Published:Updated:

`தமிழகம்... 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் எப்படி சாத்தியம்?'

கணினித் துறையின் நவீன படிப்புகளை முடித்துவிட்டு, புத்தாக்கச் சிந்தனையோடும், பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் திறனோடும் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஸ்டார்ட்அப் நிறுவனங்களைத் தொடங்கும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

பொருளாதாரம்
பொருளாதாரம்

நாணயம் விகடன் ஃபைனான்ஸ் கான்க்ளேவ் இரண்டாம் நாள் நிகழ்வில், `ஆரஞ்ச்ஸ்கேப்’ நிறுவனர் சுரேஷ் சம்பந்தம், ‘தமிழ்நாடு... 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம்’ என்ற தலைப்பில் பேசினார்.

"இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதத்தைவிட தமிழகத்தின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் அதிகமாக உள்ள இந்திய மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழகம் இருக்கிறது. இந்தியாவிலேயே நடுத்தர வர்க்க மக்கள்தொகை, தமிழகத்தில்தான் அதிகமாக இருக்கிறது. அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், நடுத்தர வர்க்கமாக வெகு வேகமாக முன்னேறி வருகிறார்கள். கல்வியைப் பொறுத்தவரை, கல்லூரிப் படிப்பறிவு விகிதத்தில் இந்தியா 25.8 சதவிகிதமாக உள்ளது. தமிழகமோ 48.6 சதவிகிதமாக உள்ளது. இதில் டெல்லி நகரம்கூட நமக்குப் பின்னால்தான் இருக்கிறது.

ரெஜி தாமஸ், சுரேஷ் சம்பந்தம்
ரெஜி தாமஸ், சுரேஷ் சம்பந்தம்

தமிழகத்தில் பெண் குழந்தைகளைக் கல்லூரிப் படிப்பு வரை அனுப்பும் மனப்பான்மை அதிகரித்திருக்கிறது. நம் தற்போதைய தேவை, கல்லூரி முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது. அதை முறைப்படி செய்துவிட்டால், 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையலாம். கணினித் துறையின் நவீன படிப்புகளை முடித்துவிட்டு, புத்தாக்கச் சிந்தனையோடும், பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் திறனோடும் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஸ்டார்ட்அப் நிறுவனங்களைத் தொடங்கும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். அவர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கினால், ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை தமிழகம் எளிதில் அடையும்" என்றார் சுரேஷ் சம்பந்தம்.

தொழில்முனைவோரா, பிசினஸ்மேனா?

ரேஸ் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனர் டாக்டர் ரேஸ் குமரன் ‘தொழில்முனைவோர் Vs பிசினஸ்மேன்’ என்ற தலைப்பில் பேசினார். தொழில்முனைவோர், பிசினஸ்மேனுக்கு இடையிலான வேறுபாடு என்ன என்பதை விளக்கினார். "கிரியேட்டிவ் சிந்தனையோடு புதிதாக ஒன்றை உருவாக்குபவர் தொழில்முனைவோர். ஏற்கெனவே இருக்கும் பிசினஸ் மாடலைக் காப்பியடிப்பவர் பிசினஸ்மேன். தொழில்முனைவோர்கள் குடும்பத்துக்கு நேரம் ஒதுக்குவார்கள், தொழிலுக்கு உயிர் தருவார்கள், துணிந்து செயல்படுவார்கள். பிசினஸ்மேன், குடும்பம் குறித்த சிந்தனை இல்லாமல் தொழிலிலேயே கவனமாக இருப்பார். மற்ற போட்டியாளர்களைப் பற்றிய சிந்தனையில் இருப்பார். தொழில்முனைவோருக்கு அவரே அவருக்குப் போட்டியாளராக இருப்பார்’’ என்றவர், நம் பிசினஸ் இலக்குகளை எப்படி நிர்ணயிப்பது என்பதை பிராக்டிகலாக விளக்கிச் சொன்னார்! விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2N7k7fh

முதலீட்டாளர்களுக்கு முக்கிய ஆலோசனைகள்!

‘செல்வம் சேர்க்க முதலீட்டாளர்களுக்கு முக்கிய ஆலோசனைகள்!’ என்ற தலைப்பில் `ஈக்னாமிக்ஸ்’ நிறுவனர் ஜி.சொக்கலிங்கம் பேசினார். "பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், இன்னொருவரிடம் ‘ஃப்ரீ அட்வைஸ்’ கேட்டுச் செயல்படுவது தவறான பழக்கம். அப்படிக் கிடைக்கும் அறிவுரைகள் சரியானவையாக இருப்பதில்லை. சந்தையின் செயல்பாட்டை தினமும் பார்த்து முதலீடு செய்வதும் தவறு.

90% முதலீட்டாளர்கள் தினமும் 20 முறைக்குமேல் சந்தையைக் கண்காணிக்கிறார்கள். இதனால் தேவையற்ற குழப்பம்தான் ஏற்படும். வார இறுதியில், வெள்ளிக்கிழமையன்று பங்குச் சந்தை செயல்பாட்டைப் பார்த்தாலே போதுமானது. சில நிறுவனப் பங்குகளின் விலை குறைவாக இருக்கும்; ஆனால், செயல்பாடு பல்லாண்டுகளாக சீரான ஏற்றத்தில் இருக்கும். இன்னொரு நிறுவனம் புதிதாகப் பங்குச் சந்தைக்குள் நுழையும்போதே அதிக பங்கு விலையுடன், பெரிய லாபத்தைக் காட்டுவதாக இருக்கும். உடனே பலரும் அதை நம்பி முதலீடு செய்வார்கள். ஆனால், சிறிது காலத்திலேயே அதன் செயல்பாடு சரியில்லை என்றதும் ஏற்கெனவே முதலீடு செய்திருந்த நிறுவனத்துக்கே திரும்புவார்கள். இதுவும் தவறு.

கணேஷ்ராம் ஜெயராமன், அனந்த நாகேஸ்வரன்
கணேஷ்ராம் ஜெயராமன், அனந்த நாகேஸ்வரன்

பங்கு விலையைப் பார்த்து மாறிக்கொண்டேயிருக்கக் கூடாது. குழப்பமாக இருந்தால், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். ‘Law of Demand Theory’ என்று ஒன்று உண்டு. அந்தக் கோட்பாட்டை 98% பேர் மீறுகிறார்கள். 2% பேர்தான் கடைப்பிடிக்கிறார்கள்" என்றார்.

- இந்த நிகழ்வில் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட யோசனைகளை முழுமையாக நாணயம் விகடன் இதழில் வாசிக்க > பங்கு முதலீடு... முக்கிய அம்சங்கள்! - நாணயம் விகடன் ஃபைனான்ஸ் கான்க்ளேவ் https://www.vikatan.com/news/investment/important-traits-of-share-investment-shared-in-naanayam-vikatan-finance-conclave

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9