Published:Updated:

ஃபண்ட் கிளினிக் : இலக்கை அடைய வைக்கும் மாற்றங்கள்!

ஃபண்ட் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
ஃபண்ட் கிளினிக்

முதலீட்டு ஆலோசனை

ஃபண்ட் கிளினிக் : இலக்கை அடைய வைக்கும் மாற்றங்கள்!

முதலீட்டு ஆலோசனை

Published:Updated:
ஃபண்ட் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
ஃபண்ட் கிளினிக்

என் மகன் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி-யில் கடந்த ஏப்ரல் 2018 முதல் முதலீடு செய்துவருகிறார். அவருடைய ஃபண்ட் போர்ட்ஃபோலியோவில் பின்வரும் ஃபண்டுகளை வைத்திருக்கிறார். ஆதித்ய பிர்லா சன் லைஃப் டாக்ஸ் ரிலீஃப் 96 ஃபண்ட் ரூ.4,000, ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.5,000, ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.5,000, ஹெச்.டி.எஃப்.சி டாக்ஸ் சேவர் ரெகுலர் பிளான் ரூ.4,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மிட்கேப் ஃபண்ட் ரூ.5,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.4,000, நிப்பான் இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.3,000. இவற்றில் மாற்றம் ஏதும் செய்ய வேண்டுமா?

- ஏ.துலுக்கானம், மெயில் மூலமாக

ஃபண்ட் கிளினிக் : இலக்கை  அடைய வைக்கும் மாற்றங்கள்!

“உங்கள் முதலீட்டில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஹெச்.டி.எஃப்.சி டாக்ஸ் சேவர் ஃபண்ட் பல ஆண்டுகளாக சரியாகச் செயல்படவில்லை. நிப்பான் இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட் கடந்த ஆறு மாதங்களில் ஓரளவு வருமானம் கொடுத்திருந்தாலும், நீண்டகால அடிப்படையில் நிலைத்தன்மை இல்லை. ஆதித்ய பிர்லா ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட் கடந்த ஐந்து ஆண்டுகளாக முதல் 25 இடங்களில்கூட வரவில்லை. எனவே, இந்த மூன்று ஃபண்டுகளுக்கு பதிலாக ஆக்ஸில் புளூசிப், கோட்டக் டாக்ஸ் சேவர், எடெல்வைஸ் மிட்கேப் போன்ற ஃபண்டுகளில் முதலீட்டை மாற்றிக்கொள்ளவும்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நான் ஓய்வு பெற்றுவிட்டேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் சில ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறேன். நான் முதலீடு செய்துவரும் ஃபண்டுகள் சரியானவையா எனச் சொல்லவும். நான் முதலீடு செய்துவரும் ஃபண்டுகள்....

ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப் ரூ.1,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. வேல்யூ டிஸ்கவரி ஃபண்ட் ரூ.1,000, ரிலையன்ஸ் ஈக்விட்டி ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் ரூ.1,000, பிர்லா சன்லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.1,000, ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் ரூ.1,000.

- எஸ்.ஜெயலட்சுமி, பழநி

ஃபண்ட் கிளினிக்
ஃபண்ட் கிளினிக்

“ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப் ஃபண்டின் செயல்பாடு கடந்த சில ஆண்டுகளாகச் சரியாக இல்லை. வேல்யூ ஃபண்ட் நீண்டகால அடிப்படையில் நன்றாகச் செயல்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால், இன்றைய பொருளாதாரத்தை மனதில்கொண்டு குரோத் ஃபண்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்ட வாய்ப்புள்ளது. ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டின் நிர்வகிக்கும் சொத்து பெருகிய பிறகு அதன் செயல்பாடு ஏற்றப்போக்கில் இல்லை. எனவே, இந்த மூன்று ஃபண்டுகளுக்கு பதிலாக ஆக்ஸிஸ் புளூசிப், ஐ.சி.ஐ.சி.ஐ ஸ்மால்கேப், மிரே அஸெட் ஃபோகஸ்டு போன்ற ஃபண்டுகளில் முதலீடு செய்யவும்.”

இன்றைய சூழலில் குரோத் ஃபண்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்ட வாய்ப்புள்ளது!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த செப்டம்பர் 2018 முதல் நான் சில ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறேன். எனக்கு 32 வயது. 20 ஆண்டுகள் கழித்து ரூ.2 கோடி அளவுக்கு பணம் சேர்க்க நான் செய்துவரும் முதலீடுகள் உதவுமா..? என் முதலீடுகள்... மிரே அஸெட் லார்ஜ்கேப் ஃபண்ட் ரூ.2,000, எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.2,000, மிரே அஸெட் டாக்ஸ் சேவர் ஃபண்ட் ரூ.2,000, மிரே அஸெட் ஃபோகஸ்டு ஃபண்ட் ரூ.1,000, கோட்டக் மல்டிகேப் ஃபண்ட் ரூ.1,500, ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஃபண்ட் ரூ.3,000.

- எஸ்.ஸ்ரீதர், தஞ்சாவூர்-1

ஃபண்ட் கிளினிக்
ஃபண்ட் கிளினிக்

“நீங்கள் இப்போது முதலீடு செய்துவரும் ரூ.11,500-க்கு 12% வருமானம் என்ற அடிப்படையில் கணக்கிட்டால் 20 ஆண்டுகள் கழித்து அதன் மதிப்பு ரூ.1.13 கோடியாக இருக்கும். நீங்கள் ரூ.2 கோடி முதலீட்டை அடைய மாதம் ரூ.20,000 முதலீடு செய்ய வேண்டும். அதற்கு இப்போது சாத்தியக்கூறு இல்லையென்றால், இப்போது செய்யும் முதலீட்டுடன் ஆண்டொன்றுக்கு 9% உயர்த்திக்கொண்டே வந்தால், ரூ.2 கோடி இலக்கை அடையலாம். இலக்குகளை வைத்து முதலீடு செய்யும்போது, சந்தை ஏற்றத்தில் அதிக வருமானம் கிடைத்தால் பிராஃபிட் புக் செய்து மறுமுதலீடு செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் கூடுதலாக 1 - 2% வருமானம் கிடைக்கலாம். இப்போது செய்துவரும் முதலீட்டை தொடரவும்.”

நான் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவருகிறேன். வயது 40. மாதச் சம்பளம் ரூ.80,000. நான் 2027-ம் ஆண்டில் ரூ.1 கோடி சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன் பின்வரும் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறேன்.

ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.3,000 (அக். 2015 முதல்), நிப்பான் இந்தியா டாக்ஸ் சேவர் ஃபண்ட் ரூ.3,000 (ஜன. 2017 முதல்), மிரே அஸெட் டாக்ஸ் சேவர் ஃபண்ட் ரூ.3,000 (ஏப். 2019 முதல்), ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் ரூ.3,000 (ஆக. 2017 முதல்), எல் அண்ட் டி மிட்கேப் ஃபண்ட் ரூ.3,000 (மார்ச் 2018 முதல்), ஆதித்ய பிர்லா ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.3,000 (மார்ச் 2018 முதல்), ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் புளூசிப் ஃபண்ட் ரூ.3,000 (2019 முதல்), மிரே அஸெட் எமர்ஜிங் புளூசிப் ஃபண்ட் ரூ.3,000 (டிச. 2018 முதல்) மற்றும் எஸ்.பி.ஐ டாக்ஸ் சேவர், பி.என்.பி பரிபாஸ் டாக்ஸ் சேவர் ஃபண்டுகளில் மூன்று ஆண்டுகள் முதலீடு செய்துவிட்டு எஸ்.ஐ.பி-யை நிறுத்திவிட்டேன். இந்த இரண்டு ஃபண்டுகளிலும் தலா ரூ.76,000 உள்ளது. இந்தத் தொகையை வேறு ஃபண்டுக்கு மாற்ற வேண்டுமா?

- வேல்முருகன், தூத்துக்குடி

ஃபண்ட் கிளினிக்
ஃபண்ட் கிளினிக்

“உங்கள் இலக்கான ரூ.1 கோடியை இப்போது செய்துவரும் முதலீட்டின் மூலம் அடைவது சிரமம். இப்போது நீங்கள் செய்துவரும் மாதாந்தர முதலீடு ரூ.24,000. முதலீட்டில் இதுவரையிலான இருப்பு ரூ.6.03 லட்சம். அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு 12% வருமானம் என்ற அடிப்படையில் கணக்கிட்டால் ரூ.54 லட்சம் மட்டுமே கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

உங்களுடைய வருமானம் உயர உயர மாத முதலீட்டை அதிகரித்து வாருங்கள். உங்கள் இலக்கை ஓரளவு நெருங்க வாய்ப்பு அமையக்கூடும்.

நீங்கள் 2027-ம் ஆண்டில் ரூ.1 கோடி இலக்கை அடைய வேண்டுமென்றால் ஒரு மாதத்துக்கு ரூ.55,000 முதலீடு செய்ய வேண்டும். அப்படியானால் உங்களுடைய மாத வருமானத்தில் பெரும் பகுதியை இதற்காக ஒதுக்க வேண்டியிருக்கும். அது சாத்தியமில்லை. எனவே, உங்களுடைய வருமானம் உயர உயர மாத முதலீட்டை முடிந்த அளவுக்கு அதிகரித்து வாருங்கள். உங்கள் இலக்கை ஓரளவு நெருங்க வாய்ப்பு அமையக்கூடும்.

உங்கள் முதலீட்டிலுள்ள நிப்பான் இந்தியா டாக்ஸ் சேவர், ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ், எல் அண்ட் டி மிட்கேப், ஆதித்ய பிர்லா ஸ்மால்கேப் ஆகிய நான்கு ஃபண்டுகளையும் நிறுத்திவிடுங்கள். அவற்றுக்கு பதிலாக கோட்டக் டாக்ஸ் சேவர், எடெல்வைஸ் மிட்கேப், ஆக்ஸிஸ் மிட்கேப், கனரா ராபிகோ ஸ்மால்கேப் போன்ற ஃபண்டுகளில் முதலீட்டைத் தொடரவும். இதுவரை செய்திருக்கும் முதலீட்டை எக்ஸிட் லோடு முடிந்த பிறகு பரிந்துரை செய்யப்பட்டுள்ள ஃபண்டுகளில் ஒரே தவணையில் முதலீடு செய்யவும். எஸ்.பி.ஐ டாக்ஸ் சேவர் மற்றும் பி.என்.பி டாக்ஸ் சேவர் ஃபண்டுகளில் லாக்இன் பீரியட் முடிந்திருக்கும்பட்சத்தில் அவற்றை மிரே அஸெட் எமர்ஜிங் புளூசிப் ஃபண்டில் முதலீடு செய்யவும்.”

தொகுப்பு: கா.முத்துசூரியா

உங்கள் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை மாற்றியமைக்க வேண்டுமா? finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு நீங்கள் முதலீடு செய்யும் ஃபண்டுகள் குறித்த விவரங்களை அனுப்பவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism