Published:Updated:

பொருளாதார நெருக்கடியை தனிநபர்கள் எப்படி சமாளிக்கலாம்?

விகடன் டீம்

உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருக்கிறதெனில், நீங்கள் கடன் தொடர்பான விஷயங்களைச் சரியாகக் கையாள்கிறீர்கள் என்று அர்த்தம்.

family
family

இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையை தனிநபர்கள் எப்படிச் சமாளிக்கலாம் என நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதியிடம் அவர் சொன்ன வழிகள்: https://bit.ly/2ZdXM7L

> பொருளாதார மந்தநிலையின்போது, பெரும்பாலான நிறுவனங்கள் தங்களின் செலவுகளைக் குறைப்பதற்காக, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதில் மிக முக்கியமானது ஆள்குறைப்பு. ஆள்குறைப்பு விஷயங்களில் மாட்டிக்கொண்டு தங்களின் வேலையை இழப்பவர்கள் அஞ்சும் ஒரே விஷயம், அடுத்த மாதச் செலவுகளுக்கு என்ன செய்யப்போகிறோம் என்பதுதான்.

அவசரகால நிதியைச் சேமிக்காமல் இருந்தால், கடன் வாங்கித்தான் நிலைமையைச் சமாளிக்க வேண்டியிருக்கும். சம்பளம் வாங்குபவராக இருந்தாலும், தொழில் செய்பவராக இருந்தாலும், குறைந்தபட்சம் 3 மாதம் முதல் அதிகபட்சம் 12 மாதங்கள் வரையிலான மாதாந்தர சேமிப்புத் தொகையைத் தனியாக வைத்துக்கொள்வது நல்லது. இந்தப் பணத்தை வங்கி எஃப்.டி அல்லது லிக்விட் மியூச்சுவல் ஃபண்டுகளில் போட்டு வைப்பதால், திடீர் வேலையிழப்பு போன்ற காரணங்களால் வரும் பொருளாதாரச் சிக்கல்களை எளிதாகச் சமாளிக்க முடியும்.

ஒருவருக்குக் குறைந்த அளவு கடனே இருக்கும்பட்சத்தில், வங்கிகளிடமிருந்தோ அல்லது பிற கடன் நிறுவனங்களிடமிருந்தோ வேறு கடன்களை வாங்குவதற்கு எளிதாக இருக்கும்.

> மற்ற சமயங்களைவிடவும் நாட்டின் பொருளாதாரம் வலுவிழந்திருக்கும் சமயத்தில், ஒவ்வொருவரும் அவரவர்களின் மாதாந்தர வரவு செலவு விஷயங்களைக் கணக்கிடுவது மிகவும் முக்கியம். குறிப்பாக, செலவு செய்வதைக் கண்காணிப்பது அவசியம். தேவையில்லாத செலவுகளைக் குறைத்துக்கொள்வதற்கு இந்த நடைமுறை பயனுள்ளதாக இருக்கும்.

> நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கும்போது, முதலீட்டிலிருந்து அதிக வருமானத்தை எதிர்பார்க்க முடியாது. அதனால் கடன்கள் இருக்கும்பட்சத்தில் அதைக் குறைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

> உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருக்கிறதெனில், நீங்கள் கடன் தொடர்பான விஷயங்களைச் சரியாகக் கையாள்கிறீர்கள் என்று அர்த்தம். ஒருவருக்குக் குறைந்த அளவு கடனே இருக்கும்பட்சத்தில், வங்கிகளிடமிருந்தோ அல்லது பிற கடன் நிறுவனங்களிடமிருந்தோ வேறு கடன்களை வாங்குவதற்கு எளிதாக இருக்கும். ஏற்கெனவே வைத்திருக்கும் கடனுக்கான வட்டி விகிதம், புதிதாக வாங்கும் கடனுக்கான வட்டி ஒரு சதவிகிதமாவது குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

> பொருளாதார மந்தநிலை நிலவும் காலத்தில், ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. இது அநாவசியச் செலவுகளிலிருந்தும் கடன் சிக்கல்களிலிருந்தும் நம்மைக் காப்பாற்றும்.

Economic Crisis
Economic Crisis

> பங்குச் சந்தையிலோ அல்லது மியூச்சுவல் ஃபண்டிலோ ஒருசிலர் முதலீடு செய்துவிட்டு, அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். பொருளாதாரம் மோசமாக இருக்கும் போது முதலீட்டாளர்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவை ஆய்வு செய்வது அவசியம். கடந்த காலத்தில் வருமானம் தராத பங்குகளையும் ஃபண்டுகளையும் கண்டறிந்து, அவற்றை நீக்கி, புதிய பங்குகளையும் ஃபண்டு களையும் வாங்கிச் சேர்க்க இதுவே சரியான தருணம்.

> வங்கி டெபாசிட் நீங்கள் நினைத்த வருமானத்தைக் கொடுக்காமல் இருந்தால், அதனை மறுபரிசீலனை செய்து வருமானம் தரக்கூடிய முதலீடுகளுக்கு மாற்றுவதுதான் நல்லது.

- பொருளாதார மந்தநிலையை தனிநபர்கள் மற்றும் தொழில்முனைவர்கள் சமாளிக்க உதவும் 10 வழிகளை நாணயம் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > பொருளாதார மந்தநிலை... என்ன பிரச்னை, எப்படிச் சமாளிக்கலாம்? https://www.vikatan.com/news/general-news/the-economic-recession-what-problem-and-how-to-deal-with-it

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/