Published:Updated:

அமெரிக்க பங்குச் சந்தை: பெரிய நிறுவனத்தை வீழ்த்திய சிறு முதலீட்டாளர்கள் குழு!

கேம்ஸ்டாப்
பிரீமியம் ஸ்டோரி
News
கேம்ஸ்டாப்

பங்குச் சந்தை கற்றுத் தரும் பாடம்...

G A M E S T O P

அமெரிக்க பங்குச் சந்தையில் பழம்தின்று கொட்டை போட்ட பெரிய பங்கு வர்த்தகர்களை சிறிய முதலீட்டாளர்கள் கூட்டணி அமைத்து 13 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 95,000 கோடி) நஷ்டம் அடைய வைத்தது உலகளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது.

ஷியாம் ராம்பாபு
ஷியாம் ராம்பாபு

அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனம் கேம்ஸ்டாப் (GameStop). இது வீடியோ கேம் சாஃப்ட்வேர் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிவருகிறது. நிறுவனத்தின் வளர்ச்சிக்கான காரணிகளும் பெரிய அளவில் இல்லாமல் இருந்தது. இந்த நிறுவனத்தின் பங்கு அமெரிக்க பங்குச் சந்தையில் கடந்த ஆண்டு இறுதியில் 16 டாலர் என்ற அளவில் வர்த்தகமாகி வந்தது.

இதுபோன்ற சிறிய நிறுவனங்களை பெரிய பங்கு வர்த்தகர்கள் பொய்யான டிமாண்டை உருவாக்கி விலையேற்றத்தை உருவாக்குவது வழக்கம். அந்த நிறுவனத்தின் பங்கு அதிக விலைக்கு உயர்ந்தவுடன் அதை நல்ல விலைக்கு விற்று லாபம் பார்ப்பார்கள். அதிக விலைக்கு வாங்கிய சிறு முதலீட்டாளர்கள் மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்திப்பார்கள்.

பங்குச் சந்தையில் வர்த்தகர்கள் பங்கை வாங்கி அதன் பிறகு, அதிக விலைக்கு விற்று லாபம் பார்ப்பார்கள். இது ஒரு வகை. மற்றொரு வகையில், தன்னிடம் இல்லாத பங்கை விற்று, அந்த நாள் முடிவதற்குள் வாங்கி வியாபாரத்தை செய்வதற்கு `ஷார்ட்’ (short) என்று பெயர்.

இப்படி ‘ஷார்ட்’ செல்ல கேம்ஸ்டாப் நிறுவனத்தை பெரும் வர்த்தகர்கள் தேர்ந்தெடுத்தனர். இந்தப் பங்கின் விலை ஜனவரி 21 அன்று 43 டாலர் என்னும் அளவுக்கு வர்த்தகமானது. ஜனவரி 22-ம் தேதி பெரிய பங்கு தரகு நிறுவனம் (Hedge Fund Group) அதிகளவில் கேம்ஸ்டாப் பங்குகளை முதலில் விற்கத் தொடங்கியது.

G A M E S T O P
G A M E S T O P

அமெரிக்காவில் பங்குச் சந்தை சிறு முதலீட்டாளர்களை இணைப்பதற்கு பல வலைதளங்கள் உதவிகரமாக இருக் கின்றன. அதில், ரெட்டிட் (Reddit) என்பது மிகவும் பிரபலமான வலைதளம் ஆகும். இந்த வலைதளத்தை 30 லட்சம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்து கிறார்கள்.

ரெட்டிட் இணையதளத்தில் இணைந்த சிறு முதலீட்டாளர்கள் கேம்ஸ்டாப் நிறுவனத்தின் பங்குகள் அதிக அளவில் விற்கப் படுவதைக் கண்டுபிடித்தனர். அந்தப் பங்கின் போக்கில் ஏற்பட்ட மாறுதல் மூலம் ஒரு பெரிய நிறுவனம் அதிக அளவு ‘ஷார்ட்’ செய்கிறது என்பதை அறிந்தனர்.

அவர்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக்கொண்டு பெரிய தரகு நிறுவனம் விற்ற அனைத்து பங்குகளையும் வாங்கி னார்கள். இதன் காரணமாகப் பங்கின் விலை உயரத் தொடங் கியது. 7.1 கோடி கேம் ஸ்டாப் பங்குகளை ஆறு பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.43,800 கோடி) என்ற அளவுக்கு பெரிய வர்த்தகர்கள் செயற்கையாக விற்றனர். அத்தனை பங்கு களையும் நமது சிறு முதலீட் டாளர்கள் கூட்டணி வாங்கி விட்டது.

பங்குச் சந்தையில் இதுபோல பங்குகள் வாங்கும்போது ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் போதும். அந்தப் பங்கை டெலிவரி எடுக்கும்போது மீதித் தொகையைத் தந்துவிட லாம். இதற்கு ‘மார்ஜின் டிரேடிங்’ என்பார்கள்.

பெரிய வணிகர்கள் விற்ற அனைத்துப் பங்குகளையும் சிறு முதலீட்டாளர் கூட்டணி வாங்கி விட்டதால் பங்கின் விலை கடுமையாக உயரத் தொடங்கியது. இதன் காரணமாக ஜனவரி 21 அன்று 43 டாலருக்கு வர்த்தக மானஒரு பங்கின் விலை நான்கு நாள்களில் 347 டாலர் என்ற அளவுக்கு உயர்ந்துவிட்டது.

திருடனுக்கு தேள் கொட்டியது போல பெரிய பங்கு வர்த்தகர்கள் விழிக்கத் தொடங்கினர். இதன் காரணமாக அதிக விலை கொடுத்து அந்தப் பங்கை வாங்கி தமது கணக்கை முடிக்கும் நிலை ஏற்பட்டது.

இதன் காரணமாக அந்தப் பெரிய தரகு நிறுவனத்துக்கு 13 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட் டிருப்பதாகக் கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த நிறுவனம் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இதுவரை பெரிய தரகு நிறுவனங்கள்தான். இதுபோன்ற திட்டமிட்ட பங்கு பரிவர்த்தனைகளை நடத்தி அதிக லாபம் அடைவது வழக்க மாக இருந்துவருகிறது

ஆனால், ரெட்டிட் மூலம் இணைந்த சிறு முதலீட்டாளர்கள் குழு கூட்டணி அமைத்து பெரிய தரகு நிறுவனத்தை வீழ்த்தி இருப்பது அமெரிக்க பங்குச் சந்தையில் மிகப்பெரிய அதிர்ச்சியுடன் பார்க்கப் படுகிறது.

கடந்த புதன் அன்று வர்த்தக முடிவில் கேம்ஸ்டாப் நிறுவன பங்கின் விலை 347.51 என்ற அளவில் 135% ஒரே நாளில் அதிகரித்து முடிவடைந்துள்ளது. இந்த விளையாட்டு இன்னும் முழுமை அடையவில்லை. பெரிய தரகு நிறுவனத் தின் நஷ்டம் வரும் நாள்களில் ஏற்படும் பங்கின் விலைக்கு ஏற்ப மாறலாம்.

இந்த விளையாட்டு இப்போது வெள்ளை மாளிகை வரை வந்து நிற்கிறது. அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கேம்ஸ்டாப் நிறுவன பங்குகளில் ஏற்பட்ட அதிக மாற்றங்களை அமெரிக்க அரசு உற்றுநோக்கி வருகிறது என்று தெரிவித்துள்ளது

ஆனால், இது பெரிய பங்கு தரகு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங்குச் சந்தையில் பெரும்பாலும் பெரிய தரகு நிறுவனங்கள்தான் அதிக அளவில் பரிவர்த்தனைகள் செய்வதால், இந்த நிகழ்வு அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகக் கடந்த இரு நாள்களாக அமெரிக்க பங்கு சந்தை சரிவுடன் முடிந்து வருகிறது

சிறு முதலீட்டாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டால் பெரிய தரகு நிறுவனங் களையும் வீழ்த்த முடியும் என்று அமெரிக்காவில் நடந்த நிகழ்வு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

இந்தப் பரிவர்த்தனைகள் அனைத்தும் பங்குச் சந்தைகளின் விதிகளுக்கு உட்பட்டுதான் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வு பங்குச் சந்தையின் மற்றொரு முகத்தை தோலுரித்துக் காட்டியுள்ளது. பங்குச் சந்தை என்பது வியாபாரம். அதில் ஒருவருக்கு ஏற்படும் நஷ்டம் மற்றவருக்கு ஏற்படும் லாபமாகும்.

பங்குச் சந்தையில் குறுகியகாலத்தில் பணம் சம்பாதிக்கலாம் என்று சிறு நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து பலர் அதிக நஷ்டம் அடை கின்றனர். பங்குச் சந்தையில் உள்ள ரிஸ்க்கை தெரிந்து அதன் பிறகு, முதலீடு செய்வதே நஷ்டத்தில் இருந்து நம்மை காப்பாற்றும் என்பதை முதலீட்டாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்!

பிட்ஸ்

டந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு நேரடி முதலீடு 37% அதிகரித்து 43.9 பில்லியன் டாலராக உயர்ந்து இருக்கிறது!