசியமா..?

- பிரபு, சென்னை

“உங்கள் முதலீட்டில் இரண்டு மாறுதல்கள் செய்ய வேண்டும். ஃப்ராங்க்ளின் இந்தியா ஈக்விட்டி ஃபண்ட் மல்டிகேப் ஃபண்டாக இருந்தாலும், அதைவிட சில ஃபண்டுகள் நன்றாகச் செயல்பட்டுவருகின்றன. அதேபோல் சுந்தரம் மிட்கேப் ஃபண்ட் சந்தை இறங்குமுகமாக இருக்கும்போது அதிகமாக இறக்கம் காண்கிறது. நீங்கள் கன்சர்வேட்டிவ் இன்வெஸ்டார் என்பதால் இந்த ஃபண்டை நிறுத்திவிடவும்.

முதலீடு
முதலீடு

உங்களால் மார்க்கெட் அதிக ஏற்றத்தில் இருக்கும்போது பிராஃபிட் புக் செய்ய முடியுமென்றால் மட்டும் இதில் தொடரவும். இல்லையெனில் நிறுத்திவிடவும். நிறுத்தப்பட்ட ஃபண்டுகளுக்கு பதிலாக ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்ட், கனரா ராபிகோ எமெர்ஜிங் ஈக்விட்டி ஃபண்ட் போன்ற ஃபண்டுகளில் முதலீடு செய்யவும்.”

மாதந்தோறும் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி-யில் ஐந்து ஃபண்டுகளில் ரூ.10,000 முதலீடு செய்துவருகிறேன். முதலீடு செய்யும் ஃபண்டுகள்...

ஃப்ராங்க்ளின் இந்தியா ஸ்மாலர் கம்பெனீஸ் ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ வேல்யூ டிஸ்கவரி ஃபண்ட், டாடா பி.இ வேல்யூ ஃபண்ட், எல் அண்ட் டி மிட்கேப் ஃபண்ட், டி.எஸ்.பி பிளாக்ராக் மைக்ரோகேப் ஃபண்ட். 10 ஆண்டுகளுக்கு முதலீட்டைத் தொடரவிருக்கிறேன். என் முதலீட்டில் மாறுதல் செய்ய வேண்டுமா..?

- வி.ரவிச்சந்திரன், மெயில் மூலமாக

“உங்கள் முதலீட்டு இலக்கு 10 ஆண்டுகள் என்கிறபோது ஐ.சி.ஐ.சி.ஐ வேல்யூ டிஸ்கவரி ஃபண்ட் மற்றும் டாடா பி.இ ஃபண்ட் ஆகிய இரண்டிலும் முதலீடு செய்வது ஒரு கன்சர்வேட்டிவ் அப்ரோச். வேல்யூ ஃபண்டில் முதலீடு செய்தால் மிகவும் பொறுமைசாலியாக இருக்க வேண்டும்.

முதலீடு
முதலீடு

ஏனென்றால் சில ஆண்டுகள் மார்க்கெட் ஏறுமுகமாக இருக்கும்போது, அவை மிகவும் தடுமாறும். எனவே, நீங்கள் டாடா பி.இ ஃபண்டை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்டில் முதலீடு செய்யவும். அதேபோல் ஃப்ராங்க்ளின் இந்தியா ஸ்மால்கேப் ஃபண்டை நிறுத்திவிட்டு, எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்டில் முதலீடு செய்ய முயலவும்.”

எனக்கு வயது 70. என் பேரன்களின் உயர் கல்விக்காக மாதம் ரூ.6,000 எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறேன். முதலீட்டை ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. இன்னும் ஆறு ஆண்டுகள் இலக்காக வைத்திருக்கிறேன். என் முதலீடுகள்...

ஐ.டி.எஃப்.சி ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்ட் ரூ.2,000, நிப்பான் இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.1,,000, சுந்தரம் மிட்கேப் ஃபண்ட் ரூ.2,000, ஹெச்.டி.எஃப்.சி கோல்டு ஃபண்ட் ரூ.1,000, ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.2,000. இந்த ஃபண்டுகளில் தொடர்ந்து முதலீடு செய்யலாமா... மாற்றங்கள் செய்ய வேண்டுமா... சேமிப்புக் கணக்கில் தேவைக்கு அதிகமாக உள்ள பணத்தை லிக்விட் ஃபண்டில் போடலாமா?

- க.சு.மணியன், மதுரை

“ஐ.டி.எஃப்.சி ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்டின் செயல்பாடு கடந்த ஓராண்டு காலமாக சுமாராகத்தான் இருக்கிறது. இதற்குக் காரணம் ரிலையன்ஸ் ஸ்டாக்கில் முதலீடு செய்ததுதான். கன்சிஸ்டன்ட் இல்லாமல் இருப்பதால் இதை நிறுத்திவிட்டு, இதற்கு பதிலாக நீங்கள் கனரா ராபிகோ எமெர்ஜிங் ஈக்விட்டி ஃபண்ட் அல்லது கோட்டக் ஸ்டாண்டர்டு மல்டிகேப் ஃபண்டில் முதலீடு செய்யவும். மீதமுள்ள ஃபண்டுகளை அப்படியே தொடரவும்.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

சுந்தரம் மிட்கேப் ஃபண்டைத் தொடர்ந்து கவனித்துவரவும். அடுத்த ஒன்றிரண்டு ஆண்டுகளில் மார்க்கெட் சூழ்நிலை மாறும்போது நல்ல வருமானம் கொடுக்கவில்லை என்றால் விற்றுவிட்டு ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்டுக்கு முதலீட்டை மாற்றிவிடவும்.”

தொகுப்பு: கா.முத்துசூரியா

உங்கள் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை மாற்றியமைக்க வேண்டுமா? finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு நீங்கள் முதலீடு செய்யும் ஃபண்டுகள் குறித்த விவரங்களை அனுப்பவும்.