என் வயது 38. நான் நீண்டகால அடிப்படையில் ஆதித்ய பிர்லா சன் லைஃப் டாக்ஸ் ரிலீஃப் 96 ஃபண்ட் ரூ.3,000, மிரே அஸெட் எமர்ஜிங் புளூசிப் ஃபண்ட் ரூ.5,000, எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.5,000, சுந்தரம் சர்வீசஸ் ஃபண்ட் ரூ.2,000 போன்றவற்றில் எஸ்.ஐ.பி முறையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முதலிடு செய்துவருகிறேன். மொத்த முதலீடாக சுந்தரம் மிட்கேப் ஃபண்டில் ரூ.75,000, எல் அண்ட் டி மிட்கேப் ஃபண்டில் ரூ.90,000, மிரே அஸெட் லார்ஜ்கேப் ஃபண்டில் ரூ.1,00,000, ஃப்ராங்க்ளின் ஸ்மால்கேப் ஃபண்டில் ரூ.75,000 வைத்திருக்கிறேன். என் முதலீட்டில் ஏதேனும் மாறுதல் தேவையா?
- தண்டபாணி, மெயில் மூலமாக

“ஃப்ராங்க்ளின் இந்தியா ஸ்மால்கேப் ஃபண்டின் செயல்பாடு கடந்த சில ஆண்டுகளாக மந்தமாக இருக்கிறது. அதன் சொத்து மதிப்பு அதிகமானதால் அப்படி இருக்கலாம். பரவலாக ஸ்மால்கேப்பில் சொத்து மதிப்பு அதிகமானால், முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறைவதற்கு சாத்தியக்கூறு உண்டு. எனவே, நீங்கள் அதிலுள்ள முதலீட்டை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக ஐ.சி.ஐ.சி.ஐ புரூ ஸ்மால்கேப் அல்லது இன்வெஸ்கோ இந்தியா ஸ்மால்கேப் ஃபண்டில் முதலீடு செய்யவும். மற்ற முதலீடுகளை அப்படியே தொடரவும்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஎன் மாதச் சம்பளம் ரூ.70,000. இரண்டு வயதாகும் என் மகளின் உயர் கல்விக்காக மாதந்தோறும் 13,000 ரூபாயை பின்வரும் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறேன். எனது இலக்கு 15 வருடங்களில் சுமார் ரூ.50 லட்சம் சேர்க்க வேண்டும் என்து. என் முதலீடுகள்... ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட் ரூ.2,000, டாடா ஈக்விட்டி பி/இ ஃபண்ட் ரூ.1,500, எல் அண்ட் டி மிட்கேப் ஃபண்ட் ரூ.2,000, ஹெச்.டி.எஃப்.சி கேப்பிட்டல் பில்டர் ஃபண்ட் ரூ.2,000, கோட்டக் ஸ்டாண்டர்டு மல்டிகேப் ஃபண்ட் ரூ.1,500, ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.2,000 மற்றும் ஆதித்ய பிர்லா ஈக்விட்டி அட்வான்டேஜ் ஃபண்ட் ரூ.2,000. இவை தவிர, என் மனைவி ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டில் மொத்த முதலீடாக ரூ.10 லட்சத்தை 2018 ஜனவரியில் முதலீடு செய்திருக்கிறார். இவற்றில் மாற்றம் ஏதாவது செய்ய வேண்டுமா?
- மகேஷ், சென்னை -15

“நீங்கள் மாதந் தோறும் ரூ.13,000 முதலீடு செய்து வருகிறீர்கள். இதன் மூலம் ஆண்டுக்கு 12% வருமானம் என்ற அடிப்படையில், ரூ.65 லட்சம் சேர்க்க முடியும். அதற்கேற்ற படி உங்கள் போர்ட் ஃபோலியோவை அமைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் முதலீடு செய்துவரும் ஹெச்.டி.எஃப்.சி கேப்பிட்டல் பில்டர் ஃபண்டுக்கு பதிலாக, மிரே அஸெட் லார்ஜ் கேப் ஃபண்டிலும், டாடா ஈக்விட்டி பி/இ ஃபண்டுக்கு பதிலாக, மோதிலால் ஆஸ்வால் லார்ஜ்கேப் அண்ட் மிட்கேப் ஃபண்டிலும், ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்டுக்கு பதிலாக எடெல்வைஸ் ஸ்மால்கேப் ஃபண்டிலும் உங்கள் முதலீட்டை மாற்றிக்கொள்ளவும். ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் நல்ல வருமானம் தருகிறது. இருந்தாலும், அதிலுள்ள ரூ.10 லட்சத்தில் ரூ.5 லட்சத்தை வெளியே எடுத்து, நீங்கள் முதலீடு செய்துவரும் ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்யவும்.’’
உங்களால் எவ்வளவு ரிஸ்க் எடுக்க முடியும் என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும்!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என் வயது 37. இரண்டு குழந்தைகள் (வயது 6 மற்றும் 8). மாத வருமானம் ரூ.42,000. நான் 2020 ஜனவரி மாதம் முதல் ஹெச்.டி.எஃப்.சி டாப் 100 ஃபண்ட், டி.எஸ்.பி ஈக்விட்டி டைரக்ட் பிளான், எஸ்.பி.ஐ மேக்னம் மல்டிகேப் ஃபண்ட், ஆக்ஸிஸ் ஸ்மால்கேப் ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் லிக்விட் ஃபண்ட் போன்ற திட்டங்களில் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்துக்கு ரூ.2,000 வீதம் எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்துவருகிறேன். இலக்கு 15 ஆண்டுகள். எனது முதலீட்டில் மாற்றம் செய்ய வேண்டுமா?
- வைஷ்ணவி, ஸ்ரீவில்லிபுத்தூர்.
“நீங்கள் முதலீடு செய்துவரும் ஹெச்.டி.எஃப்.சி டாப் 100 லார்ஜ்கேப் ஃபண்ட் மிகவும் பின்தங்கியுள்ளது. அதன் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. எனவே, அதற்கு பதிலாக மிரே ஃபோக்கஸ்டு ஃபண்டில் முதலீடு செய்யவும். நீங்கள் ஐ.சி.ஐ.சி.ஐ லிக்விட் ஃபண்டில் அவசர காலத் தேவைக்காக முதலீடு செய்திருந்தால் அதைத் தொடரவும். இல்லையென்றால், மோதிலால் ஆஸ்வால் ஹைபிரிட் ஃபண்டில் முதலீட்டை மாற்றிக்கொள்ளவும்.”
கடந்த ஆறு மாதங்களாக ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. மல்டிகேப் ஃபண்ட், எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட் போன்றவற்றில் தலா ரூ.1,000 வீதம் முதலீடு செய்து வருகிறேன். இப்போது என் சேமிப்பை அதிகரிக்க விரும்புகிறேன். என்னுடைய 20 வருட இலக்கு ரூ.1 கோடி. இதற்கு நான் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும்?
- ராம், மெயில் மூலமாக

“மாதம் ரூ.10,000 முதலீடு செய்துவந்தால், 20 ஆண்டுகளில் உங்களுடைய இலக்கான ரூ.1 கோடியை அடைய முடியும் அதற்கு நீங்கள் 12% வருமானம் கிடைக்கும் வகையிலான போர்ட்ஃபோலியோவை அமைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் போர்ட் ஃபோலியோவிலிருக்கும் ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக இன்வெஸ்கோ மிட்கேப் ஃபண்டில் முதலீடு செய்யவும். மீதமுள்ள இரண்டு ஃபண்டுகளில் செய்யும் முதலீட்டைத் தொடரவும்’’.
என் வயது 45. என் 7 மற்றும் 8-ம் வகுப்பு பயிலும் இரு மகன்களின் உயர்கல்விக்கும், என்னுடைய எதிர்காலத்தேவைகளுக்கும் 2019 ஜனவரி முதல் மாதந்தோறும் தலா 5,000 வீதம் ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட், ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்ட், மிரே அஸெட் லார்ஜ்கேப் ஃபண்ட், மிரே அஸெட் எமர்ஜிங் புளூசிப் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்துவருகிறேன். நான் தேர்வு செய்திருக்கும் ஃபண்டுகளில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா..? மேலும், மாதம் ரூ.10,000 முதலீடு செய்ய இரண்டு ஃபண்டுகளைப் பரிந்துரைக்கவும்.
- சதீஷ் சிங், மெயில் மூலமாக
“உங்களிடமிருக்கும் ஃபண்டுகளில் ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்ட் முதலீட்டை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக எடெல்வைஸ் மிட்கேப் ஃபண்டில் முதலீடு செய்யவும். மேலும், கூடுதலாக முதலீடு செய்யவிருக்கும் 10,000 ரூபாயை மோதிலால் ஆஸ்வால் மிட்கேப் ஃபண்டிலும் மற்றும் மிரே அஸெட் ஹைபிரிட் ஃபண்டிலும் தலா ரூ.5,000 முதலீடு செய்யவும்.”
உங்கள் முதலீடு சரியான வருமானம் தரவில்லையெனில், அதை எப்படி மாற்றுவது என்பதையும் தெரிந்துவைத்திருக்க வேண்டியது அவசியம்!
எனக்கு 37 வயது. என்னுடைய 60-வது வயதில் எனக்கு ரூ.1 கோடி பணம் வேண்டும். அப்படியென்றால் நான் மாதந்தோறும் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், எதில் முதலீடு செய்ய வேண்டும்?
- ஸ்ரீதர் ராமசாமி, மெயில் மூலமாக
“உங்களால் எவ்வளவு ரிஸ்க் எடுக்க முடியும், உங்கள் முதலீட்டை உங்களால் எந்த அளவுக்கு கண்காணிக்க முடியும் என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். உங்கள் முதலீடு சரியான வருமானம் தரவில்லையெனில், அதை எப்படி மாற்றுவது என்பதையும் தெரிந்துவைத்திருக்க வேண்டியது அவசியம்.
நீங்கள் மாதம் ரூ.6,850 முதலீடு செய்தால், அடுத்த 23 ஆண்டுகளில் ரூ.1 கோடியை அடைய முடியும். அதற்கு, நீங்கள் ஆண்டுக்கு 12% வருமானம் கிடைக்கும்படி முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் 10% வருமானம் எதிர்பார்த்தால், மாதம் ஒன்றுக்கு ரூ,9,400 முதலீடு செய்ய வேண்டும்.”
தொகுப்பு: கா.முத்துசூரியா
உங்கள் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை மாற்றியமைக்க வேண்டுமா? finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு நீங்கள் முதலீடு செய்யும் ஃபண்டுகள் குறித்த விவரங்களை அனுப்பவும்.