மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளுக்குச் சட்டபூர் வமாக ஒரு நாமினியை நியமிக்க வேண்டும். நாமினியாக கணவரையோ, மனைவியையோ, பிள்ளைகளையோ நியமிக்கலாம். நாமினி நியமிக்கும்பட்சத்தில், முதலீடு செய்திருப் பவரின் இறப்புக்குப் பிறகு, நாமினியாகக் குறிப்பிடப்பட்டிருப்பவருக்கு யூனிட்கள் மாற்றிக் கொடுக்கப்படும்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் ஒன்றில் முதலீடு செய்யும்போது, அதற்கெனத் தனியாக ஒரு நாமினியை நியமிக்கலாம். வேறு ஒரு ஃபண்டில் முதலீடு செய்யும்போது, அதற்கென வேறு ஒருவரை நாமினியாக நியமிக்க முடியும். இருவர் இணைந்து மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைத் தொடங்கியிருந்தாலும் நாமினியை நியமிக்க அனுமதிக்கப்படுகிறது. இப்படிச் செய்யும்போது, இரு முதலீட்டாளர்களில் ஒருவர் இறந்துபோனால், உயிருடன் இருக்கும் முதலீட்டாளர் முழுப் பயனாளியாக மாறுவார். இரு முதலீட்டாளர்களும் இறந்துவிடும் நிலையில் நாமினியின் பெயருக்கு யூனிட்கள் மாற்றிக்கொடுக்கப்படும்.ஒருவர் அதிகபட்சம், ஒரு முதலீட்டுக் கணக்குக்கு மூன்று நாமினிகளைக் குறிப்பிடலாம். `துணைவர் (கணவன் / மனைவி) இரு பிள்ளைகள்’ என்று குறிப்பிட்டு அனைவருக்கும் சமபங்கு என்றால் ஆளுக்கு 33.33% உரிமை இருக்கிறது. துணைவருக்கு 50%, இரு பிள்ளைகளுக்கு தலா 25% என்றும் குறிப்பிடலாம். உங்களின் விருப்பத்துக்கு ஏற்ப இதைத் தேர்வுசெய்யலாம்.

ஒருவர் அதிகபட்சம், ஒரு முதலீட்டுக் கணக்குக்கு மூன்று நாமினிகளைக் குறிப்பிடலாம்.