Published:Updated:

ஃபண்ட் கிளினிக் : இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளில் முதலீடு... ஏன் செய்ய வேண்டும்..?

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

ஒரே மாதிரியான ஃபண்டுகளில் முதலீடு செய்வது உங்கள் போர்ட் ஃபோலியோவில் பெரிய மாற்றத்தைக் கொடுக்காது.

ஃபண்ட் கிளினிக் : இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளில் முதலீடு... ஏன் செய்ய வேண்டும்..?

ஒரே மாதிரியான ஃபண்டுகளில் முதலீடு செய்வது உங்கள் போர்ட் ஃபோலியோவில் பெரிய மாற்றத்தைக் கொடுக்காது.

Published:Updated:
முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் நான் முதலீடு செய்து வருகிறேன். என்னுடைய ஃபண்ட் போர்ட் ஃபோலியோவை ஆய்வு செய்து சொன்னால் உதவியாக இருக்கும்.

நான் முதலீடு செய்துவரும் ஃபண்டுகள்... ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஈக்விட்டி ஹைபிரிட் 95 ஃபண்ட் ரூ.1,700, நிப்பான் இந்தியா பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் ரூ.1,700, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. ஈக்விட்டி அண்ட் டெப்ட் ஃபண்ட் ரூ.1,600, ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட் ரூ.2,500, எஸ்.பி.ஐ புளூசிப் ஃபண்ட் ரூ.1,500, எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.1,500, ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.2200, சுந்தரம் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.5,000, கனரா ராபிகோ ஈக்விட்டி ஹைபிரிட் ஃபண்ட் ரூ.2,000.

- சிவகுமார் ராஜேந்திரன், மெயில் மூலமாக

ஃபண்ட் கிளினிக் : இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளில் முதலீடு... ஏன் செய்ய வேண்டும்..?

“உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் சுந்தரம் ஈக்விட்டி ஃபண்ட் கடந்த 2019 செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. அதன் செயல்பாட்டைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நீங்கள் மிகவும் கன்சர்வேட்டிவ் முதலீட்டாளராக இருந்தால் உங்கள் முதலீடு ஓரளவுக்குப் பரவாயில்லை. அதேவேளையில் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். செபி ஃபண்ட் கேட்டகிரியைச் செயல்படுத்திய பிறகு, ஒரே மாதிரியான ஃபண்டுகளில் முதலீடு செய்வது பெரிய மாற்றத்தைக் கொடுக்காது. எனவே, உங்களுக்கான பரிந்துரை கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாற்றி அமைத்துக்கொள்ளவும். மீதமுள்ள ஃபண்டுகளை விற்றுவிட்டு, லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்து வைத்துக்கொண்டு, பரிந்துரை செய்யப்பட்டுள்ள ஃபண்டுகளில் எஸ்.டி.பி முறையில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் முதலீடு செய்யவும்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதலீடு
முதலீடு

யூ.டி.ஐ ஈக்விட்டி ஃபண்ட் ரூ.1,700, ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்ட் ரூ.1,700, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. ஈக்விட்டி அண்ட் டெப்ட் ஃபண்ட் ரூ.1,600, ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட் ரூ.2,500, எஸ்.பி.ஐ புளூசிப் ஃபண்ட் ரூ.1,500, எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.1,500, இன்வெஸ்கோ மிட்கேப் ஃபண்ட் ரூ.2,200, கனரா ராபிகோ ஈக்விட்டி ஹைபிரிட் ரூ.2,000.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நான் மாதம்தோறும் சில ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருகிறேன். ஒவ்வொரு ஃபண்டிலும் முதலீடு செய்யும் தொகை ரூ.500. என் குழந்தைகளின் படிப்புக்காக 7 ஆண்டுகளில் ரூ.20 லட்சம் சேர்க்க வேண்டும் என முதலீட்டு இலக்கை வைத்துள்ளேன். ஒவ்வொரு ஃபண்டிலும் இதுவரை முதலீடு செய்ததில் தற்போது இருக்கும் மதிப்பைக் குறிப்பிட்டுள்ளேன். முதலீடு செய்துவரும் ஃபண்டுகள் மற்றும் தற்போதுள்ள தொகை... ஆக்ஸிஸ் ஃபோகஸ்டு 25 ஃபண்ட் ரூ.8,999.90, ஹெச்.டி.எஃப்.சி ஹைபிரிட் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.29,506.47, ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச் சூனிட்டீஸ் ஃபண்ட் ரூ.35,904, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. புளூசிப் ஃபண்ட் ரூ.29,822, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. எஃப்.எம்.சி.ஜி ஃபண்ட் ரூ.26,272, கோட்டக் ஸ்டாண்டர்டு மல்ட்டிகேப் ஃபண்ட் ரூ.16,999, மோதிலால் ஆஸ்வால் மல்ட்டிகேப் 35 ஃபண்ட் ரூ.17,339, பிரின்சிபல் மல்ட்டிகேப் குரோத் ஃபண்ட் ரூ.10,125.19. நான் என்னுடைய முதலீட்டில் மாற்றம் எதுவும் செய்ய வேண்டுமா, முதலீட்டுத் தொகையை அதிகரிக்க வேண்டுமா..?

- டி.லலிதா, மெயில் மூலமாக

முதலீடு
முதலீடு

“தற்போது உங்கள் முதலீடுகளின் மதிப்பு ரூ.1.75 லட்சம். அடுத்த 7 ஆண்டுகளில் ரூ.20 லட்சம் பெற்றிட நீங்கள் மாதம் 12,500 ரூபாயை வருட சராசரி வருமானம் 12% கொடுக்கும் வகையில் மியூசுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துவரவும். உங்கள் முதலீட்டுக்கான பரிந்துரை... கோட்டக் எமெர்ஜிங் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.2,000, கனரா ராபிகோ ஈக்விட்டி ஹைபிரிட் ஃபண்ட் ரூ.1,500, யூ.டி.ஐ மிட்கேப் ஃபண்ட் ரூ.2,000, ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட் ரூ.2,000, எடெல்வைஸ் ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.2,000, கோட்டக் ஸ்டாண்டர்டு மல்டிகேப் ஃபண்ட் ரூ.1,000, யூ.டி.ஐ ஈக்விட்டி ஃபண்ட் ரூ.2,000.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான் வரிச் சலுகைக்காக சில ஃபண்டுகளில் மூன்று ஆண்டுகள் வரை முதலீடு செய்துவிட்டு 2013-ல் நிறுத்திவிட்டேன். ஆக்ஸில் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் முதலீட்டை 2018 வரை செய்து வந்தேன். நான் முதலீடு செய்து வந்த ஃபண்டுகளை குளோஸ் செய்யவில்லை. பணத்தையும் திரும்ப எடுக்கவில்லை. இப்போது இந்த ஃபண்டுகளில் உள்ள தொகையை எஸ்.டி.பி முறையில் மற்ற ஃபண்டுகளுக்கு மாற்ற முடியுமா?

நான் செய்துவந்த முதலீடுகளும் தற்போதைய மதிப்பும்... ஹெச்.டி.எஃப்.சி டாக்ஸ் சேவர் ஃபண்ட் ரூ.88,948.17, ஹெச்.டி.எஃப்.சி டாக்ஸ் சேவர் ஃபண்ட் ரூ.88,948.17, ஃப்ராங்க்ளின் இந்தியா டாக்ஸ்ஷீல்டு ரூ.1,01,420.46, சுந்தரம் டைவர்சிஃபைடு ஈக்விட்டி ஃபண்ட் ரூ.65,580.32, கனரா ராபிகோ ஈக்விட்டி டாக்ஸ் சேவர் ஃபண்ட் ரூ.26,620.72. தற்போதைய முதலீடுகள்... ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.1,000, ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.25,000.

- பி.ராஜேஷ், மெயில் மூலமாக

முதலீடு
முதலீடு

“இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகள் மூன்று ஆண்டுகள் லாக்இன் பீரியட் கொண்டவை. வரிச் சலுகை பெறும் தேவை இருப்பின் மட்டும் அவற்றில் முதலீடு செய்யலாம். இல்லையெனில் தவிர்க்கலாம். காரணம், முதலீடுகள் மூன்று ஆண்டுகள் எடுக்க முடியாமல் இருக்கும். அந்தக் காலகட்டத்தில் மார்க்கெட் இறக்கம் அல்லது வேறு ஏதேனும் காரணமாக முதலீடுகளைத் திரும்பப் பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அதைச் செய்ய இயலாது. இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் இடையே ரிடம்ஷன் இருக்காது என்பதால் ஃபண்ட் முதலீட்டைத் தொடர்ந்து செய்து நல்ல வருமானம் ஈட்ட வாய்ப்புள்ளது.

உதாரணமாக, கனரா ராபிகோ இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டின் ட்ரைளிங் ரிட்டர்ன் கடந்த 7 ஆண்டுகளில் 14.63% ஆக உள்ளது. இதே கனரா ராபிகோ ஃபண்டின் லார்ஜ் மற்றும் மல்டிகேப் ஃபண்டுகளில் ட்ரைலிங் ரிட்டர்ன் முறையே 12.97% மற்றும் 13.46% ஆக உள்ளது. ஆனால், கனரா ராபிகோ லார்ஜ் & மிட்கேப் ஃபண்டின் வருமானம் 7 ஆண்டுகளில் 23.44% ஆக உள்ளது. எனவே, ஃபண்டுகளின் தன்மை மற்றும் உங்கள் முதலீட்டுக் குறிக்கோள் இவற்றைக் கருத்தில் கொண்டு முதலீடுகளைத் திட்ட மிடுங்கள். உங்கள் போர்ட் ஃபோலியோவில் தற்போது செய்து வரும் முதலீட்டைத் தொடரலாம். நிறுத்தப்பட்ட முதலீடுகளில் கனரா ராபிகோ திட்டத்தைத் தொடரலாம். மற்ற முதலீடுகளை எடுத்து லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்யுங்கள். பின் ஆக்ஸிஸ் புளூசிப் ரூ.69,000, டி.எஸ்.பி மிட்கேப் ரூ.1,03,000, மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ரூ.1,03,000 மற்றும் யூ.டி.ஐ ஈக்விட்டி ஃபண்ட் ரூ.69,000 என எஸ்.டி.பி வாயிலாக மாற்றிக்கொள்ளுங்கள்.”

இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகள் மூன்று ஆண்டுகள் லாக்இன் பீரியட் கொண்டவை. வரிச் சலுகை பெறும் தேவை இருப்பின் மட்டும் அவற்றில் முதலீடு செய்யலாம்.

எனக்கு வயது 35. என் மகளின் மேற்படிப்பு, திருமணத்துக்காக நான் கடந்த 5 ஆண்டுகளாக சில ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருகிறேன். நான் தேர்வு செய்துள்ள ஃபண்டுகள் சரியானதுதானா..? என் முதலீடுகள்... ஹெச்.டி.எஃப்.சி டாப் 100 ஃபண்ட் ரூ.2,000, ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.3,000, ஃப்ராங்க்ளின் இந்தியா ஈக்விட்டி ஃபண்ட் ரூ.2,500, எல் அண்ட் டி எமெர்ஜிங் பிசினஸ் ஃபண்ட் ரூ.2,500. ஆதித்ய பிர்லா ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.2,000.

- கோளமகன், மெயில் மூலமாக

“உங்கள் முதலீடு குறைந்தது 7 ஆண்டுகள் என்ற அடிப்படையில் இந்த மாற்றங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இப்போது உள்ள போர்ட்ஃபோலியோவின் மதிப்பு ரூ.7.97 லட்சம். பரிந்துரைக்கப்பட்டுள்ள ஃபண்டுகளில் முதலீடு செய்து, அது உங்களுக்கு 12% வருமானம் கொடுத்தால் உங்களுடைய போர்ட்ஃபோலியோ மதிப்பு 16 லட்சம் ஆவதற்கு வாய்ப்புள்ளது. இதில், ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் தவிர, மற்ற ஃபண்டுகளை விற்று, அந்தத் தொகையை லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்யவும். பிறகு, எஸ்.டி.பி வாயிலாகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ள ஃபண்டுகளில் முதலீடு செய்து வாருங்கள். உங்கள் முதலீட்டில் ரூ.1,000 மிட்கேட்பில் அதிகம் செய்தால், 7 ஆண்டுகளில் ரூ.30 லட்சமும், முதலீட்டை தொடரும்பட்சத்தில் 10 ஆண்டுகளில் ரூ.50 லட்சமும் பெற வாய்ப்புள்ளது. பரிந்துரை: ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்ட் ரூ.3,000, ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஃபண்ட் ரூ.3,000, ஐ.ஐ.எஃப்.எல் ஃபோக்கஸ்டு ஈக்விட்டி ஃபண்ட் ரூ.2,500, எடெல்வைஸ் ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.2,500, மிரே அஸெட் லார்ஜ்கேப் ஃபண்ட் ரூ.2,000.”

உங்கள் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை மாற்றியமைக்க வேண்டுமா?

finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு நீங்கள் முதலீடு செய்யும் ஃபண்டுகள் குறித்த விவரங்களை அனுப்பவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism