இன்றைக்கு சாதாரண மக்களும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறார்கள். அதற்கு முக்கியக் காரணம், `சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்’ என்ற எஸ்.ஐ.பி முதலீட்டு முறை.

மாதம் 100 ரூபாய்கூட முதலீடு செய்ய முடியும்!

எஸ்.ஐ.பி முறையில் இப்போது பல ஃபண்டுகளில் மாதம் 100 ரூபாய்கூட முதலீடு செய்ய முடியும். ஆரம்பத்தில் இந்தக் குறைந்தபட்ச முதலீடு ரூ.5,000 என இருந்தது. அதன் பிறகு ரூ.1,000, ரூ.500 எனக் குறைந்து இப்போது ரூ.100 ஆகியிருக்கிறது.

எந்த நேரத்திலும் எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்திக்கொள்ள முடியும். மேலும், எந்த நேரத்திலும் முதலீட்டுத் தொகையை அதிகரிக்கவோ குறைத்துக்கொள்ளவோ முடியும். இந்த வசதிக்காகவே பலரும் இதர முதலீடுகளைவிட எஸ்.ஐ.பி முறையிலான முதலீட்டைத் தேர்வுசெய்கிறார்கள்.

அனைத்துத் தேவைக்கும் எஸ்.ஐ.பி முதலீடு!

பிள்ளைகளின் பள்ளிக்கட்டணம், இன்ஷூரன்ஸ் பிரீமியம் போன்ற குறுகியகாலத் தேவைகள், கார் வாங்கவோ வீடு வாங்கவோ முன்பணம் போன்ற நடுத்தரகாலத் தேவைகள், பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் திருமணம், வெளிநாட்டுச் சுற்றுலா, சொந்த வீடு, ஓய்வுக்கால முதலீடு போன்ற நீண்டகாலத் தேவைகள் என அனைத்துக்கும் ஏற்றதாக இந்த முறை இருக்கிறது.

பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம், பங்குச் சந்தையின் இறக்கத்திலிருந்து பாதுகாப்பு, நீண்டகாலத்தில் நிதி இலக்குகள் நிறைவேற்றம் போன்ற முக்கியத் தீர்வுகளை எஸ்.ஐ.பி முதலீடு அளிக்கிறது.

எத்தனை நாள்களுக்கு ஒரு முறை முதலீடு செய்யலாம்?

பொதுவாக, மியூச்சுவல் ஃபண்டில் மாதம் ஒரு முறை குறிப்பிட்ட தேதியில் முதலீடு செய்வதைப் பெரும்பாலானோர் பின்பற்றிவருகிறார்கள். எந்தத் தேதியில் எஸ்.ஐ.பி முதலீட்டுக்கு வங்கியிலிருந்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்பதை முதலீட்டாளர்கள்தான் சொல்ல வேண்டும்.

மாதத்தின் எந்தத் தேதியிலும் எஸ்.ஐ.பி முதலீட்டை ஆரம்பிக்கும் வசதி இருக்கிறது. பொதுவாக, 1, 10, 15, 21, 28 ஆகிய தேதிகளில் எஸ்.ஐ.பி முதலீட்டை மேற்கொள்ளலாம். விண்ணப்படிவத்தில் எந்தத் தேதி என்பதை ‘டிக்’ செய்ய வேண்டும்.

எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டை ஆரம்பிக்க நேரம், காலம் பார்க்கத் தேவையில்லை. முதலீடு செய்யும் காலத்தில் ஃபண்டின் யூனிட் என்.ஏ.வி (நிகர சொத்து மதிப்பு) குறைவாக இருந்தால், கூடுதல் லாபம். அந்த வகையில், பங்குச் சந்தைச் சரிவால் என்.ஏ.வி மதிப்பு குறைந்துபோனால் கவலைகொள்ளத் தேவையில்லை. என்.ஏ.வி குறைவாக இருந்தால், அதிக யூனிட்டுகள் ஒதுக்கப்படும். நீண்டகால அடிப்படையில் என்.ஏ.வி மதிப்பு அதிகரிக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்பதால் என்.ஏ.வி குறைந்தால் கவலைப்படத் தேவையில்லை. சந்தையின் ஏற்ற இறக்கத்தில் சராசரியாக அதிக யூனிட்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இதை `ருப்பி காஸ்ட் ஆவரேஜ்’ (Rupee Cost Averaging) என்பார்கள்.

எந்தெந்த ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முதலீடு?

பலரும் எஸ்.ஐ.பி முதலீட்டைப் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில்தான் மேற்கொள்ள முடியும் எனத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். கடன் சார்ந்த ஃபண்டுகள், பேலன்ஸ்டு ஃபண்டுகள், ஈக்விட்டி ஃபண்டுகள் என அனைத்து வகையான ஃபண்டுகளிலும் எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டை மேற்கொள்ளலாம்.

எஸ்.ஐ.பி கூடுதல் முதலீடு

நல்ல ஃபண்ட், ஆனால் சந்தையின் இறக்கத்தால் என்.ஏ.வி மதிப்பு மிக அதிகமாகக் குறைந்திருந்தால், எஸ்.ஐ.பி முதலீடு தவிர கூடுதலாக முதலீடு (Additional Investment) செய்து வரலாம். இந்தக் கூடுதல் முதலீடு என்பது ரூ.1,000 அல்லது ரூ.5,000 என்பதாக ஃபண்ட் மற்றும் நிறுவனத்தைப் பொறுத்து இருக்கும்.

பலர் பங்குச் சந்தை இறங்கினால், ஈக்விட்டி ஃபண்ட் எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்திவிடுகிறார்கள். இது தவறு. முதலீடு செய்யும் காலத்தில் சந்தை இறங்கிக் காணப்பட்டால் அதிக யூனிட்கள் கிடைக்கும் என்பதால் அது லாபகரமாக இருக்கும். சிலர் குறுகிய காலத்துக்கு ஆறு மாதங்கள் அல்லது எட்டு மாதங்கள் மட்டும் எஸ்.ஐ.பி முறையில் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்துவிட்டு நிறுத்தி விடுவார்கள். இதனால், அதிக லாபம் கிடைக்காது. காரணம் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டு கள் தொடர்ந்து முதலீடு செய்தால்தான் சந்தை ஏற்ற இறக்கத்தின் பலன் கிடைக்கும்.

எஸ்.ஐ.பி வகைகள்

ஃபிக்ஸட் எஸ்.ஐ.பி., நிரந்தர எஸ்.ஐ.பி., டாப் அப் எஸ்.ஐ.பி., ஃபிளெக்ஸி எஸ்.ஐ.பி எனப் பல வகைகள் உள்ளன.

முதலீட்டுக் காலம் முழுக்க மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்துவரும் அடிப்படை எஸ்.ஐ.பி முறை, `ஃபிக்ஸட் எஸ்.ஐ.பி.’

ஆரம்பத்தில் மாதந்தோறும் அதிக தொகையை எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வது கஷ்டமாக இருக்கும். ரூ.500 அல்லது 1,000 ரூபாயில் முதலீட்டை ஆரம்பித்திருப்பீர்கள். சம்பளம் உயரும்போது எஸ்.ஐ.பி தொகையை அதிகரித்துக்கொள்வது டாப் அப் எஸ்.ஐ.பி. இதில், ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையை அல்லது குறிப்பிட்ட சதவிகிதத்தை அதிகரித்து முதலீடு செய்யலாம்.

பெரும்பாலும், எஸ்.ஐ.பி-யைக் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் செலுத்த வேண்டும். முடிவு தேதி கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்பதில்லை. அப்படிக் குறிப்பிடப்படவில்லை என்றால் எஸ்.ஐ.பி தொடர்ந்துகொண்டிருக்கும். இது நிரந்தர எஸ்.ஐ.பி எனப்படும்.

ஈக்விட்டி ஃபண்டுகளின் செயல்பாடு பங்குச் சந்தையைச் சார்ந்திருக்கிறது. அந்த வகையில், பங்குச் சந்தை இறக்கத்தில் இருக்கும்போது அதிக தொகையையும், பங்குச் சந்தை ஏற்றத்தில் இருக்கும்போது குறைந்த தொகையையும் முதலீடு செய்வது ஃபிளெக்ஸி எஸ்.ஐ.பி.

இ.எல்.எஸ்.எஸ் வகை ஃபண்டில் முதலீடு செய்தால் நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் வரைக்கும் 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகை கிடைக்கும்.

மியூச்சுவல் ஃபண்டில் இ.எல்.எஸ்.எஸ் வகை ஃபண்டில் முதலீடு செய்தால் நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் வரைக்கும் 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகை கிடைக்கும். இப்படி வரிச் சலுகை பெற எஸ்.ஐ.பி முறை முதலீட்டில் மாதம் 500 ரூபாய்கூட முதலீடு செய்துவரலாம். இவ்வாறு எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும்போது நிதியாண்டு இறுதியில் அதாவது மார்ச் மாதத்தில் கடன் வாங்கி முதலீடு செய்யும் சூழ்நிலை உருவாகாது.

பலர், `சந்தை இன்னும் இறங்கட்டும்’ `உச்சத்தில் இருக்கிறது’ என்றெல்லாம் முதலீட்டைத் தள்ளிப்போட்டுக் கொண்டிருக் கிறார்கள். எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய காலம் பார்த்துக் காத்திருக்காமல், எப்போது வேண்டுமானாலும் முதலீட்டை ஆரம்பிக்கலாம்.

முதலீட்டுக்குத் தேவையான ஆவணங்கள்!

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய பான் கார்டு, ஆதார் கார்டு, மார்பளவு புகைப்படம், குறுக்குக் கோடிட்ட வங்கிக் காசோலை ஆகியவை தேவை. முதலில் ‘உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்துகொள்ளுங்கள்’ என்ற கே.ஒய்.சி (Know Your Customer) படிவத்தில் புகைப்படத்தை ஒட்ட வேண்டும். அந்தப் படிவத்தைப் பூர்த்திசெய்து மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட், நிதி ஆலோசனை நிறுவனம், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் கிளை, மியூச்சுவல் ஃபண்ட் சேவை மையங்கள் ஆகிய ஏதாவது ஒன்றில் கொடுக்க வேண்டும். ஆன்லைன் மூலமும் இந்த கே.ஒய்.சி-யைச் செய்யலாம். பிறகு மியூச்சுவல் ஃபண்ட் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்திசெய்து தர வேண்டும்.