Published:Updated:

வட்டி உயர்வு... பி.எஃப் முதலீட்டை லாபகரமாகப் பயன்படுத்தும் வழிகள்!

Provident fund
பிரீமியம் ஸ்டோரி
News
Provident fund

முதலீடு

பிராவிடென்ட் ஃபண்ட் வட்டி விகிதம், 2018-19-ம் ஆண்டுக்கு 8.55 சதவிகிதத்திலிருந்து 8.65 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சுமார் ஆறு கோடி பேர் பயனடைவார்கள். பி.எஃப் முதலீட்டை எப்படி லாபகரமாகப் பயன்படுத்தலாம்?

பி.எஃப் பங்களிப்பை அதிகரித்தல்

தனியார் நிறுவனங்களில் ஒருவரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் 12% அல்லது கட்டாய பி.எஃப் திட்டத்தின்மூலம் மாதம் ரூ.1,800 பி.எஃப்-ஆக பிடித்தம் செய்யப்படும். இதே அளவு தொகையை, தொழில் நிறுவனமும் தன் பங்காக அளிக்கும். இது தவிர, பணியாளர் விரும்பினால், அவரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் ஒருவரின் வசதி மற்றும் தேவையைப் பொறுத்து, 88% வரைக்கும் கூடுதலாக பி.எஃப் பிடிக்கச் செய்யலாம். அதேசமயம், சம்பளத்துக்கு வெளியே இருந்து பணத்தைக் கொண்டுவந்து பி.எஃப் கணக்கில் செலுத்த முடியாது. மற்றபடி, முழுச் சம்பளத்தையும் பி.எஃப் கணக்கில் சேர்க்க முடியும். இதனை வி.பி.எஃப் என்பார்கள். இந்த வி.பி.எஃப் தொகையும் பி.எஃப் கணக்கில் சேர்க்கப்பட்டு, மொத்தத் தொகையாகப் பராமரிக்கப்படும்.

வட்டி உயர்வு... பி.எஃப் முதலீட்டை லாபகரமாகப் பயன்படுத்தும் வழிகள்!

சிறுதொகையையும் சேர்க்கலாமே

சம்பளத்தில் குறைவாக பி.எஃப்-க்குச் செல்லும் நிலையில், பணியாளர் வி.பி.எஃப் மூலம் அதிக தொகையை பி.எஃப் கணக்கில் சேர்க்க முடியும். இதன்மூலம் அவர் பணி ஓய்வு பெறும்போது, பெருந்தொகையைப் பெறமுடியும். வி.பி.எஃப் மூலம் சிறிய தொகையைக்கூட அதாவது, மாதமொன்றுக்கு 100 ரூபாய்கூட சம்பளத்திலிருந்து பிடிக்கச் சொல்லலாம். வி.பி.எஃப் கணக்கில் பிடிக்கும் தொகையை ஆண்டுக்கு ஒருமுறை கூட்டவோ அல்லது குறைக்கவோ அனுமதிக்கப்படும். வி.பி.எஃப் பிடிக்க நிறுவனத்தின் காசாளரை அணுகினாலே போதும்; அவர் அதைச் செய்து தந்துவிடுவார்.

வருமான வரிச் சலுகை

பி.எஃப் மற்றும் வி.பி.எஃப் முதலீட்டுக்கு மத்திய அரசின் உத்தரவாதம் உள்ளதால், 100% பாதுகாப்பாக உள்ளது. தற்போது ஆண்டுக்கு 8.65% வட்டி வழங்கப்படுகிறது. இது வங்கி எஃப்.டி-யின் வட்டி வருமானத்தைவிட அதிகம். பி.எஃப் மற்றும் வி.பி.எஃப் முதலீட்டுக்கு 80-சி பிரிவின்கீழ் நிபந்தனைக்குட்பட்டு ஒரு நிதி ஆண்டில் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை வருமான வரிச் சலுகை வழங்கப்படுகிறது. பி.எஃப் முதலீட்டில் வட்டிக்கு வட்டி வழங்கப் படுவதால், பணம் வேகமாகப் பெருகுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

யாருக்கு ஏற்றது?

முதலீட்டில் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், பணி ஓய்வுக்கு இன்னும் சில ஆண்டுகளே இருப்பவர்கள் வருமான வரியைச் சேமிக்க நினைத்தால், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் (இ.எல்.எஸ்.எஸ்), வங்கி எஃப்.டி-க்குப் பதிலாக, வி.பி.எஃப்-ல் முதலீடு செய்யலாம்.

வட்டி உயர்வு... பி.எஃப் முதலீட்டை லாபகரமாகப் பயன்படுத்தும் வழிகள்!

இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் திரட்டப்படும் நிதி, பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், ரிஸ்க் அதிகம். மேலும், பணி ஓய்வுக்கு இன்னும் சில ஆண்டுகளே இருக்கும் நிலையில், இந்த ரிஸ்க் எடுக்க முடியாது. வி.பி.எஃப் மூலம் செய்யப்படும் தொகை, பணி ஓய்வின்போது பி.எஃப் உடன் சேர்ந்து கிடைத்துவிடும் என்பதால், இ.எல்.எஸ்.எஸ் போல் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதில்லை. வங்கி ஐந்தாண்டு ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடுசெய்து, வருமான வரிச் சலுகை பெற்றாலும் அதன்மூலம் கிடைக்கும் வட்டிக்கு ஆண்டுதோறும் வரி கட்ட வேண்டும். பி.எஃப்-ல் வட்டி வருமானத்துக்கு வரி கிடையாது. பி.எஃப்-ல் பணம் கட்டும்போதும் வரிச் சலுகை, முதலீட்டுப் பெருக்கத்துக்கும் வரிச் சலுகை மற்றும் ஓய்வுக்காலத்தில் திரும்ப எடுக்கும்போதும் வரிச் சலுகை கிடைக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக... சொந்த வீடு கட்ட, குழந்தைகளின் படிப்பு ஆகிய காரணங்களுக்காக பி.எஃப் மற்றும் வி.பி.எஃப் தொகையைக் கடனாக வாங்கிப் பயன்படுத்திக்கொள்ளலாம்.