Published:Updated:

அதிகரித்த ஃபண்ட் முதலீட்டாளர்கள்! - புதியவர்களின் வருகை உயர்வு!

மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
மியூச்சுவல் ஃபண்ட்

அண்மைக் காலத்தில் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை தொழில்நுட்பரீதியாக சிறப்பான வளர்ச்சி கண்டுவருகிறது!

அதிகரித்த ஃபண்ட் முதலீட்டாளர்கள்! - புதியவர்களின் வருகை உயர்வு!

அண்மைக் காலத்தில் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை தொழில்நுட்பரீதியாக சிறப்பான வளர்ச்சி கண்டுவருகிறது!

Published:Updated:
மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
மியூச்சுவல் ஃபண்ட்
டந்த சில மாதங்களாக நிலவும் ஊரடங்கு முடக்கம் மற்றும் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கம் தாண்டி மியூச்சுவல் ஃபண்டில் புதியவர்கள் முதலீட்டை மேற்கொண்டு வருகிறார்கள்.

`இந்தியாவின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்’ என்ற நம்பிக்கையில் மியூச்சுவல் ஃபண்டில் புதிதாக முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகிறது.

கடந்த மே மாதம் மியூச்சுவல் ஃபண்டில், புதிதாக 54,000 தனிப்பட்ட முதலீட்டாளர்கள் (Unique Investors) முதலீடு செய்தார்கள். இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் 2020, மார்ச்சில் 2.08 கோடி தனிப்பட்ட முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருந்தார்கள். இந்த எண்ணிக்கை மே மாதத்தில் மொத்தம் 2.10 கோடியாக அதிகரித்துள்ளது. முதலீட்டுக் கணக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து 72 மாதங்களாக அதிகரித்துவருகிறது. 2020, மே இறுதி நிலவரப்படி, ஃபோலியோக்களின் எண்ணிக்கை 9.10 கோடியாக இருக்கிறது. இதில், சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பு 8.03 கோடி.

அண்மைக் காலத்தில் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை தொழில்நுட்பரீதியாக சிறப்பான வளர்ச்சி கண்டுவருகிறது. அந்த வகையில், இருந்த இடத்தில் இருந்துகொண்டே பான் நம்பர் மற்றும் ஆதார் எண் இருந்தால் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய முடியும் என்ற நிலை உருவாகியிருப்பதால், ஊரடங்கு காலத்திலும் புதிய முதலீட்டாளர்கள் வந்திருக்கிறார்கள்!