சுரேஷ் பார்த்தசாரதி, நிதி ஆலோசகர், myassetsconsolidation.com.

நான் ஓர் அரசு ஊழியர். என் வயது 40. மாதச் சம்பளம் ரூ.45,000. ஹெச்.டி.எஃப்.சி ஈக்விட்டி ஃபண்டில் 2012-ம் ஆண்டு முதல் ரூ.1,000, ஃப்ராங்க்ளின் இந்தியா டாக்ஸ்ஷீல்டு ஃபண்டில் 2013-ம் ஆண்டு முதல் ரூ.1,000, ஹெச்.டி.எஃப்.சி சில்ட்ரன்ஸ் கிஃப்ட் ஃபண்டில் 2015-ம் ஆண்டு முதல் ரூ.1,000, ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஃபண்டில் ரூ.1,000, ஆக்ஸிஸ் லாங்க் டேர்ம் ஃபண்டில் 2016-ம் ஆண்டு முதல் ரூ.2,000 மாதந்தோறும் முதலீடு செய்துவருகிறேன். மேலும், மாதம் ரூ.3,000 கூடுதலாக முதலீடு செய்யத் திட்டமிட்டிருக்கிறேன். நான் முதலீடு செய்துவரும் ஃபண்டுகள் சரியானவையா என்று சொல்லவும். கூடுதல் முதலீட்டுக்கு உரிய ஆலோசனை சொல்லவும்.

- பன்னீர் செல்வம், மெயில் மூலமாக

“பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் தாங்கள் செய்யும் முதலீட்டை அவ்வப்போது கவனிப்பதில்லை. அதனால்தான் தாங்கள் முதலீடு செய்துவரும் ஃபண்டின் செயல்பாடு சரியாக இல்லாவிட்டாலும், அந்த ஃபண்டிலேயே முதலீட்டைத் தொடர்ந்துவருகிறார்கள். நீங்களும் அவர்களில் ஒருவராகத்தான் இருக்கிறீர்கள். ஹெச்.டி.எஃப்.சி ஈக்விட்டி ஃபண்ட் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே சரியான வருமானம் தரவில்லை. நீங்கள் அதை கவனிக்கத் தவறிவிட்டீர்கள். அதேபோல், ஃப்ராங்க்ளின் டாக்ஸ்ஷீல்டு ஃபண்டின் செயல்பாடும் சரியாக இல்லை. ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஃபண்டின் செயல்பாடு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நன்றாகத்தான் இருந்தது. ஆனால், அதன் நிர்வகிக்கும் தொகை பெருகிய பிறகு அதன் செயல்பாடும் குறைந்துவிட்டது. எனவே, இந்த மூன்று ஃபண்டுகளையும் நிறுத்திவிட்டு, டி.எஸ்.பி ஈக்விட்டி ஃபண்ட், மோதிலால் ஆஸ்வால் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட், எடெல்வைஸ் மிட்கேப் ஃபண்ட் போன்ற ஃபண்டுகளில் முதலீட்டை மாற்றிக்கொள்ளவும். நீங்கள் கூடுதலாக முதலீடு செய்திருக்கும் 3,000 ரூபாயையும் பரிந்துரை செய்திருக்கும் ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்யவும்.”

கடந்த 10, 15 நாள்களாக சந்தை இறக்கத்தில் உள்ளது. எனவே, நிறைய குரோத் ஃபண்டுகள் அட்ராக்டிவ்வாக உள்ளன!

நீண்டகால நோக்கில் மூன்று வருடங்களாக மாதந்தோறும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருகிறேன். முதலீடு செய்துவரும் ஃபண்டுகள்...

ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் ரூ.2,000, மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் ரூ.2,000, மோதிலால் மல்டிகேப் 35 ஃபண்ட் ரூ.2,000, எல் அண்ட் டி எமெர்ஜிங் பிசினஸ் ஃபண்ட் ரூ.2,000. ஹெச்.டி.எஃப்.சி ஃபண்ட் சரியாகச் செயல்படவில்லை என்று நினைக்கிறேன். என் போர்ட் ஃபோலியாவை மாற்றியமைக்க விரும்புகிறேன். ஏற்கெனவே இருக்கும் பண்டுகளில் முதலீட்டை அதிகரிக்கலாமா அல்லது வேறு மிட்கேப் ஃபண்டில் முதலீட்டை ஆரம்பிக்கலாமா?

- பிரசாந்த், மதுரை-4

“ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் சரியாகச் செயல்படவில்லை என்று கூறியிருக்கிறீர்கள். அந்த முதலீட்டை நிறுத்திவிட்டு, ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்டில் முதலீடு செய்யவும். எல் அண்ட் டி எமெர்ஜிங் பிசினஸ் ஃபண்டின் செயல்பாடு கடந்த ஆண்டு சரியில்லை. இன்னும் மூன்று அல்லது ஆறு மாதங்கள் அதன் செயல்பாட்டைக் கூர்ந்து கவனியுங்கள். அதில் பெரிய மாற்றம் ஏற்படவில்லையென்றால் அதை நிறுத்திவிட்டு, எடெல்வைஸ் ஸ்மால்கேப் ஃபண்டில் முதலீடு செய்யவும். மற்ற ஃபண்டுகளில் முதலீட்டைத் தொடரவும்.”

நான் 2018 ஜூலை முதல் நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்டில் ரூ.2,000, ஆதித்ய பிர்லா சன் லைஃப் டாக்ஸ் ரிலீஃப் 96 ஃபண்டில் ரூ.2,000 மாதந்தோறும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருகிறேன். என்னால் ஆண்டுதோறும் 20% அளவுக்கு முதலீட்டுத் தொகையை அதிகரிக்க முடியும். இந்த நிலையில் முதலீட்டைத் தொடர்ந்தால், அடுத்த 15 ஆண்டுகளில் ரூ.1 கோடி சேர்க்க முடியுமா... அதற்கு போர்ட்ஃபோலி யோவில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா?

- விமல்குமார், கோயம்புத்தூர்-2

“நீங்கள் 15 ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய் என்ற இலக்கை அடைய வேண்டுமென்றால் மாதந்தோறும் ரூ.7,700 முதலீடு செய்ய வேண்டும்; அத்துடன் ஓராண்டுக்கு 20% முதலீட்டை உயர்த்த வேண்டும். உங்களின் இந்த இலக்கை அடைய உங்களுக்கு 12% வருமானம் கிடைக்க வேண்டும். நீங்கள் இப்போது மாதந்தோறும் முதலீடு செய்துவரும் 4,000 ரூபாயுடன் ஆண்டுக்கு 20% முதலீட்டுத் தொகையை உயர்த்தி முதலீடு செய்தால், 12% வருமான அடிப்படையில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் காலகட்டத்தில் ரூ.52.6 லட்சம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. உங்கள் முதலீட்டிலுள்ள டாக்ஸ் ரிலீஃப் 96 ஃபண்ட் தொடர்ச்சியாக நல்ல செயல்பாட்டைக் கொண்டிருப்பதால், தொடர்ந்து முதலீடு செய்யவும். நிப்பான் இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட் முதலீட்டை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்டில் முதலீடு செய்யவும்.”

ஃப்ராங்க்ளின் இந்தியா ஹை குரோத் கம்பெனீஸ் ஃபண்ட் 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் சிறப்பான செயல்பாட்டைக் கொண்டிருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக இதன் செயல்பாட்டில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது!

நான் பிசினஸ் செய்து வருகிறேன். நான் மிரே அஸெட் டாக்ஸ் சேவர் ஃபண்ட் (ரூ.3,000), மோதிலால் ஆஸ்வால் மல்டிகேப் 35 ஃபண்ட் (ரூ.1,000), எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட் (ரூ.1,000), ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட் (ரூ.1,000)ஆகியவற்றில் மாதந்தோறும் முதலீடு செய்துவருகிறேன். என் முதலீட்டில் மாற்றம் செய்ய வேண்டுமா..?

- விக்னேஷ், நாமக்கல்

“உங்கள் போர்ட்ஃபோலியோவில் மிட்கேப் எக்ஸ்போஷர் இல்லை. மிரே அஸெட் டாக்ஸ் சேவர் ஃபண்ட் அதிக அளவில் லார்ஜ் கேப்பிலும், 35% மட்டுமே மிட்கேப்பிலும் முதலீட்டை வைத்திருக்கிறது. எனவே, இந்த ஃபண்டுக்கு பதிலாக வரும் நிதியாண்டில் கோட்டக் டாக்ஸ் சேவர் ஃபண்டில் முதலீட்டை மாற்றி அமைக்கவும். மீதமுள்ள ஃபண்டுகளை அப்படியே தொடரவும்.”

நான் கடந்த மூன்று ஆண்டுகளாக எஸ்.ஐ.பி முறையில் ஃப்ராங்க்ளின் இந்தியா ஹை குரோத் கம்பெனீஸ் ஃபண்ட், டி.எஸ்.பி பிளாக்ராக் மைக்ரோகேப் ஃபண்ட், எஸ்.பி.ஐ புளூசிப் ரெகுலர் பிளான், கோட்டக் எமெர்ஜிங் ஈக்விட்டி ஸ்கீம், ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. வேல்யூ டிஸ்கவரி ஃபண்ட், கனரா ராபிகோ எமெர்ஜிங் ஈக்விட்டீஸ் ஃபண்ட் ஆகியவற்றில் மாதந்தோறும் தலா ரூ.1,000 வீதம் ரூ.6,000 முதலீடு செய்துவருகிறேன். மூன்று வயதாகும் என் மகனின் மேற்படிப்புக்காக முதலீடு செய்துவரும் என் முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா..?

- வே.சம்பத்குமார், புவனகிரி

“ஃப்ராங்க்ளின் இந்தியா ஹை குரோத் கம்பெனீஸ் ஃபண்ட் 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் சிறப்பான செயல்பாட்டைக் கொண்டிருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக இதன் செயல்பாட்டில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஃபண்டை நிறுத்திவிட்டு, இதற்கு பதிலாக யூ.டி.ஐ ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்யவும். கடந்த 10, 15 நாள்களாக சந்தை இறக்கத்தில் உள்ளது. எனவே, நிறைய குரோத் ஃபண்டுகள் அட்ராக்டிவ்வாக உள்ளன. ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. வேல்யூ டிஸ்கவரி ஃபண்டுக்கு பதிலாக ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்டில் முதலீடு செய்யவும். இதர ஃபண்டுகளில் முதலீட்டைத் தொடர்ந்து செய்துவரவும்.”

தொகுப்பு: கா.முத்துசூரியா

உங்கள் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை மாற்றியமைக்க வேண்டுமா? finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு நீங்கள் முதலீடு செய்யும் ஃபண்டுகள் குறித்த விவரங்களை அனுப்பவும்.