என்னுடைய வயது 30. கடந்த ஆறு மாதங்களாகச் சில ஃபண்டுகளிலும், கடந்த ஓராண்டாகச் சில ஃபண்டுகளிலும் எஸ்.ஐ.பி முறையில் மாதம்தோறும் முதலீடு செய்துவருகிறேன். என்னுடைய முதலீடுகளை நான் சரியாகச் செய்து வருகிறேனா என்று சந்தேகமாக உள்ளது. நான் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கவும் தயாராக இருக்கிறேன். நீண்டகாலத்துக்கான இலக்குகளுக்கு முதலீடுகளைச் செய்ய விரும்புகிறேன். தற்போது என் போர்ட்ஃபோலியோவில் நான் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா?

நான் செய்துவரும் முதலீடுகள்... ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால் கேப் ஃபண்ட் ரூ.1,000, எஸ்.பி.ஐ புளூசிப் ஃபண்ட் ரூ.1,000, எஸ்.பி.ஐ மேக்னம் குரோத் ஃபண்ட் ரூ.1,000, எடெல்வைஸ் யு.எஸ் டெக்னாலஜி ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் ரூ.1,000, ஆக்ஸிஸ் ஃபோக்கஸ்டு 25 ஃபண்ட் ரூ.1,000.

- சரத், மெயில் மூலமாக

“உங்கள் போர்ட்ஃபோலியோவில் இரண்டு மாற்றங்கள் மட்டும் செய்யுங்கள். ரிஸ்க் எடுப்பதற்கேற்ற வருமானம் தராததால், ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்டின் எஸ்.ஐ.பி-யை நிறுத்திவிட்டு, கோட்டக் ஸ்மால்கேப் ஃபண்டில் முதலீட்டைத் தொடங்குங்கள். உங்கள் போர்ட்ஃபோலியோவில் ஒரு மிட்கேப் ஃபண்ட் இருந்தால், அதிக வருமானம் பெற வாய்ப்புள்ளது. எனவே, எஸ்.பி.ஐ மேக்னம் ஃபண்டுக்குப் பதில் இன்வெஸ்கோ மிட்கேப் ஃபண்டில் உங்கள் முதலீட்டை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். மற்ற ஃபண்டுகளில் இப்போதுள்ள முதலீடுகளை அப்படியே தொடரலாம். உங்கள் எதிர்காலத் தேவை மற்றும் இலக்குகளுக்கு இப்போதே நிதித் திட்டமிடல் வாயிலாக முதலீடுகளைச் செய்யத் தொடங்குங்கள். இளம் வயதில் தொடங்கும் நீண்டகால முதலீடுகள் கூட்டு வளர்ச்சியின் (power of compounding) பலனைத் தரக்கூடியவை.”

எனக்கு வயது 69. நான் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளேன். தற்போது விவசாயத்தைக் கவனித்து வருகிறேன். நான் தற்போது சில ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் மாதம்தோறும் முதலீடு செய்துவருகிறேன். சில ஃபண்டுகளில் மொத்தமாகவும் முதலீடு செய்து வருகிறேன். இந்த முதலீடுகள் சரியான வகையில் உள்ளனவா அல்லது மாற்றங்கள் அவசியமா எனச் சொல்லவும். மற்றும் இன்ஷூரன்ஸ் மூலம் கிடைக்கும் ரூ.10 லட்சத்தை மொத்த முதலீடாக ஐ.சி.ஐ.சி.ஐ பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் அல்லது கோட்டக் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டில் செய்யத் திட்டமிட்டுள்ளேன். எஸ்.டபிள்யூ.பி முறையில் மாதம் ரூ.8,000 கிடைக்க வேண்டும். என்னுடைய பிளானிங் சரியா..?

என் எஸ்.ஐ.பி முதலீடுகள்: கோட்டக் எமெர்ஜிங் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.5,000, ஆக்ஸிஸ் மல்ட்டிகேப் ஃபண்ட் ரூ.5,000, மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் ரூ.5,000, கனரா ராபிகோ ஈக்விட்டி ஹைபிரிட் ஃபண்ட் ரூ.5,000, ஹெச்.டி.எஃப்.சி சைல்டு பிளான் ரூ.1,000.

மொத்த முதலீடு: ஹெச்.டி.எஃப்.சி லிக்விட் ஃபண்ட் ரூ.1 லட்சம், ஹெச்.டி.எஃப்.சி அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்ட் ரூ.1 லட்சம்.

- எஸ்.கதிர்வேல், ஈரோடு

“உங்களுடைய இந்த வயதிலும் நீங்கள் மாதம் ரூ.21,000 முதலீடு செய்கிறீர்கள் என்றால், உங்களுடைய மாத வருமானம் உங்களுடைய அத்தியாவசியத் தேவைகளுக்கேற்ப உள்ளது எனக் கொள்ளலாம். மாதம் நீங்கள் ரூ.8,000 எஸ்.டபிள்யூ.பி முறையில் எடுக்க வேண்டும் எனில், உங்களுடைய இன்றைய இருப்பு ரூ.17.32 லட்சமாக இருக்க வேண்டும். அத்துடன் அதன் ஆண்டு வருமானம் நடப்பிலிருக்கும் பணவீக்கத்தைவிட சராசரியாக 1% அதிகமாக இருக்க வேண்டும். நீங்கள் எவ்வளவு காலமாக எஸ்.ஐ.பி முதலீடு செய்கிறீர்கள் என்று குறிப்பிடவில்லை. எனவே, யூகத்தின் அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக முதலீடு செய்கிறீர்கள் எனக் கணக்கிட்டால், அதன் இன்றைய மதிப்பு ரூ.5.04 லட்சம். இதனுடன் லிக்விட் ஃபண்டில் நீங்கள் செய்துள்ள முதலீடு மற்றும் முதலீடு செய்ய உள்ள தொகையையும் வைத்து, உங்களால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூ.8,000 எடுக்க இயலும். புதிதாக நீங்கள் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள ரூ.10 லட்சத்தை கோட்டக் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் மற்றும் எடெல்வைஸ் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் என இரண்டிலும் தலா ரூ.5 லட்சம் எனப் பிரித்து முதலீடு செய்யவும்.”

நான் கடன் சார்ந்த ஃபண்டுகள் சிலவற்றில் முதலீடு செய்ய விரும்புகிறேன். அவற்றில் இரண்டு ஆண்டுகளில் குறைந்தபட்ச வருவாய் எவ்வளவு கிடைக்கும், மொத்த முதலீடு அல்லது எஸ்.ஐ.பி முதலீடு எது நல்லது?

நான் திட்டமிட்டுள்ள முதலீடுகள்... எஸ்.பி.ஐ மேக்னம் இன்கம் ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ புரூ ஆல் சீஸன் ஃபண்ட், ஐ.டி.ஃப்.சி டைனமிக் பாண்ட் ஃபண்ட், நிப்பான் இந்தியா கில்ட் ஃபண்ட், ஆதித்ய பிர்லா சன் லைஃப் கவர்ன்மென்ட் செக்யூரிட்டீஸ் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி ஷார்ட் டேர்ம் பாண்ட் ஃபண்ட்.

- கே.ராமச்சந்திரன், மெயில் மூலம்

“கடன் சார்ந்த ஃபண்டுகள் நடுத்தரமான ஆண்டு வருமானத்தைத் தரக்கூடியவை. பணவீக்கத்தை ஈடு செய்யும் தன்மை குறைவாக உள்ளவை. மேலும், கடன் சார்ந்த முதலீடுகளில் பெறும் லாபத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு உட்பட்டிருந்தால் முதலீட்டாளரின் வருமான வரி அளவிலும், மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்டிருந்தால் இன்டெக்சேஷன் முறையில் 20% வரியும் செலுத்த வேண்டியிருக்கும். ஒரே வகையான முதலீடுகள் என்பது வட்டி விகிதம் மற்றும் சந்தையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளுக்கேற்ப அதிக மாற்றங்களுக்கு உட்படும்.

இவற்றின் தன்மை அறிந்து நீங்கள் கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்ய விரும்பினால், நீங்கள் திட்டமிட்ட ஃபண்டு களில் தலா ரூ.1,000 மாதம்தோறும் முதலீடு செய்தால், இரண்டு வருடங்களில் ரூ.1.53 லட்சம் பெற வாய்ப்புள்ளது.

எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும்போது சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப காஸ்ட் ஆவரேஜிங் செய்யும் அனுகூலம் உள்ளது. உங்கள் முதலீட்டின் ஒரு பகுதி பங்குச் சந்தை சார்ந்ததாக இருந்தால், ரிஸ்க் பரவல் மற்றும் வரிச் சலுகைக்குக் கைகொடுக்கும்.”

உங்கள் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை மாற்றியமைக்க வேண்டுமா?

finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு நீங்கள் முதலீடு செய்யும் ஃபண்டுகள் குறித்த விவரங்களை அனுப்பவும்.