நான் கடந்த ஓராண்டுக்காலமாக ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் ரூ.10,000, ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.10,000, மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் ரூ.6,000, கோட்டக் ஸ்டாண்டர்ட் மல்டிகேப் ஃபண்ட் ரூ.6,000 என முதலீடு செய்துவருகிறேன்.

நான் ஓரளவுக்கு ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்கிறேன். என்னுடைய இலக்கு நீண்டகாலத்துக்கானது. என் மகளின் மேற்படிப்புக்காகவே முதலீடு செய்துவருகிறேன்.

குறுகியகாலத்தில் என் போர்ட்ஃபோலியோவின் செயல்பாட்டைப் பார்க்கும்போது, ஏதாவது மாற்றம் செய்யவேண்டிய அவசியம் உள்ளதா..?

- மலர்மன்னன் நவநீதன், சிங்கப்பூர்

“போர்ட்ஃபோலியோவை மாற்றியமைக்கும்போது பின்பற்றப்பட வேண்டிய பல முக்கியமான அம்சங்களில் ஒன்று, குறுகியகாலச் செயல்பாட்டைக்கொண்டு அதில் மாற்றம் செய்யக் கூடாது என்பது.

ஆனால், ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டிஸ் ஃபண்டானது தவறான நேரத்திலும் முதலீட்டை அதிகரித்துக் கொண்டே போனதால், ஃபண்ட் சைஸ் மிகவும் பெரிதாகிவிட்டது. அத்துடன் மிட்கேப் பங்குகளின் செயல்பாடும் இறங்குமுகமாக இருக்கிறது. இந்த இரண்டு காரணங்களாலும் ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஃபண்டின் செயல்பாட்டில் தடுமாற்றம் ஏற்பட்டுவிட்டது. இதே சூழ்நிலை ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்டுக்கும் ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையை மனதில் கொண்டு, இரண்டு ஹெச்.டி.எஃப்.சி ஃபண்டுகளையும் நிறுத்திவிடவும். இவற்றுக்கு பதிலாக, எடெல்வைஸ் மிட்கேப் ஃபண்ட் மற்றும் எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யவும்.”

ஃபண்ட் கேட்டகரியை வகைப்படுத்திய பிறகும், பலரும் முதலீட்டுப் பரவலாக்கம் என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்!

நான் நாணயம் விகடன் இதழைத் தொடர்ந்து படித்து வருகிறேன். கடந்த 18 மாதங்களாக சில ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் மாதந்தோறும் முதலீடு செய்து வருகிறேன். சில ஃபண்டுகளில் மொத்த முதலீடும் செய்திருக்கிறேன். அடுத்த ஆறு அல்லது ஏழு ஆண்டுகளில் ரூ.1 கோடி சேர்க்க வேண்டும் என்பது என் இலக்கு. அதற்கேற்ப என் முதலீடுகள் இருக்கின்றனவா, மாற்றம் ஏதும் தேவையா?

என்னுடைய எஸ்..ஐ.பி முதலீடுகள்: ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்ட் ரூ.23,000, ஃப்ராங்க்ளின் இந்தியா சேவிங்ஸ் ஃபண்ட் ரூ.8,000, ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.15,000, பிரின்சிபல் எம்மெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் ரூ.25,000. என் மொத்த முதலீடுகள் (செப். 2019-ல்): ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்ட் ரூ.1.5 லட்சம், எஸ்.பி.ஐ மேக்னம் மல்டிகேப் ஃபண்ட் ரூ.1.5 லட்சம்

- ஜி.ராஜேஷ்குமார், குவைத்

“இந்தப் பகுதியின் வாயிலாக பலமுறை முதலீட்டாளர்களுக்கு அஸெட் அலொகேஷன்படி, முதலீடு செய்வதன் முக்கியத்துவம் குறித்துச் சொல்லி வருகிறோம். இருந்தாலும் முதலீட்டாளர்கள் லார்ஜ் கேப் மற்றும் பேலன்ஸ்டு ஃபண்டுகளைப் புறக்கணிக்கிறார்கள்.

உங்களுடைய போர்ட்ஃபோலியோவில் 66% மிட் அண்ட் ஸ்மால்கேப் உள்ளன. நீங்கள் அதிக ரிஸ்க் எடுப்பதில் ஆர்வமாக இருந்தாலும்கூட, உங்களுக்கு என்னுடைய பரிந்துரை குறைந்தபட்சம் ஒரு லார்ஜ் கேப் ஃபண்டிலாவது முதலீடு செய்ய வேண்டும் என்பதே. ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்டை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக ரூ.5,000 எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்டில் முதலீடு செய்யவும். மீதமுள்ள ரூ.10,000 மோதிலால் ஆஸ்வால் ஃபோகஸ்டு 25 ஃபண்டில் முதலீடு செய்யவும்.

ஃப்ராங்க்ளின் இந்தியா சேவிங்ஸ் ஃபண்டில் முதலீடு செய்வதால் நீங்கள் பேலன்ஸ்டு ஃபண்டில் முதலீடு செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. போர்ட்ஃபோலியோவை பேலன்ஸ்டு செய்ய அந்த ஃபண்ட் உதவும். இப்போது பரிந்துரைத்தபடி, முதலீட்டைத் தொடர்ந்து செய்துவந்தால், 72 மாதங்களில் உங்கள் இலக்கான 1 கோடி ரூபாயை அடைய முடியும். அதற்கு நீங்கள் உங்கள் போர்ட்ஃபோலியோ சராசரியாக 12% வருமானம் கொடுக்கும் வகையில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம். அதைக் கண்காணித்து வரவும்.”

நான் பின்வரும் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் மாதந்தோறும் முதலீடு செய்து வருகிறேன். ஆக்ஸிஸ் ஃபோகஸ்டு 25 ஃபண்ட் ரூ.5,000, பராக் பரிக் லாங்க் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.5,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. ரெகுலர் கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் ரூ.2,000, ஆக்ஸிஸ் லாங் டேர்ம் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் ரூ.1,500. மொத்த முதலீடு: மோதிலால் ஆஸ்வால் எஸ் அண்ட் பி 500 ஃபண்ட் ரூ.25,000. இப்போது என் வயது 45. என் மகளுக்கு 13 வயதாகிறது. மகனுக்கு வயது 9. என்னுடைய 60 வயது வரை முதலீட்டைத் தொடர முடியும். என் குழந்தைகளின் மேற்படிப்பு மற்றும் மகளின் திருமணத்துக்காக நான் முதலீடு செய்து வருகிறேன். என் போர்ட்ஃபோலியோ சரியா..?

- கே.புவனேஸ்வரி, மெயில் மூலமாக

“பொதுவாகவே, முதலீட்டாளர்கள் இலக்குகளுக்கு எவ்வளவு தொகை தேவை என்று குறிப்பிட்டால் அதற்கேற்ப மிகச் சரியாக பரிந்துரை செய்ய இயலும். உங்கள் மகளுக்கு இன்றைய நிலையில் ரூ.5 லட்சம் மேற்படிப்புக்கு தேவையென்றால், அது ஐந்து ஆண்டுக்காலம் கழித்து ரூ.7 லட்சமாக இருக்கும். நீங்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.5,400 முதலீடு செய்துவந்தால், உங்களால் இலக்கை அடைய முடியும். அதேபோல், உங்கள் மகனுக்கு மேற்படிப்புச் செலவு தற்போதைய நிலையில் ரூ.5 லட்சம் என்று கணக்கிட்டு, அது 7% பணவீக்கம் என்ற அளவில் அதிகரிக்குமெனில், ஒன்பது ஆண்டுகள் கழித்து உங்களுக்கு ரூ.9.2 லட்சம் தேவைப்படும். இதற்கு மாதமொன்றுக்கு ரூ.4,800 முதலீடு செய்ய வேண்டும். இப்போது தொடர்ந்துவரும் எஸ்.ஐ.பி முதலீடுகளை இந்த இரண்டு இலக்குகளுக்கும் நிர்ணயம் செய்துகொள்ளவும்.

உங்கள் மகள் திருமணத்துக்கு இன்றைய நிலையில் ரூ.20 லட்சம் தேவையென்றால், 11 ஆண்டுகள் கழித்து, ரூ.42 லட்சம் தேவைப்படும். உங்களுக்கு 12% வருமானம் கிடைக்கும் என்று வைத்துக்கொண்டால், ஒரு மாதத்துக்கு 15,500 ரூபாயை நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். இப்போது உங்களால் மாதம் 12,000 ரூபாயை மட்டுமே திருமண இலக்குக்கு முதலீடு செய்ய முடியுமானால் அட்டவணையில் தரப்பட்டுள்ள பரிந்துரைப்படி முதலீடு செய்யவும். மற்ற முதலீடுகளைத் தொடர்ந்து செய்துவரவும்.”
.ஃபண்ட் கிளினிக் : இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளில் முதலீடு..!.
என் வயது 36. நான் நீண்டகால முதலீட்டாளர். குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய திட்டம் உள்ளது. மாதம் ரூ.30,000 வரை எஸ்.ஐ.பி முறையில் சில ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறேன். என் முதலீடுகள் சரியானவையா..?

நான் முதலீடு செய்துவரும் ஃபண்டுகள்...நிப்பான் இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட், எல் அண்ட் டி எமெர்ஜிங் பிசினஸஸ் ஃபண்ட், ஃப்ராங்க்ளின் இந்தியா ஸ்மாலர் கம்பெனீஸ் ஃபண்ட், எல் அண்ட் டி மிட்கேப் ஃபண்ட், கனரா ராபிகோ எமெர்ஜிங் ஈக்விட்டீஸ் ஃபண்ட், ஐ.டி.எஃப்.சி ஈக்விட்டி ஃபண்ட்.

- எஸ்.வினோத் குமார், மெயில் மூலமாக

“ஃபண்ட் கேட்டகரியை செபி 2017-ல் வகைப்படுத்திய பிறகும், நீங்கள் மூன்று ஸ்மால்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்திருக்கிறீர்கள். அப்படிச் செய்வது முதலீட்டுப் பரவலாக்கம் என நீங்கள் நினைத்திருந்தால் அது தவறு. இரண்டு மிட்கேப் ஃபண்ட் இருந்தாலே போதும். எல் அண்ட் டி எமெர்ஜிங் பிசினஸ் ஃபண்டின் செயல்பாட்டில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. எனவே, அதற்கு பதிலாக எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்டில் முதலீட்டைத் தொடரவும். ஃப்ராங்க்ளின் ஸ்மால்கேப் ஃபண்டை நிறுத்தவும். அதற்கு பதிலாக, கனரா ராபிகோ புளூசிப் ஃபண்டில் முதலீடு செய்யவும். அதேபோல் எல் அண்ட் டி மிட்கேப் ஃபண்டை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக, எடெல்வைஸ் மிட்கேப் ஃபண்டில் முதலீடு செய்யவும். ஐ.டி.எஃப்.சி கோர் ஈக்விட்டி ஃபண்டின் செயல்பாடு மிகவும் மோசமாக இருக்கிறது. அதை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக மோதிலால் ஆஸ்வால் லார்ஜ்கேப் மற்றும் மிட்கேப் ஃபண்டில் முதலீடு செய்யவும்.”

தொகுப்பு: கா.முத்துசூரியா

உங்கள் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை மாற்றியமைக்க வேண்டுமா? finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு நீங்கள் முதலீடு செய்யும் ஃபண்டுகள் குறித்த விவரங்களை அனுப்பவும்.