Published:Updated:

ஃபண்ட் கிளினிக் : 15 ஆண்டுகளில் ரூ.1.5 கோடி... எவ்வளவு முதலீடு..? - வழிகாட்டும் ஆலோசனை!

ஃபண்ட் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபண்ட் கிளினிக்

அடுத்த 20 ஆண்டுகளில் ரூ.75 லட்சம் சேர்க்க வேண்டும் என்பதே என் இலக்கு!

எனக்கு வயது 34. மியூச்சுவல் ஃபண்டுகளில் நான் கடந்த 10 ஆண்டுகளாக முதலீடு செய்து வருகிறேன். அடுத்த 20 ஆண்டுகளில் ரூ.75 லட்சம் சேர்க்க வேண்டும் என்பதே என் இலக்கு. அடுத்த 10 ஆண்டுகளுக்கு கூடுதலாக ரூ.7,000 முதலீடு செய்ய உள்ளேன்.

என் முதலீடுகள்... ஆதித்ய பிர்லா ஈக்விட்டி ஹைபிரிட் 95 ஃபண்ட் - மொத்த முதலீடு ரூ.3 லட்சம். எஸ்.ஐ.பி முதலீடுகள்: மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் ரூ.5,000, யூ.டி.ஐ ரிட்டயர்மென்ட் பெனிஃபிட் பென்ஷன் ஃபண்ட் ரூ.4,000, நிப்பான் இந்தியா ஃபண்ட் ரூ.2,000, ஹெச்.டி.எஃப்.சி டாக்ஸ் சேவர் ஃபண்ட் ரூ.2,000, நிப்பான் இந்தியா மல்ட்டி அஸெட் ஃபண்ட் ரூ.5,000.

- பழனி, சென்னை

ஃபண்ட் கிளினிக் : 15 ஆண்டுகளில் ரூ.1.5 கோடி... எவ்வளவு முதலீடு..? - வழிகாட்டும் ஆலோசனை!

“நீங்கள் கடந்த 10 ஆண்டுகளாக முதலீடு செய்துவருவதாகக் கூறியுள்ளீர்கள். ஆனால், உங்களுடைய இன்றைய முதலீட்டு மதிப்பு எவ்வளவு என்று கூறவில்லையே, ஏன்? கடந்த 10 ஆண்டுகளாக இதே முறையில் முதலீடு செய்துள்ளீர்கள் என்று எடுத்துக்கொண்டு உங்களுக்கான பரிந்துரையைக் கொடுக்கிறோம்.உங்கள் எஸ்.ஐ.பி முதலீடு சராசரியாக 10% வருமானம் தந்திருந்தால் அது ரூ.36.8 லட்சமாகும். ஆதித்ய பிர்லா ஹைபிரிட் ஈக்விட்டி ஃபண்டில் 2010-ம் ஆண்டு முதல் முதலீடு செய்திருந்தால் இன்றைய நிலவரப்படி அது 8.5% வருமானம் கொடுத்திருக்கும். அப்படி எனில், ரூ.6.8 லட்சம் உங்களுடைய முதலீட்டுத் தொகையாக இருந்திருக்கும். இவை இரண்டையும் கூட்டினால் இருப்புத் தொகை ரூ.43.6 லட்சமாக இருந்திருக்கும். இதையே நீங்கள் தொடர்ந்து முதலீடு செய்துவந்தால் ரூ.75 லட்சம் இலக்கை உங்களால் அடைய முடியும். நீங்கள் கூடுதலாக 7,000 ரூபாய் முதலீடு செய்து, அது 12% வருமானம் கொடுத்தால் 10 ஆண்டுகளில் ரூ.16 லட்சத்தை அடைந்து, இலக்கு முழுமையடைந்திருக்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஃபண்ட் கிளினிக் : 15 ஆண்டுகளில் ரூ.1.5 கோடி... எவ்வளவு முதலீடு..? - வழிகாட்டும் ஆலோசனை!

உங்களுடைய முதலீட்டில் உள்ள ஹெச்.டி.எஃப்.சி டாக்ஸ் சேவர் ஃபண்டின் செயல்பாடு மிகவும் சாதாரணமாக உள்ளது. அதை நிறுத்திவிடவும். அதற்குப் பதில், மோதிலால் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்யவும். நிப்பான் இந்தியா மல்ட்டி அஸெட் ஃபண்டில் இப்போதுதான் முதலீடு செய்துள்ளீர்கள். தொடர்ந்து கண்காணித்து வரவும். 8 - 9% வருமானம் என்ற அடிப்படையில் இதில் முதலீடு செய்திருந்தால் தொடரவும். அப்படி இல்லையென்றால், கனரா ராபிகோ புளூசிப் ஃபண்டுக்கு மாற்றிக்கொள்ளவும். யூ.டி.ஐ ரிட்டயர்மென்ட் ஃபண்டில் அஸெட் அலொகேஷன் மற்றும் வரிச் சலுகையை அடிப்படையாக முதலீடு செய்திருந்தால் தொடரவும்; அப்படி இல்லையெனில், மிரே அஸெட் ஹைபிரிட் ஃபண்டுக்கு முதலீட்டை மாற்றிக்கொள்ளவும்.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

எனக்கு வயது 38. எஸ்.ஐ.பி முறையில் மாதம்தோறும் முதலீடு செய்துவருகிறேன். அடுத்த 15 ஆண்டுகளில் ரூ.1.5 கோடி சேர்க்க வேண்டும் என்பது என் இலக்கு. என் முதலீடுகள் சரியா? என் முதலீடுகள்... கனரா ராபிகோ ஈக்விட்டி டாக்ஸ் சேவர் ஃபண்ட் ரூ.3,000, கனரா ராபிகோ இன்ஃப்ரா ஃபண்ட் ரூ.3,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ இன்ஃப்ரா ஃபண்ட் ரூ.2,000, எல் அண்ட் டி டாக்ஸ் அட்வான்டேஜ் ஃபண்ட் ரூ.3,000, சுந்தரம் ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.3,000, பிரின்சிபல் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் ரூ.3,000, நிப்பான் இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.3,000, ஹெச்.டி.எஃப்.சி சில்ட்ரன்ஸ் கிப்ஃட் ஃபண்ட் ரூ.5,000.

- வி.மகேஷ் குமார், மெயில் மூலமாக

ஃபண்ட் கிளினிக் : 15 ஆண்டுகளில் ரூ.1.5 கோடி... எவ்வளவு முதலீடு..? - வழிகாட்டும் ஆலோசனை!

“இப்போது உங்களிடம் இருக்கும் முதலீட்டின் இன்றைய முதலீட்டுத் தொகை ரூ.26,40,000. இது தொடர்ந்து 12% வருமானம் கொடுத்தால் 15 ஆண்டுகளில் ரூ1.44 கோடி ஆகியிருக்கும். வரும் காலங்களிலும் நீங்கள் இதே தொகையை முதலீடு செய்து வந்தால் உங்கள் இருப்புத் தொகை ரூ.3 கோடி ஆவதற்கு சாத்தியக்கூறு உள்ளது. இன்றைய உங்களுடைய முதலீட்டில் கனரா ராபிகோ இன்ஃப்ரா, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ இன்ஃப்ரா, எல் அண்ட் டி டாக்ஸ் அட்வான்டேஜ் ஃபண்டுகளை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக, கனரா ராபிகோ புளூசிப் ஃபண்ட், மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட், மோதிலால் லாங் டேர்ம் ஃபண்ட் போன்றவற்றில் முதலீட்டைத் தொடரவும்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான் 2018-ம் ஆண்டு முதல் சில ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறேன். இவை எனக்கு நல்ல வருமானம் கொடுக்குமா அல்லது மாற்றி அமைக்க வேண்டுமா?

என் முதலீடுகள்... ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பச்சூனிட்டீஸ் ஃபண்ட் ரூ.2,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்ட் ரூ.2,000, டி.எஸ்.பி மிட்கேப் ஃபண்ட் ரூ.2,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ மல்ட்டிகேப் ஃபண்ட் ரூ.5,000, ஐ.டி.எஃப்.சி மல்ட்டிகேப் ஃபண்ட் ரூ.2,000, சுந்தரம் மிட்கேப் ஃபண்ட் ரூ.2,000, ஐ.டி.எஃப்.சி ஸ்டெர்லிங் வேல்யூ ஃபண்ட் ரூ.2,000, நிப்பான் இந்தியா மல்ட்டிகேப் ஃபண்ட் ரூ.3,000.

- எஸ்.ஆரோக்கியசாமி, புதுகோட்டை

ஃபண்ட் கிளினிக் : 15 ஆண்டுகளில் ரூ.1.5 கோடி... எவ்வளவு முதலீடு..? - வழிகாட்டும் ஆலோசனை!

“உங்களிடம் இருக்கும் முதலீட்டில் ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ், ஐ.சி.ஐ.சி.ஐ புரூ மல்டிகேப், ஐ.டி.எஃப்.சி மல்ட்டிகேப், ஐ.டி.எஃப்.சி ஸ்டெர்லிங் மற்றும் நிப்பான் இந்தியா மல்ட்டிகேப் ஃபண்ட் போன்றவற்றுக்குப் பதிலாகக் கீழே அட்டவணையில் தரப்பட்டுள்ள ஃபண்டுகளில் முதலீடு செய்யவும்.”

ஃபண்ட் கிளினிக் : 15 ஆண்டுகளில் ரூ.1.5 கோடி... எவ்வளவு முதலீடு..? - வழிகாட்டும் ஆலோசனை!

10 மற்றும் 7 வயதாகும் என்னுடைய இரண்டு மகன்களின் மேற்படிப்புக்காகத் தலா ரூ.50 லட்சம் சேர்க்க விரும்புகிறேன்.7 மற்றும் 10 ஆண்டுகளில் ஒவ்வொருவருக்குமான தொகை தேவை. நான் இப்போது செய்துவரும் முதலீட்டைவிட இன்னும் எவ்வளவு அதிகரிக்க வேண்டும், என் முதலீடுகளில் மாறுதல் ஏதும் அவசியமா? என் முதலீடுகள்... கனரா ராபிகோ எமெர்ஜிங் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.2,000, மிரே அஸெட் லார்ஜ்கேப் ஃபண்ட் ரூ.5,000, மிரே அஸெட் ஃபோகஸ்டு ஃபண்ட் ரூ.3,000, எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் ரூ.3,000.

- தேவி, மெயில் மூலமாக

“உங்கள் குறிக்கோளை அடைய நீங்கள் மாதம் 60,000 ரூபாயை 12% வருமானம் ஈட்டக்கூடிய வகையில் முதலீடு செய்ய வேண்டும். மிரே அஸெட் லார்ஜ்கேப் ஃபண்ட் செயல்பாடு கடந்த மூன்று ஆண்டுகளில் சிறிது குறைந்திருந்தாலும், ஐந்து வருட கால அளவீட்டில் நன்றாக உள்ளது. எனவே, இந்த ஃபண்டை தொடர்ந்து கண்காணித்து வரவும். முன்னேற்றம் ஏதும் இல்லையென்றால் மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.”

உங்கள் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை மாற்றியமைக்க வேண்டுமா?

finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு நீங்கள் முதலீடு செய்யும் ஃபண்டுகள் குறித்த விவரங்களை அனுப்பவும்.