Published:Updated:

போர்ட்ஃபோலியோ... பூனைபோல் செயல்படுங்கள்!

முதலீட்டுச் சூட்சுமம்

முதலீட்டுச் சூட்சுமம்

போர்ட்ஃபோலியோ... பூனைபோல் செயல்படுங்கள்!

முதலீட்டுச் சூட்சுமம்

Published:Updated:
முதலீட்டுச் சூட்சுமம்

ங்கள் முதலீட்டை அனைத்துக் காலகட்டத்திலும் சரியாக வழிநடத்திச் செல்வது, சிறப்பாகக் கட்டமைக்கப்பட்ட முதலீட்டுக் கலவை (போர்ட்ஃபோலியோ) என்றால் அது மிகையில்லை. அதாவது, எந்த போர்ட்ஃபோலியோ சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை தாக்குப்பிடித்து நிற்கிறதோ, அதுதான் சிறந்தது. ஒரு நல்ல போர்ட்ஃபோலியோ பூனைபோல் செயல்பட வேண்டும்.

பி.சங்கீதா, 
நிதி ஆலோசகர்
பி.சங்கீதா, நிதி ஆலோசகர்

பூனைக்கும் போர்ட்ஃபோலியோவுக்கும் என்ன தொடர்பு என்பதைப் பார்ப்பதற்கு முன்னர், போர்ட்ஃபோலியோ என்றால் என்ன என்று பார்த்துவிடலாம்.

ஒரு குறிப்பிட்ட பங்கோ, மியூச்சுவல் ஃபண்டிலிருக்கும் தனித் திட்டமோ போர்ட்ஃபோலியோ அல்ல. ஒரு தனிநபரின் முதலீட்டிலிருக்கும் நிறுவனப் பங்குகள், கடன் பத்திரங்கள், மனை, மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ரொக்கப் பணத்தின் மொத்தத் தொகுப்புதான் போர்ட்ஃபோலியோ.

`இந்த போர்ட்ஃபோலியோ எப்படிச் செயல்பட வேண்டும்...’ என்று கேட்டால், `பூனைபோல் செயல்பட வேண்டும்’ என்பேன். அதாவது, பூனையின் குணங்களெல்லாம் உங்கள் போர்ட்ஃபோலியோவுக்கு இருக்க வேண்டும். எப்படி?

ஏரியல் ரைட்டிங் ரிப்ஃலெக்ஸ்

பொதுவாக, பூனைகள் உயரமான இடங்களில் ஏறுவதைப் பார்த்திருப்போம். சில நேரங்களில் அவை கீழே விழவும் செய்யும். அப்படிக் கீழே விழுந்த பூனை பெரிதாக எந்தப் பெரிய பாதிப்புமில்லாமல் அடுத்த நொடியே எழுந்து செல்வதையும் பார்த்திருப்போம். இதற்குக் காரணம், பூனைகளுக்கிருக்கும் ‘ஏரியல் ரைட்டிங் ரிஃப்லெக்ஸ்’ (Aerial Righting Reflex) என்ற குணம்.

அதாவது, பூனை உயரமான இடத்திலிருந்து தலைகீழாக விழுந்தாலும்கூட அது தரை இறங்குவதற்கு முன்னர் தன் உடலை சீர்படுத்திக்கொள்ளும். அதனால்தான் அதற்கு பாதிப்பு மிகவும் குறைவு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரிஸ்க் அளவைத் தேர்ந்தெடுத்த பிறகு அதற்கு ஏற்றாற்போல் நம் முதலீடுகளைச் சரியான விகிதத்தில் முதலீடு செய்ய வேண்டும்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதேபோல், சந்தையின் ஏற்ற இறக்கங்களில் அதிக பாதிப்பு அடையாமலிருப்பதுதான் சிறந்த போர்ட்ஃபோலியோ. பூனைக்கு இருக்கும் ‘ஏரியல் ரைட்டிங் ரிஃப்லெக்ஸ்’ போலவே, நம் போர்ட்ஃபோலியோவுக்கும் எந்தப் பெரிய பாதிப்பும் வராமல் அதை வடிவமைக்க வேண்டியது அவசியம்.

முதலீட்டுச் சூட்சுமம்
முதலீட்டுச் சூட்சுமம்

மேக்ரோ லெவல் அனாலசிஸ்

ஒருவருடைய ஒட்டுமொத்த போர்ட்ஃபோலியோ எப்படிச் செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்வதுதான் ‘மேக்ரோ லெவல் அனாலசிஸ்.’ நம் முதலீட்டு முடிவுகளைப் புரிந்துகொள்வதற்கு இது மிகவும் தேவையான ஒன்று. ஆனால், நாமோ நம் முதலீட்டை சின்னச் சின்ன அங்கங்களாகவே பார்க்கிறோம்.

ஒரு குறிப்பிட்ட முதலீடு நாம் எதிர்பார்த்த அளவுக்குச் செயல்படவில்லையென்றால் வருத்தப்படுவோம். இது சரியான அணுகுமுறை அல்ல. நம் முதலீடுகள் ஒட்டுமொத்த போர்ட்ஃபோலியோவாக எவ்வாறு செயல்படுகின்றன என்பதை கவனிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட முதலீடு சில நேரங்களில் பெரிய அளவுக்கு வருமானம் தராமல் போகலாம். ஆனால், அந்தக் குறிப்பிட்ட முதலீட்டின் பங்களிப்பு அந்த போர்ட்ஃபோலியோவில் எவ்வளவு என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஸ்மால்கேப், மிட்கேப், லார்ஜ்கேப்

முதலீட்டைத் தனித்தனி அங்கங்களாக ஆய்வு செய்வது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் மேக்ரோ லெவலில் போர்ட்ஃபோலியோவை ஆய்வு செய்வதும் அவசியமானது. இதைப் புரிந்துகொள்ள ஒரு வழியுண்டு. ஒருவர், தன் போர்ட்ஃபோலியோவில் ஸ்மால்கேப், மிட்கேப், லார்ஜ்கேப் மற்றும் கடன் ஃபண்ட் அனைத்தையும் வைத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இவை அனைத்து காலகட்டங்களிலும் ஒன்றுபோல் செயல்படாது. ஒரே திசையில், ஒரே வேகத்தில் பயணம் செய்யாது.

ஒரு போர்ட்ஃபோலியோவை அமைப்பதற்கு எந்தவிதக் குறிப்பிட்ட விதிமுறையும் கிடையாது. ஒவ்வொருவரின் போர்ட்ஃபோலியோவும் தனித்துவமானது!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உதாரணமாக, ஸ்மால்கேப், மிட் கேப் பங்குகள் மற்றும் ஃபண்டுகள் நன்றாகச் செயல்படும்போது அதே அளவு வருமானத்தை லார்ஜ்கேப் பங்குகள் மற்றும் ஃபண்டுகள் கொடுக்கும் என்று நினைக்கக் கூடாது. இந்தக் காலகட்டத்தில் லார்ஜ்கேப் பங்குகள் மற்றும் ஃபண்டுகளின் வருமானம் குறைவாகக்கூட இருக்கலாம். அதற்காக அந்த போர்ட்ஃபோலியோவிலிருந்து லார்ஜ்கேப் பங்குகள் மற்றும் ஃபண்டுகள் முழுவதையும் ஸ்மால்கேப், மிட்கேப் பங்குகள் மற்றும் ஃபண்டுகளுக்கு மாற்றிவிடக் கூடாது. ஏனென்றால், எப்போது சுழற்சி (Cycle) மாறும் என்பது தெரியாது.

பூனை
பூனை

சுழற்சி மாறி, பொருளாதார வளர்ச்சி குறைந்தால் ஸ்மால்கேப், மிட்கேப் பங்குகள் மற்றும் ஃபண்டுகள் குறைவான வருமானம் தரலாம். அந்த நேரத்தில் புளூசிப் கம்பெனிகளுக்கு டவுன் சைடு புரொட்டெக்‌ஷன் (Down Side Protection) அதிகமிருப்பதால், விலை அதிகம் இறங்க வாய்ப்பிருக்காது. அது போன்ற நேரங்களில், லார்ஜ்கேப் பங்குகள் மற்றும் ஃபண்டுகள் தான் நம் போர்ட் ஃபோலியோவை தாங்கிப் பிடிக்க உதவும். இவ்வாறு அனைத்துச் சுழலிலும் பொருந்தும்படி நாம் நம் போர்ட் ஃபோலியோவை வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.

கவனத்தில்கொள்ள வேண்டியவை

போர்ட்ஃபோலியோவை வடிவமைக்கும்போது நினைவில்கொள்ள வேண்டியவற்றை இனி பார்ப்போம்.

ஒரு போர்ட்ஃபோலியோவை அமைப்பதற்கு எந்தவிதக் குறிப்பிட்ட விதிமுறையும் கிடையாது. ஒவ்வொருவரின் போர்ட்ஃபோலியோவும் தனித்துவமானது. எந்த விகிதத்தில், எவ்வளவு, எதில் முதலீடு செய்ய வேண்டும் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஆயினும், போர்ட்ஃபோலியோ வடிவமைக்கும்போது பின்வரும் சில முக்கிய அம்சங்களை நினைவில்கொள்வது அவசியம்.

1. முதலீட்டிலுள்ள ரிஸ்க்கை அளவிடுங்கள்!

ஒருவருடைய போர்ட்ஃபோலியோவை வடிவமைப்பதற்கு முன்னர் அவருடைய ரிஸ்க் அளவு என்னவென்று தெரிந்துகொள்வது அவசியம். ஒருவரின் ரிஸ்க் அளவு அவரின் தேவை, ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் ரிஸ்க்கை ஏற்கும் அணுகுமுறை ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். ஒருவர் தன் ரிஸ்க் அளவுக்கு அதிகமாகவோ, குறைவாகவோ உள்ள திட்டங்களில் முதலீடு செய்தால், எதிர்பார்த்த பலன் கிடைக்கவே வாய்ப்பிருக்கிறது.

2. டைவர்சிஃபிகேஷன்

ரிஸ்க் அளவைத் தேர்ந்தெடுத்த பிறகு அதற்கு ஏற்றாற்போல் நம் முதலீடுகளைச் சரியான விகிதத்தில் முதலீடு செய்ய வேண்டும். சரியான அஸெட் அலொகே ஷனில் முதலீடு செய்தால், அது ஒரு நல்ல டைவர்சிஃபைடு போர்ட்ஃபோலியோவாக அமையும். அதற்கு குறிப்பிட்ட இடை வெளியில் அஸெட் அலொகேஷனைச் சரி பார்ப்பது அவசியம்.

3. முதலீட்டுத் திட்டத்தில் நம்பிக்கை

நீங்கள் தேர்ந்தெடுத்த உங்களுடைய முதலீட்டுத் திட்டத்தில் நம்பிக்கையுடன் இருங்கள். உங்களின் அவசர முடிவுகள் முதலீட்டை பாதிக்கும். எனவே, நிதானமான முடிவுகளை எடுக்கப் பழகுங்கள்.

இந்த முக்கிய அம்சங்களை நினைவில் கொண்டு உங்கள் முதலீடுகளைத் தேர்ந்தெடுத்தால் வெற்றி நிச்சயம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism