Published:Updated:

புத்தாண்டில் ஏற்றத்தில் தங்கம்... இன்னும் விலை ஏறுமா?

gold
பிரீமியம் ஸ்டோரி
gold

மத்திய கிழக்கு நாடுகளின் பதற்றம் தணிந்தாலும், தங்கத்தின் விலை பெரிய அளவுக்குக் குறைய வாய்ப்பில்லை.

புத்தாண்டில் ஏற்றத்தில் தங்கம்... இன்னும் விலை ஏறுமா?

மத்திய கிழக்கு நாடுகளின் பதற்றம் தணிந்தாலும், தங்கத்தின் விலை பெரிய அளவுக்குக் குறைய வாய்ப்பில்லை.

Published:Updated:
gold
பிரீமியம் ஸ்டோரி
gold

புத்தாண்டில் தங்கத்தின் திடீர் விலையேற்றம் தங்க நகைப் பிரியர்களுக்குக் கூடுதல் அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. கடந்த ஆண்டில் தங்கத்தின் விலை கிடுகிடுவென அதிகரித்ததைப்போலவே இந்த ஆண்டிலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா என்ற குழப்பம் சாதாரண மக்கள் மத்தியில் இருக்கிறது. இனி திருமணம் மற்றும் விழாக் காலங்கள் வரவிருக்கின்றன. தங்கம் விலை தற்போது கணிசமாக உயர்ந்திருப்பதால், தங்க நகைகளை ஏற்கெனவே திட்டமிட்ட அளவுக்கு வாங்க முடியாமல் போகலாம். குறுகியகாலத்தில் இதன் விலையேற்றம், நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களுக்கு அவர்களின் தங்க நகை ஆசைகளை முழுமையாக நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போகலாம்.

புத்தாண்டில் ஏற்றத்தில் தங்கம்... இன்னும் விலை ஏறுமா?

தங்கத்தை முதலீட்டு நோக்கத்தில் வாங்க நினைத்த பலருக்கும் இப்போது நல்லதொரு முதலீட்டு வாய்ப்பைத் தவறவிட்டதாகவே நினைக்கத் தோன்றும். இனியாவது வாங்கலாமா என்ற குழப்பத்தில் பல முதலீட்டாளர்கள் இருக்கிறார்கள். இப்போது தங்கம் வாங்கினால், விலை இறங்கி நஷ்டம் ஏற்படுமா, லாபம் கிடைக்குமா போன்ற கேள்விகள் பலரிடம் இருக்கின்றன. அதனால் தங்கத்தை வாங்க பலரும் இப்போது யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

தங்கமும், பங்குச் சந்தையும்!

பொதுவாக, பங்குச் சந்தைகள் மேல்நோக்கி நகரும்போது, தங்கத்தின் விலை கீழ்நோக்கியே இருக்கும். இதற்கு நேர்மாறாக, நம் நாட்டைப் பொறுத்தவரை பங்குச் சந்தைகளும், தங்கத்தின் விலையும் புதிய உச்சங்களைத் தொட்டு வர்த்தகமாகி வருகின்றன.

புத்தாண்டில் ஏற்றத்தில் தங்கம்... இன்னும் விலை ஏறுமா?

அமெரிக்கப் பங்குச் சந்தைகள் உச்சத்தில் வர்த்தகமானாலும் சர்வதேச அளவில் தங்கத்தின் விலை, அதன் வரலாற்று உச்ச விலையிலிருந்து 18% குறைவாகவே வர்த்தகமாகிவருகிறது. இந்த விலை நம் நாட்டில் எதிரொலிக்காமல் இருக்க முக்கியக் காரணம், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இறக்கம்.

2018-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 2019-ம் ஆண்டில் தங்க இறக்குமதி தேவை 12% குறைந்திருப்பதாக அறிக்கை வெளியாகியிருக்கிறது. அப்படியிருந்தும், 2019-ம் ஆண்டின் கடைசி நான்கு மாதங்களில் விலை அதிகரித்தது. உள்நாட்டில் நிறைய பேர் தங்கம் வாங்கியதால்தான் விலை உயர்ந்தது என நாம் எடுத்துக்கொள்ள முடியாது. சர்வதேச நிகழ்வுகளின் அடிப்படையில்தான் விலை அதிகரித்திருக்கிறது. என்னென்ன காரணங்களால் விலை அதிகரித்திருக்கிறது என்று பார்ப்போம்.

மத்திய கிழக்கு நாடுகளின் பதற்றம் தணிந்தாலும், தங்கத்தின் விலை பெரிய அளவுக்குக் குறைய வாய்ப்பில்லை.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விலை உயர்வு!

தங்கத்தின் மீதான முதலீடு ஒரு முடக்கப்பட்ட முதலீடு என்றும், அதனால் பொருளாதார வளர்ச்சிக்கு எந்தப் பலனும் இல்லை என்றும் பங்கு முதலீடு செய்பவர்களில் பலரும் கருதுகிறார்கள். இந்தக் கூற்று ஓரளவுக்கு உண்மை. என்றாலும், உலக அளவில் அல்லது உள்நாட்டு அளவில் பொருளாதார வளர்ச்சிக்கு பல்வேறு காரணங்களால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருந்தால், உடனடியாக தங்கத்தின் மீதான முதலீட்டுப் பார்வை அதிகரிக்கும்.

gold
gold

அமெரிக்க - ஈரான் போர்ப் பதற்றம்!

அமெரிக்கா, ஈரான் மீதான வான்வெளித் தாக்குதல்கள் வளைகுடாப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அமெரிக்கத் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி தந்ததால், பதற்றம் இன்னும் அதிகரித்திருக்கிறது. முதலீட்டாளர்களின் கவலை என்னவென்றால், இந்தச் சூழ்நிலை எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பதுதான். `இந்த மோதல் தொடருமானால் உலகப் பொருளாதாரத்தில் சரிவு ஏற்படும்’ என முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதனால்தான் `ரிஸ்க் அஸெட்’ என்று சொல்லப்படும் பங்குச் சந்தைகள் சரியத் தொடங்கி, முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தில் திரும்பியது.

கடந்த ஜனவரி முதல் வாரத்தில் மட்டும் ஒரு ட்ராய் அவுன்ஸுக்கு 80 டாலர் வரை அதிகரித்து 1,600 டாலர்களாக உயர்ந்தது. இந்திய விலையில் 22 காரட் 1 கிராம் தங்கம் ரூ.3,896ஆக உயர்ந்தது. தற்போதைய நிலையில், மத்திய கிழக்கு நாடுகளின் பதற்றம் தணிந்தாலும், உடனடியாக தங்கத்தின் விலை பெரிய அளவுக்குக் குறைய வாய்ப்பில்லை என்றே எதிர்பார்க்கலாம்.

அமெரிக்க - ஈரான் போர்ப் பதற்றம் மட்டுமல்ல, அமெரிக்க டாலருக்கு நிகரன இந்திய ரூபாயின் மதிப்பு 2019-ம் ஆண்டு சுமார் 4% இறக்கம் கண்டது. இந்தியாவின் தங்கத் தேவையை இறக்குமதி செய்து பூர்த்தி செய்வதால், ரூபாய் மதிப்பிறக்கத்தின் தாக்கம் இந்திய விலைகளில் பிரதிபலித்தது.

தங்கம்
தங்கம்

விலை ஏற்றம் தொடருமா?

வளர்ந்த நாடுகள் வட்டி விகிதங்களைக் குறைந்த அளவில் வைத்திருப்பது, பிரெக்ஸிட் நிகழ்வு, வர்த்தகப் போர், அமெரிக்க ஃபெடரல் எடுக்கும் நிலைப்பாடு, உலக அளவில் இந்தியா உள்பட 14 நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்துவருவது என நிகழ்வுகள் அனைத்தையும் கூர்ந்து கவனிக்கும் போது, தங்கத்தின் விலை இனிவரும் நாள்களில் படிப்படியாக உயர்ந்து, மேல்நோக்கி நகர்வதற்குப் போதுமான அடித்தளங்களை அமைத்து விட்டதாகவே தெரிகிறது. பதற்றமான சூழ்நிலை உலக அளவில் நிலவினால், தங்கத்தின் விலை உயரவே செய்யும்!