Published:Updated:

ஃபண்ட் கிளினிக் : அஸெட் அலொகேஷன் ஏன் அவசியம்? - முதலீட்டு ஆலோசனை!

முதலீட்டு ஆலோசனை
பிரீமியம் ஸ்டோரி
முதலீட்டு ஆலோசனை

கோல்டு சாவேரிங் பாண்டுகள் ரிஸ்க் தன்மை குறைவு; பங்குச் சந்தை அதிக ஏற்ற இறக்கம் கொண்டவை!

ஃபண்ட் கிளினிக் : அஸெட் அலொகேஷன் ஏன் அவசியம்? - முதலீட்டு ஆலோசனை!

கோல்டு சாவேரிங் பாண்டுகள் ரிஸ்க் தன்மை குறைவு; பங்குச் சந்தை அதிக ஏற்ற இறக்கம் கொண்டவை!

Published:Updated:
முதலீட்டு ஆலோசனை
பிரீமியம் ஸ்டோரி
முதலீட்டு ஆலோசனை

என்னுடைய வயது 51. நான் அடுத்த 5 - 7 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய விரும்புகிறேன். 2027-ம் ஆண்டுக்குள் ரூ.1 கோடி சேர்க்க வேண்டும் என்பது என் இலக்கு. என் முதலீடுகளை ஆராய்ந்து சரியா தவறா எனச் சொல்லவும்.

நான் செய்துவரும் முதலீடுகள்... ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட் ரூ.5,000 (ஆகஸ்ட் 2018 முதல்), எடெல்வைஸ் ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.5,000 (ஆகஸ்டு 2018 முதல்), கோட்டக் ஸ்டாண்டர்டு மல்ட்டிகேப் ஃபண்ட் ரூ.6,000 (செப்டம்பர் 2018 முதல்), எல் அண்ட் டி இன்ஃப்ரா ஃபண்ட் ரூ.6,000 (அக்டோபர் 2018 முதல்), இன்வெஸ்கோ இந்தியா குரோத் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் ரூ.4,000 (ஆகஸ்ட் 2018 முதல் ஆகஸ்ட் 2019) ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.4,000 (ஆகஸ்ட் 2018 முதல் செப்டம்பர் 2019 வரை).

- கணேசன் சிங்காரம், மெயில் மூலமாக

“உங்கள் தற்போதைய முதலீடுகளின் மதிப்பு ரூ.6.60 லட்சம். உங்கள் இலக்கான ரூ.1 கோடியை அடுத்த எழு ஆண்டுகளில் அடைய மாதம் ரூ.68,000 எஸ்.ஐ.பி-யில் முதலீடு செய்ய வேண்டும். சராசரி வருமானம் 11% இருக்கும்பட்சத்தில், உங்கள் இலக்கை அடைய வாய்ப்புள்ளது.

ஃபண்ட் கிளினிக் : அஸெட் அலொகேஷன் ஏன் அவசியம்? - முதலீட்டு ஆலோசனை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எல் அண்டு டி இன்ஃப்ரா ஃபண்ட் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்டுகள் ரிஸ்க்குக்கு ஏற்ற பலன் தராததால், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அஸெட் அலொகேஷன் முறையில் உங்கள் போர்ட்ஃபோலியோ மாற்றித் தரப்பட்டுள்ளது.

ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட் ரூ.5,000, எடெல்வைஸ் ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.6,000, கோட்டக் ஸ்டாண்டர்டு மல்டிகேப் ரூ.5,000, இன்வெஸ்கோ இந்தியா குரோத் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் ரூ.5,000, ஐ.டி.எஃப்.சி கவர்ன்மென்ட் செக்யூரிட்டீஸ் ஃபண்ட் ரூ.4,000, இன்வெஸ்கோ இந்தியா இ.டி.எஃப் கோல்டு ஃபண்ட் ரூ.5,000. உங்கள் இலக்கை அடைய மேற்கண்ட விகிதாசாரத்தில் முதலீடுகளை அதிகப்படுத்தலாம்.”

சுகன்யா சம்ருதி திட்டம் பெண் குழந்தைகளுக்கான சிறப்புத் திட்டம் என்பதால், அதைத் தொடரலாம். அவர்களின் கல்வி மற்றும் திருமணச் செலவுக்கு இந்தச் சேமிப்பைப் பயன்படுத்தலாம்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

என் வயது 40. என்னுடைய மகள்களுக்கு 11 மற்றும் 5 வயது. அடுத்த 15 ஆண்டுகள் வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன். மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி-யில் செய்யும் முதலீடுகள் முழுக்க முழுக்க என் குழந்தைகளின் மேற்படிப்பு மற்றும் திருமணத் துக்குத்தான். நான் செய்துவரும் ஃபண்ட் முதலீடுகள் சரியா..?

என் முதலீடுகள்... எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.3,000, எஸ்.பி.ஐ மிட் & லார்ஜ்கேப் ஃபண்ட் ரூ.3,000, ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்ட் ரூ.2,000, எஸ்.பி.ஐ இண்டெக்ஸ் ஃபண்ட் ரூ.1,000, எஸ்.பி.ஐ மேக்னம் ஃபண்ட் ரூ.2,000, எஸ்.பி.ஐ கோல்டு ஃபண்ட் ரூ.4,500, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மல்ட்டிகேப் ஃபண்ட் 2000.

இது தவிர கோல்டு சாவேரிங் பாண்ட் & சுகன்யா சம்ருதி திட்டத்திலும் முதலீடு செய்து வருகிறேன். நான் என் ஓய்வுக்காலத்துக்கு மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

- எஸ்.விஜய் ஆனந்த், மெயில் மூலம்

ஃபண்ட் கிளினிக் : அஸெட் அலொகேஷன் ஏன் அவசியம்? - முதலீட்டு ஆலோசனை!

“உங்கள் முதலீடுகளில் எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட், எஸ்.பி.ஐ லார்ஜ் & மிட்கேப் ஃபண்ட், ஆக்ஸிஸ் மிட்கேப் மற்றும் எஸ்.பி.ஐ இ.டி.எஃப் கோல்டு ஃபண்டுகளை அப்படியே தொடருங்கள்.

மற்ற ஃபண்டுகளுக்குப் பதிலாக, கனரா ராபிகோ புளூசிப் ஃபண்ட், யூ.டி.ஐ ஈக்விட்டி ஃபண்ட், கோட்டக் பேங்கிங் & பி.எஸ்.யூ டெப்ட் ஃபண்டுகளில் முறையே ரூ.1,000, 2,000, 2,000 என முதலீடு செய்துவாருங்கள். இந்த முதலீட்டின் ஆண்டு சராசரி வளர்ச்சி 11% இருக்கும்பட்சத்தில், அடுத்த 15 ஆண்டுகளில் உங்கள் முதலீடு ரூ.79.57 லட்சமாக வளர வாய்ப்புள்ளது.

உங்கள் தற்போதைய ரிடையர்மென்ட் வயது 59, மாதச் செலவு தற்போதைய மதிப்பில் ரூ.25,000, பணவீக்க உயர்வு ஆண்டுக்கு 6%, உங்கள் வாழ்வுக் காலம் 85 வயது மற்றும் உங்கள் முதலீடுகளின் ஆண்டு சராசரி வளர்ச்சி 11% என்ற எதிர்பார்ப்பின்படி, தேவையான ரிடையர்மென்ட் ஃபண்ட் ரூ.2.06 கோடி ஆகும். அதை அடைய அடுத்த 19 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூ.27,000 முதலீடு செய்ய வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சுகன்யா சம்ருதி திட்டம் பெண் குழந்தை களுக்கான சிறப்புத் திட்டம் என்பதால், அதைத் தொடரலாம். அவர்களின் கல்வி மற்றும் திருமணச் செலவுக்கு இந்தச் சேமிப்பைப் பயன்படுத்தலாம்.

ஃபண்ட் கிளினிக் : அஸெட் அலொகேஷன் ஏன் அவசியம்? - முதலீட்டு ஆலோசனை!

கோல்டு சாவேரிங் பாண்டுகள் ரிஸ்க் தன்மை குறைவாக உள்ளவை. ஆனால், பங்குச் சந்தை அதிக ஏற்ற இறக்கங்கள் உள்ளவை. அதன் தன்மை குறித்து முழுவதுமாகத் தெரிந்திருந்தால் மட்டுமே நீங்கள் உங்கள் முதலீடுகளைத் தொடருங்கள்.

கல்விச் செலவில் ஆண்டுப் பணவீக்கம் 10%, மற்ற செலவுகளில் ஆண்டு பணவீக்கம் 6%, தற்போதைய மதிப்பில் கல்விச் செலவு ரூ.5 லட்சம் மற்றும் திருமணச் செலவு ரூ.10 லட்சம் என்ற ஊகத்தில் உங்கள் பெண்களின் கல்விச் செலவுக்கு 18 வயதில் முறையே ரூ.9.75 லட்சம் மற்றும் ரூ.17.26 லட்சம், திருமணச் செலவுக்கு 24 வயதில் முறையே ரூ.21.32 லட்சம் மற்றும் ரூ.30.25 லட்சம் தேவைப்படும்.

இவற்றுக்கான மாத முதலீடுகள்: (முதலீடுகளின் ஆண்டு வளர்ச்சி 11% என்ற ஊகத்தில்)

1. ரூ.7,750 (7 ஆண்டுகள்)

2. ரூ.6,200 (13 ஆண்டுகள்)

3. ரூ.5,000 (13 ஆண்டுகள்)

4. ரூ.4,000 (19 ஆண்டுகள்)

என்னுடைய வயது 33. நான் அக்டோபர் 2020 முதல் எஸ்.ஐ.பி முறையில் எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்டில் ரூ.1,000, எஸ்.பி.ஐ ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்டில் ரூ.1,000, டாடா டிஜிட்டல் ஃபண்டில் ரூ.500, மோதிலால் ஆஸ்வால் எஸ் அண்ட் பி இண்டெக்ஸ் 500 ஃபண்டில் ரூ.500 என முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளேன். நான் 20 ஆண்டுகள் வரையில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளேன். எனது முதலீடுகள் சரியாக இருக்கின்றனவா, ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டுமா?‌

- தாமஸ் மாரிஸ், மெயில் மூலம்

‌“நீங்கள் செய்துவரும் முதலீடுகள் அனைத்தும் மிக அதிகமான ரிஸ்க் கொண்டவையாக உள்ளன. டாடா டிஜிட்டல் ஃபண்ட் பெரும் பாலும் டெக்னாலஜி பங்குகளைச் சார்ந்தது. இந்தத் துறையில் ஏற்படும் ரிஸ்க்குகள் ஃபண்டின் செயல்பாட்டில் பிரதிபலிப்பதாக இருக்கும். மோதிலால் ஆஸ்வால் இண்டெக்ஸ் 500 ஃபண்ட் அமெரிக்க கம்பெனிகளின் பங்குகளைக் கொண்டவை. எனவே, உலகச் சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப முதலீடுகளின் செயல்பாடு அமையும்.

ஃபண்ட் கிளினிக் : அஸெட் அலொகேஷன் ஏன் அவசியம்? - முதலீட்டு ஆலோசனை!

நீண்டகாலத் திட்டத்துக்கு அஸெட் அலொகேஷன் வாயிலாக, பல முதலீடுகளில் ரிஸ்க் பரவல் இருந்தால், சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப உங்கள் முதலீடுகள் வருமானத்தை ஈடுசெய்வதாக இருக்கும். நீங்கள் உங்கள் தற்போதைய முதலீட்டின் ரிஸ்க் தன்மையை உணர்ந்து, ரிஸ்க் எடுக்கத் நீங்கள் தயார் எனில், முதலீடுகளை அப்படியே தொடரலாம். ஆனால், வரும் காலத்தில் செய்ய உள்ள முதலீடுகளை அஸெட் அலொகேஷன் முறையைப் பின்பற்றிச் செய்யுங்கள்.”

உங்கள் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை மாற்றியமைக்க வேண்டுமா?

finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு நீங்கள் முதலீடு செய்யும் ஃபண்டுகள் குறித்த விவரங்களை அனுப்பவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism